"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Yesterday at 8:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Yesterday at 9:29 am

» வித்தியாசமான வேடத்தில் சமந்தா
by அ.இராமநாதன் Yesterday at 9:23 am

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:52 am

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:51 am

» சமந்தா வரவேற்பு!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:50 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:49 am

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:48 am

» மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:37 am

» இந்த ஆஸ்பத்திரிக்கா உயிரையே கொடுத்தவங்க...!!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 2:12 am

» நாச்சியார் விமர்சனம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:50 pm

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:24 pm

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:20 pm

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:17 pm

» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:38 pm

» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:37 pm

» பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:36 pm

» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:35 pm

» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:33 pm

» மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:32 pm

» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:31 pm

» ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:25 pm

» ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:24 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:26 pm

» நீரிழிவு நிலை உள்ளவர்களா உங்கள் உணர்திறன் குறைவடையும்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:24 pm

» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:07 pm

» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:06 pm

» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:05 pm

» சனீஸ்வரா காப்பாத்து!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:02 pm

» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:01 pm

» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 1:59 pm

» 10 செகண்ட் கதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 11:03 pm

» பொது அறிவு - வினா, விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:50 pm

» படித்ததில் பிடித்தது - பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:40 pm

» உயிர்த்தெழும் கதாபாத்திரங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:25 pm

» முத்தங்களை கக்கிய பொழுதுகள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:21 pm

» கண்கள் பாதிப்பை குறைக்கும் உடற்பயிற்சிகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 3:05 pm

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:58 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டுன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:53 pm

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:44 pm

» தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி நீரை தர வேண்டும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:38 pm

» தாய்ப்பால் கொடுத்த முதல் திருநங்கை அமெரிக்காவில் சாதனை படைத்த மருத்துவர்கள்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:34 pm

» மகன் வாங்கிய காரில் மருமகள் செல்வதா? காரை தீயிட்டு கொளுத்திய தாய்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:29 pm

» சென்னையில் கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:27 pm

» தமிழ் சிதைந்தால் தமிழினமே சிதைந்து போகும்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Feb 16, 2018 8:42 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Jan 26, 2013 5:12 pm

First topic message reminder :

விஸ்வரூபம் -கமல் மீது இஸ்லாமிய அமைப்புகள் சொல்லும் குற்றச்சாட்டுக்கள் என்னென்ன...?

சென்னை: இந்துக்களை புண்படுத்தும் வகையிலான காட்சிகளை வைத்ததாக இதற்கு முன்பு குற்றச்சாட்டுக்குள்ளான கமல்ஹாசன் இப்போது இஸ்லாமியர்களின் குமுறலுக்குள்ளாகியுள்ளார்.

பெரும் பொருட் செலவில் கமல்ஹாசன் நடித்து, இயக்கித் தயாரித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம் இஸ்லாமியர்களையும், இஸ்லாமையும் இழிவுபடுத்துவது போலவும், மோசமாக சித்தரிப்பதாகவும் உள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

விஸ்வரூபம் படத்தைப் பார்த்த இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள், இப்படத்தில் இஸ்லாமியர்களை இதுவரை யாருமே இப்படி கேவலப்படுத்தியதில்லை என்றும் குமுறல் வெளியிட்டுள்ளனர்.

இஸ்லாமியர்கள் விஸ்வரூபம் படம் தொடர்பாக முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் இவைதான்...

நமாஸ் செய்து விட்டு கொலை

விஸ்வரூபம் படத்தில் தீவிரவாதியாக காட்டப்படும் நபர் முஸ்லீமாக காட்டப்படுகிறார். மேலும் எந்த ஒரு தீவிரவாத செயலையும் செய்யும் முன்பு அவர் நமாஸ் செய்வது போல காட்டி விட்டு பின்னர் கொலைச் செயலைக் காட்டுகின்றனர்தீவிரவாதிகளின் கையேடா திருக்குரான்..?

இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரானை தீவிரவாதிகளின் கையேடு போல காட்டியுள்ளார் கமல்ஹாசன். அதாவது தீவிரவாத செயலில் ஈடுபடுவோர் கையில் திருக்குரான் இருப்பது போலவும், அதில் உள்ள வாசகங்களைப் படித்து விட்டு அவர்கள் தீவிரவாத செயலில் ஈடுபடுவது போலவும் காட்டுகிறார்.கழுத்தை அறுப்பதை அப்பட்டமாக காட்டுகிறார்கள்

தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படும் இஸ்லாமியர்கள், மனிதர்களின் கழுத்தை அறுப்பதை தத்ரூபமாக சித்தரித்துள்ளனர்.இது இஸ்லாயமிர்கள் குறித்த பொதுமக்கள் மனதில் தவறான எண்ணத்தை பதிய வைக்கும் அப்பட்டமான முயற்சியாகும்.மசூதிகள் தீவிரவாதிகளின் புகலிடமா?

மசூதிகளையும், பள்ளிவாசல்களையும் தீவிரவாதிகளின் புகலிடம் போல காட்டியுள்ளனர். உலமாக்களை தீவிரவாத தலைவர்கள் போல காட்டியுள்ளனர். அல்லாஹு அக்பர் என்ற புனித வாசகத்தை தீவிரவாதிகளின் சங்கேத பாஷை போல காட்டியுள்ளனர்அமைதிப் புறாக்களையும் விடவில்லை கமல்

அமைதிக்குப் பெயர் போன புறாக்களையும் விடவில்லை கமல். அவற்றை அமெரிக்காவிலிருந்து யுரேனியம் கடத்தி வருவதாக காட்டியுள்ளார். மேலும் ஜிஹாத் செய்து சொர்க்கத்தை அடைவோம் என்று முஸ்லீம்கள் சொல்வது போலவும் காட்டியுள்ளார்.தமிழர்களை இழிவுபடுத்தியுள்ளார்

முல்லா உமருடன் கமல் உரையாடுவது போல காட்சி வருகிறது. அதில் முல்லா உமர் தமிழில் பேசுகிறார். அதுகுறித்து கமல் கேட்கும்போது எனக்கு தமிழ் பிடிக்கும், மதுரை, கோவையில் நான் தங்கியுள்ளேன். தமிழ் ஜிஹாதிகள்தான் சிறந்தவர்கள், நம்பிக்கையானவர்கள் என்று கூறி தமிழர்களையும் மோசமானவர்களாக சித்தரித்துள்ளார்.

மொத்தத்தில் முஸ்லீம்கள் என்றால் தவறானவர்கள், மோசமானவர்கள், முரட்டுத்தனமானவர்கள், எதையும் செய்யத் துணிபவர்கள், தேசபக்தி இல்லாதவர்கள் என்பது போல இப்படத்தில் காட்டியுள்ளார்.எனவேதான் இந்தப் படத்தை எதிர்க்கிறோம் என்று கூறியுள்ளனர் இஸ்லாமிய அமைப்பினர்.

[You must be registered and logged in to see this link.]

Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu Jan 31, 2013 8:58 am; edited 1 time in total

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 30, 2013 8:31 am

தினமலர்
சென்னை: கமல் நடித்துள்ள, "விஸ்வரூபம்' படத்தை, தியேட்டர்களில் திரையிட மாவட்ட கலெக்டர்கள் பிறப்பித்த தடை உத்தரவிற்கு, சென்னை ஐகோர்ட் தடை விதித்தது. மாவட்ட கலெக்டர்கள் பிறப்பித்த தடை உத்தரவை சென்னை ஐகோர்ட் நிறுத்தி வைத்துள்ளது. இதனிடையே இன்று காலை பத்திரிகையாளர்களை நடிகர் கமல்ஹாசன் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கமல் நடித்த, சர்ச்சைக்கு உள்ளான, விஸ்வரூபம் படத்தை, தமிழக தியேட்டர்களில் திரையிட, 15 நாட்களுக்கு, மாவட்ட கலெக்டர்கள், தடை விதித்தனர். இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், "ராஜ்கமல் பிலிம்ஸ்' சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை, நீதிபதி வெங்கட்ராமன் விசாரித்தார். படத்தை, 26ம் தேதி, திரையிட்டு காட்டும்படி உத்தரவிட்டு, விசாரணையை, 28ம் தேதிக்கு, நீதிபதி வெங்கட்ராமன் தள்ளி வைத்தார். அதன்படி, 26ம் தேதி, இப்படம், சென்னை வடபழனியில் உள்ள ஒரு ஸ்டூடியோவில், நீதிபதிக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு, நீதிபதி வெங்கட்ராமன் முன், நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், "மாவட்ட கலெக்டர்கள் தடை விதித்து, தியேட்டர்களுக்குப் பிறப்பித்த உத்தரவின் நகல்கள், எங்களுக்கு கிடைத்துள்ளன. இதை எதிர்த்து நாங்கள் மனு தாக்கல் செய்ய உள்ளோம்,'' என்றார். இதற்கான, மனுக்களை தாக்கல் செய்யுமாறும், விசாரணையை தள்ளிவைப்பதாகவும், நீதிபதி வெங்கட்ராமன் தெரிவித்தார். "இந்தப் பிரச்னையை சுமுகமாகத் தீர்க்க, அனைத்து முயற்சிகளையும் எடுக்கலாம். தனி நபர் உரிமைகளை விட, நாட்டின் ஒற்றுமையே மிகவும் முக்கியம். உங்கள் தரப்பிலோ, எதிர் தரப்பிலோ எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும், நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடாது' என, நீதிபதி கூறினார்.

இந்நிலையில், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது வாதம் செய்த தமிழக அரசு வக்கீல் நவநீத கிருஷ்ணன், விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக தெரிவித்தார். இப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் அளித்த குழுவைச் சேர்ந்தவர்கள் யாரும் மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர்கள் அல்ல என்றும், இந்த படத்தின் தணிக்கைச் சான்றிதழே முறைகேடானது என்றும் வாதிட்டார்.

இதைத்தொடர்ந்து பேசிய கமல் தரப்பு வக்கீல் ராமன், விஸ்வரூபம் படத்திற்காக கமல் இதுவரை தான் சம்பாதித்த பணம் அனைத்தையும் கொட்டியுள்ளார். இப்படத்திற்காக அவர் முழுமையாக உழைத்துள்ளார். சென்சார் போர்டு அனுமதியளித்து விட்ட நிலையில், தற்போது மாநில அரசு தடை செய்வது சட்டவிரோதமானது என்றும் தெரிவித்தார். இப்படம் கேரளா மற்றும் ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அப்படியிருக்கும் போது தமிழகத்தில் மட்டும் ஏன் வெளியிடக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் ஒரு படத்தை எதிர்த்து 31 மாவட்டங்களில் 144 தடை சட்டம் விதிக்கப்பட்டுள்ளது. அப்படி தடைவிதிக்கும் அளவுக்கு சட்டம், ஒழுங்கு கெட்டு விட்டதா எனவும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த தமிழக தரப்பு வக்கீல், விஸ்வரூபம் என்ற படத்தை கமல், வினியோகஸ்தர்களுக்கு விற்றுவிட்டார். அதன் பின்னர் இப்படம் தொடர்பாக எந்த உரிமையும் தற்போது அவரிடம் இல்லை. எனவே இப்படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக வழக்கு தொடரும் உரிமை கமலுக்கு இல்லை என்றும், இப்படம் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், மத நல்லிணக்கத்துக்கு எதிராக உள்ளதால் அரசு இந்த தடையை விதித்துள்ளது என்று கூறினார். பின்னர் வழக்கு விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து,இந்த வழக்கின் மீதான விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து இரவு 8 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்திருந்தார். இந்நிலையில் தீர்ப்பு இரவு 10 மணிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று இரவு 10:15 மணி அளவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நீதிபதி வெங்கட்ராமன் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கின் ஒட்டு மொத்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, குற்றவியல் நடைமுறை சட்டபிரிவு, 144ன் கீழ் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த உத்தரவை அமல்படுத்த தடை விதிக்கப்படுகிறது.மேலும், இப்படத்தை வெளியிடும் மனுதாரரின் உரிமையில் குறுக்கிட அரசுக்கு தடை விதிக்கப்படுகிறது. இவ்வழக்கில் ஆரம்ப முகாந்திரம் உள்ளதால், இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. பதில் மனு தாக்கல் செய்தபின், சட்டப்படி தகுதி அடிப்படையில் முடிவு எடுக்கப்படும். இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள், "சினி மோட்டே கிராப்' சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட உரிய அமைப்பில் மனு தாக்கல் செய்யலாம், அதற்கு இந்த உத்தரவு தடையாக இருக்காது.இவ்வாறு நீதிபதி வெங்கட்ராமன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை இன்று காலை வரை நிறுத்தி வைக்க வேண்டும் என, கூடுதல் அட்வகேட்-ஜெனரல் அரவிந்த் பாண்டியன் கூறினார். ஆனால், அதை நீதிபதி எற்கவில்லை. இந்த வழக்கு விசாரணையையொட்டி, சென்னை ஐகோர்ட்டில் நேற்று போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இதற்கிடையே, ஐ கோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இதையொட்டி, இந்த மனு மீதான விசாரணை, இன்று நடைபெறும் என தெரிகிறது

விஸ்வரூபம் படம் மீதான தடை விலக்கப்பட்டதை தொடர்ந்து, கமல் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

கமல் சந்திப்பு: விஸ்வரூபம் படத்திற்கான தடை சென்னை ஐகோர்ட் விலக்கியுள்ளதை தொடர்ந்து, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முயற்சிகள் நடந்து வருகிறது. இதனையடுத்து, இன்று காலை 10.30 மணியளவில் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை, விஸ்வரூபம் பட கதாநாயகன் கமல் அவசரமாக சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, விஸ்வரூபம் படம் வெளியிடுவது பற்றி தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 30, 2013 8:32 am

மேலும் தினமலர் வாசகர் கருத்துக்கள்

நேற்று இரவு விஸ்வரூபம் படம் பார்த்தேன். ப்ரில்லியன்ட். ஒரு ஹாலிவுட் படம் பார்த்தது போல இருந்தது. அப்பாவி டான்சர் கமல் கைகளை அவிழ்த்து விட்டவுடன் வில்லன்களை துவம்சம் செய்வார் பாருங்கள், என்னை அறியாமல் கை தட்டி விட்டேன். இந்த ஒரு சண்டை காட்சிக்க்காகவே படம் பார்க்கலாம். குறிப்பா ஆப்கானிஸ்தான் மலை குகைகளில் படம் காட்சி செய்யப்பட்ட விதம் ஹாலிவுட் படத்திற்கு நிகர். நீங்கள் கமலுக்கு உண்மையில் சப்போர்ட் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் தியேட்டர் போய் இந்த பார்த்து, இந்த படத்தை 2013-ன் blockbuster படம் ஆக்குங்கள் - அதனால் படம் முடியும் போது டைட்டில் போடுவது போல் விஸ்வரூபம்-2 படம் விரைவில் கமல் எடுப்பார்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 30, 2013 8:33 am

ஜெயா மூக்கு அறுப்பு. lol . உண்மை என்றும் ஜெயிக்கும். ஒரு கலைஞனின் சாபம் உங்களை சும்மா விடாது. தியேட்டர் owner எல்லாம் எத்தனை கமல் படம் காட்டி பணம் சம்பாரிசிருபிங்க. ஒரு புது முறையை அவர் அறிமுக படுத்தினால் பொறுக்கவில்லை. முஸ்லிம்களை துண்டி விட்டு தடை செய்கிறீர்கள். பேசாமல் கமல் hollywood ல மட்டும் நடிச்சிட்டு இருக்கலாம். இவங்களுக்கு பவர் ஸ்டாரும், ஆர்யாவும் தான் சரி.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 30, 2013 8:33 am

நண்பர்களே இது வெறும் இடைக்கால தீர்ப்புதான். ஒரு தனி மனிதனை ஒரு அரசாங்கம் பாடாய் படுத்துவதை நம் எல்லோரும் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறோம். இந்த அதிகார போதை மிகவும் தவறான முன்னுதாரணம். இது முதலில் அரசியல்வாதிகளுக்கிடையேதான் இருதது. ஆனால் தற்பொழுது தனி ஒரு மனிதனையும் விட்டுவைக்கவில்லை. இது ஒன்றும் முலும் மக்களின் எதிர்ப்பு அல்ல. அவர்கள் எதிர்ப்பது என்றால் மற்ற மாநிலங்களில் எந்த எதிர்புப்பும் ஏன் எழவில்லை? ஆகவே சகோதரர்களே சகோதரிகளே நாம் ஒருபோதும் இது போன்ற அதிகார போதை கொண்டவர்களை அனுமதிக்க மாட்டோம் என்பதை அழுத்தமாக பதிவு செய்வோம்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 30, 2013 8:34 am

வாழ்த்துக்கள் வுலக நாயகன் கமலஹாசன். மதம், மொழி கடந்த கலைஞன். கமலஹாசன் வாழ்க. அவரின் கலை வாழ்க. திரையுலக கடவுள் கமலஹாசன் வாழ்க. சட்டத்தை கையில் எடுக்கும் இஸ்லாமிய சகோதர்களே சினிமாவை பொழுதுபோக்காக பாருங்கள். சினிமாவை தன்னுடைய சொந்தவாழ்வில் ஒப்பிட்டு பார்காதிர்கள். சினிமா வெறும் கற்பனை. சினிமாவை கலாச்சாரத்தை எதிர்க்கும் ராமதாஸ் அய்யா கமலுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் போதே இஸ்லாமிய சகோதரர்கள் புரிந்து கொண்டு இருக்க வேண்டும்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 30, 2013 8:34 am

ஜெயலலிதா மிகவும் புத்திசாலியான ஒரு அரசியல்வாதி. அவர் ஏன் இப்படி தேவையில்லாத விஷயங்களில் தன் நேரத்தையும் சக்தியையும் வீனாக்குகிறாரோ புரியவில்லை. இப்போது அவருக்கு தேவை சுயநலம் இல்லாத, அறிவுரை சொல்லக்கூடிய ஒரு உதவியாளர்தான். நாட்டின் உண்மையான நிலை அவருக்கு தெரியபடுத்தப் படவேண்டும். ஐயகோ, அதற்கு ஆளில்லை என்பது தெரிகிறது, புரிகிறது.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 30, 2013 8:34 am

எவனென்று நினைத்தாய்? எதைக்கண்டு சிரித்தாய்? விதை ஒன்று முளைக்கையில், வெளிப்படும் சுய ரூபம், யாரென்று தெரிகிறதா? இவன் தீயென்று புரிகிறதா? தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன், ஞாபகம் வருகிறதா?

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 30, 2013 8:36 am

இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் முயற்சி தோல்வி அடைந்து உள்ளது. இஸ்லாமை பயன்படுத்தி பயம் காட்ட செய்யும் அனைத்து செயல்களும் இஸ்லாமிர்களை மேலும் தனிமை படுத்திவிடும். ஜனநாயகத்தை பயன்படுத்தி தங்கள் சமுகத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்ல வேண்டியது அதன் தலைவர்களுக்கு உள்ள முக்கிய கடமை. இஸ்லாமிய அடிபடைவதிகள் இனியும் அரசியல்வாதிகளை நம்பாமல் உண்மையாக தங்கள் மக்களின் வளர்ச்சியில் அக்கறை காட்டுங்கள்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 30, 2013 8:36 am

வாழ்த்துக்கள் கமல். நான் சீக்கரம் உங்களுடைய விஸ்வரூபம் பார்க்கணும். எப்போ ரிலீஸ் பண்ணுறீங்க? டிக்கெட் புக் பண்ணனும். நான் காரத்துக்கொண்டு இருக்கிறேன். அம்மா ஆட்சி என்னக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா இப்படி பண்ணது பிடிக்கல.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 30, 2013 8:36 am

கேடு கெட்ட அரசாங்கம் , சட்டம் ஒழுங்கு எங்கள் ஆட்சியில் மட்டும் தான் சிறப்பாக இருக்கும் என்ற ஒரு மாயையை ஏற்படுத்தி இன்று சட்டம் ஒழுங்கை சொல்ல ஒரு தீர்ப்பு . அரசாங்க வக்கீலோட ஒரே சிரிப்பு தான் ??

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 30, 2013 8:37 am

இந்த தீர்ப்பு தமிழக அரசு உட்பட எல்லோரும் எதிர்பார்த்த ஒன்று தான். ஆனால் இந்த தாமதம் கமலுக்கு மிகப்பெரிய நஷ்டம். அந்த வகையில் கமலுக்கு இது ஆப்பு. இதற்கு முழு முதல் காரணம் கமல் தான். இசை வெளியீட்டு நிகழ்ச்சியை ஒருவரிடம் கொடுத்துவிட்டு ,தொலைகாட்சி உரிமத்தை மாற்றியதால் வந்த வினை

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 30, 2013 8:37 am

தமிழக அரசின் தான்தோன்றித்தனமான செயலுக்கு நீதிமன்றம் கொடுத்த மற்றொரு சவுக்கடி. சிறுபான்மை மக்களின் ஓட்டுக்காக அரசு எடுத்த தவறான முடிவு, இதன் எதிரொலி வரும் தேர்தலில் இப்போ ஆளும் ஆட்சியாளர்கள் வேதனையுடன் உணர்வார்கள். இதுவரை பாரதிய ஜனதா அனுதாபிகள் அதிமுகவிற்கு அனுசரணையாக இருந்த காலம் போய், வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கேவலமான தோல்வி அடைய வேலை செய்வார்கள் என்பது எனது கருத்து.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 30, 2013 8:38 am

ஜெயா அரசாங்கம் இதுபோன்ற தேவையற்ற விசயங்களில் மூக்கை நுழைப்பதை விட்டு விட்டு மக்களுக்கு தலையாய பிரச்சனைகளை தீர்க்க முன்வர வேண்டும்..சென்சார் போர்டு அனுமதி வழங்கியபின் மாநில அரசாங்கம் ஏன் தடை விதிக்கவேண்டும்...இது தனி நபரை பழிவாங்குதல் என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது...மறவன்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 30, 2013 8:38 am

அரசையே மக்கள்தான் தீர்மானிக்கின்றனர். ஒரு திரைப்படத்தை அவர்களால் தீர்மானிக்க முடியாதா ?...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 30, 2013 8:39 am

இடைக்கால தீர்ப்பு வந்துள்ளது .நாளை மேல்முறையீடு செய்ய போகிறது அரசு ....சமீப காலங்களில் அரசுக்கு ஆதரவாக தீர்ப்புகள் வர ஆரம்பித்து உள்ளது ..எனவே இப்படம் இன்னும் எத்தனை இடையூறுகளை சந்திக்க வேண்டி இருக்குமோ என தெரியவில்லை.மற்ற மாநிலங்களில் எந்தவித பிரச்சினை இன்றி இப்படம் ஓடும் பொழுது தமிழ்நாட்டில் எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு தாலிபன் தொடர்பு உண்டோ ?

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 30, 2013 8:45 am

சென்னை: விஸ்வரூபம் படத்திற்கான தடை சென்னை ஐகோர்ட் விலக்கியுள்ளதை தொடர்ந்து, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முயற்சிகள் நடந்து வருகிறது. இதனையடுத்து, இன்று காலை 10.30 மணியளவில் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை, விஸ்வரூபம் பட கதாநாயகன் கமல் அவசரமாக சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, விஸ்வரூபம் படம் வெளியிடுவது பற்றி தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 30, 2013 8:46 am

சென்னை: தணிக்கை துறையின் ஒப்புதலுடன் தான் விஸ்வரூபம் திரைபடம் வெளியிடப்படுகிறது. கோர்ட்தீர்ப்பு மகிழ்ச்சியையம் நம்பிகையையும் அளிக்கிறது என நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக இரவு வரை நீடித்த வாதத்தில்,தமிழக அரசு, நடிகர் கமல், இஸ்லாமிய அமைப்புகள் உள்ளிட்டோரின் வாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று இரவு 10.30 மணிக்கு நீதிபதிதனது தீர்ப்பினை வெளியிட்டர்.இதில் அரசின் கோரிக்கை நிராகரிப்பட்டது. திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டார். மேலும் மாவட்ட கலெக்டர்கள் விதித்த 144 தடை உத்தரவையும் நீக்கினார். இதையடுத்து அரசு தரப்பில், அப்பீல் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 30, 2013 8:47 am

அப்ப படம் வெளியாக இன்னும் சில பல நாட்கள் ஆகும்போல...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கலைநிலா on Wed Jan 30, 2013 7:00 pm

இடைக்கால தீர்ப்பு வந்துள்ளது .நாளை மேல்முறையீடு செய்ய போகிறது அரசு ....சமீப காலங்களில் அரசுக்கு ஆதரவாக தீர்ப்புகள் வர ஆரம்பித்து உள்ளது ..எனவே இப்படம் இன்னும் எத்தனை இடையூறுகளை சந்திக்க வேண்டி இருக்குமோ என தெரியவில்லை.மற்ற மாநிலங்களில் எந்தவித பிரச்சினை இன்றி இப்படம் ஓடும் பொழுது தமிழ்நாட்டில் எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு தாலிபன் தொடர்பு உண்டோ ?

இது மாதிரி கேள்விகளை கேட்க காரணம் கொஞ்சம் கொஞ்சமாய் நஞ்சை
திரைப்படங்களும்..ஊடங்களும் விதைத்து விட்டன...இனி இது போல் இருக்க கூடாது யென்ற காரணமே தவிர ...வேற எதுக்கும் இல்லை...

பொய் பொய் சொல்லி அதை உண்மையாய் மாற்றிய நிலை மாறனும்
இதுவே நிலை...இன்றைய நிலை....

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 52
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Jan 31, 2013 12:43 am

காவிரித் தண்ணீரை வாங்க முடியாததைக் கொஞ்ச காலம் இந்தப் பிரச்சினையை வெச்சியும் சமாளிக்கலாம்போல...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Jan 31, 2013 12:45 am

இளஞ் சித்திரன்

கமலஹாசன் படத்தை தடை செய்வதில் உள்ள அரசியல் எனக்கு புரியவில்லை என்று சொன்னதை வைத்து சிரிது சிந்தனை செய்தேன். இதுநாள்வரை ஆரிய ( பார்ப்பன, மகதிய, மராத்திய) , இஸ்லாமிய (பாராசிக, முகாலய, டிப்பு சுல்த்தான்) , சமண, பௌத்த, கிரித்தவ என பல கலாச்சார கற்பழிப்புகளை நம் இனம் சந்தித்து இப்பொழுது சுமூககமாகத்தான் உள்ளது. ஆனாலும், இந்துத்துவ வெறியர்கள் என்று சிறு கூட்டம் உள்ளதை யாரும் மறுக்க இயலாது. இந்து என்பது மதமன்று. பல இனங்களின், காச்சாரங்களின் ஒருமித்த சில தத்துவங்களின் அடிப்படையில்தான் இந்துத்துவம் உள்ளது. அதில், தமிழர்க்கென்று , வங்காளனுக்கென்று, மராட்டியனுக்கென்று தனித்தனி கலாச்சாரமும், மொழியும், பண்பாடும் உள்ளது. இதில் தமிழர்கள் கடைப்பிடித்த கலாச்சாரத்தை மெல்ல அழித்து , ஆரிய கலாச்சாரத்தை உட்புகுத்தி, இதை மந்தப்படுத்தி, வரும்காலத்தில் எல்லாவற்றையும் சிதைத்து இந்து என்ற ஒற்றை அடையாளத்தில் நம் வரலாற்றை இழந்து நிறுத்த பல காலமாக "ரோ" முயற்சித்தும் வருகின்றது. அதில் ஒன்றுதான் சாதி ஒழிப்பை காரணம் காட்டி இனக்கலப்புக்கு வழிவகுப்பது போன்று சண்டைமூட்டி "தமிழர்" என்று ஒன்றினையவிடாமல் தடுப்பது. அது பலிக்கவில்லை. அடுத்தது இது. சில பைத்தியகார இயக்கங்கள் படத்தை தடை செய்ய துடித்ததனால் இவ்வளவு பெரிய அளப்பரை இருந்திருக்காது. பல முஸ்லிம்கள் படத்தை ஆதரிக்கவே செய்தனர். மேலும் இந்துத்துவ வெறியர்கள் தமிழர் என்று நம்மை ஒன்றுபடவிடாமல் தடுக்கவும், இந்துத்துவ அமைப்புகளை தமிழகத்தில் பலப்படுத்தவும்தான் இன்று ஜெயலலிதாவின் தடை வெறி உள்ளது என்பதுதான் உண்மை. இதில் கமலஹாசன் "பலிகடா" அதை நான் நிச்சயம் எதிர்ப்பேன்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Jan 31, 2013 12:46 am

Rajkumar Palaniswamy

அன்புள்ள இஸ்லாமிய தமிழ்ச் சொந்தங்களே, உங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் . இந்த செய்தியை கவனமாக படியுங்கள் .

இஸ்லாமியருக்கு எதிராக விஸ்வரூபம் படம் எடுக்கப்பட்டு உள்ளது என்று தானே நீங்கள் அதை எதிர்த்து வந்தீர்கள் . உங்கள் எதிர்ப்பில் உள்ள நியாயம் களத்தில் உள்ள சமூகப் போராளிகள் ஒவ்வொருவரும் அறிவர் . உங்களைப் போலவே களத்தில் நின்று போராடும் தமிழர்களும் அதை எதிர்க்கிறோம். ஆனால் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என நாம் கோருவது, அடிப்படை இந்துத்வா வெறியர்களுக்கு சாதகமாகிக் கொண்டு வருகிறது என்பதை நாம் உணர வேண்டும் . இன்று திரையரங்குகளில் நடந்த வன்முறை நிகழ்வுகள் அதையே காட்டுகிறது. ஆளும்கட்சி தனது சுய லாபதிற்கோ, அல்லது இந்துத்துவ தீவிரவாதத்தை தமிழகத்தில் வேரூன்ற வைப்பதற்கோ இந்தப் படத்தடையை பயன்படுத்துகிறது என்ற சந்தேகம் தமிழர்களுக்கு எழுந்துள்ளது . அதற்கு நாம் ஒருபோதும் இடம் கொடுக்கக் கூடாது .

தற்போது நடிகர் கமல்ஹாசன் குரானுக்கு எதிரான காட்சிகளையும் , இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தும் காட்சிகளையும் நீக்கி விடுவதாக உறுதி அளித்துள்ளார் . இதுவே சரியான தருணம். இஸ்லாமிய இயக்கங்கள் இதற்கு சம்மதித்து படத்தை திரையிடுவதில் எந்த சிக்கலும் இல்லை என்ற அறிவிப்பை வெளியிடுங்கள் . அதுவே தமிழக அரசின் இப்படத்திற்கு எதிரான அடக்குமுறையை தளர்த்தும் . படமும் வெளிவரும் . இதனால் தமிழக திரைப்பட ரசிகர்களும் மகிழ்ச்சி அடைவார்கள் . உங்களின் நியாயமான கோபத்தையும் புரிந்து கொள்வார்கள்.

ஆனால் எக்காரணம் கொண்டும் ஆர்.எஸ்.எஸ், சிவசேனா, இந்து மக்கள் கட்சிகள் போன்ற இந்துத்வா அமைப்புகளுக்கு இந்த விடயத்தில் தலையிட அனுமதிக்காதீர் . ஒரு வேளை அனுமதிக்கப்பட்டால் , பாதிக்கப் படப் போவது இஸ்லாமிய சொந்தங்கள் மட்டும் அல்ல . ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் தான் . நம் தமிழர் அடையாளங்கள் யாவும் அழிக்கப்படும். அதனால் இந்த பிரச்னையை இத்தோடு முற்றுப் புள்ளி வைத்து , உடனடியாக இஸ்லாமிய தலைவர்களை கூட்டி இப்படத்தை திரையிட இப்போது எந்த பிரச்சனையும் இல்லை என்று தமிழக அரசு கேட்கும் படி அறிக்கை வெளியிடுங்கள். உங்களுக்கு இதுவே நமது வேண்டுகோள். தமிழர்களின் சார்பில் நன்றி .

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Jan 31, 2013 12:47 am

Cartoonist Bala

கமல் படப் பிரச்னைக்கு காரணம் ஜெயா அரசின் பின்னணி சதி என்பது இந்துத்துவா சக்திகள், திரை உலகத்தினர் உட்பட எல்லோருக்கும் தெரிகிறது.. ஆனால் எல்லோருக்கும் ஜெயாவைக் கண்டிக்க பயம்.

விஸ்வரூபம் படத்தை ஜெயாடிவி வாங்கியிருந்தால் இந்த நாடகக் காட்சிகள் எதுவும் காணமுடியாமல் போயிருக்கக்கூடும்..

`` ஒரு படத்தைக்கூட வெளியே வரவிடாம இப்படி அடாவடி பண்றாங்க பாருங்க..” என்று இப்போது பொதுப்புத்தியினர் மத்தியில் இஸ்லாமியர்களை குற்றாவாளிகளாக முட்டுச்சந்தில் நிற்க வைத்ததன் மூலம் ஒரே கல்லில் பல மாங்காய்கள் அடித்திருக்கிறார் ஜெயா..

பெரியார் பூமியை குஜராத்தாக மாற்றி குளிர் காயும் சதித்திட்டத்திற்கு ஸ்கெட்ச் போடப்பட்டிருக்கிறது என்பது மட்டும் நன்கு தெரிகிறது..

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Jan 31, 2013 12:48 am

Senthil Vel

விஸ்வரூபம் பிரச்சினை...நான் தமிழகத்திலோ அல்லது இந்தியாவிலோ வசிக்க வேண்டுமா என்பதை யோசிக்க வேண்டியுள்ளது என்று கூறும் மரியாதைக்குரிய கமலஹாசன் அவர்களுக்கு...

1.குஜராத்தில் இசுலாமிய சகோதரிகளும், சகோதரர்களும் கொல்லப்பட்டபோது உங்களுக்குத் தோன்றவில்லையா வேறு நாட்டிற்கு சென்று விட வேண்டும் என்று...

2. ஈழத்தில் கொத்துக் கொத்தாய் தமிழினம் அழிக்கப்பட்ட போது, குழந்தைகள் கூட கொத்துக் குண்டுகளின் கோரப்பசிக்கு இரையான போது தமிழக அரசும், இந்திய அரசும் அதற்கு எதிராக குரல் கொடுக்க மறுத்த போது ஏன் தோன்றவில்லை வேறொரு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று...

3. இறையாண்மை பேசும் இந்தியாவில் டெல்டா விவசாயிகள் செத்துக் கொண்டிருக்கும் போது காவிரியில் கர்நாடகம் தண்ணீர் தர மறுக்கின்ற பொழுது ஏன் தோன்றவில்லை வேறொரு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று..

4. காதல் திருமணம் செய்த காரணத்திற்காக ஒரு கிராமமே சாதிய வெறியர்களால் சூறையாடப்பட்டபோது ஏன் தோன்றவில்லை வேறொரு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று..

5. பரமக்குடியில் அப்பாவி தலித்துகள் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட போது ஏன் தோன்றவில்லை வேறொரு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று...

இப்படி இங்கு எத்துனையோ பிரச்சினைகள் இருக்கும் போது உங்கள் திரைப்படம் வெளிவருவதில் பிரச்சினை என்ற உடன் வெளி நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறுவது சுயநலத்தின் உச்சம் என்பதே நிதர்சனம்...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum