"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அடடடா - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Today at 5:12 pm

» திருமணம் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Today at 5:10 pm

» ட்யூஷன் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Today at 5:08 pm

» வயசு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Today at 5:07 pm

» சரியான வாழ்க்கை முறை...(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Today at 5:03 pm

» தலைவருக்கு லேப்டாப் வாங்கி கொடுத்தது தப்பா போச்சு...!
by அ.இராமநாதன் Today at 5:00 pm

» குடும்ப அரசியல் மட்டும் கூடாதா...!!
by அ.இராமநாதன் Today at 4:58 pm

» ஒரேயடியா உரசிட்டார்...!!
by அ.இராமநாதன் Today at 4:40 pm

» மின் வெட்டாலதான் அவர் உயிரோடு இருக்கார்...!!
by அ.இராமநாதன் Today at 4:28 pm

» களி திங்காதவனைக் கட்சியைவிட்டு விலக்குவே...!
by அ.இராமநாதன் Today at 4:23 pm

» மெர்சல்! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Today at 2:18 pm

» மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
by அ.இராமநாதன் Today at 2:49 am

» சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
by அ.இராமநாதன் Today at 2:48 am

» சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
by அ.இராமநாதன் Today at 2:47 am

» 5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
by அ.இராமநாதன் Today at 2:46 am

» நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
by அ.இராமநாதன் Today at 2:44 am

» இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
by அ.இராமநாதன் Today at 2:42 am

» படித்ததில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 8:55 am

» மகாபாரதம் உணர்த்தும் உண்மைகள்
by அ.இராமநாதன் Yesterday at 8:44 am

» ஓலம்! - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:27 am

» தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
by அ.இராமநாதன் Yesterday at 8:24 am

» இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
by அ.இராமநாதன் Yesterday at 8:22 am

» தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
by அ.இராமநாதன் Yesterday at 8:19 am

» சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
by அ.இராமநாதன் Yesterday at 8:18 am

» சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
by அ.இராமநாதன் Yesterday at 8:18 am

» பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: டில்லி, மும்பைக்கு இடம்
by அ.இராமநாதன் Yesterday at 8:17 am

» ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
by அ.இராமநாதன் Yesterday at 8:16 am

» போர்க்கவசம் கூடத் தரிக்காமல், வலையால் உடம்பை மூடிக்கிட்டே போறாரே
by அ.இராமநாதன் Yesterday at 3:19 am

» 'டிவி' சீரியலில் எமி ஜாக்சன்!
by அ.இராமநாதன் Yesterday at 3:15 am

» மசாலா கதைகளில் விஜயசேதுபதி
by அ.இராமநாதன் Yesterday at 3:11 am

» சங்கமித்ரா’ நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 2:56 am

» தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்…
by அ.இராமநாதன் Yesterday at 2:55 am

» இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 10:05 pm

» நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ கிடையாது
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 4:18 pm

» நல்ல மனைவி....
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 4:09 pm

» கட்டைப்பையும் காணாமல் போன கூச்சமும்.... - ஒரு குடும்ப தலைவரின் தீபாவளி பர்ச்சேஸ்
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 3:44 pm

» நீரிழிவு நோய்க்கு ஒரு நல்ல செய்தி
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 3:34 pm

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sat Oct 21, 2017 2:54 pm

» நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 8:48 am

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 8:45 am

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 8:44 am

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 8:37 am

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 8:36 am

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 8:35 am

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 8:34 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மதுபானக் கடை இயக்கம் திரு .கமலக்கண்ணன் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

View previous topic View next topic Go down

மதுபானக் கடை இயக்கம் திரு .கமலக்கண்ணன் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi on Sat Aug 04, 2012 10:52 am

மதுபானக் கடை

இயக்கம் திரு .கமலக்கண்ணன்

திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

வழக்கமான திரைப்பட மசாலா இல்லாமல் மிக இயல்பாக யதார்த்தமாக பாடமாக்கி உள்ளார்
.திரு. கமலக்கண்ணன்.இவரை மற்றொரு பாலாஜி சக்திவேல் என்றே சொல்லலாம் .படத்தில் கோடிகள் தியம் பெறும் நடிகர்கள் இல்லை .கோடிகள் தியம் பெறும் நடிகைகள்
இல்லை .புகழ்ப்பெற்ற நகைச் சுவை நடிகர் இல்லை.வெளி நாடு செல்ல வில்லை
.டுயட் பாடல் இல்லை . எந்த பிரமாண்டமும் இன்றி பிரமாதமாக இயக்கி உள்ள
இயக்குனருக்கு பாராட்டுக்கள் .
சமீபத்தில் வந்த எல்லா திரைப்படங்களிலும் மதுபானக் கடையில் மது அருந்தும் காட்சி கட்டாயம் இருக்கும் .ஆனால் இந்தப் படமோ மொத்தப் படமும், மதுபானக் கடையிலேயே நடக்கின்றது .படம் தொடங்கும் போதே "இந்தத் திரைப்படத்தில்
கதை என்று இருப்பதாக நீங்கள் கருதினால்,அது உங்களுடைய கற்பனை
"வித்தியாசமாக உள்ளது .அதேபோல் படத்தில் பெரிய கதை ஒன்றும் இல்லை .ஆனால்
மதுபானக் கடையில் குடிமகன்கள் நடத்தும் கூத்து படம் முழுவதும் காட்டி உள்ளார் .

படத்தின் பெயரைப் பார்த்து விட்டு
குடிக்கு எதிராக கவிதை ,கட்டுரை எழுதி வரும் நாம் இந்தப் படத்திற்குபோக வேண்டுமா ? முதலில் என்று யோசித்தேன் .பின் என்ன சொல்கிறார் என்று போய் பார்ப்போம் என்று போய் பார்த்தேன் .


ஆனால் படத்தில் குடியின் பாதிப்பை மிக ஆழமாக சொல்லாவிட்டாலும் ,
மதுபானக் கடையில் நடக்கும் திருவிளையாடல்களை தோலுரித்துக் காட்டி உள்ளார் .மதுபானக் கடை திறக்கும் முன் காத்திருக்கும் குடிமகன்கள் ,திறக்க தாமதமானதால் கடிந்துகொள்ளும் குடிமகன்கள்.கடை அடைக்கும் நேரத்தில் மது கேட்கும் குடிமகன்கள்,கடை அடைத்தபின் கூடுதல் விலைக்கு விற்றல்.போலியான சரக்குகளை விற்கும் அவலம் .

மதுக்கடையில் அமர்ந்து மது
குடிப்பவர்களுக்கு விற்கும் உணவு சமைப்பவர் காய்கறி அழுகிப் போய் உள்ளது
என்று சொல்ல ,"குடிகார நாய்களுக்குதானே சும்மா போடு "என்று சொல்கின்றார்
முதலாளி .பள்ளி ஆசிரியரே மது குடிக்க வரும் அவலம் .தங்கள் ஆசிரியர் வந்து
இருப்பதைப் பார்த்து பதுங்கி வந்து சீருடையை கழற்றிவிட்டு சென்று
மாணவர்கள்
பீர்
வாங்கிகுடிக்கும் அவலம் . கல்லூரி மாணவர்கள் நண்பனின் பிறந்த நாள்
கொண்டாட்டத்தை
மதுக்கடையில் மது அருந்தி கொண்டாடும் அவலம் .தன் நிலத்தில் மதுக் கடை நடப்பதை பார்த்து பைத்தியமான ஒருவர் . மதுக்கடையில் வேலை பார்த்துக் கொண்டே முதலாளியின்
மகளை காதலிக்கும் ஒருவன் .இது வேண்டாம் ஆபத்து என்று தடுக்கும் சக
தொழிலாளி .ஒரு குடிமகன் குடிக்க வந்தால் குடித்து முடித்து விட்டு வெளிய
செல்லாமல் வசனம் பேசும் அவரைக் கொண்டு நடுங்கும்
மதுக்கடைபணியாளர்கள்
.பெரிய குடிகாரனையே பயமுறுத்தும் மற்றொரு குடிமகன் .காதலில் தோல்வியுற்று
முதன்முறையாக பீர் குடித்து விட்டு சொல்லும் கவிதை நன்று .வசனம்
எழுதியவருக்கு பாராட்டு .

என்னை இறந்துவிடு என்று சொல்
மறுபடியும் பிறந்து விடுவேன் .ஆனால்
மறந்துவிடு என்று மட்டும் சொல்லாதே
இருந்தும் இறந்து விடுவேன் !


குடிமகன் சொல்லும் வசனம் "நாம தள்ளாடினால்தான் கவர்மென்ட் ஸ்டேடியா இருக்கும் .நாம் ஸ்டேடியாயிட்டா கவர்மென்ட்தள்ளாடிரும் "
அரசாங்கம் வருமானம் ஈட்ட ஆயிரம் வழிகள் உண்டு .மதுபானக் கடை வருமானம் அவமானம்.என்பது என் கருத்து.

"ஆலயமணி அடித்தால் சத்தம் ஆல்க்ககால் மணி அடித்தால்
யுத்தம் "
நாட்டுநடப்பை குடியால் குடி அழியும் உண்மையை அப்பட்டமாக படமாக்கி
உள்ளார்.படம் அல்ல பாடம் வழக்கமாக சொல்வார்கள் இந்தப் படத்திற்கு
பொருந்தும் .இந்தப் படம் பார்த்து விட்டு குடி மகன்கள் திருந்தினால்
அது இயக்குனரின் வெற்றி .மறந்து வந்த நமக்கு மதுபானக் கடை யை நினைவு படுத்தி விட்டாரே என்று குடிக்க செல்லும் குடிமகன்களை திருத்த வேண்டும் என்றால் மதுபானக் கடைகளை மூட வேண்டும் .
துப்புரவுத் தொழிலாளி
மதுபானக் கடையில் தண்ணீர் கேட்டதற்கு
அவரிடம் தீண்டாமை பேசும் குடிமகனைப் பார்த்து கோபப் பட்டு அவர் பேசும்
வசனம் கைதட்டல் பெறுகின்றது .எதோ எதுக்கோ இயந்திரம் கண்டு பிடித்தவர்கள்
பிய் மூத்திரம் அல்ல ஏன்டா? கண்டு பிடிக்க வில்லை .நாங்களும் உங்களை மாதிரி மனுஷன் தானே. கஷ்டப் படுகிறோம் . இது வரை மனிதநேயம் .மிக நெகிழ்வான வசனம். பாராட்டுக்கள் .
துப்புரவுத்
தொழிலாளி கெட்ட வாடை பொறுக்க முடியாமல் குடிக்கிறார்கள் என்று
நியாயப்படு
த்துவதுப் போல உள்ளது .குடி யார் ? குடித்தாலும் தவறுதான்.குடி
குடியை கெடுக்கும் என்பது முற்றிலும் உண்மை. குடி நாட்டு
க்கும்
வீட்டுக்கும் உயிருக்கும் கேடு என்பதை அனைவரும் உணர வேண்டும் .எழுத்தில்
படிப்பதோடு நின்று விடாமல் குடிக்காமல் இருந்து கடைபிடிக்க வேண்டும் .
ஒரு ஆய்வில் சொன்ன தகவல் 80 %குற்றங்கள் மது போதையால்தான் நடக்கின்றது .ஒரு காவலர் சொன்ன தகவல் சனி ஞாயிறு வந்து விட்டாலே குடி தொடர்பான சண்டைகளே அதிகம் .

தொழிலாளிகள் பற்றிய பாடல் மிக நன்று .இந்தப் பாடலை தமிழ்நாடு கலை இலக்கியப் பெரு மன்றத்தின் தலைவர்,எழுத்தாளர் பொன்னீலன் பாராட்டி இருந்தார் .

மதுபானக் கடை இன்று திருவிழாக் கடை போல கூட்டம் கூடுகின்றது
.ஆசிரியர் ,மாணவன் ,அப்பா, மகன் ஒரே கடையில் குடிக்கும் அவலம்
நடக்கின்றது.குசராத்து போல தமிழகத்திலும் புறன மது விலக்கு மட்டுமே ,நம்
குடிமகன்களை திருத்த முடியும் .
வெட்டுக் குத்து குத்துப்பாட்டு ,கவர்ச்சி நடனம் ,துப்பாக்கி சூடு,வன்முறை ,ஆபாசம்
இன்றி துணிவுடன் படம் இயக்கிய இயக்குனர் அவர்களுக்கு பாராட்டுக்கள் .
இவரைப் பார்த்து மசாலாப்பட இயக்குனர்கள் திருந்த வேண்டும் .சமுதாயத்திற்கு பயனுள்ள கருத்து சொல்ல முன் வர வேண்டும் .

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2119
Points : 4793
Join date : 18/06/2010

Back to top Go down

Re: மதுபானக் கடை இயக்கம் திரு .கமலக்கண்ணன் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Aug 06, 2012 7:06 am

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum