"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி
by அ.இராமநாதன் Yesterday at 10:13 pm

» உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
by அ.இராமநாதன் Yesterday at 10:10 pm

» மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 10:06 pm

» வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:04 pm

» மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
by அ.இராமநாதன் Yesterday at 10:02 pm

» டி20 போட்டிகளில் கேப்டனாக 5 ஆயிரம் ரன்களை கடந்து டோனி சாதனை
by அ.இராமநாதன் Yesterday at 6:49 pm

» டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
by அ.இராமநாதன் Yesterday at 6:45 pm

» இந்த உலகத்துல நல்லவங்க, கெட்டவங்கன்னு யாரும் இல்ல....
by அ.இராமநாதன் Yesterday at 2:40 pm

» வாசகர் கவிதை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 2:37 pm

» எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
by அ.இராமநாதன் Yesterday at 2:17 pm

» குற்றத்திற்கும் நீதிக்கும் உள்ள உறவு...!!
by அ.இராமநாதன் Yesterday at 2:11 pm

» நரசிம்மர் பற்றிய 30 வழிபாட்டு குறிப்புகள்
by அ.இராமநாதன் Yesterday at 2:05 pm

» அமர்நாத் யாத்திரை ஜூன் 28-ம் தேதி தொடங்குகிறது!
by அ.இராமநாதன் Yesterday at 2:00 pm

» சருமப் பிரச்னைக்கு மாம்பழம் -
by அ.இராமநாதன் Yesterday at 12:55 pm

» ‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
by அ.இராமநாதன் Yesterday at 11:43 am

» 5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
by அ.இராமநாதன் Yesterday at 11:36 am

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by அ.இராமநாதன் Yesterday at 11:35 am

» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
by அ.இராமநாதன் Yesterday at 11:34 am

» இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
by அ.இராமநாதன் Yesterday at 11:32 am

» பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
by அ.இராமநாதன் Yesterday at 11:32 am

» நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 11:30 am

» பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்: கமலுக்கு முதல் பின்னணிப் பாடல் பாடியவர்
by அ.இராமநாதன் Yesterday at 11:27 am

» பேல்பூரி..!!
by அ.இராமநாதன் Yesterday at 11:08 am

» உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
by அ.இராமநாதன் Yesterday at 11:04 am

» கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
by அ.இராமநாதன் Yesterday at 11:00 am

» 2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
by அ.இராமநாதன் Yesterday at 10:54 am

» தமிழில் காலூன்ற தடுமாறும் பிறமொழி நடிகர்கள்
by அ.இராமநாதன் Yesterday at 9:43 am

» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 11:23 pm

» வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 11:17 pm

» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 11:01 pm

» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:56 pm

» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:32 pm

» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:23 pm

» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:22 pm

» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:18 pm

» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:16 pm

» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:12 pm

» வீரபாண்டிய கட்டபொம்மன்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Apr 25, 2018 8:24 pm

» கவிதை வெளியினிலே ! நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Apr 24, 2018 8:31 pm

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:10 pm

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:54 pm

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:51 pm

» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:44 pm

» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 12:07 pm

» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:59 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Jul 20, 2012 7:17 am

First topic message reminder :

நட்பு அந்தாதியைத் தொடங்குவதில் தோட்டம் மகிழ்கிறது.

ஏற்கெனவே தோட்டத்தில் காதல் அந்தாதி, அம்மா அந்தாதியை முறையே புத்தகமாக 120, 100 பக்கங்கள் எழுதி முடித்த பெரும் பங்கும் சிறப்பும் நம் தோட்டக் கவிஞர்களுக்கு உண்டு. அந்த அந்தாதிகள் முற்றுபெற்றதுபோல இந்த அந்தாதியையும் நம் கவிஞர்களும் வரவிருக்கும் கவிஞர்களும் சிறப்பாக எழுதி முடிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

மேற்கண்ட அந்தாதிகள் புத்தகமாகத் தொகுக்கும் முயற்சியில் சென்று கொண்டிருக்கிறது. விரைவில் செம்மை பெறும். புத்தகமாக வெளிவரும். பங்கேற்ற கவிஞர்களுக்கு புத்தகம் அனுப்பி வைக்கப்படும்.

இந்த நட்பு அந்தாதியையும் எளிமையாக முடித்துவைப்பீர்கள் என்றே நினைக்கிறோம்.

நட்பு அந்தாதியில் காதலைச் சேர்க்க வேண்டாம். காதல் என்ற வார்த்தை இடம் பெறலாம். அந்தக் கவிதைகளில் காதலின் கருப்பொருள் இருக்கக்கூடாது. நட்பையே முன்னிலைப் படுத்தவேண்டும்.

எத்தனை வகை நட்பு இருக்கிறதோ அத்துணை வகை நட்பையும் நாம் கவிதையாக்கலாம். நட்பில் துரோகங்கள் காணப்படுகிறதையும் கவிதையாக்கலாம். எல்லாம் கற்பனை என்று இல்லாத அளவுக்கு கற்பனை கலந்து கவிதையை செம்மையாகவும் நேர்த்தியாகவும் படையுங்கள்.

ஒவ்வொரு கவிதையும் 10 வரிகளுக்கும் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்வது நலம். தமிழ் எழுதும் கவிதைகள் 20 வரிகளைத் தொட்டுவிடுகிறது. இத்தனை வரிகள் எழுதியே ஆக வேண்டும் எனில் கட்டுப்பாடு இல்லை.

கவிதையை கவிதையாகவே பார்க்க வேண்டும். ஆண் பெண் நட்பு, ஆண் ஆண் நட்பு, பெண் பெண் நட்பு, தாய் தந்தை பிள்ளைகளின் நட்பு, குழந்தைகளின் நட்பு... இப்படி நட்புதான் அந்தாதியின் கருப்பொருள்...

தொடர்க... வழக்கம் போல் அந்தாதிக் கவிதைகளில் கருத்துரைகளைத் தவிர்க்கச் சொன்னோம். இந்த அந்தாதியில் கருத்துரைகள் வரவேற்கப்படுகிறது. சிறந்த கருத்துரைகள் புத்தக ஆக்கத்தின் போது அந்தந்த கவிதைகளுக்குக் கீழாகவே எழுதியவரின் பெயரோடே சேர்த்து வெளியிடப்படும்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down


Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by ramaswamy on Sun Jul 22, 2012 1:16 pm

செய்கிறது தீது என அறிந்தும் கூட
கண் மூடி காணாமல் இருப்பது சொந்தம் - நண்பன்
செய்கிறது தீது என அறிந்தவுடன் அவனை
திருத்த துடிப்பதுதான் நட்பு

ramaswamy
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 40
Points : 86
Join date : 15/01/2011
Age : 39
Location : kottar, Nagercoil

Back to top Go down

Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by சதாசிவம் on Sun Jul 22, 2012 2:56 pm

நட்பு
தெரியாமல் பூக்கும் பூ
அறியாமல் வளரும் அன்பு
இதயத்தை நனைக்கும் துடிப்பு
இணைவால் வளரும் தொடர்பு
கண்ணியமாய் தொடர்வது பண்பு
காதல் புகுந்தால் வம்பு
நல்லவருடன் இணைந்தால் இனிப்பு
தீயவருடன் இணைந்தால் கசப்பு
இன்றைக்கு பெரும்பாலும் நடிப்பு
உண்மையான நட்பு குறிஞ்சிப்பூ

avatar
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 42
Location : chennai

Back to top Go down

Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Jul 23, 2012 7:25 am

சதாசிவம் wrote:நட்பு
தெரியாமல் பூக்கும் பூ
அறியாமல் வளரும் அன்பு
இதயத்தை நனைக்கும் துடிப்பு
இணைவால் வளரும் தொடர்பு
கண்ணியமாய் தொடர்வது பண்பு
காதல் புகுந்தால் வம்பு
நல்லவருடன் இணைந்தால் இனிப்பு
தீயவருடன் இணைந்தால் கசப்பு
இன்றைக்கு பெரும்பாலும் நடிப்பு
உண்மையான நட்பு குறிஞ்சிப்பூ

நட்பு தெரியாமல் பூக்கும் பூவல்ல. தெரியாமல் பூத்தால் அது காதல். நட்பு வெளிபடையாத்தான் தோன்றும். பிறக்கும் வளரும்...

நட்பு குறிஞ்சிப் பூவாக மலர்வதில்லை, அது அனுதினமும் மலரும் காதல் ரோஜாவாகவாக இருக்கிறது. குறிஞ்சிப்பூ என்றால் ஒருவருக்கு இரண்டு மூன்று நண்பர்களே இருப்பார்கள். இன்றெல்லாம் ஒருவருக்குப் பல நட்புகள் வாய்த்திருக்கிறது.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by தமிழ்1981 on Tue Jul 24, 2012 5:01 pm

குறிஞ்சிப் பூ - ஆம்
நட்பு குறிஞ்சிப் பூ தான்
பழகும் எல்லோரிடமும்
நாம் நட்பினை
எதிர்பார்ப்பதில்லை
எதிர்பார்க்கும் எல்லாரிடமும்
நட்பூ பூப்பதில்லை
விருப்பங்கள் கருத்துக்கள்
ஒன்றினாலும் மனம்
ஒன்றினால் மட்டுமே
நட்பூ பூக்கின்றது
செடியில் எத்தனை
இலைகள் அதிகமாயி ருந்தாலும்
மணம் வீசுவது
அதில் பூக்க்கும்
சிறிதேயிருக்கும் மலர்களில் மட்டுமே
அதுப் போல்
பழக்க‌ வழக்கங்கள்
எத்தனை இருந்தாலும்
குறிஞ்சிப் பூவைப் போல்
எண்ணிக்கையில் குறைவு தான்
avatar
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 36
Location : sivakasi

Back to top Go down

Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by சதாசிவம் on Tue Jul 24, 2012 8:35 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
சதாசிவம் wrote:நட்பு
தெரியாமல் பூக்கும் பூ
அறியாமல் வளரும் அன்பு
இதயத்தை நனைக்கும் துடிப்பு
இணைவால் வளரும் தொடர்பு
கண்ணியமாய் தொடர்வது பண்பு
காதல் புகுந்தால் வம்பு
நல்லவருடன் இணைந்தால் இனிப்பு
தீயவருடன் இணைந்தால் கசப்பு
இன்றைக்கு பெரும்பாலும் நடிப்பு
உண்மையான நட்பு குறிஞ்சிப்பூ

நட்பு தெரியாமல் பூக்கும் பூவல்ல. தெரியாமல் பூத்தால் அது காதல். நட்பு வெளிபடையாத்தான் தோன்றும். பிறக்கும் வளரும்...

நட்பு குறிஞ்சிப் பூவாக மலர்வதில்லை, அது அனுதினமும் மலரும் காதல் ரோஜாவாகவாக இருக்கிறது. குறிஞ்சிப்பூ என்றால் ஒருவருக்கு இரண்டு மூன்று நண்பர்களே இருப்பார்கள். இன்றெல்லாம் ஒருவருக்குப் பல நட்புகள் வாய்த்திருக்கிறது.

தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி.

நான் கூற வந்த பொருள்.

பலருடன் பழகினாலும் அனைவரிடமும் இணக்கமான நட்பு ஏற்படுவதில்லை. ஒரு சிலரிடம் பழகிய ஒரு சில நாள்களில் ஆழமான நட்பு ஏற்படுகிறது. இது எதனால் என்று கேட்டால் நம்மால் பதில் கூற முடியாது. நாம் அறியாமல் தெரியாமல்
ஏற்படும் நட்பு இது. பூர்வ ஜன்ம தொடர்பு என்று கூறுவார்களே அதைப் போல.

மேலும் இன்றைக்கு அனைத்தும் வர்த்தகமாக மாறிவிட்டது, நட்பு உட்பட. ஏதோ ஒரு பலன் கருதியே பெரும்பாலான நண்பர்கள் பழகுகிறார்கள். உண்மையான நட்பு ஏதோ ஒருவரிடம் அரிதாக அமைகிறது. குறிஞ்சிப்பூ போல.
[You must be registered and logged in to see this image.]
avatar
சதாசிவம்
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 42
Location : chennai

Back to top Go down

Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by தமிழ்1981 on Wed Jul 25, 2012 8:57 pm

எண்ணிக்கையில் குறைவு தான்
ஆனால் மனதில் ஆழமாக‌
படியும் உறவு
நட்பு மட்டுமே.......
avatar
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 36
Location : sivakasi

Back to top Go down

Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by தமிழ்1981 on Wed Jul 25, 2012 9:06 pm

நட்பு மட்டுமே
இரத்த‌ சம்பந்தம்
இல்லாவிடினும்
ஆபத்தில் நமக்கு
உதிரம் தந்து
உயிரைக் காக்கவும்
தயங்காத‌ உறவு
நட்பு
avatar
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 36
Location : sivakasi

Back to top Go down

Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by தமிழ்1981 on Wed Jul 25, 2012 9:08 pm

நட்பு மட்டுமே
துயரங்களையும்
உரிமையுடன் பகிரும் உறவு.....
தோல்விகளில் நம்மை
ஏளனம் செய்யாது
தோள்களைத் தட்டிக் கொடுக்கும்
உறவு நட்பே
avatar
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 36
Location : sivakasi

Back to top Go down

Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by ramaswamy on Thu Jul 26, 2012 8:58 pm

நட்பே உயர்ந்தது பாசத்தை காட்டிலும் - நான்

ஊர் திரும்பும் நேரங்களில் எல்லாம் -

வீட்டிலேயே காத்திருந்தது பாசம் - பேருந்து

நிலையத்தில் எதிர்பார்ப்புடன் காத்திருந்தது நட்பு

ramaswamy
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 40
Points : 86
Join date : 15/01/2011
Age : 39
Location : kottar, Nagercoil

Back to top Go down

Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sun Jul 29, 2012 9:58 am

நட்பிலும் மூன்றுவகை-
மது மாது போதையின்றியிருக்கும்
ஒரு நல்ல நட்பு வட்டம்.
மது மாது போதையோடு
ஒரு தீய நட்பு வட்டம்.
மூன்றாதுதான் உயர்ந்தது -
நாங்கள்தான் தீயவர்கள்
புதிய நண்பா நீயாவது
இந்தத் தீய பழக்கத்துக்கு ஆளாகிவிடாதே!

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by தமிழ்1981 on Wed Aug 01, 2012 3:05 pm

ஆளாகி விடாதே
நட்பு என்ற‌ பெயரில்
கூட்டம் சேர்த்து
வீணான‌ காரியங்களையும்
வாழ்வினை பாழாக்கும் செயல்களையும்
செய்யப் பழகி விடாதே.........
உண்மை நட்பு என்பது
நீ தீயதில் இருந்தாலும்
உன்னைக் அன்பால் கண்டித்து
உன்னை நட்பால் மீட்டு
உன்னை நேசத்தால்
நல்வழிப் படுத்துவதே
உண்மை நட்பு..........
உன் இன்பத்தில்
பங்கு கொள்பவன் எல்லாம்
நண்பர்கள் அல்ல.......
உன் துன்பத்தில்
உன்னருகில் உரிமையாய்
பங்கு கொள்பவனே உந்தன்
உண்மையான‌ நண்பன்.........

avatar
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 36
Location : sivakasi

Back to top Go down

Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Aug 07, 2012 11:41 am

நண்பர்கள் முரண்பட்டவர்கள்
உலக இயக்கங்களைப் போல
காலத்திற்கு ஏற்றாற்போல
இயல்பை மாற்றிக் கொள்வதில்.
காதலைப்போல நட்பும்
புனிதமென்றாலும்
துரோகங்களும் நிறைந்ததே
நட்பு

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by yarlpavanan on Tue Aug 07, 2012 12:00 pm

நட்பு என்பது
நன்நன்மை தந்தாலும்
தீதீமை தந்தாலும்
பன்றியோடு சேர்ந்த ஆவும்
பீ தின்னுமாப் போல தான்
சேருவோர் சேர்ந்தவர்களின்
இயல்பைக் கைக்கொள்கின்றனரே தவிர
நட்புக்குக் கெட்டபெயர் கிடையாதே!
நட்பு நட்புத் தான்!


Last edited by yarlpavanan on Tue Jan 22, 2013 8:41 am; edited 1 time in total
avatar
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1035
Points : 1515
Join date : 30/10/2011
Age : 48
Location : sri lanka

Back to top Go down

Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by தமிழ்1981 on Tue Aug 07, 2012 4:30 pm

நட்பு நட்பு தான்
அன்பால் மலரும் பூ நட்பு
உள்ளங்களை இணைக்கும் நட்பு
அன்பினை வளர்க்கும் நட்பு
வேறுபாடுகளை இணைக்கும் நட்பு
தோல்வியையும் பகிருவது நட்பு
ஜெயித்தால் கூடமகிழ்வது நட்பு
ஆலோசனைகளை சொல்வது நட்பு
இரத்த‌ பந்தமல்ல என்றாலும்
நண்பனுக்கு ஆபத்தென்றால்
இதயத்தை அசைக்கும் உறவு நட்பு
avatar
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 36
Location : sivakasi

Back to top Go down

Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by பார்த்திபன் on Wed Aug 08, 2012 3:18 pm

நட்பு என்று சொல்லும்போதே
நடு நாக்கு இனிக்கும்!
நண்பனுக்குத் துன்பம் என்றால்
நரம்பெல்லாம் துடிக்கும்!
எல்லா ஜாதி மதங்களையும்
நட்பு ஒன்றே இணைக்கும்!
நண்பன் கூட வருவதென்றால்
நரகம் கூட இனிக்கும்!
avatar
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 41
Location : பெங்களூரு

Back to top Go down

Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Sep 08, 2012 6:15 pm

இனிமையாக பொழுதுகள்
நம் பள்ளி, கல்லூரியின்
நெடுநாள் நட்பு...
இன்றும் நிலைத்திருக்கிறது...
கல்லறை வரை நீண்டு இருக்கட்டும்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by பார்த்திபன் on Mon Sep 10, 2012 2:41 pm

இருக்கட்டும் என்று
என்றோ எழுதிவைத்த
முன்னாள் நண்பர்களின்
முகவரித் தொகுப்பு
ஏதோவொன்றைத் தேடுகையில்
எதேச்சையாய்க் கண்ணில் பட,
தேட வந்ததை மறந்து போகிறேன்!
தேனில் ஊறிய நினைவுகளில்
கரைந்து போகிறேன்!
avatar
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 41
Location : பெங்களூரு

Back to top Go down

Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by தமிழ்1981 on Wed Sep 12, 2012 5:47 pm

கரைந்து போகிறேன் நான்
துக்க இதயத்தோடும்
விழி நீரோடும்
தனித்து நிற்கையில்
நண்பா என்றழைத்து
உரிமையாய் என்
துயரை பகிர்ந்தாயே
ஆறுதல் மொழி சொல்லி
துன்பம் மறக்க‌ செய்தாயே
அவ்வன்பினை நினைத்து
நம் நட்பின் ஆழத்தில்
கரைந்து போகின்றேன் நான்......
avatar
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 36
Location : sivakasi

Back to top Go down

Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by நிலாமதி on Wed Sep 12, 2012 8:02 pm

அக்தியாய் நான் ஓடி வந்து
ஆலயத்தில் சரணடைந்த் போது ...
அயலவ்ர் சொல்ல்க் கேட்டு
உடுத்திருந்த ஆடையுடன்
ஓடிவந்து அழை த்து பசி நீக்கிய்
அன்புத்தோழி பள்ளி உறவு
நெஞ்சகலாத நிகழ்வு



avatar
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 51
Location : canada

Back to top Go down

Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by தமிழ்1981 on Thu Sep 27, 2012 12:15 am

நெஞ்சகலாத நிகழ்வு
ஆம் இன்னும் என்னுள்
நெஞ்சகலாத நிகழ்வு
நம் நட்பிற்குள்ளும்
ஊடல் வந்து
நாம் பேசாமல்
ஒருவரையொருவர் பாராமல்
வருடங்கள் கடந்தபோதும்
நான் மருத்துவமனையில்
இருக்கின்றேன் என்று அடுத்தவன்
சொல்லக் கேட்டவுடன்
பகை மறந்து
கோபத்தை விட்டகற்றி
நேரில் வந்து
என்னடா ஆச்சு என்றாயே
அந்த‌ அன்பு வரிகள்
நட்பில் மட்டுமே முடியும்......
நட்பு வாழ்க்கையினை
என்றும் வாடாமல்
மனந்தரும் மலரே....
avatar
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 36
Location : sivakasi

Back to top Go down

Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by yarlpavanan on Thu Sep 27, 2012 6:31 am

நட்பு மட்டுமே
இரு உள்ளங்கள் விரும்பினால்
மலர்ந்து வளர்வது என்றால்
காதலின் நிலை என்னவாகும்?
ஒருவர் மீது ஒருவருக்கு
ஒருவித பிடிப்பு ஏற்பட
நட்போ காதலோ தோன்றலாம்...
நறுக்காகப் பழக நட்பு
நெருக்கமாகப் பழகக் காதல்
அதுவும்
ஒருவர் மீது
ஒருவர் வைத்திருக்கும்
புரிந்துணர்வே!
avatar
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1035
Points : 1515
Join date : 30/10/2011
Age : 48
Location : sri lanka

Back to top Go down

Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by பார்த்திபன் on Thu Dec 13, 2012 7:27 pm

புரிந்துணர்வே புனிதமானது
-புரியவைத்தது நட்பு!
கோபத்தில் எனை உதறிய நண்பன்
ஆபத்தில் எனக்கு உதவிய போது
அனிச்சையாய் அழுதன விழிகள்!
அடுத்த கணமே பறந்தன வலிகள்!
avatar
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 41
Location : பெங்களூரு

Back to top Go down

Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Dec 13, 2012 9:42 pm

வலிகளின் வேதனையை
மறக்க வைத்தது கல்லூரி நட்பு.
இன்று பிரிந்திருப்பினும்
இன்பமாய் நகர்கிறது
இன்னும் அந்த இளமையான நட்பு.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by பார்த்திபன் on Fri Dec 14, 2012 2:16 pm

நட்பு எனும் செடியொன்றே
நட்டவுடன் பூப்பூக்கும்!
நம்பிக்கை எனும் நீரூற்ற
நாள்தோறும் கனி கொடுக்கும்!
ஆணிவேரின் அடிவரைக்கும்
அன்பு ஒன்றே நிறைந்திருக்கும்!
ஆயிரம்பேர் நாடினாலும்
அனைவருக்கும் நிழல் கொடுக்கும்!
avatar
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 41
Location : பெங்களூரு

Back to top Go down

Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கலைநிலா on Fri Dec 14, 2012 2:23 pm

கொடுக்கும் மனமும்
கெட்டதை தடுக்கும் குணமும்
கொண்டதே நட்பு...


_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 53
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum