"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Today at 3:57 am

» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by அ.இராமநாதன் Today at 3:54 am

» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by அ.இராமநாதன் Today at 3:52 am

» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by அ.இராமநாதன் Today at 3:50 am

» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by அ.இராமநாதன் Today at 3:47 am

» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by அ.இராமநாதன் Today at 3:45 am

» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 8:10 pm

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by அ.இராமநாதன் Yesterday at 7:57 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 7:56 pm

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 7:55 pm

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by அ.இராமநாதன் Yesterday at 7:54 pm

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by அ.இராமநாதன் Yesterday at 7:53 pm

» கோடை டிப்ஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 7:48 pm

» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
by அ.இராமநாதன் Yesterday at 7:45 pm

» ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:37 pm

» இல்லையென ஆகிவிடுமா?
by அ.இராமநாதன் Yesterday at 7:30 pm

» சமூகக் குற்றம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:53 pm

» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:45 am

» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:38 am

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:32 am

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:30 am

» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:08 pm

» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:46 pm

» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:33 pm

» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:31 pm

» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:27 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:23 pm

» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:15 pm

» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:11 pm

» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:09 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:02 pm

» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:57 pm

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:16 pm

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 6:02 pm

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 5:25 pm

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:58 pm

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:57 pm

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:53 pm

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:50 pm

» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:30 pm

» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:27 pm

» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:23 pm

» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:16 pm

» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 12:07 pm

» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:59 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Jul 20, 2012 7:17 am

First topic message reminder :

நட்பு அந்தாதியைத் தொடங்குவதில் தோட்டம் மகிழ்கிறது.

ஏற்கெனவே தோட்டத்தில் காதல் அந்தாதி, அம்மா அந்தாதியை முறையே புத்தகமாக 120, 100 பக்கங்கள் எழுதி முடித்த பெரும் பங்கும் சிறப்பும் நம் தோட்டக் கவிஞர்களுக்கு உண்டு. அந்த அந்தாதிகள் முற்றுபெற்றதுபோல இந்த அந்தாதியையும் நம் கவிஞர்களும் வரவிருக்கும் கவிஞர்களும் சிறப்பாக எழுதி முடிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

மேற்கண்ட அந்தாதிகள் புத்தகமாகத் தொகுக்கும் முயற்சியில் சென்று கொண்டிருக்கிறது. விரைவில் செம்மை பெறும். புத்தகமாக வெளிவரும். பங்கேற்ற கவிஞர்களுக்கு புத்தகம் அனுப்பி வைக்கப்படும்.

இந்த நட்பு அந்தாதியையும் எளிமையாக முடித்துவைப்பீர்கள் என்றே நினைக்கிறோம்.

நட்பு அந்தாதியில் காதலைச் சேர்க்க வேண்டாம். காதல் என்ற வார்த்தை இடம் பெறலாம். அந்தக் கவிதைகளில் காதலின் கருப்பொருள் இருக்கக்கூடாது. நட்பையே முன்னிலைப் படுத்தவேண்டும்.

எத்தனை வகை நட்பு இருக்கிறதோ அத்துணை வகை நட்பையும் நாம் கவிதையாக்கலாம். நட்பில் துரோகங்கள் காணப்படுகிறதையும் கவிதையாக்கலாம். எல்லாம் கற்பனை என்று இல்லாத அளவுக்கு கற்பனை கலந்து கவிதையை செம்மையாகவும் நேர்த்தியாகவும் படையுங்கள்.

ஒவ்வொரு கவிதையும் 10 வரிகளுக்கும் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்வது நலம். தமிழ் எழுதும் கவிதைகள் 20 வரிகளைத் தொட்டுவிடுகிறது. இத்தனை வரிகள் எழுதியே ஆக வேண்டும் எனில் கட்டுப்பாடு இல்லை.

கவிதையை கவிதையாகவே பார்க்க வேண்டும். ஆண் பெண் நட்பு, ஆண் ஆண் நட்பு, பெண் பெண் நட்பு, தாய் தந்தை பிள்ளைகளின் நட்பு, குழந்தைகளின் நட்பு... இப்படி நட்புதான் அந்தாதியின் கருப்பொருள்...

தொடர்க... வழக்கம் போல் அந்தாதிக் கவிதைகளில் கருத்துரைகளைத் தவிர்க்கச் சொன்னோம். இந்த அந்தாதியில் கருத்துரைகள் வரவேற்கப்படுகிறது. சிறந்த கருத்துரைகள் புத்தக ஆக்கத்தின் போது அந்தந்த கவிதைகளுக்குக் கீழாகவே எழுதியவரின் பெயரோடே சேர்த்து வெளியிடப்படும்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by tamizhmuhil on Tue Jan 22, 2013 3:16 am

நட்பு மிகக் கொடுத்து
அன்பை அளவிலாது பரிமாறி
துன்பங்கள் தனை பகிர்ந்து
இன்பங்களை பன்மடங்காக்கி
இன்னல்களை மறந்து
இனிதே வாழ்வும் தொடர்ந்திட
வண்ண மயமான எதிர்காலத்திற்கு
வழிகோலிடாதோ நட்பு??? - அது
உருவாக்கிடாதோ - தன்னலம்
மறந்த பொதுநல உலகம் ???
avatar
tamizhmuhil
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 164
Join date : 26/09/2011

Back to top Go down

Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by yarlpavanan on Tue Jan 22, 2013 8:44 am

உலகம் எங்கும்
இனிக்கும் நட்பில்
மணக்கும் நல்லன...
எல்லாம் இனிதே நிகழ
என்றும் அழை
உன் நட்பை பேணும்
நல்ல நண்பர்களை!
avatar
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1035
Points : 1515
Join date : 30/10/2011
Age : 48
Location : sri lanka

Back to top Go down

Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by tamizhmuhil on Tue Jan 22, 2013 1:22 pm

நண்பர்களை நாம்
இனம் கண்டால்
நம்மை நாமே
அறியலாம் !!!
நம் மனம் குணம்
இரண்டையும் பிரதிபலிக்கும்
இவர்கள் - நம்மையே
நமக்கு இனம் காட்டும்
கண்ணாடிகள் !!!
avatar
tamizhmuhil
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 164
Join date : 26/09/2011

Back to top Go down

Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 23, 2013 9:18 pm

கண்ணாடிகள்
உடைபடுகிறது
நண்பனுக்குப் பிரச்சினை என்றால்
எதிரியின் மூக்குக் கண்ணாடியோ
வீட்டுக்கண்ணாடியோ!
யார் தவறு என்று பார்ப்பது நட்பன்று
நண்பனுக்குத் தீங்கு இழைத்தவன்
யார் என்று பார்ப்பதுதான் நட்பு!

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by yarlpavanan on Fri Jan 25, 2013 1:47 am

நட்பு நம்மை நாடும்
நட்பு நன்மை செய்யும்
நட்பு சிக்கலில் தோள்கொடுக்கும்
நல்ல நட்பைத் தேடியவர் கூறும்
உண்மை இது!
avatar
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1035
Points : 1515
Join date : 30/10/2011
Age : 48
Location : sri lanka

Back to top Go down

Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by tamizhmuhil on Fri Jan 25, 2013 4:20 am

இது என்ன ஓர்
அற்புதமான உறவு !!!
உணர்வுப்பூர்வமான
உள்ளப் புரிதல் !!!
நட்பு ! - அது நானிலத்தை
நலமாக்கும் நல்லுறவால் !!!
ஆபத்தில் திக்கற்று நிற்கையில்
ஆபத் பாண்டவராய் !!!
கஷ்டத்தில் கைபிசைகையில்
கர்ண வள்ளலாய் !!!
உலகமே நம்மை விட்டு
விலகி நின்ற போதிலும்
உனக்கு என்றென்றும்
துணையாய் நான் என்று
கைகொடுக்கும் !!!
தன்னலம் மறந்து
தன் நட்புறவுக்காக
துடிக்கும் அன்பு இதயம் !!!
avatar
tamizhmuhil
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 164
Join date : 26/09/2011

Back to top Go down

Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by பார்த்திபன் on Fri Jan 25, 2013 2:03 pm

இதயம் தருவது காதல்!
எதையும் தருவது நட்பு!
இதமாய் மலர்வது காதல்!
இயல்பாய் மலர்வது நட்பு!
உள்ளம் உருக்குவது காதல்!
உலகையே சுருக்குவது நட்பு!
எதிர்பாலினம் ஈர்ப்பது காதல்!
எதிர்பார்பின்றி ஈர்ப்பது நட்பு!
துணைக்குத் துன்பமெனில்
துவண்டு போவது காதல்!
துணைக்குத் துன்பமெனில்
துணைக்கு நிற்பது நட்பு!
avatar
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 41
Location : பெங்களூரு

Back to top Go down

Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Jan 25, 2013 6:06 pm

அந்தாதி எழுதும் நண்பர்கள் கவனத்திற்கு...

நட்பு அந்தாதி எழுதி வருவதற்கு மகிழ்ச்சியே... வரிகள் நீண்டு இருக்கிறது. இனிமேல் எழுதும் அந்தாதிகளை அதிக பட்சம் 10 வரிக்குள் இருக்கும்படி எழுதுங்கள். புத்தகமாக வெளியிடும்போது சில சிக்கல்கள் வருகிறது (எடுத்துக்காட்டாகச் சொல்ல வேண்டும் என்றால் 20 வரிகள் கொண்ட கவிதை ஒரு முழு பக்கத்தை எடுத்துக்கொள்கிறது.).

10 வரிக்குள் சொல்ல முடியவில்லை என்றால் இரண்டு கவிதையாக - மூன்று கவிதையாக - அந்தாதியாக நீங்களே கூட தொடர்ந்து எழுதுங்கள் பிரச்சினை இல்லை. அந்த இரண்டு மூன்று கவிதைகளிலும் நீங்களே அந்தாதி தொடர் வரும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

இது உங்களைக் கட்டுப்படுத்துகிறது என்று எண்ண வேண்டாம். பின்னர் ஒரு சமயம் பல்கலைக் கழக ஆய்வுக்கு இந்தப் புத்தகத்தை யாராவது ஆய்வு செய்யும் போது (ஆய்வு செய்வார்கள்) அவர்களுக்குக் கவிதை நீண்டு இருந்தால் சில ஆய்வுச் சிக்கல்கள் எழும். அதைக் கருத்தில் கொண்டே இந்தக் கட்டுப்பாடு.

ஒத்துழைப்புக் கொடுங்கள். நன்றி.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கலைநிலா on Fri Jan 25, 2013 7:19 pm

நட்பு
நன்றி சொல்ல மறந்தாலும்
நண்பன் அவன்
செய்யும் உதவியை
மறப்பதில்லை
மறுப்பதுமில்லை...

ஆனந்தத்தில்
உருகியது மனம்
கண்களும் சிந்தியது
நன்றிவுடன்...

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 53
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by tamizhmuhil on Sat Jan 26, 2013 9:47 am

நன்றியுடன் நினைத்துப் பார்க்க
இன்று ஒருவருமில்லை !!!
அன்று உன்னையே வருத்திச்
செய்தாய் - பல உதவிகள் !!!
இன்று உன்னை யாரென்று
கேட்கும் - கல் இதயங்கள் !!!
அனைவருக்கும் துணையாய்
அன்று நீ ! - இன்றோ
உனக்குத் துணையாய்
உன் நம்பிக்கை மட்டுமே !!!
avatar
tamizhmuhil
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 164
Join date : 26/09/2011

Back to top Go down

Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by அ.இராமநாதன் on Sat Jan 26, 2013 10:34 am

[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27185
Points : 59517
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கலைநிலா on Sat Jan 26, 2013 11:04 am

அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]
நம்பிக்கை மட்டுமே
நம்மை இன்றும்
நட்போடு இணைக்கிறது
உன் வீட்டிலும்
எனது வீட்டிலும்..

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 53
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by பார்த்திபன் on Sun Jan 27, 2013 2:27 am

வீட்டிலும் சரி,
வீதியிலும் சரி,
விரக்தியிலும் சரி,
வீழ்ச்சியிலும் சரி,
வியர்வையிலும் சரி,
விசும்பலிலும் சரி,
விட்டுக்கொடுத்தலின் தத்துவத்தை
விரிவாக விளக்குவதில்
நட்பிற்கு இணையான
நல்லாசான் வேறில்லை!
avatar
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 41
Location : பெங்களூரு

Back to top Go down

Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by tamizhmuhil on Mon Jan 28, 2013 8:03 am

வேறில்லை நட்பும்
தியாகமும் !!! -நட்பு
உள்ள மனதில்
அன்பும் தியாகமும்
பிரவாகமெடுக்கும்-
நீரூற்றாய் !!!
avatar
tamizhmuhil
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 164
Join date : 26/09/2011

Back to top Go down

Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Jan 28, 2013 7:59 pm

நீரூற்றாய்ப் பொங்கி எழுந்தாலும்
நட்பின் தன்மையை
ஆராய்ச்சிக்கு
உட்படுத்திய நூல்களை என்னசெய்வது?

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by tamizhmuhil on Tue Jan 29, 2013 1:15 pm

என்ன செய்வது ?
மன வேற்றுமை மதிலை
நாமிருவரும் எழுப்ப - அது
பலருக்கு நம் நட்பின்
கடைசி யாத்திரைக்கான
அழைப்பிதழை ஒட்ட
ஏதுவாய் அமைந்து விட்டது !!!
எவரும் எக்காலத்தும்
அறியப்போவதில்லை !!! - பிரிவில்
நம் நட்பு சீனப் பெருஞ்சுவராய்
உறுதியாய் உயரமாய்
வளர்ந்து நிற்கிறதென்பதை !!!
avatar
tamizhmuhil
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 164
Join date : 26/09/2011

Back to top Go down

Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Jan 29, 2013 1:43 pm

வளர்ந்து நிற்கும்
நட்புக் கரங்கள்
ஆயிரம் பாடங்களைக்
கற்றுத் தந்துவிட்டுப்போகிறது.
அவரவரின் புரிதலுக்கு.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by tamizhmuhil on Tue Jan 29, 2013 10:52 pm

புரிதலுக்குத் தேவை
சிறிது பிரிவு !!!
உறவின் மகத்துவத்தை
அழகாய் உணர்த்திடுமே -
பிரிவுமே ! - இது
நட்பின் நயத்திற்கும்
நன்றாய் பொருந்திடுமே !!!
avatar
tamizhmuhil
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 164
Join date : 26/09/2011

Back to top Go down

Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கலைநிலா on Wed Jan 30, 2013 10:47 am

பொருந்திடும் நட்புக்குள்
புரிதலும் அறிதலும் உண்டு
நட்பின் நடப்பு
நாடு விட்டு
நாடு சென்றாலும்
தொடரும்...

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 53
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by tamizhmuhil on Thu Jan 31, 2013 3:45 pm

எந்த வார்த்தையை வைத்து அந்தாதியை தொடர்வது நண்பரே ? "தொடரும்" என்ற சொல்லை வைத்தா ? அன்றி " பொருந்திடுமே" என்ற சொல்லை வைத்தா?
avatar
tamizhmuhil
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 164
Join date : 26/09/2011

Back to top Go down

Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by vinitha on Thu Jan 31, 2013 5:15 pm

தொடரும் நம் நட்பு
என் இதயம்
என் மூச்சு
என்னுடன் இருக்கும் வரை
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Jan 31, 2013 8:43 pm

என்னுடன் இருக்கும் வரை
நீ நண்பர்களாகவே அறியப்பட்டாய்
பிரிந்த பின்னர்தான்
நட்பில் காதல்
துளிர்விட்டுக்கொண்டிருந்ததை
கண்டுகொள்ள முடிந்தது!

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கலைநிலா on Thu Jan 31, 2013 8:46 pm

முடிந்தது என்று
முடித்துக்கொண்டாலும்
உன் நினைவு
முகவரி மனதுக்குள்...

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 53
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Jan 31, 2013 8:52 pm

tamizhmuhil wrote:எந்த வார்த்தையை வைத்து அந்தாதியை தொடர்வது நண்பரே ? "தொடரும்" என்ற சொல்லை வைத்தா ? அன்றி " பொருந்திடுமே" என்ற சொல்லை வைத்தா?

என்று கேட்டு இருக்கிறீர்கள்... அந்தாதி எழுதுபவர்கள் கவனத்திற்கு... நீங்கள் எழுதுவதற்கு முன்னர் யார் எழுதி முடித்து இருக்கிறார்களோ அவரைத் தொடர்ந்து அந்தாதியாக எழுதுங்கள்... ஒரே நேரத்தில் இருவர் அல்லது மூவர் பதியும்போது அந்தாதியின் - கவிதையின் முதல் அடி மாற வாய்ப்பு இருக்கிறது. அதை தமிழ்த்தோட்டத்தின் புத்தகக் குழு பெரிய மாற்ற மின்றி சரி செய்து கொள்ளும். ஒரு வேலை அதை நீங்களாகக்கூட தங்கள் கவிதையின் முதல் அடியைத் திரும்ப மாற்றி எழுதி பதியலாம்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by அ.இராமநாதன் on Thu Jan 31, 2013 8:53 pm

[You must be registered and logged in to see this image.]

---
இவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல்களிலிருந்து விடுபட
நட்புதான் உதவியிருக்குமோ..?
--

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27185
Points : 59517
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum