"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வைகை ஆறு! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:39 pm

» முனைவர் நிர்மலா மோகன் புலமை நலம்! பதிப்பாசிரியர் : பேராசிரியர் முனைவர் பா.வளன் அரசு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 8:27 pm

» மாம்பழ சர்பத்
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 8:56 pm

» 2018ல் வருகிறது புதிய ஆபத்து
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 7:26 pm

» பல்சுவை - வாட்ஸ் அப்-ல் பெறப்பட்டவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 7:02 pm

» ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 3:03 pm

» சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 12:04 am

» பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்…!!
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 12:03 am

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 11:05 pm

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:13 pm

» இயக்குனராகும் மதுபாலா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:12 pm

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:12 pm

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:11 pm

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:10 pm

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat Nov 18, 2017 9:04 pm

» டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:17 am

» முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:15 am

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:11 am

» எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:56 pm

» ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:56 pm

» கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:55 pm

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:42 pm

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:36 pm

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:34 pm

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:26 pm

» - மேய்ச்சல் - கவிதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:44 pm

» பயம் - கவிதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:44 pm

» கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:23 pm

» சென்னையில் 5ஜி சேவை: நோக்கியா தகவல்!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:18 pm

» போர்ப்ஸ் பத்திரிக்கையின் இளம் கண்டுபிடிப்பாளர்கள் பட்டியலில் இடம்பிடித்த சென்னை பெண்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:12 pm

» உரிய அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படும்: இந்திய அணுசக்தி கழகம்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:09 pm

» குரலை இனிமையாக்கும் மாங்கனி
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:07 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:18 pm

» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:17 pm

» கழுதை போச்சே! - சிறுவர் கதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:12 pm

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:03 pm

» ‘இம்சை அரசன்’ படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:56 pm

» சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:56 pm

» கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:55 pm

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:51 pm

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:50 pm

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:49 pm

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:48 pm

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:47 pm

» பத்மாவதி படத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:45 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சாட்டை !திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி.

View previous topic View next topic Go down

சாட்டை !திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி.

Post by eraeravi on Mon Sep 24, 2012 9:11 am

சாட்டை !
இயக்கம் M.அன்பழகன் .
நடிப்பு சமுத்திரக்கனி .
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி.


துளி கூட ஆபாசமின்றி மிகச் சிறப்பாக இயக்கி உள்ளார் இயக்குனர்
அன்பழகன்.சமுத்திரக்கனி ஆசிரியராகவே மாறி பாத்திரத்தில் நடிக்காமல்
வாழ்ந்துள்ளார் இப்போது வரும் பல திரைப்படங்கள் குடும்பத்துடன் சென்று
பார்க்க முடிய வில்லை .ஆனால் இந்தப் படத்தை குடும்பத்துடன் சென்று
அவசியம் பார்க்க வேண்டும் .தமிழ்த் திரைப்படத் துறையை புதிய
உயரத்திற்கு கொண்டு சொல்லும் முயற்சி. பாராட்டுக்கள் .


அரசுப் பள்ளிகளின் அவல நிலையை எடுத்துக் காட்டி .ஆசிரியர்கள் மனது
வைத்தால் தரத்தை உயர்த்தலாம் என்பதை உணர்த்தும் உன்னதமான படைப்பு .
அரசு மருத்துமனை சுகாதாரமின்றி இருப்பது போல அரசுப்பள்ளி தரமின்றி இருக்கின்றது.

சில
ஆசிரியர்கள் வட்டிக்கு விடுவது ,வகுப்பறையில் தூங்குவது ,வீட்டு வேலையை
மாணவனிடம் வாங்குவது ,சத்துணவுப் பொருட்களை கையாடல் செய்வது ,மாணவியிடம்
தவறாக நடக்க முயற்சிப்பது இவற்றை தோலுரித்து காட்டி விட்டு .மாதா ,பிதா
,குரு ,தெய்வம் என்றார்கள்
தெய்வத்திற்கும் முன்பாக குருவை வைத்தார்கள்
.அப்படிப்பட்ட குரு எப்படி ? நடந்துக் கொள்ள வேண்டும் . என்று
கற்பிக்கும் சிறந்த படம் .இந்தப்படத்தை எல்லா ஆசிரியர்களும் மாணவர்களும்
அவசியம் பார்க்க வேண்டிய படம் .




தாயாளன் ஆசிரியராக சமுத்திரக்கனி மிக நன்றாக நடித்து உள்ளார் .தோப்புக் கரணம் போடுவது மூளையை சுறுசுறுப்பு ஆக்குகின்றது.ஒரே நேரத்தில் மணி அடித்து தீபாராதனை காட்டுவது இடது மூளை வலது மூளை
இரண்டும் வேலை செய்ய உதவுகின்றது .சாக் பீஸில் எழுதி, எழுதிய சொல்லைக்
கேட்காமல் வண்ணத்தை கேட்டு மாணவர்களின் மூளைக்கு வேலை வைப்பது
.மாணவர்களிடம் அன்பு செலுத்துவது, சக தோழன் போல பழகுவது .இப்படி தயா
ஆசிரியர் படம் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்த பின்னும் மனதை விட்டு
அகலாமல் நிற்கிறார் .தயா போன்று எல்லா ஆசிரியர்களும் மாறி விட்டால் நம்
நாடு முன்னேறி விடும் .


தேசிய விருது பெற்ற நடிகர் தம்பி ராமையா ஒரு ஆசிரியர் எப்படி? இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக வில்லன் பாத்திரத்தில் மிக நன்றாக நடித்து உள்ளார் .
படித்தின் கடைசி காட்சியில் தயா ஆசிரியருக்கு பல தீங்கும் செய்த போதும்
தண்டிக்காமல்
மன்னித்தஉள்ளம் கண்டு நெகிழும் பொது மிக நன்றாக நடித்து உள்ளார்
.தலைமை ஆசிரியாரா
வரும் ஜூனியர் பாலையா மிக நன்றாக
நடித்து உள்ளார்.
மாணவ மாணவிகள் அனைவரும் மிக நன்றாக நடித்து உள்ளனர்
.இப்படி பாராட்டிக் கொண்டே இருக்கலாம் .
சிறந்த இயக்குனர் வரிசையில் இடம் பிடித்து விட்டார் அன்பழகன் .ஒரு தந்தை மகனிடம் எப்படி ? நடந்து கொள்ள வேண்டும் .ஒரு மகன் தந்தையிடம் எப்படி
?நடந்து கொள்ள வேண்டும். என்று வாழ்வியல் பாடம் சொல்லும் படம் . நம்
நாட்டில் பெண் பிள்ளையிடம் அவள் சம்மதம்இல்லாமலேயே யாரவது காதல் கடிதம்
தந்து விட்டால் உடன் பெண் பிள்ளையின் படிப்பிற்கு முடிவுரை எழுதும் அவலம்
எங்கும் நடக்கின்றது.அது தவறு பெண் பிள்ளைகளை நம்புங்கள் படிக்க வையுங்கள்
என்று படிப்பினை சொல்லித் தரும் படம் .

மாணவர்களை வெயிலில் முட்டி போட வைத்து தண்டனை தருவது தவறு .அன்பால் திருந்துங்கள் .

ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் ஒவ்வொரு
திறமை இருக்கும் .எந்த மாணவனையும் உதவாக்கரை ,படிப்பு ஏறாது என்று
புறக்கணிக்காதீர்கள் .
பெண் ஆசிரியர்கள் ஆடை ஒழுக்கமாக இருக்க வேண்டும் .ஆசிரியர்கள் கெட்ட பழக்கம் இன்றி இருக்க வேண்டும் .இப்படி பல தகவல்கள் படத்தில் உள்ளது .இந்தப் படம்
பார்த்த மாணவனுக்கும் ஆசிரியருக்கும் மன மாற்றம் நிகழும் என்று அறுதி இட்டு
கூறலாம் .


மாணவி அறிவழகியை மாணவன் பழனி விரட்டி விரட்டி ஒரு தலையாக காதலிக்க
அவள் மறுக்கிறாள்.படிக்காமல் சுற்றியவன் ஆசிரியர் தயா அவர்களின் அறிவுரை
கேட்டு நன்கு படிக்கிறான்.விளையாட்டிலும் ,கலை நிகழ்ச்சியிலும் பள்ளிக்கு
முதலிடம் பெற்றுத் தருகிறான் .உடன்
மாணவி அறிவழகி அவளும்
காதலிப்பதாக சொல்லுகிறாள் .படம் வழக்கமான மசாலா காதல் கதை ஆகிவிடுமோ ? என்று
நினைக்கும் போது, மாணவன் பழனி பேசும் வசனத்தில் இயக்குனர் முத்திரை
தெரிகின்றது ." இந்த பள்ளியில் ஆசிரியராக இருக்கும் என் தந்தை உள்பட எல்லா
ஆசிரியர்களும் என்னை வெறுத்தபோது
ஆசிரியர் தயா என் மீது அன்பு செலுத்தினார் என்னை நம்பினார் .அவர் நம்பிக்கை வீண் போக நான் விரும்ப வில்லை . அறிவழகி நன்றாக படிக்கும் மாணவி
.காதலிப்பது தெரிந்தால் அவள் வீட்டில் அவள் படிப்பதை நிறுத்தி விடுவார்கள்
.எனவே நான் காதலிக்க விரும்ப வில்லை ".என்று நண்பன் முருகனிடம்
சொல்கிறான் .சமுதாயத்தில் மாற்றம் உருவாக்கும் மிக நல்ல படம் .இநதப்
படத்தில் கொலை, கொள்ளை ,வன்முறை ,வெட்டு குத்து ,ஆபாசம் எதுவுமின்றி
ய்தரமான படம் தந்துள்ளார். பாராட்டுக்கள்.
இந்த படத்தை கோடிகளை கதா
நாயகனுக்கும் கதா நாயகிக்கும் தந்து ,வெளி நாட்கள் சென்று கோடிகளை விரையம்
செய்து படம் எடுக்கும் மசாலா பட இயக்குனர்கள் அனைவரும் அவசியம் பார்த்து
திருந்த வேண்டிய படம் இது .




திக்கு வாய் குறை உள்ள மாணவி வீட்டில் நன்றாக பேசுகிறாள் .ஆனால் பள்ளிக்கு
வந்ததும் சக மாணவர்கள் கேலிக்கு அஞ்சி அதிகம் திக்குகின்றது .இதனை உணர்ந்த
ஆசிரியர் தயா மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி
திக்கு வாய் உள்ள
மாணவிக்கு படிக்க பயிற்சி தந்து பேச்சுப் போட்டியில் பங்குப் பெற
வைக்கிறார் .ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு
எடுத்துக்காட்டு
ஆசிரியர் தயா.


மாவட்டத்தில் பின்தங்கிய பள்ளியை மாவட்டத்தில் முதல் பள்ளியாக வர
வைத்து விட்டு ஆசிரியர் தயா படத்தின் இறுதியில் மாணவர்கள் வேண்டுதலையும்
மீறி அடுத்த மாவட்டத்தில் பின்
பின்தங்கிய பள்ளி நோக்கி பயனுக்கும் முடிவும் பாராட்டுக்குரியது .இயக்குனர் அன்பலகம் இயக்குனர் சமுத்திரகனி வெற்றிக் கூட்டணியாகி விட்டது .
முற்போக்கு சிந்தனை உள்ள இயக்குனர் M.அன்பழகன் .அவர்களிடம் ஒரு வேண்டுகோள் தங்கள் முன் எழுத்தை தமிழ் எழுதுங்கள் .


eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2133
Points : 4835
Join date : 18/06/2010

Back to top Go down

Re: சாட்டை !திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி.

Post by அ.இராமநாதன் on Mon Sep 24, 2012 9:16 am

[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this link.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24376
Points : 53010
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: சாட்டை !திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி.

Post by eraeravi on Mon Sep 24, 2012 9:56 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2133
Points : 4835
Join date : 18/06/2010

Back to top Go down

Re: சாட்டை !திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி.

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Sep 25, 2012 11:18 am

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: சாட்டை !திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி.

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Sep 25, 2012 4:14 pm

[You must be registered and logged in to see this image.]

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum