"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
by அ.இராமநாதன் Today at 8:47 am

» இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
by அ.இராமநாதன் Today at 8:40 am

» தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
by அ.இராமநாதன் Today at 8:38 am

» சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
by அ.இராமநாதன் Today at 8:37 am

» ஒரு சாவி கூட பீரோவுக்கு பொருந்த மாட்டேங்குதே?
by அ.இராமநாதன் Yesterday at 11:59 pm

» 2 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
by அ.இராமநாதன் Yesterday at 11:42 pm

» பள்ளிக்கு ஒரு லட்சம் சீர்வரிசை... ஆசிரியர்களைப் பிரமிக்க வைத்த ஊர்மக்கள்
by அ.இராமநாதன் Yesterday at 11:33 pm

» - கொஞ்ச நேரம் நடிக்கலாம்
by அ.இராமநாதன் Yesterday at 10:43 pm

» - இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
by அ.இராமநாதன் Yesterday at 10:31 pm

» அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
by அ.இராமநாதன் Yesterday at 10:30 pm

» போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
by அ.இராமநாதன் Yesterday at 8:20 pm

» நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 8:18 pm

» பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
by அ.இராமநாதன் Yesterday at 8:12 pm

» பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
by அ.இராமநாதன் Yesterday at 8:09 pm

» தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
by அ.இராமநாதன் Yesterday at 8:07 pm

» தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
by அ.இராமநாதன் Yesterday at 8:06 pm

» ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
by அ.இராமநாதன் Yesterday at 4:54 pm

» வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...
by அ.இராமநாதன் Yesterday at 4:51 pm

» இங்கேயும் இடது - அங்கேயும் அதே!
by அ.இராமநாதன் Yesterday at 2:51 pm

» முல்லா நஸ்ருதீன்!
by அ.இராமநாதன் Yesterday at 2:47 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by அ.இராமநாதன் Yesterday at 2:20 pm

» கீர்த்தி சுரேஷ் மகிழ்ச்சி
by அ.இராமநாதன் Yesterday at 2:16 pm

» குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப் பாம்பு: லாவகமாக பிடித்த பெண்
by அ.இராமநாதன் Yesterday at 2:12 pm

» மலச்சிக்கலை தீர்க்கும் சூசி முத்திரை
by அ.இராமநாதன் Yesterday at 2:01 pm

» துல்கர் சல்மான் ஜோடியாக நடிக்கும் சோனம் கபூர்
by அ.இராமநாதன் Yesterday at 1:55 pm

» வீராணம் ஏரி நீர் திடீர் நிறுத்தம்: சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமா?
by அ.இராமநாதன் Yesterday at 1:52 pm

» வெல்வெட் நகரத்தில் வரலட்சுமி சரத்குமார்
by அ.இராமநாதன் Yesterday at 12:53 pm

» சாவித்திரி வேடத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் தோற்றம் வெளியானது
by அ.இராமநாதன் Yesterday at 12:49 pm

» இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் பெட்ரோல் பங்கில் 5 கிலோ சமையல் கியாஸ் விற்பனை
by அ.இராமநாதன் Yesterday at 12:42 pm

» லட்சுமி கடாட்சம் பெற விரும்புபவர்கள் சண்டை போடுவதைத் தவிருங்கள்.
by அ.இராமநாதன் Yesterday at 9:37 am

» ஆவடியில் ராணுவ உடை தொழிற்சாலை மூடப்படாது: மத்திய அரசு அறிவிப்பால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி
by அ.இராமநாதன் Yesterday at 9:12 am

» வந்துவிட்டது, ‘வைசார்ஜர்’
by அ.இராமநாதன் Yesterday at 9:04 am

» முத்தரப்பு கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இந்தியா: வாஷிங்டன் சுந்தரின் மாயாஜால பந்துவீச்சால் வெற்றி பெற்றோம்
by அ.இராமநாதன் Yesterday at 8:59 am

» காங். மாநாடு இன்று துவக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 8:20 am

» 12 பேர் ராஜ்யசபா எம்.பி.க்களாக போட்டியின்றி தேர்வு
by அ.இராமநாதன் Yesterday at 8:04 am

» ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் முதன்முறையாக தமிழ்
by அ.இராமநாதன் Yesterday at 8:02 am

» அரசு வேலையில் சேர 5 ஆண்டு ராணுவ பணி கட்டாயம்
by அ.இராமநாதன் Yesterday at 8:00 am

» அமெரிக்காவில் நடைமேடை பாலம் இடிந்து விபத்து: பலர் சிக்கியுள்ளதாக தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 7:58 am

» மோடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்:ஜெகன் மோகன்,நாயுடு கைகோர்ப்பு
by அ.இராமநாதன் Yesterday at 7:56 am

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Mar 15, 2018 9:56 pm

» ஸ்டீபன் ஹாக்கிங் உன்புகழ் நிலைக்கும் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Mar 15, 2018 8:15 pm

» 3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு - ஜுலன்கோசுவாமிக்கு இடம்
by அ.இராமநாதன் Thu Mar 15, 2018 2:46 pm

» ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்
by அ.இராமநாதன் Thu Mar 15, 2018 12:51 pm

» பற்றை மறக்கச் செய்யும் ஞான தீர்த்தம் ...
by அ.இராமநாதன் Thu Mar 15, 2018 12:49 pm

» ஒரு பக்கக் கதை - தலைவர்
by அ.இராமநாதன் Thu Mar 15, 2018 12:43 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி

Go down

பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி

Post by eraeravi on Fri Jun 25, 2010 1:59 pm

பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி
மனிதனில்
எவனும் கடவுள் இல்லை, எந்த ஒரு மனிதன் தன்னை கடவுள் என்கிறானோ?அவன் மனிதனல்ல,
விலங்கு என்பதை உணர வேண்டும்.

திரு.கமலஹாசனின் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். என்னும் திரைப்படத்தில் ஒரு வசனம்
வரும்."கடவுள் இல்லை என்பவர்களையும் நம்பலாம்,கடவுள் உண்டு என்பவனையும்
நம்லாம், நான் தான் கடவுள் என்பவனை நம்பவே கூடாது" என்று. இவை கல்வெட்டு
வார்த்தைகள். இதனை எல்லோரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. நான் ஒரு நாத்திகன். எனவே எந்த சாமியார்கள்
மீதும் எனக்கு மதிப்பு கிடையாது. ஆனால், பொதுமக்களில் பலர் எத்தனை நிகழ்வுகளை
கண்டாலும் இன்னும் திருந்தாமல் சாமியார்களை நம்பி மோசம் போகும் போது வேதனையாக
உள்ளது. ஒழுக்கக்கேட்டின் மொத்த உருவமாக சாமியார்கள் திகழ்கின்றனர்.

தந்தை பெரியார் தனது மூச்சு உள்ளவரை, தமிழ்ச் சமுதாயத்திற்கு மானமும், அறிவும்
உணர்த்த வேண்டும் என்பதற்காக உழைத்தார். எதையும் ஏன்? ஏதற்கு? எப்படி? ஏன்று
கேட்கச் சொன்னார்.

தனது வாயில் வாழைப்பழத்தை மென்று, அப்பழத்தை தனது பக்தைக்கு அவளின் வாயில்
வழங்கினால் குழந்தை பிறக்கும் என்ற மூட நம்பிக்கை இன்றும் தொடர்கின்றது. கோவை
குப்பனூர் தாசன் கோவிந்தசாமியின் செய்தி படித்தேன்.

நம்மில் பலர் பகுத்தறிவை பயன்படுத்துவதே கிடையாது. சாமியார்கள் இரண்டே வகை
தான், பிடிபட்ட சாமியார், பிடிபடாத சாமியார். அரசு புலனாய்வுத் துறையின் மூலம்
தீவிரமாக கண்காணித்தால் பிடிபட்டு விடுவார்கள். கடவுள் இல்லை என்ற முடிவுக்கு
வராவிட்டாலும்,மனிதனில் எவனும் கடவுள் இல்லை என்ற முடிவுக்கு உடன் வாருங்கள்.

பிரபல நடிகையுடன் காமலீலை புரியும் ஒரு காமுகனை சாமியார் என்று வழிபட்டு,
அவனுக்கு சிலை வைத்து, ஆசிரமம் அமைத்து,அவனை பேச அழைத்து,கௌரவித்தது சில
பெண்கள் கல்லூரிகள். சுpலர் அவனை தரிசிக்க எட்டாயிரம் ரூபாய் வரை செலுத்தி
உள்ளனர். சிலர் சில இலட்சங்களையும் இழந்து உள்ளனர். இப்போது மக்களுக்கு
விழிப்புணர்வு வந்து அவனது படத்தை செருப்பால் அடிப்பது, அவனது சிலையை
தகர்ப்பது, ஆசிரமத்திற்கு தீ வைப்பது என்று கிளம்பி விட்டனர். இப்படிப்பட்ட
அயோக்கியனின் அருளுரை என்று சில பத்திரிகைகளும் பிரசுரம் செய்து பணம் சேர்த்தன.
பிரபல நடிகை பறக்கும் முத்தம் தருகிறார், சாமியார் நடிகையின் இடுப்பை
கிள்ளுகிறான். பத்திரிகைகளில் புகைப்படங்கள் சாமியாரின் முகத்திரையைக்
கிழித்தன.

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரத்தின் வை வரிகள் இச்செயலிலும் நினைவிற்கு வந்தது. ஏமாறுபவர்கள்
இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத் தான் செய்வார்கள். மக்கள் தான்
விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

சில அடிவருடிகள் ஆரம்பித்து விடுவார்கள் பஜனையை. ஒரு சிலர் தவறு செய்ததற்காக
எல்லா சாமியாரையும் குத்தம் சொல்ல முடியாது, சில நல்ல சாமியார்கள்
இருக்கின்றனர் என்று. போலீஸில் மாட்டாத வரை அவர் நல்ல சாமி தான். மாட்டினால்
அவரும் கெட்ட சாமி தான்.

தன்னைக் கடவுளாக கூறிக் கொள்ளும், காட்டிக் கொள்ளும் எந்த ஒரு மனிதனும்,அந்த
போலி மனிதனை கடவுள் என்று நம்பி துதிக்கம் பிற மனிதர்களும் திருந்த வேண்டும்.
எந்த ஒரு மனிதனையும் கடவுளாகப் பார்க்கும் அவலத்திற்கு முடிவு கட்டுங்கள். நம்
எதிர்காலம் பற்றிக் கூறி அவன் யார்? மாட்டிக் கொண்ட சாமியாருக்கு கடந்த வாரம்
வரை தாம் மாட்டப் போகிறோம் என்பது தெரிந்து இருக்குமா? இருக்காது, தனது
எதிர்காலத்தையே கணிக்க முடியாதவன், நம் எதிர்காலத்தை எப்படி கணிப்பான். சிலரை
சிலகாலம் ஏமாற்றலாம், பலரை பலகாலம் ஏமாற்றலாம், ஆனால் எல்லோரையும் எல்லா
காலமும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது என்பதை உணர்ந்து இனியாவது
திருந்துங்கள்.

தனியார் நிதி நிறுவனங்கள் மோசடி செய்கின்றனர் என்பதனை தெரிந்தே சிலர்
ஏமாறுவதைப் போல, சாமியார்களின் மோசடி தொடர்கதையாக தொடர்ந்தும், இன்னும் ஏமாறும்
ஏமாளிகள், கோமளிகள் முட்டாள்கள்.

"ஆத்மாவை திற ஆனந்தம் பெருகட்டும்" என்று தொடர் எழுதிய நித்யானந்தா ஆத்மா
என்பது வெறும் உப்புமா என்று காமகளியாட்டத்தால் நிரூபித்து உள்ளார். இவருடைய
எழுத்திற்கும், செயலுக்கும் எவ்வளவு வேறுபாடு யோசியுங்கள்.

உலகில் உள்ள உயிரினங்களில், மனித இனத்திற்கு மட்டுமே பகுத்தறிவு என்ற ஆறாவது
அறிவு உள்ளது. அதைப்பயன்படுத்த தயக்கம் தேவை இல்லை. சாக்ரடீஸ் கூற்றுப்படி அவர்
சொல்லி விட்டார், இவர் சொல்லி விட்டார் என்பதற்காக எதையும் நம்பாதீர்கள்,
சொல்வது யாராக இருந்தாலும், சொல்லிய சொல்லில் உண்மை உள்ளதா என்பது பற்றி
உங்களது பகுத்தறிவில் ஆராயுங்கள்.

கணினி யுகத்திலும் காட்டுமிராண்டிகளைப் போல, சாமியார்களின் காலைக் கழுவுவது
மண்டியிட்டு வணங்குவது, காணிக்கை கொட்டுவது என்று ஏமாறுவதை நிறுத்துங்கள்,
நித்தியானந்தா நித்தமும் ஆனந்தமாக இருந்துள்ள காமுகன், அவனைப் போய் சாமியாக
வணங்கியதற்கு வெட்கப்பட வேண்டும்.

"நான் கடவுள்" என்று இனி எவன் சொன்னாலும் அவன் தலையில் கொட்டுங்கள், கொட்டிப்
பாருங்கள் அவன் சக்தியற்றவன் என்பதை நீங்களே உணருவீர்கள். மூளைச் சலவை செய்து
முட்டாளாக்கும் மூடக்கருத்திற்கு இனி செவி சாய்க்காதீர்கள். மனிதனாக
வாழப்பழகுங்கள். உங்களிடம் உள்ள பகுத்தறிவை தயக்கமின்றி பயன்படுத்துங்கள்.
இனியும் எவனையும் சாமியார் என்று நம்பி மோசம் போகாதீர்கள்.

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2179
Points : 4973
Join date : 18/06/2010

Back to top Go down

Re: பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி

Post by eeranila on Sat Jun 26, 2010 10:13 pm

பொருள் சேர்க்க பல வழிகள் உண்டு அதில் இந்த சாமியார் தொழிலையும் பயன்படுத்துகிறார்கள் ஏனெனில் அதிகமாக பொருள் சேர்க்க மிக எளிமையான வழி இந்த சாமியார் தொழில் அந்த காலங்களிலும் சாமியார்கள் இருந்தார்கள் ரிஷிகள் முனிவர்கள் இருந்தார்கள் அவர்கள் இதுபோல் தான் நடந்துக் கொண்டார்களா அல்லது மக்களிடம் காணிக்கைகளை வாங்கி பொன்னும் பொருளும் சேர்த்து வைத்தார்களா?

சரி அதை விடுங்கள் சாமியார் என்றால் என்ன அர்த்தம்? காவி உடை அணிந்துக்கொண்டு, சிரித்த முகத்துடன் உபதேசித்தால் போதுமா?

முற்றும் துறந்தவரே முனிவர் என்றார்கள், அப்படியானால் அடிப்படை தேவைகளை தவிர மற்ற அனைத்தையும் துறந்துவிட வேண்டுமா?, மானத்தை மறைக்க துணி, பசித்தால் உணவு இவை போதுமா? இல்லற வாழ்க்கை கூடாதா?

விசுவாமித்திரர் என ஒரு முனிவர் இருந்தாரே, அவர் இல்லறவாழ்க்கை நடத்தி குழந்தையும் பெற்றெடுத்தாக வரலாறு சொல்கிறதே அப்படியானால் சாமியாராகவோ, முனிவராகவோ இருக்க இல்லற வாழ்வை துறக்க வேண்டியதில்லையா?
சரி அதையெல்லாம் விடுங்க இப்போ நம்ம நித்தி ஸார் விஷயத்துக்கு வருவோம், சந்தர்ப்பங்கள், சாட்சிகள் அலசி ஆராயப்படுகின்றன குற்றம் இன்னும் உறுதிபடுத்தபடவில்லை. சம்பந்தப்பட்ட சாட்சி ரஞ்சிதா இன்னும் விசாரிக்கபடவில்லை, ஆனால் மீடியாக்களும் பொதுமக்களும் நித்தியை குற்றவாளி என்றே தீர்மானித்துவிட்டன.

சரி அதைவிடுங்க நம்ம நித்தி அப்படி என்ன தான் தப்பு செய்தார்? ஒரு பெண்ணோடு உடலுறவு வைத்துக்கொண்டார், மீடியாவால் காட்டப்பட்ட வீடியோ காட்சிகளில் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்தது தெரியவந்துள்ளது அதனை வைத்து அவர் உடலுறவும் கொண்டிருப்பார் என அனுமானிக்கலாம் ஆனால் நிருபிக்கமுடியாது மேலும், சம்பந்தபட்ட பெண், நித்தி தன்னை கற்பழித்துவிட்டார் என்றோ, பலாத்காரம் செய்தார் என்றோ எந்த வித புகாரும் தரவில்லை. மேலும் சம்பந்தபட்ட பெண் எந்த ஒரு விவரமும் தெரியாதவர், படிப்பறிவில்லாதவர் என்பது போல் எதுவும் சொல்லமுடியாது.

படித்த அறிவுள்ள ஒரு நடிகை. அவரால் நித்திக்கு எதிராக இதுவரை எந்த ஒரு வழக்கும் பதிவாகவில்லை. மேலும் நித்தி ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டது தான் குற்றம் என்றால், சமீபத்தில் நடிகை குஷ்பு விவகாரத்தில் வெளியான கோர்ட் தீர்ப்புபடி திருமண வயதை அடைந்த ஒரு ஆணும் பெண்ணும் முழு மனதுடன் விரும்பினால் உடலுறவு வைத்துக் கொள்ளலாம் என்ற தீர்ப்பின் அடிப்படையில் நித்தியை தண்டிக்க முடியாது.

அப்படியானால் நித்தி என்ன தப்பு செய்தார், பொதுவாழ்க்கையில் பிரபளமான அவர் தன்னை ஒரு ஆன்மீகவாதியாகவும், சாமியாராகவும், கடவுளின் அவதாரமாகவும் காட்டிக்கொண்டார் அவ்வாறு செயல் பட்ட ஒருவர் எப்படி ஒரு பெண்ணோடு உடலுறவுக் கொள்ளலாம் இதுதான் உங்களின் குற்றச்சாட்டா?

அப்படி இதுதான் உங்களின் குற்றச்சாட்டாக இருப்பின், மேலே குறிப்பிடப்பட்டுள்ள விசுவாமித்திரர் விவகாரத்துக்கு விடை கூருங்கள், மேலும் நித்தி, தனக்கு தெரிந்த ஆன்மீக விஷயங்களை விரும்பி கேட்டோருக்கு எடுத்துரைத்தார், தனக்கு தெரிந்த ஆன்மீக கருத்துக்களை விரும்பி கேட்டவர்களோடு பகிர்ந்துக்கொண்டார், நான் கடவுள் என்று மட்டும் அவர் சொல்லிக்கொள்ளவிலை, நீங்களும் கடவுள் என்றும் சொன்னார் மேலும் ஓவ்வொரு மனிதனுள்ளும் கடவுள் இருக்கிறான் என்றும் சொன்னார், மனிதன் கடவுள் தன்மையை உணர்ந்துக்கொள்ளும் போது கடவுளாகிறான் என்றும் சொன்னார்.

ஏன் வரலாற்றில் கடவுளுக்கு மனைவிகள் இல்லையா அவர்கள் இல்லறம் நடத்த வில்லையா? நீங்கள் கடவுளாக பாவிக்கவில்லையா?

முதலில் நம் மக்கள் மாற வேண்டும் புதிதாக ஒன்றை கண்டவுடன் அதன் மீது அலாதி பிரியம் கொள்வார்கள் பிரச்சனை என்று வரும்போது தன் பிரியத்தை அப்படியே மாற்றிக்கொள்வார்கள் புதிதாக வரும் எதனையும் அலசி ஆராயமட்டார்கள் ஏமாறுபவர்கள் இருக்கின்றவரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்
நித்தியானத்தா ஆன்மீக வியாபாரம் செய்துள்ளார் புதிய கருத்துக்கள், புதிய அனுகுமுறைகள் எளிதி மக்கள் கவரப்பட்டார்கள் பணம் குவிந்தது நித்தியிடம்.

பொறாமை புகையத் தொடங்கியது இன்று கோர்ட்டில் நிற்கிறார்.

eeranila
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia

Back to top Go down

nandri pl visit

Post by eraeravi on Thu Jul 01, 2010 12:11 pm

வணக்கம். கட்டுரையைப்
பாராட்டியமைக்கு மிக்க நன்றி
அன்புடன்
இரா .இரவி
கவிதைகள் படித்து மகிழுங்கள்
http://eraeravi.wordpress.com/
www.kavimalar.com No

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2179
Points : 4973
Join date : 18/06/2010

Back to top Go down

Re: பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum