"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 11:54 pm

» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:13 pm

» சிந்திக்க சில நொடிகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:02 pm

» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 11:25 am

» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
by அ.இராமநாதன் Yesterday at 11:18 am

» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:18 am

» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:11 am

» முருங்கைக்கீரை கூட்டு
by அ.இராமநாதன் Yesterday at 9:54 am

» பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
by அ.இராமநாதன் Yesterday at 9:52 am

» வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 9:44 am

» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 8:32 am

» பழகிப் போயிருச்சு பாஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 8:13 am

» ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 8:08 am

» நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
by அ.இராமநாதன் Yesterday at 8:06 am

» சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
by அ.இராமநாதன் Yesterday at 8:02 am

» நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
by அ.இராமநாதன் Yesterday at 7:55 am

» காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
by அ.இராமநாதன் Yesterday at 7:46 am

» அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
by அ.இராமநாதன் Yesterday at 7:44 am

» அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Yesterday at 7:41 am

» இரும்புச்சத்து தெரியும்...கொம்புச்சத்து தெரியுமா? சொல்கிறார் இயற்கை விவசாயி
by அ.இராமநாதன் Yesterday at 7:39 am

» மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 11:32 pm

» உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 11:26 pm

» நொடிக் கதைகள்
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 11:22 pm

» திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 11:05 pm

» கூப்பிடு தூரம்
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:59 pm

» வியந்த பாட்டு
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:55 pm

» மீண்டும் வருவேன்
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:51 pm

» அதிகாலை - கவிஞர் மீரா
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:39 pm

» கவிதைகள் - கவிஞர் மீரா
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:28 pm

» -நீதி - கவிதை
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:25 pm

» காலமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:13 pm

» கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:00 pm

» அழியாத பாட்டு
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 9:50 pm

» ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 7:58 pm

» மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 7:54 pm

» இந்தப் பறவையின் விலை 25 லட்சமாம்... பார்த்து ரசிக்கலாம் வாங்க!
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 1:48 pm

» சிரிப்பின் பயன்கள்
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 1:36 pm

» தலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்?
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:32 am

» கடைசி பெஞ்ச் புள்ளைக டவுட்...!!
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 10:29 am

» கடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...!!
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 9:47 am

» கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 9:41 am

» பாதை எங்கு போகிறது...?
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 5:06 am

» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 5:04 am

» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 4:58 am

» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by அ.இராமநாதன் Wed Apr 18, 2018 4:44 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines நிகமானந்தா!

Go down

நிகமானந்தா!

Post by ரௌத்திரன் on Wed Jul 18, 2012 7:07 pm


"மங்கையர்தம் கற்பினைப்போல் நதிகள் தாமும்
====மாசுறாமல் காத்திடுதல் வேண்டு மன்றோ?
கங்கைதனில் தொழிற்சாலைக் கழிவு வந்துக்
====கலப்பதனை உடனடியாய்த் தடுத்தல் வேண்டும்
இங்கிதனை மனத்திடையே அரசு கொண்டு
====இதற்கொரு தீர்வுதரல் வேண்டும்" என்று
பொங்கிநின்றான்; போராட்டம் தனிலி றங்கி
====புதுமைவழி காட்டியவன் நிகமா னந்தா!

காலங்கள் பலவாக நமது நாட்டில்
====காவியெனில் கயமையதன் நிறமாய் மாறிக்
கோலங்கள் காட்டியது; அதனை மாற்றிக்
====காவியெனில் என்றைக்கும் புரட்சி யென்றே
ஞாலத்தில் நாட்டவந்தான்; கிழக்கில் தோன்றும்
====ஞாயிறுபோல் உலகுக்காய் எரிந்து நின்றான்!
பாலத்தைக் கட்டிவைத்தான் ஆன்மீ கத்தைப்
====புரட்சியொடு இணைத்திட்டான் வாழ்க மாதோ!


பொன்னுக்கும் பொருளுக்கும் ஆன்மீ கத்தைப்
====பயன்படுத்தும் புலையரிடை, நாட்டு மக்கள்
நன்மைக்குப் பயன்படுத்தி மாண்ட நல்லோன்!
====நாட்பலவாய் உண்ணாமல் நோன்பி ருந்து
மண்ணுக்குள் புதைந்திட்டான்; மாணிக் கங்கள்
====மேதினியில் பலகாலம் வாழ்வ தில்லை!
விண்ணுக்குள் அவர்மறைந்து போனா லென்ன?
====வரலாறாய் நம்மிடையில் வாழ்ந்தி ருப்பார்!


கோவிலுக்குத் தீபங்கள் தேவை யில்லை!
=====குறைகளிங்கு அவற்றாலே தீர்வ தில்லை!
கோவிலுக்குள் தீபங்கள் எரிந்தால் ஏழைக்
=====குடிசைக்குள் சூழ்ந்தவிருள் மறைந்து போமோ?
கோவிலுக்குள் எரிகின்ற தீபம் போன்றோர்
=====காவிக்குள் வாழ்கின்ற துறவோர் தாமும்!
கோவிலுக்குள் தீபமென இருத்தல் வாழ்வோ?
=====குடிசைக்குள் தீபமெனக் கருகல் வாழ்வு!

இத்தகைய சிந்தனைகள் வளர்ந்து விட்டால்
====இம்மியும் துயரங்கள் சூழ்வ துண்டோ?
சத்திரங்கள் தாமுமிங்கு முயன்று நின்றால்
====சரித்திரங்கள் படைத்திடலாம் உண்மை யன்றோ?
சித்துகளைப் புரிந்திங்கு மக்கள் வாழ்வைச்
====சீர்குலையச் செய்பவர்கள் தலைது ணித்தே
நித்தமிங்கு புரட்சிபல நடத்தி வைப்போம்
====நானிலத்தில் நன்மையினை நாட்டி வைப்போம்!

பத்திதனைக் கடைச்சரக்காய் மாற்றி மிக்கப்
====பொருள்சேர்த்து வாழுகின்ற சாமி யார்க்கும்
வித்தைகள் பலபுரிந்து தமது மேனி
====மினுமினுப்புக் காட்டிவாழும் வேசி யர்க்கும்
இத்தரணி மீதினிலே வேற்று மைகள்
====இம்மியள வேனுந்தான் உண்டோ கூறீர்!
சத்தியமும் கடைச்சரக்காய் போகக் கண்டும்
====சகித்துக்கொண் டிருப்பமெனில் ஆண்மை உண்டோ?

பொங்கட்டும் நாளுமொரு புரட்சி இங்கு!
====பொடிப்பொடியா கட்டும்போ லித்த னங்கள்!
மங்கட்டும் பொன்னெனவே போக்குக் காட்டும்
====மதியிழந்த மத்தர்தம் அரிதா ரங்கள்!
தொங்கட்டும் நம்வேஷம் கலைந்த தென்றே
=====தருக்கர்தம் தலைகளெல்லாம் அவமா னத்தால்!
தங்கட்டும் பூமியிலே மனித நேயம்
=====தழைக்கட்டும் நிகமானந் தாவின் நாமம்!(மாத்ரிசன் என்னும் ஆசிரமத்தின் 34 வயதான
சாமியார் நிகமானந்தா.

ரிஷிகேஷம் முதல் பிரயாகை வரையிலான
பகுதியில் 146 தொழிற்சாலைகளின் கழிவுகளும்
நுற்றுக்கு மேற்பட்ட சிறு பெரு நகரங்களின்
சாக்கடைகளும் கங்கையில் கலப்பதைத் தடுத்து
அந்த நதியைப் பராமரிக்கக் கோரி 1998 -ல்
73 நாட்களும்,2010 -ல்68நாட்களும்உண்ணாவிரதம்
இருந்தார்.ஆனால் உத்தர்கண்டை ஆண்ட ...
அதனைக் கண்டுகொள்ளவில்லை.2011 பிப்ரவரி19
அன்று மேலும் 27 நாட்கள் உண்ணாவிரதம்
மேற்கொண்டு உடல் நிலைபாதிக்கப்பட்ட
நிகமானந்தா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கோமா நிலைக்குத் தள்ளப் பட்டு
ஜூன் 13 ம் தேதி மரணத்தைத் தழுவினார்.

நாட்டு மக்களின் நன்மைக்காக கங்கையைச்
சுத்தம் செய்யச் சொல்லிக் கூவத்திடம்(அரசு)
போராடி உயிர்துறந்த அந்தத் தியாகச் சாமியாருக்கு இது சமர்ப்பணம்)--------ரௌத்திரன்
avatar
ரௌத்திரன்
மல்லிகை
மல்லிகை

Posts : 82
Points : 210
Join date : 13/07/2012
Age : 31
Location : வேலூர் மாவட்டம்

Back to top Go down

Re: நிகமானந்தா!

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jul 18, 2012 11:28 pm

கோவிலுக்குள் எரிகின்ற தீபம் போன்றோர்
=====காவிக்குள் வாழ்கின்ற துறவோர் தாமும்!
கோவிலுக்குள் தீபமென இருத்தல் வாழ்வோ?
=====குடிசைக்குள் தீபமெனக் கருகல் வாழ்வு!

- கருகிய வாழ்வு... இன்று கொஞ்சம் வெற்றியைக் கண்டுள்ளது. உங்கள் கவிதை அவரின் மனத்தை சாந்தி அடைய செய்திருக்கும். பாராட்டுகள்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: நிகமானந்தா!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Jul 19, 2012 1:37 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: நிகமானந்தா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum