"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» நெருப்பின் தாகம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:06 pm

» நம் சமையல் அறையில்...
by அ.இராமநாதன் Yesterday at 5:42 pm

» இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
by அ.இராமநாதன் Yesterday at 8:51 am

» ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
by அ.இராமநாதன் Yesterday at 8:38 am

» பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
by அ.இராமநாதன் Yesterday at 8:35 am

» சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
by அ.இராமநாதன் Yesterday at 8:33 am

» சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
by அ.இராமநாதன் Yesterday at 8:32 am

» இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
by அ.இராமநாதன் Yesterday at 8:31 am

» 2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
by அ.இராமநாதன் Yesterday at 8:30 am

» ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
by அ.இராமநாதன் Yesterday at 8:29 am

» அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
by அ.இராமநாதன் Yesterday at 8:28 am

» பூ பூப்பதும் உலகச் செய்திதான்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 11:20 pm

» சின்னச் சின்ன சிந்தனைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:46 pm

» குடம் குடமாய் பாலாபிஷேகம் - எக்ஸ்பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 6:13 pm

» குழந்தையை தவறவிட்டவர் கையில் பத்திரமாக இருந்தது கைப்பேசி...!!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 6:08 pm

» உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:35 pm

» உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:32 pm

» மூலிகை உணவு
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:15 pm

» அவசரம் - X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:06 pm

» X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 4:53 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 3:30 pm

» ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 3:09 pm

» நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 2:59 pm

» படமும் செய்தியும்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 2:53 pm

» சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:04 am

» தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:00 am

» முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:00 am

» தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:43 am

» 20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:41 am

» ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:39 am

» தனிமையில் வாடும் பொம்மை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இராமசெயம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Mar 18, 2018 11:02 pm

» அமரர் கல்கி பற்றி அவரது மகள் ஆனந்தி,
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 9:34 pm

» இருமலை விரட்டலாம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 9:01 pm

» காதலரை மணந்த ஸ்ரேயா; மும்பையில் ரகசிய திருமணம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 8:58 pm

» அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 8:50 pm

» மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 8:41 pm

» களவும் கற்று மற...!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 3:33 pm

» மின் ஒளியாக அவள்...!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 3:26 pm

» ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:30 pm

» கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:30 pm

» அப்பாவுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:29 pm

» போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிரியா வாரியர்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:29 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:28 pm

» பிருதிவிராஜின் புதிய தோற்றம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:59 am

» மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:56 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines இன்னுமா இருக்கிறது காதல்

Go down

இன்னுமா இருக்கிறது காதல்

Post by ருக்மணி on Sun Oct 14, 2012 8:34 pm

இன்னுமா இருக்கிறது காதல்


காதல்..
மிக சிறிய சொல்,
பிரம்மாண்டமான சக்தி,
புராதன வேட்கை
வினோத சித்தபிரம்மை,
விந்தையான மனஎழுச்சி,
ஆதி உணர்வு,

நாகரிக மாற்றத்தை எதிர்த்து நம்மிடையே எஞ்சியிருக்கும் பழமைகளில் ஓன்று, அது ஒருவருக்குள் ஒருவரை அடிமைப்படுத்தும்....

உலகம் திறந்து வைத்த
முதல் சாவி காதல் தான்
திறந்தவன் தொலைத்து விட்டான்
இன்னும் அந்த தேடல் தான்...

இப்படி பலவாறாக காதலை எழுதாத கவிஞர்கள் உண்டோ?? பாடாத பாடகர்களும் உண்டோ?? இவற்றையெல்லாம் கேட்கும் போதே காதலின்றி வாழ்தல் சாத்தியமோ என்ற கேள்வி எல்லோருக்கும் வரும்...

ஹார்மோன் மாற்றமே:

காதல் ஒரு ஹார்மோன் மாற்றமே!! இதனால் கண்டதும் காதல் வயப்படும் வாய்ப்பும் உண்டு. கண்டவர்கள் மீதும் காதல் வயப்பட வாய்ப்பு உண்டு. ஆனால் இந்த காதல் நீடிக்குமா ?? என்பதில் தான் ஐயமே... இளைய சமுதாயத்தினர் தங்கள் டீன் ஏஜ் பருவத்தை கடக்கும் முன்னரே இந்த மாய வலையில் தங்களை சிக்க வைத்துக் கொள்கின்றனர். காதலுக்கும் எதிர் பாலின கவர்ச்சிக்கும் வித்தியாசத்தை அவர்கள் அறிவதில்லை. இந்த வகையான காதலில் சிக்கல் உண்டு. தன் காதலனை(காதலியை) விட அழகானவனோ, அல்லது இதர திறமைகளில் சிறந்தவனை பார்க்கும் போது இவர்கள் காதல் மாறும் வாய்ப்பும் உண்டு. இதை பார்க்கும் போது இன்னுமா இருக்கிறது காதல்? எனத் தோன்றுகிறது.

இன்றைய சமூக நிலை:

வயது வந்த பின்னர் ஒருவரையொருவர் புரிந்து வரும் காதல் என்பது தற்போது மிக குறைவே. இன்றைய சமூகத்தில் எந்த ஒரு ஆணும் உண்மையாய் காதலுக்காக ஏங்கி தேவதாஸ் ஆவதுமில்லை. எந்த ஒரு பெண்ணும் முன் பின் தெரியாத ஒருவனை நம்பி ஏமாறுவதுமில்லை. ஒத்து வராத காதலர்கள் கை குலுக்கி நண்பர்களாக பிரிகின்றனர். சேது சீயானையும், காதல் முருகனையும் படங்களில் மட்டுமே காண முடியும்.

காதல்:

காதல் ஒரு வித சித்த பிரம்மை. தன் நிலை மறந்து துணையை பற்றியே சிந்திக்க தூண்டும். உணவு உறக்கம் மறந்து வாழும் நிலை வரும். கனவு உலகம் மட்டுமே பிடிக்கும். அடிக்கடி பொய் சொல்ல வைக்கும்.

ஒரு தலை காதல்:

முன்னாளில் ஒரு தலை காதலில் தங்களை தாங்களே துன்புறுத்திக் கொண்டனர். காதல் நிறைவேறாத, ஏற்காத பட்சத்தில் போதை பழக்கத்திற்கு அடிமையாகி தங்கள் வாழ்வை தாங்களே தொலைத்தனர். பெற்றோர்களின் கண்ணீரை பொருட்படுத்தாமல் தங்கள் வாழ்வே அந்த பெண்ணுடனே முடிந்தது என்பது போல செயல்பட்டனர்.

இந்நாளில் ஒரு தலை காதலில் பலர் வன்முறையை ஆயுதமாக எடுக்கின்றனர். ஒரு பெண் தன் காதலை ஏற்காத பட்சத்தில் அவள் மீது திராவகம் வீசுவது, கொலை செய்வது என காதல் என்ற பெயரில் வெறியோடு நடக்கின்றனர். தினம் தினம் செய்தி தாள்களில் இது போன்ற பல செய்திகள் வருவதை யாராலும் மறுக்க முடியாது.

மற்றுமொரு ரக ஒரு தலை காதலும் உண்டு. தங்கள் காதல் ஏற்கப்படாத பட்சத்தில் தங்கள் காதலையே மாற்றிக் கொள்கின்றனர். “திரிஷா இல்லைனா திவ்யா” என்ற கொள்கையோடு இருக்கின்றனர். இது முன்னர் கூறிய காதலை விட மேல் என்றாலும் இவற்றையெல்லாம் பார்க்கும் போது இன்னுமா இருக்கிறது காதல் எனத் தோன்றுகிறது.

முறையற்ற காதல்:

இந்த கலியுகத்தில் முறையற்ற காதல்களும் பெருகி கொண்டு தான் இருக்கின்றன. ஒரே பாலின காதல்களும் தற்போது ஏற்படுகிறது. இது இயற்கைக்கு முற்றிலும் மாறுபட்ட ஒன்று. சமூகத்தால் ஏற்கப்படாத ஒன்று. இதை தவிர முறையற்ற உறவுகளுக்கு இடையேயும் காதல் ஏற்படுகிறது.. இதுவும் சமூகம் ஏற்க முடியாத ஒன்றே. இன்றைய திரைப்படங்களும் தவறான உதாரணங்களை மக்களுக்கு எடுத்துக் காட்டுகிறது. வயதில் மூத்த பெண்ணை காதலித்தல், அல்லது உங்கள் கல்லூரி பேராசிரியர் (பேராசிரியை) காதலித்தல் இவையெல்லாம் உங்கள் அபிமான நாயகன் உங்களுக்கு கற்று தரும் பாடம். இது திரையுலகில் மட்டும் அல்ல.. நிஜ வாழ்க்கையிலும் நடக்கின்றது.

இருதலை காதல்:

இரு தரப்பினரும் பேசி பழகி வரும் காதல் மட்டும் எல்லா வகையிலும் யோக்கியமா என்று கேட்காதீர்கள்!! காதலை தெரிவிக்கும் முன்னோ, காதலை தெரிவிக்கும் போதோ காதலனோ, காதலியோ செய்யும் சின்ன விஷயத்தை கூட பாராட்டும் மனம் காதலின் போதோ, கல்யாணத்தின் பின்னோ மாறி விடும்.அது போலத் தான் காதலிக்கும் போது செய்யும் பெரிய தவறை கூட மறந்து மன்னிக்கும் குணம் பின்னாளில் மறைந்து விடும்.

ஒவ்வொன்றுக்கும் விவாதம் வைக்கும். விட்டுக் கொடுக்கும் மனம் காணாமல் போய்விடும். தான் வெற்றி பெற வேண்டும் என நினைத்து இருவரும் வாழ்வில் தோல்வியை சந்திக்கின்றனர். தன் துணை தானாகவே முன் வந்து விட்டு கொடுக்க தோன்றும். காதல் திருமணங்கள் செய்ய அவசர அவசரமாக பதிவு திருமண அலுவலக வாயிலில் நின்றவர்கள் இன்று அதை விட அவசரமாக நீதிமன்ற வாயிலில் விவகாரத்திற்கு நிற்கின்றனர்.

காதலர்களிடையேயும் திருமணமானவர்களிடையேயும்‌ துணை தனக்கே சொந்தமானவள் என்ற எண்ணம் அதிகப்படையாக இருக்கிறது. தனக்கானவன், தனக்கானவள் என்ற உரிமை இருப்பதில் தவறில்லை. அதுவே விலங்காக மாறி துணையை கட்டி போடாமல் இருந்தால் சரி. நம்பிக்கை வாழ்வின் மிக முக்கிய அடித்தளம். இது இருந்தால் போதுமே தனக்கானவள் என்ற எண்ணம் வேண்டிய இடத்தில் மட்டும் இருக்குமே. ஆனால் பலர் அதை மறந்து அதீத அன்பினால் துணையை நோகடிக்கின்றனர். சந்தேகத்தினால் தாங்களும் நிம்மதி இழக்கின்றனர். இவற்றை பார்க்கும் போது இன்னுமா இருக்கிறது காதல் எனத் தோன்றுகிறது.

பெற்றோர் நிச்சயித்த திருமணம்:

பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைக்கும் திருமணங்களும் முக்கியத்துவம் கொடுப்பது ஜாதி, மதம், படிப்பு, தொழில், அந்தஸ்து இவற்றுக்கே. மனங்கள் இணைவது இரண்டாம் பட்சமே.

பெற்றோருக்காக பிடிக்காத வாழ்வை ஏற்போர் சிலர். இவர்கள் திருமணம் என்ற சடங்கை வேண்டுமானால் பெற்றோருக்காக ஏற்கலாம். அதன் மூலம் வரும் உறவை ஏற்க சிரம படுவர். வாழ்க்கையில் சில விஷயங்களில் விட்டுக் கொடுத்து வாழலாம். ஆனால் வாழ்க்கையையே விட்டுக் கொடுத்து வாழ முடியாது.

இரண்டாம் ரகத்தினர் எந்த வித எதிர்பார்ப்பும், எதிர்ப்பும் இல்லாமல் வாழ்வை ஏற்போர். இவர்களை தங்கள் வாழ்க்கை துணையால் தங்களுக்கு ஏற்றபடி மாற்ற முடியும். சில நாட்களிலேயே அவர்கள் தங்கள் வாழ்வை, வாழ்க்கை துணையை விரும்ப ஆரம்பித்து விடுவர்.

கடைசி ரகத்தினர் பல வித எதிர்பார்ப்புகள், ஆசைகளுடன் திருமண வாழ்வில் அடி எடுத்து வைப்பவர்கள். இவர்களின் வாழ்க்கை துணை எதிர்பார்ப்புகள், ஆசைகளை நிறைவேற்றும் பட்சத்தில் இவர்கள் வாழ்வும் மகிழ்ச்சியாகவே அமையும். இல்லையேல் ஏமாற்றத்தினால் இவர்கள் வாழ்வு விரக்தி அடையும். இன்னொரு துணையை நாடவும் வாய்ப்பு உண்டு. இவற்றை எல்லாம் பார்க்கும் போது இன்னுமா இருக்கிறது காதல் எனத் தோன்றுகிறது.

அப்படினா காதலே இல்லையா என்று தானா கேட்கிறீர்கள்?? இருக்கு.. ஒரு ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையே ஏற்படுவது என்றே பலரும் எண்ணி கொண்டிருக்கிறோம். முதலில் காதல் என்பது மனிதர்களுக்கு மட்டுமான உணர்வு இல்லை. இவ்வுலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்துமே காதலித்து கொண்டு தான் இருக்கிறது. அன்பே கடவுள் என்று சிலர் கூறுகின்றனர். அன்பும் காதலின் ஒரு வகையான வெளிப்பாடு தான் என்பதால் காதலும் கடவுளும் ஒன்றே தான் என்று கூட கூறலாம். காதலின் சின்னம் என்றால் பலரும் தாஜ்மகாலை தான் கூறுவார்கள். ஒரு கணவன் தன் மனைவியின் மீது வைத்திருந்த உன்னதமான காதலின் சின்னமே தாஜ்மஹால். நம்மில் பல தம்பதிகள் தங்கள் துணையின் மீது அளவில்லா காதலை கொண்டுள்ளனர். அப்படிப்பட்டவர்களை போற்றும் சின்னமே ஆக்ராவில் அமைந்துள்ள அந்த சின்னம்.

முடிவுரை:

அழகை பார்த்து காதல் வந்தால் அது இன கவர்ச்சி. படிப்பு, தொழில் பார்த்து காதல் வந்தால் அது சுயநலம். தனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்ற எண்ணம். திறமையை பார்த்து காதல் வந்தால் அது அந்த கலையின் மீது ஏற்படும் நாட்டமே அன்றி காதல் அல்ல. இவைகளுக்கு அப்பாற்பட்டு ஒருவருக்கொருவர் பேசி புரிந்து கடைசி வரை ஒத்து வாழ்வதே காதல். இதற்கு இருவருக்கும் ஒரே மாதிரியான எண்ணங்கள், கருத்துக்கள், விருப்பங்கள் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை. ஒருவர் மற்றவரின் எண்ணங்களுக்கு, கருத்துக்களுக்கு, ஆசைகளுக்கு மதிப்பு கொடுத்து நடந்தாலே போதும்.

சின்ன சின்ன ஆசைகள், சின்ன சின்ன சந்தோஷங்கள், சின்ன சின்ன ஆச்சரியங்கள், சின்ன சின்ன சண்டைகள், சின்ன சின்ன மன்னிப்பு, சின்ன சின்ன சமாதானம் இவைகள் தான் வாழ்வை இனிமையாக்கும். காதல் என்ற உணர்வு கடைசி மூச்சு வரை நம்முடன் இருக்கும். “இன்னுமா இருக்கிறது காதல்?” என்ற கேள்விக்கும் அவசியம் இருக்காது.
avatar
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 30
Location : சூரத்

Back to top Go down

Re: இன்னுமா இருக்கிறது காதல்

Post by sarunjeevan on Mon Oct 15, 2012 3:23 pm

உலகம் திறந்து வைத்த
முதல் சாவி காதல் தான்
திறந்தவன் தொலைத்து விட்டான்
இன்னும் அந்த தேடல் தான்...

1000 LIKES FOR YOUR STATEMENTS..

BUT, ஒருவருக்கொருவர் பேசி புரிந்து கடைசி வரை ஒத்து வாழ்வதே காதல்.. IT SHOULD BE SELFISH LOVE..

In my aspect, we can't defined love.. Thats love...

sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 31
Location : சென்னை

Back to top Go down

Re: இன்னுமா இருக்கிறது காதல்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Oct 15, 2012 4:42 pm

அருமையான கட்டுரை பகிர்வுக்கு நன்றி ருக்மணி வெகு நாட்களுக்கு பிறகு வந்திருக்கீங்க பாராட்டுக்கள்

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: இன்னுமா இருக்கிறது காதல்

Post by pakee on Tue Oct 16, 2012 5:54 pm

அருமையான கட்டுரை மிக்க மகிழ்ச்சி
avatar
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 31
Location : france

Back to top Go down

Re: இன்னுமா இருக்கிறது காதல்

Post by ருக்மணி on Wed Oct 17, 2012 4:56 pm

உலகம் திறந்து வைத்த
முதல் சாவி காதல் தான்
திறந்தவன் தொலைத்து விட்டான்
இன்னும் அந்த தேடல் தான்...

இது பாடல் வரிகளே... என்னுடைய சொந்த வரிகள் அல்ல...

காதலின் இலக்கணம் ஒருவருக்கொருவர் மாறுபடவே செய்யும்... நன்றி அருண்
avatar
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 30
Location : சூரத்

Back to top Go down

Re: இன்னுமா இருக்கிறது காதல்

Post by ருக்மணி on Wed Oct 17, 2012 4:57 pm

நன்றி யூஜீன்... நீண்ட இடைவெளி பின் வந்தாலும் தொடர்ந்து வருவேன்
avatar
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 30
Location : சூரத்

Back to top Go down

Re: இன்னுமா இருக்கிறது காதல்

Post by ருக்மணி on Wed Oct 17, 2012 4:58 pm

நன்றி பகீ
avatar
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 30
Location : சூரத்

Back to top Go down

Re: இன்னுமா இருக்கிறது காதல்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Oct 19, 2012 1:47 pm

ருக்மணி wrote:நன்றி யூஜீன்... நீண்ட இடைவெளி பின் வந்தாலும் தொடர்ந்து வருவேன்

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: இன்னுமா இருக்கிறது காதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum