"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு ! மலரினும் மெல்லியது காதல் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 3:49 pm

» பாலகுமாரனின் “இரும்பு குதிரைகள்” நூலிலிருந்து நான் ரசித்த சில வரிகள்….
by அ.இராமநாதன் Wed Feb 22, 2017 9:31 pm

» வெளிச்ச விதைகள் ! நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.
by eraeravi Wed Feb 22, 2017 1:16 pm

» தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! நிலா விடு தூது ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Feb 22, 2017 1:14 pm

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Wed Feb 22, 2017 10:20 am

» சொத்துக் குவிப்பு வழக்குச் செலவு: 12 ஆண்டுகளில் ரூ.12.04 கோடி!
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 11:17 pm

» சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி: களமிறங்கிய மாணவர்கள், இளைஞர்கள்
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 11:16 pm

» இலங்கையில் நடைபெற உள்ள புத்த பூர்ணிமா விழா : பிரதமர் மோடி பங்கேற்கிறார்
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 11:15 pm

» மஹிந்திராவின் மின்சார கார் அறிமுகம்
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 11:15 pm

» ஹிட்லரின் போன் ரூ.1.62 கோடிக்கு ஏலம்
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 11:14 pm

» எம்.எல்.ஏ.,வுக்கு சேலை வழங்கும் போராட்டம்
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 11:13 pm

» நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு எதிராக ஐகோர்ட்டில் தி.மு.க., முறையீடு
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 11:12 pm

» 5 கோப்புகளில் முதல்வர் கையெழுத்து
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 11:12 pm

» துளி வெட்கம்
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 10:33 pm

» வம்பு
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 10:29 pm

» விவசாயி
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 10:25 pm

» கானல் நீர்
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 10:11 pm

» இரா. இரவியின் படைப்புலகம் ! நூலாசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் ! நூல் மதிப்புரை : நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.
by eraeravi Mon Feb 20, 2017 6:29 pm

» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் நயம் : நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.
by eraeravi Mon Feb 20, 2017 6:28 pm

» வெளிச்ச விதைகள் ! நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் .
by eraeravi Mon Feb 20, 2017 6:25 pm

» சினிமா துளிகள்
by அ.இராமநாதன் Mon Feb 20, 2017 3:24 pm

» என்னவனே என் கள்வனே
by கவிப்புயல் இனியவன் Sun Feb 19, 2017 12:53 pm

» இனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது
by கவிப்புயல் இனியவன் Sun Feb 19, 2017 9:05 am

» இருவரி திருவரி கவிதை
by கவிப்புயல் இனியவன் Thu Feb 16, 2017 9:36 pm

» காலதேவன்
by viji Thu Feb 16, 2017 3:23 pm

» நானும் ஒரு துறவி
by viji Thu Feb 16, 2017 3:22 pm

» அவள்!
by viji Thu Feb 16, 2017 3:22 pm

» இலையிதிர் வாழ்க்கை!
by viji Thu Feb 16, 2017 3:20 pm

» அனாதை இல்லம்!
by viji Thu Feb 16, 2017 3:19 pm

» பெயர்கள்!
by viji Thu Feb 16, 2017 3:19 pm

» தடுமாற்றம்!
by viji Thu Feb 16, 2017 3:18 pm

» கனவு!!
by viji Thu Feb 16, 2017 3:17 pm

» பெண்ணே....!
by viji Thu Feb 16, 2017 3:16 pm

» புது விடியல்!
by viji Thu Feb 16, 2017 3:15 pm

» என் தெருவில்!!
by viji Thu Feb 16, 2017 3:14 pm

» கவிதை
by viji Thu Feb 16, 2017 3:13 pm

» நான் அம்மாவானேன்....!
by viji Thu Feb 16, 2017 3:12 pm

» ‘கவண்’ படத்தின் பாடல்கள்..!
by அ.இராமநாதன் Wed Feb 15, 2017 10:31 am

» உனக்கென்ன வேணும் சொல்லு...
by அ.இராமநாதன் Tue Feb 14, 2017 10:44 pm

» கொஞ்சி பேசிட வேணாம்...
by அ.இராமநாதன் Tue Feb 14, 2017 10:42 pm

» என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி
by அ.இராமநாதன் Tue Feb 14, 2017 10:40 pm

» எல்லாமே காதல் காதல்
by கவிப்புயல் இனியவன் Tue Feb 14, 2017 10:33 pm

» அன்புள்ள அம்மாவிற்கு!
by viji Tue Feb 14, 2017 6:06 pm

» என்னருகில் !!
by viji Tue Feb 14, 2017 5:48 pm

» எங்கே நான்?
by viji Tue Feb 14, 2017 5:39 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



யாதும் ஊரே ! நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி.

View previous topic View next topic Go down

யாதும் ஊரே ! நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி.

Post by eraeravi on Wed Oct 10, 2012 11:03 pm

யாதும் ஊரே !

நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி.

தமிழ்மணி புத்தகப் பண்ணை .281திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை .சென்னை .5.
விலை ரூபாய் 150.

அட்டைப்பட வடிவமைப்பு உள் அச்சு கட்டமைப்பு அனைத்தும் மிக அருமை
.பாராட்டுக்கள் .நூலின் உள்ளே மின்னூர் சீனி வரைந்துள்ள பெருங்கவிக்கோ வா
.மு .சேதுராமன் ஓவியம் அற்புதம் .


வணிகவியல் பட்டதாரியான நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே
.திருவள்ளுவர் படித்த படிப்பிற்கு ஏற்ற ஒரு வங்கி வேலை வாங்கி சராசரி
மனிதனைப் போல வாழாமல் ,தந்தையின் வழியில் தமிழ்ப்பணி மாத இதழை 41 ஆண்டுகளாக
தொய்வின்றி நடத்தி வருவது சாதனை .நல்ல உள்ளத்திற்கு எடுத்துக்காட்டு .


திரைப்பட நடிகர், நடிகை கவர்ச்சிப் படங்கள் இன்றி இதழ் நடத்துவது பாராட்டுக்குரியது . நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர்
இரா. மோகன்அவர்கள் குறிப்பிட்டார்கள் .ஒருவர் கையில் உள்ள பணத்தை
விரைவில் கரைக்க வேண்டும் நிபந்தனை .சீட்டு விளையாண்டார் தோற்காமல்
வென்றார் .குதிரை மீது கட்டினார் அதுவும் வென்றது .ஒரு இதழ் தொடங்கினார்
பணம் முழுவதும் கரைந்ததாம் .இது நகைச் சுவை அல்ல உண்மை .பல சிற்றிதழ்கள்
மாதம் தோறும் சில ஆயிரங்களை இழந்துதான் வெளிவருகின்றன. இப்படி ஒரு இதழுக்கு
ஆசிரி
ராக இருந்துக் கொண்டு கவிதை, கட்டுரை எழுதி நூலும் வெளியிட்டு
வருகிறார்
நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .தந்தையின் வழியில் மகன் நடக்க வில்லை என்பதுதான் இன்றைய குற்றச்சாட்டு .னால் தந்தையின் வழியில் நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர்நடப்பது பெருமை .


இந்த நூல் பயண இலக்கிய நூல் .முத்திரை பதித்துள்ள அற்புத நூல் .நூல்ஆசிரியர் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ள வைர வரிகள் சிந்திக்க வைத்தது .
" ஈழத் தமிழர்கள் இன்னல்களுக்கு இ
[b]ந்நூற்றாண்டில் வாழும் அனைத்துத் தமிழர்களும் பொறுப்பானவர்[/b]கள்தான் .அவர்கள் இந்தியாவின் வஞ்சத்தால் இன்றும் தொப்[b]பூழ்[/b][b]க் கொடி உறவுகள் [/b]ஈழத்தைப் பெற்றுக் கொடுங்கள் என்றவர்களைமுள்வேலிகளில் முடங்கி விட்டனர் .கொடூரம் என் நெஞ்சைப் பிழிகிறது . .[b]நூல்ஆசிரியர் நெஞ்சை மட்டுமல்ல படிக்கும் வாசகர்களின் நெஞ்சையும் [b]பிழிகிறது . [/b][/b]ஈழத் தமிழர்கள் இன்னல்கள் நூலில் பதிவாகி உள்ளது .ஆனால் தனி ஈழத்தை
என்றும் ஆதரிக்காத பேராயக் கட்சியை இன்று வரை
தன் சுய நலத்திற்காக ஆதரிக்கும் கலைஞரை நூல்
ஆசிரியர் ஆதரித்து எழுதி உள்ள கருத்து மட்டும் முரண் பாடாக உள்ளது .


புலம் பெயர்ந்து வாழும் வலி மிகுந்த அகதி வாழ்விலும் வருமானத்தில் ஒரு
பகுதியை தமிழுக்கும் , தமிழருக்கும் செலவு செய்து தமிழ் வளர்க்கும்
உயர்ந்த உள்ளங்களின் அன்பை நன்கு ஆவணப் படுத்தி உள்ளார் .பாராட்டுக்கள்
.
குறிப்பாக இணையராக இருந்து விருந்தோம்பல் செய்து தமிழ்ப் பண்பாடு காத்து வருவதை நூலில் குறிப்பிட்டுள்ளார் .
வெளி
நாட்டிற்கும் நம் நாட்டிற்கும் உள்ள வேற்றுமையை ஒப்பீடு செய்துள்ளார்
.இன்றும் சென்னை தொடர் வண்டிகளில் வ
ண்டிக்குள் எந்த நிலையத்தில் நிற்கிறது
என்ற
ஒலி வருவதில்லை .ஆனால் அயல் நாடுகளில் எந்த நிலையம் என்பதை ஒலியால்
வண்டியின் உள் உணர்த்துகின்றனர் .தேம்சு நதி போல சென்னை கூவமும் மாற
வேண்டும் என்ற ஆசையை எழுதி உள்ளார் .


இந்த நூலில் குறிப்பிட்டுள்ள ஈழத் தமிழர்களில் பலர் நான் அறிந்தவர்கள்
.என் படைப்புக்களை
ப் பாராட்டியவர்கள் .லண்டன் நல்ல மனிதர்கள் சம்பந்தன் ,பொன்
பாலசுந்தரம் போன்றவர்கள் பற்றியும் எழுதி உள்ளார் .அய்யா பொன் பாலசுந்தரம்
அவர்கள் அவராகவே சமைத்து மீன் குழம்பு வைத்து விருந்து வைத்ததை எழுதி
உள்ளார் .


" சொல்லொணாத் துயரைத் தாங்கி வாடும் ஈழத்து மக்களின் தனி ஈழம்
மலர்ந்தால் மட்டுமே ஈழத்துச் சோகம் நீங்கும் என்பதை உலகமே உணர முடிகின்றது "

இந்த வைர வரிகளை உலகம் உணர வேண்டும் .

லண்டன் ,கனடா ,பாரீசு ,அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்து ஆய்ந்து அறிந்து நூல் எழுதி உள்ளார் .
நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் கவிஞர் என்பதால் சில
இடங்களில் கவிதையாக நன்கு பதிவு செய்துள்ளார். பயணித்த வானுர்தி தடங்களின்
விபரத்தை ஆங்கிலத்தில் நூலின் இறுதியில் எழுதி உள்ளார் .இனி பயணம் செய்ய
இருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல் .பாராட்டுக்கள் .


நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் பற்றிய குறிப்பு விரிவாக உள்ளது .பல பரிசுகளும் விருதுகளும் பெற்று,
புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்ற பொன் மொழியை மெய்ப்பிக்கும் விதமாக
செயல்பட்டு வருகிறார் .பாராட்டுக்கள் .


இலக்கிய சுற்றுலா செல்லும்போது தான் மட்டும் செல்லாமல் தன் மனைவி பரிமளா அவர்களையும் உடன் அழைத்து சென்றது சிறப்பு .

தன் மனைவி பரிமளா பற்றி ஒரு கவிதையும் எழுதி உள்ளார் .

நங்கை பரிமளா நல்லாள்
நதியின் கரைபோல் இல்லாள்
மங்கையர் உலகம் போற்றும்
மகுடப் பொறுமையைச் சொல்லாள்
பொங்கும் வெள்ளம் தாங்கும்
புனித நதியின் பாதை
தங்கும் இன்பம் தவழ
தேம்சில் நடந்து சென்றோம் !
பயண இலக்கிய நூல்களில் சிறப்பிடம் பெறும் நூலாக வந்துள்ளது .இந்த நூலிற்கு
விருதுகளும் பாராட்டுக்களும் கிடைக்கும் .

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2063
Points : 4625
Join date : 18/06/2010

Back to top Go down

Re: யாதும் ஊரே ! நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி.

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Oct 12, 2012 12:57 pm


_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56776
Points : 69516
Join date : 15/10/2009
Age : 33
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: யாதும் ஊரே ! நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி.

Post by eraeravi on Fri Oct 12, 2012 2:21 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2063
Points : 4625
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum