"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விநோதமான வேலை!
by அ.இராமநாதன் Today at 7:05 pm

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by அ.இராமநாதன் Today at 7:04 pm

» விஷ சேவல் கோழி மீன்
by அ.இராமநாதன் Today at 2:19 pm

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
by அ.இராமநாதன் Today at 2:09 pm

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by அ.இராமநாதன் Today at 7:57 am

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by அ.இராமநாதன் Today at 7:55 am

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by அ.இராமநாதன் Today at 7:53 am

» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Yesterday at 9:15 pm

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Yesterday at 8:41 pm

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 2:04 pm

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 2:04 pm

» முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி உடல்நல குறைவு
by அ.இராமநாதன் Yesterday at 2:03 pm

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 2:02 pm

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by அ.இராமநாதன் Yesterday at 1:57 pm

» பத்ம பூஷண் விருதுக்காக மகேந்திர சிங் டோனி பிசிசிஐ பரிந்துரை
by அ.இராமநாதன் Yesterday at 1:56 pm

» ''இந்த உலகத்திலேயே மிகவும் உறுதியான பெண் நீங்கள்தான்!” செரினா வில்லியம்ஸின் உருக்கமான கடிதம்
by அ.இராமநாதன் Yesterday at 1:55 pm

» 'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by அ.இராமநாதன் Yesterday at 1:53 pm

» ஆதாருடன் கட்டாயம் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்...
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:54 am

» நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:37 am

» 2க்கு மேல் பெற்றால் வேலையில்லை : சட்டத்துக்கு அசாம் அரசு ஒப்புதல்
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:20 am

» மொபைல் அழைப்பு இணைப்பிற்கான கட்டணம்: டிராய் குறைப்பு
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:19 am

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:18 am

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:17 am

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:15 am

» கிரிக்கெட் வீராங்கனையின் வாழ்க்கை சினிமாவாகிறது
by அ.இராமநாதன் Wed Sep 20, 2017 9:14 am

» புத்தனைத் தேடும் போதி மரங்கள் !! நூல் நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ்மொழி ! நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Sep 19, 2017 9:46 pm

» வாட்ஸ் அப் கலக்கல்
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 6:52 pm

» காத்து வாயன் கவிதை - கைபேசி யாருககு.,,,
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 6:50 pm

» ஒரு பாட்டுக்கு ஆடுனா அவ ஆட்டக்காரி..
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:35 pm

» கணவனுக்கு குளிர் விட்டுப் போயிடுது…!!
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:33 pm

» அவ புருசன் தான் என் கனவுல வந்தானே..!
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:31 pm

» ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:28 pm

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:27 pm

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:26 pm

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:24 pm

» தலைவருக்கு எது அலர்ஜி?
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:23 pm

» பாராளுமன்ற நெறிமுறை குழு தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:10 pm

» காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறையாகும்-சுப்ரீம் கோர்ட்
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:09 pm

» தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித்- துஷ்யந்த் தவே
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:09 pm

» 12 பெண்கள் பாலியல் வன்கொடுமை பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:08 pm

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:05 pm

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by அ.இராமநாதன் Mon Sep 18, 2017 10:29 pm

» பூவே இளைய பூவே
by அ.இராமநாதன் Mon Sep 18, 2017 10:25 pm

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by அ.இராமநாதன் Mon Sep 18, 2017 10:24 pm

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by அ.இராமநாதன் Mon Sep 18, 2017 10:22 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இலக்கிய முற்றம் நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா .மோகன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

View previous topic View next topic Go down

இலக்கிய முற்றம் நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா .மோகன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi on Sat Jul 21, 2012 10:20 am

இலக்கிய முற்றம்

நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா .மோகன்

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

வானதி பதிப்பகம் 23.தீனதயாளன் தெரு, தி .நகர் .சென்னை .
17 விலை ரூபாய் 120


நூலின் அட்டைப்படம் மிக அருமை .அற்புதம் .இயற்கைக் காட்சிகளை கண் முன்
நிறுத்துகின்றன ."இலக்கிய முற்றம் " என்ற நூலின் பெயர் கவித்துவம் .நூலின்
உள்ளே நுழைந்தால்
இலக்கிய விருந்து .நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா .மோகன்அவர்களின் என்னுரையின் தலைப்பு "நல்லன எல்லாம் தரும் " என்பது உண்மை .இந்த நூலைப் படித்தால் நல்லன எல்லாம் தரும்.நூலின் பயனை குறிப்பிடுவதாக உள்ளது .பாராட்டுக்கள்



கவிதைஉறவு,புதுகைத்தென்றல் ,மனிதநேயம் ,ரசனை ஆகிய இதழ்களில் வெளிவந்த
கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார்கள் .இந்த கட்டுரைகளை மாதாமாதம்
தொடர்ந்து படித்து வருகிறேன். மொத்தமாக நூலாக வந்தபின் மறு வாசிப்பு செய்த
பின் நூல்
ஆசிரியர் தமிழ்த்தேனீ பேராசிரியர்
இரா. மோகன்
அவர்களின் ஓயாத
உழைப்பை எண்ணி வியந்தேன் .

வரலாற்று சிறப்பு மிக்க மதுரை
காமராசர் பலகலைக் கழகத்தில் தகைசால்
பேராசிரியராகப் பணி புரிந்துக்
கொண்டே ,பல்வேறு இலக்கிய மேடைகளில் இலக்கிய உரை நிகழ்த்திக் கொண்டு
,பட்டிமன்ற நடுவராக முத்திரைப் பதித்துக் கொண்டு ,பல்வேறு இதழ்களில் தொடர்
கட்டுரைகள் எழுதிக் கொண்டு இருக்கிறார். எழுதிய
கட்டுரைகளை உடனுக்குடன் நூலாக்கி விடுகின்றார் .இவர் எப்போது படிக்கிறார் , எப்போது எழுது கிறார் .எபோதாவதுதான் தூங்குவார் போலும் .முனைவர் வெ.இறையன்பு அவர்கள் குறிப்பிடுவதுப் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும் மிகச் சிறந்த ஆளுமையார் பேராசிரியர்
இரா .மோகன்.அவருடைய திறனாய்வுப் புலமையைப் பறை சாற்றும் விதமாக நூல் உள்ளது .
நேரத்தை திட்டமிட்டு ஒதுக்கி வெற்றி முத்திரை பதித்து வருகிறார் .பேராசிரியர் இரா .மோகன்.அவர்கள் சக எழுத்தாளர்களையும் ,கவிஞர்களையும் மனம் திறந்து பாராட்டும் உயர்ந்த
உள்ளத்திற்கு சொந்தக்காரர். இந்த நூலிற்கு அணிந்துரை என்று யாரிடமும்
வாங்காமல் .இவரது கட்டுரைகளை இதழ்களில் பாராட்டிய வாசகர்களின் கடிதங்களின்
சுருக்கத்தை அணிந்துரையாக வைத்து இருப்பது புதிய உத்தி .பாராட்டிய
வாசகர்களுக்கும் மகுடம் வைத்துள்ளார் .
நூலில் 30 கட்டுரைகள் உள்ளது .முத்தமிழ் போல மூன்று பகுதிகளாகப்
பிரித்து வழங்கி உள்ளார் .முதல் பகுதியில் வாழும் படைப்பாளிகளுக்கு புகழ்
கீரிடம் .

இரண்டாம் பகுதி வாழ்ந்து உடலால் மறைந்து பாடாலால் இன்றும்
வாழும் சங்கப் புலவர்களுக்கு புகழ் கீரிடம் .
மூன்றாம் பகுதி வாழ்வியல் இலக்கணம் விளக்கும் பகுதி .


மு .வ .அல்லது முன்னேற்ற வரலாறு தொட
ங்கி தமிழுக்குக் கிடைத்து இருக்கும்
திறமான சென்ரியு கவிஞர் அமுதன் வரை 11 கட்டுரைகள் ,இலக்கிய முற்றம் 12
கட்டுரைகள்,சிந்தனை மன்றம் 7கட்டுரைகள்.மூன்று பகுதியாக உள்ள 30 கட்டுரைகளும் முத்தமிழாக இனிக்கின்றது படித்து முடிக்கும் வாசகர்களை பண்படுத்தும் விதமாக ,பக்குவப்படுத்தும் விதமாக நெறிப்படுத்தும் விதமாக நூல் உள்ளது .பாராட்டுக்கள் .





கவிதைஉறவு இதழில் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ் .ராதா கிருஷ்ணன்
அவர்களின் கவிதையில் இருந்து திறனாய்வாகக் காட்டி உள்ள கவிதை இதோ !

மகாத்மா காந்தி
மீண்டும் பிறக்க வேண்டும்
ராட்டையோடு அல்ல
ஒரு சாட்டையோடு !

(யாரும் யாராகவும் பக்க எண் 45 )

நூலின் பெயர் பக்க எண் குறிப்பிட்டு எழுதுவது நூல் ஆசிரியர் வழக்கம் .பக்க எண் வரை குறிப்பிட்டு பக்காவாக எழுதுவது தனிச் சிறப்பு .


படைப்பாளிக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத மகிழ்ச்சி
தமிழ்த்தேனீ பேராசிரியர்
இரா. மோகன் போன்ற திறனாய்வாளர்கள் மேற்கோள் காட்டி பாராட்டுவதில்தான் உள்ளது .


படைப்பாளிகளின் திறமைகளை திறனாய்வின் மூலம் பறை சாற்றி வருகின்றார் .

கவிஞர் கல்யாண்ஜி கவிதைகள் பற்றிய கட்டுரையில்

இருந்து என்ன ஆகப் போகிறது செத்துத் தொலைக்கலாம்
செத்து என்ன
ஆகப் போகிறது இருந்து தொலைக்கலாம்
(கவிஞர் கல்யாண்ஜி கவிதைகள் பக்க எண் 45 )


இந்தக் கவிதையை மேற்கோள் காட்டியதோடு நின்று விடாமல் நூல் ஆசிரியர் ஒப்பு இலக்கித் துறை வல்லுநர் என்பதால், ஆங்கில இலக்கியத்தில் இருந்து ஒப்பிட்டு அசத்துகின்றார் .





TO BE OR NOT TO BE THAT IS THE QUESTION


சேக்ஸ்பியரின் புகழ் பெற்ற வரிகளோடு ஒப்பிட்டு மேற்கோள் காட்டி
படைப்பாளி சிந்திக்காத கோணத்திலும் சிந்தித்து வியப்பை வரவழைக்கிறார் .



திரைப் பாடல்கள் மூலம் முத்திரை பதித்த கவிஞர் பழனி பாரதி பற்றிய கட்டுரையில் .


காலமே என் இளமைச்
சீட்டாடித் தோற்காதே !
செலவழி ஒரு போராளியின்
கடைசீ துப்பாக்கி ரவையாக
( வெளிநடப்பு பக்க எண் 21 )



இந்தக் கவிதையை மேற்கோள் காட்டி உவமையில் மிளிரும் பழனி பாரதியின் தனித்துவம் என்று பாராட்டி உள்ளார் .
நூல் ஆசிரியர் மேற்கோள் காட்டி உள்ள கவிஞர் அமுதனின் சென்ரியு கவிதைகள் அனைத்தும் அற்புதம்.
"இழுக்க இழுக்க இன்பம் " என்று புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள்
சொல்லும் பொய் மொழி கேட்டு இருக்கிறோம் .அந்து பொய் மொழியை சற்று மாற்றி
எழுதியுள்ள
சென்ரியு இதோ !

ழுக்க இழுக்கத் துன்பம்
இறுதிவரை
மெகா தொடர்
( காற்றின் விரல்கள் பக்க எண் 25 )




தொலைக்காட்சித் தொடர்கள் என்ற பெயரில் நாட்டில் நடக்கும் அவலத்தைச் சுட்டும் சென்ரியு மிக நன்று .

நூலின் இரண்டாம் பகுதியில் திருக்குறள் , ,குறுந்தொகை
,கலித்தொகை ,
சங்க இலக்கியங்களிலிருந்தும்,நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் போன்றவற்றிலிருந்தும்புகழ்ப்பெற்ற பாடல்களை எல்லோருக்கும் எளிதில் புரியும் விதமாக மிக மிக எளிமையாகவும் இனிமையாகவும் கட்டுரை வடித்து உள்ளார் .




வாழ்வில் நெறிப் போதிக்கும் மூன்றாம்
பகுதியில் புத்தர் பொன் மொழிகள் ,மகாகவி பாரதியின் வைர வரிக் கவிதைகள் ,சேக்ஸ்பியர் பொன் மொழிகள் ,காண்டேகர் பொன்
மொழிகள் ஆகியவற்றை மேற்கோள் காட்டி ,
நூல் வழங்கி உள்ளார்கள் .ஒரு மனிதன் செம்மையாக வாழ்வதற்கு
வழிக்காட்டும் ஒளி விளக்காக அற்புதக் கருத்துக்களின் சுரங்கமாக நூல் உள்ளது
.பாராட்டுக்கள் .படித்துவிட்டு வைத்து விடும் சராசரி நூல் அல்ல இது
.படித்து விட்டு பாதுகாத்து வைத்து இருந்து மனச் சோர்வு வரும்போதெல்லாம்
மறு வாசிப்பு செய்து புத்துணர்வு பெறும் நூல் இது .



திறம்பட தொடர்ந்து நூல்கள் எழுதிவரும் நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ
பேராசிரியர் இரா .மோகன் அவர்கள் விரைவில் சதம் அடிக்க வாழ்த்துக்கள்
.மிகச் சிறப்பாக அச்சிட்டு வெளிக் கொணர்ந்த
வானதி பதிப்பகத்தாருக்கும் பாராட்டுக்கள் .
--

--

--




நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2110
Points : 4766
Join date : 18/06/2010

Back to top Go down

Re: இலக்கிய முற்றம் நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா .மோகன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Jul 21, 2012 11:15 am

வாழ்வில் நெறிப் போதிக்கும் மூன்றாம் பகுதியில் புத்தர் பொன் மொழிகள் ,மகாகவி பாரதியின் வைர வரிக் கவிதைகள் ,சேக்ஸ்பியர் பொன் மொழிகள் ,காண்டேகர் பொன் மொழிகள் ஆகியவற்றை மேற்கோள் காட்டி ,நூல் வழங்கி உள்ளார்கள் .ஒரு மனிதன் செம்மையாக வாழ்வதற்கு வழிக்காட்டும் ஒளி விளக்காக அற்புதக் கருத்துக்களின் சுரங்கமாக நூல் உள்ளது. பாராட்டுக்கள்.

- உண்மையான புகழ்ச்சி... பாராட்டுகள் விமர்சனத்துக்கும் தங்களின் தொடர் தேடலுக்கும் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: இலக்கிய முற்றம் நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா .மோகன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Jul 21, 2012 12:37 pm


_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: இலக்கிய முற்றம் நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா .மோகன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi on Mon Jul 23, 2012 10:02 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2110
Points : 4766
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum