"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Yesterday at 7:45 am

» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Yesterday at 7:38 am

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Yesterday at 7:32 am

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Yesterday at 7:30 am

» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:08 pm

» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:46 pm

» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:33 pm

» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:31 pm

» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:27 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:23 pm

» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:15 pm

» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:11 pm

» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:09 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:02 pm

» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:57 pm

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:16 pm

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 6:02 pm

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 5:25 pm

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:58 pm

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:57 pm

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:53 pm

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:50 pm

» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:30 pm

» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:27 pm

» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:23 pm

» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:16 pm

» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 12:07 pm

» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:59 am

» தக்காளி விஷயத்தில் கவனிக்க....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:55 am

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:53 am

» பன்னாட்டுப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:41 am

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:36 am

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:45 am

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:42 am

» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:19 am

» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:13 pm

» சிந்திக்க சில நொடிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:02 pm

» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:25 am

» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:18 am

» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:18 am

» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:11 am

» முருங்கைக்கீரை கூட்டு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:54 am

» பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:52 am

» வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:44 am

» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 8:32 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines கும்மிப் பாட்டு

Go down

Re: கும்மிப் பாட்டு

Post by pitchiah p on Thu Jan 24, 2013 3:34 pm

கும்மிப் பாட்டு

 

கவிஞர்.கொபெ.பிச்சையா.

 

கும்மி யடி பெண்ணே கும்மி யடி-நல்லா

குனிஞ்சு நிமுந்து கும்மி யடி.

பெண்க ளடிமை ஒழிஞ் சதென்றே

கூடிக் கூடி கும்மி யடி.

பாரதி யுந்தான் சொன்னானே -அந்த

பாரதிப் பெண்கள் வந்தொமே.

ஆணுக் குப்பெணகள் நிகராக

ஆகாயங் கூடத் தொட்டோமே.

தாசன் கேட்டான் பெண்ணுரிமை-அவன்

தாழினை ப்போற்றி வணங்கிடுவோம் .

தாடிக் கிழவன் அடி தொழுவோம்.

தந்தான் விடுதலை பாடிடுவோம்.

எல்லை காக்கும் வித்தையுந்தான்-கற்று

ஏற்றம் பெற்றோம் பாடுங்கடி.

விண்ணையுங் கூட நமிர்த்திடுவோம்

வீரம் பெற்றோம் பாடுங்கடி.

 

எல்லாத் தொழிலும் தேர்ந்தோமே-பெண்

இல்லாத் துறையே இல்லாமே.

வல்லா ராகி வாழ்வோமே.

வையம் காத்து நிற்போமே.
avatar
pitchiah p
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 11
Points : 11
Join date : 24/01/2013
Age : 69
Location : chennai

Back to top Go down

Re: கும்மிப் பாட்டு

Post by pitchiah p on Thu Jan 24, 2013 3:37 pm


காதல் வாழட்டும்

கவிஞர்
.கொ.பெ.பிச்சையா.

காதல்
மிகவும் வலியது-அது

காதல்
மெய்யென்றால்.

கடவுளையும்
கட்டுமதனால்

காதல்
வாழட்டும்.

காதல்
மிகவும் நல்லது-அது

கடமையில்
தானென்றால்

காலம்
பயனாகு மதனால்

காதல்
வாழட்டும்.

காதல்மிகவும்
இனியது-அது

கலையின்
மீதென்றால்.

இன்பம்
பயக்கு மதனால்

காதல்
வாட்டும்.

காதல்
மகவும் அரியது-அது

காசனி
மேலென்றால்.

தூய்மை
வாழுமதனால்

காதல்
வாழட்டும்.

காதல்
மிகவும் அழகது-அது

காடுமலை
யென்றால்.

வானம்
பொழியு மதனால்

காதல்
வாழட்டும்.

காதல்
மிகவும்சுகமது-அது

கவிதை
எழுத்தென்றால்.

கருத்து
செழிக்குமதனால்

காதல்
வாழட்டும்.

காதல்
என்றும் புதியது-அது

கட்டியவள்
தானென்றால்.

இனிக்கும்
வாழ்வு அதனால்

காதல்
வாழட்டும்.

காதல்
என்றும் சுபமது-அது

உயிர்கள்
தானென்றால்.

உலகம்
வாழு மதனால்

காதல்
வாழட்டும்.

 

 
avatar
pitchiah p
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 11
Points : 11
Join date : 24/01/2013
Age : 69
Location : chennai

Back to top Go down

Re: கும்மிப் பாட்டு

Post by pitchiah p on Thu Jan 24, 2013 3:40 pm


 

கவிஞர்
கொ.பெ.பிச்சையா

குடிக்கிறான்
குடிக்கிறான்

கோட்டி
வரக் குடிக்கிறான்

நடக்கக்கூட
மதியில்லாமல்

நடை
பாதையிலே விழுகிறான்

பெண்டாட்டி
பிள்ளைகளை

போதையிலே
மறக்கிறான்

கொண்டாடிக்
கூத்தாடி

கோமணத்தையும்
இழக்கிறான்

கிடக்கிறான்
கிடக்கிறான்

கேவலமாய்
கிடக்கிறான்

உயிரோடு
பிணமாகி

ஊர்
சிரிரிக்கக் கிடக்கிறான்

பித்தனாகித்
திரிகிறான்

பிச்சை
கூட எடுக்கிறான்

இருக்கும்
வரை குடிக்கிறான்

இல்லாட்டித்
திருடுறான்

சுத்திச
சுத்தி மதுக்கடையை

சொக்கியங்கே
படுக்கிறான்

உருக்கி
உருக்கி உடலையே

ஒரு
நாளில் தொலைக்கிறான்

நம்பி
வந்த குடும்பம் இப்போ

நடுத்
தெருவில் தவிக்குது

தம்பி
இவன்போல யாரும்

தடமழிந்து
போக வேணாம்
avatar
pitchiah p
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 11
Points : 11
Join date : 24/01/2013
Age : 69
Location : chennai

Back to top Go down

Re: கும்மிப் பாட்டு

Post by pitchiah p on Thu Jan 24, 2013 3:42 pm

பெண்களென்ன பாபர் மசூதிகளா?

கவிஞர்.கொ.பெ.பிச்சையா

 

பெண்க ளென்ன பாபர் மசூதிகளா?

ஆண்க ளெம்மை இடிப்பதற்கு!

இடிக்கத் துணியும் ஆண்களே

கட்ட மட்டும் மறுப்ப தேன்?

பெண்க ளென்ன பொன்னகையா!

ஆண்க ளெம்மை உரசுதற்கு!

பொன் னில்லை எனபதால்

கண்
ணீரையே உதிர்க்கிறோம்.

பெண்
களென்ன சிலைகளா!

ஆண்க
ளெம்மை இரசிப்பதற்கு!

விலை
யில்லா சிலைகளாய்

வீட்டுக்
குள்ளே கிடக்கிறோம்.

பெண்
களென்ன புறம்போக்கா!

ஆண்கள்
தான் பட்டாவா!

தரி
சாகிப் போவோமோ!

கருகி
த்தான் சாவோமோ!

 
avatar
pitchiah p
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 11
Points : 11
Join date : 24/01/2013
Age : 69
Location : chennai

Back to top Go down

Re: கும்மிப் பாட்டு

Post by pitchiah p on Thu Jan 24, 2013 3:44 pm

குளத்து நீரைத்தான் குடிக்கிறோம்!

கவிஞர்.கொ,பெ.பிச.சையா.

மழை நீரை சேகரித்தோம்.

மழை நீரைக் குடிக்கிறோம்.

இழ ந்தது சுகாதாரந்தான்.

விளை ந்தது நோய்கள்தான்.

கூட்டுக் குடி நீரென்று

கொண்டு வந்த அரசதை

கேட்கிறொம் குடிக்க நீர

கிடைக்குமா ?கிடைக்குமா?

தூத் துக்குடி பக்கந்தான்

தொன்மை யான கிராமந்தான்

கொல்லம் பரம்பு மக்கள்தான்

குடி க்கநீர் கேட்கிறோம்

சுதந் திரத் தியாகிகள்

சுற் றத்தில் வாழ்ந்திட்ட

ஒட் டப்பிடாரம் வட்டந்தான்

உரிமை யோடு கேட்கிறோம்.

சுதந் திரம் வாங்கிட்டோம்

சூட்டி விட்டோம் வைரமாலை

இன்று ங்கூடக் கண்மாநீர்

இது தான் தலைவிதியோ!

 

 

மேல் நிலைத் தொட்டியோ

மேலே தான் பார்க்கிறது

கீழே நின்று கெஞ்சுகிறோம்

கிஞ்சித்தும கசியவில்லை.

 

 

 

 
avatar
pitchiah p
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 11
Points : 11
Join date : 24/01/2013
Age : 69
Location : chennai

Back to top Go down

Re: கும்மிப் பாட்டு

Post by pitchiah p on Thu Jan 24, 2013 3:45 pm


எங்கிருந்து சாதி வந்தது?

 

 

கவிஞர் கொ.பெ.பிச்சையா

 

சாதி என்ன சாதிய்யா!

சண்டை தானே மீதிய்யா.

ஆதியிலே சாதி யா!-அது

எப்படித்தான் வந்ததய்யா?

தொழில் முறைச் சமுதாயம்

தொடர்ந் திட்ட தொல்லையாலா?

இழி வென்று ஏற்றமென்று-தொழிலை

எண் ணாத பாவத்தாலா?

பிரிந்து வாழ்ந்த கூட்டங்கள்

பேதம் காத்த மடைமையாலா?

பேதமே சாதி என்று-பிரித்துப்

பின் தொடுத்த கொடுமையாலா?

உரிமைகளை இழந்த ஏக்கம்

உணர்வு களாய் எரிந்ததாலா?

உணர்வு களே விதைகளென்று-வன்மை

உள்ளோர் விதைத் ததாலா?

தலைவர்கள் தோன்றச் செய்த

தரங் கெட்ட சதியாலா?

நிலை குலைந்த பாமர்ரின்-கெட்ட

நேரம்தந்த விதியாலா?

 

காதலைக் கொல்லும் பாவம்

கலாச் சாரம் ஆனதாலா?

அன்பையே அழிக்குஞ் சாபம்-சாதியை

ஆயுதமாய் தொடுத்ததாலா?சம நிலை செய்வதற்கு

சலுகைகள் வழங்கு வதாலா?

சமத்து வம் வளருவதை-சிலர்

சகித்துக் கொள்ள இயலாதாலா?

எங்கிருந்து வந்ததய்யா

இந்தச் சாதி எமனாக?

அங்கிருந்தே அழிப்பதற்கு-இன்னும்

ஆருக்குமே துணிவில்லையா?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
avatar
pitchiah p
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 11
Points : 11
Join date : 24/01/2013
Age : 69
Location : chennai

Back to top Go down

Re: கும்மிப் பாட்டு

Post by pitchiah p on Thu Jan 24, 2013 3:48 pm


காதல் வாழட்டுமே!

கவிஞர்
.கொ.பெ.பிச்சையா.

காதல்
மிகவும் வலியது-அந்தக்

காதல்
மெய்யென்றால்.

கடவுளையும்
கட்டும் அந்தக்

காதல்
வாழட்டுமே!


காதல்
மிகவும் நல்லது-அதைக்

கடமையில் செலுத்தும் போது
.

காலத்தை
வரவாக்கும் அநதக்

காதல்
வாழட்டுமே!.

காதல்மிகவும்
இனியது-அது

கலையின்
மீதிருந்ன்தால்.

இன்பமே
பயக்கும் அநதக்

காதல்
வாட்டுமே!.

காதல்
மிகவும் அரியது-அதைக்

காசனி
மேல் வைத்தால்

உலகை
ச்சுருக்ம் அந்தக்

காதல்
வாழட்டுமே!

காதல்
மிகவும் அழகானது-அது

காடு
மலை யென்றால்.

வானம்
பொழியும் அதனால்

காதல்
வாழட்டுமே!

காதல்
மிகவும்சுகமானது-அது

கவிதை
எழுத்தென்றால்.

கருத்து
செழிக்கும் அதனால்

காதல்
வாழட்டுமே!

காதல்
என்றுமே புதியது-அது

கட்டி
யவள் மீதென்றால்.

இனிக்குமே
வாழ்வு அதனால்

காதல்
வாழட்டுமே!

காதல்
என்றும் வளமானது-அது

உயிர்கள் மீதிருந்தால்
.

வள்ளுவனார்
வாழ்த்தும் அந்தக்

காதல்
வாழட்டுமே!

காதல் என்றும் நிலையானது
-இரு

பாலினமே நிலைப்பதனால்
.

வேறினமே இல்லை அந்தக்

காதல் வாழட்டுமே
!

.

 

 
avatar
pitchiah p
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 11
Points : 11
Join date : 24/01/2013
Age : 69
Location : chennai

Back to top Go down

Re: கும்மிப் பாட்டு

Post by pitchiah p on Thu Jan 24, 2013 3:49 pm


கூடி வாழ்வோமே.

 

கவிஞர் கொ .பெ பிச்சையா.

 

காக்கை போலக் கூடுவோம்-அது

காட்டும் நீதி பாடுவோம்.

பகிர்ந்து உண்டு வாழுவோம்-பிறர்

பசியைப் போக்க உதவுவோம்

எறும்பு போல் உழைத்திடுவோம்-அது

இயங்கும் முறை வாழ்ந்திடுவோம்

சேர்க்கும் காலஞ் சேர்த்திடுவோம்-என்றும்

சிறுமை யின்றி மகிழ்ந்திடுவோம்.

பாம்பே கூட நல்லதே-அது

பாடம் காட்டிச் சொல்லுதே.

தேடிப் போயித் தீண்டாதே-தீய

தீவிர வாதம் செய்யாதே.

கிளியுந் தானே பேசுது-அது

கேட்டுத் தானே படிச்சது

மொழிக்குகுச் சண்டை போடுதா-நம்போல்

முட்டி மோதிச் சாகுதா?

விலங்கு களைப் பாருஙகள்-அவை
வேண்டும் வனந் தாருஙகள்.

மதம் அறியா வாழ்வினை-அதனில்

மனித இனம் படியுங்கள்.

பறவை களில் பேதமில்லை-அவை

பாடிப் பறந்து மகிழுது

மனிதன் மட்டும் இனத்தாலே

மனம் இழந்து வாழ்வதேன்?

 

 

 
avatar
pitchiah p
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 11
Points : 11
Join date : 24/01/2013
Age : 69
Location : chennai

Back to top Go down

Re: கும்மிப் பாட்டு

Post by pitchiah p on Thu Jan 24, 2013 3:51 pm


கனவு
காணுங்கள்

 

கவிஞர்.கொ.பெ.பிச்சையா

 

கனவு நன்றே
காணுங்கள்

குழந்தைகளே
தூங்குங்கள்.

புது உலகைப்
படைத்திட

புதுக் கனவு காணுங்கள்

ஏழ்மை
யில்லா உலகினை

ஏற்றக் கனவு காணுங்கள்
.

பாழ்மை
யில்லா படைப்புகளை

படைக்க் கனவு காணுங்கள்
.

செயற்கை
யில்லா வேளாண்மை

செய்யக் கனவு காணுங்கள்
.

தரிசு இல்லா பூமியாக

தழைக்கக் கனவு காணுங்கள்

அறியாமை
நீங்கி உலகு

அமையக் கனவு காணுங்கள்
.

பகையறியா
ஞாலமாக

பசுமைக் கனவு காணுங்கள்
.சுயநலம் இல்லாச் சுற்றம்

சூழக்
கனவு காணுங்கள.

பயம்
மறந்த விடியலை

பாரக்கக் கனவ்வு காணுங்கள்
.

நதிகளெலாம்
கைகோர்க்கும்

நாளைக் கனவு காணுங்கள்
.

அதிகாரஞ்
செயலாக்கும்

அரசைக்
கனவு காணுங்கள்.

ஊழல்
செத்த நிர்வாகம்

உதிக்கக்
கனவு காணுங்கள்.

ஊழியரும்
மக்கள் நிலை

உணரக்
கனவு காணுங்கள்.

 

வேலை
தேடும் அவலநிலை

விலகக்க்
கனவு காணுங்கள்.

உழைக்காத
வெட்டிக் கூட்டம்

உழைக்கக்
கனவுகாணுங்கள்.

சலுகை
விரும்பா சமுதாயம்

சமையக் கனவு காணுங்கள்.

ஓட்டுக்கான இலவசங்கள்

ஒழியக்
கனவு காணுங்கள்.

 

பிச்சை
இல்லாப் பேறுலகு

பிறக்கக்னவு காணுங்கள்
.

நடைபாதைக் குடும்பம் இல்லா

நாடைக் கனவு காணுங்கள்
.

எல்லாரும் எல்லாம் பெற்ற

இயல்பைக்
கனவு காணுங்கள்.

திருடரில்லா
தீர்வுநிலை

தேரக்
கனவு காணுங்கள்.

 

சாதி
மத பேதஞ் சாகும்

சமயம் கனவு காணுங்கள்
.

நீதிகூறுஞ்
செய்திகளே

நிலவக்
கனவு காணுங்கள்.

பாலினக்
கொடுமை செய்யா

பாரைக்
கனவு காணுங்கள்,

உயிர
பறிக்கும் பாவமில்லா

உலகைக்
கனவு காணுங்கள்.

காந்தி
காமராசர் களை

கனவிலா
வது காணுங்கள்.

குழந்தைகளேதூங்குங்கள்

கூவும்
வேளை விழியுங்கள்.
avatar
pitchiah p
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 11
Points : 11
Join date : 24/01/2013
Age : 69
Location : chennai

Back to top Go down

கும்மிப் பாட்டு

Post by pitchiah p on Thu Jan 24, 2013 4:10 pm


தெய்வம் நீ என்று உணர்க
!

கவிஞர் கொ.பெ.பிச்சையா சிலர் பேச்சுவாக்கில் நான் யார் தெரியுமா?என்பாரகள்.ஆனால் அவர்கள் யாரென்று அவர்களுக்கே தெரியாது.அந்த" நான்" என்பது யார?அதுதான் ஒ்வொருவருக்குள்ளும் அவகர்களுக்கே தெரியாமல் ஒளிந்திருக்கும் ஒரு இரகசியம்.அந்த இரகசியத்தை அறிந்துகொள்ளத்தான் நமக்குள் நாமே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதாகிறது.அதற்கு நமது மனதிற்கு பயிற்சியளிக்க வேணடும்.அதை ஆன்மீக சிந்தனையென்றும் சொல்லலாம்.ஒரு அமைதியான சூழலில் நமது ஐம்புலன்களுக்கும் .முழுமையான ஓய்வளித்து நமது மனதிற்குமட்டும் பரிபூரணமாக அனுமதியளித்து நமக்குள் அந்த இரகசியத்தைத் தேடவேண்டும்.ஆழ்ந்த சிந்தனைக்குள் நமது மனம் நுழைந்து தேடும் போது எல்லாமே சூன்யமாகத் தோன்றும். .அப்போது இந்த உலகமே தொலைந்துவிட்டது போல் தோன்றும்.நம்மை நாமே இழநுவிட்டது போன்றும் தோன்றும் .காற்றில் மிதக்கும் மிக இலகுவான ஏதோ ஒன்றிற்குள் நாம் இருந்தும் இல்லாத நிலையில் மனதுமட்டும் அந்த இரகசியத்தைக் கண்டறிந்து கேட்கும். நீ என்பது யார்?அப்போது நமக்கு விடை சொல்லத்தெரியாது.ஏனென்றால் நானென்ற ஒன்று அப்போது இல்லை.இதுதான் இரகசியம்.இதுதாதான் உண்மை நான் என்பது ஒரு சூன்யம் அல்லது அகங்காரம்.அக அங்காரம் என்றாலே உள்ளுக்குள் ஒன்றுமே இல்லை என்பதுதான் சரியான பொருள். இந்த நிலை எப்போது ஏற்படுகிறதென்றால் எப்போது ஆழ்ந்த சிந்தனையில நம்மை நாமே தொலைத்துவிடுகிறோமோ அப்போதுதான் நமக்குள் ஏதொ ஒன்று பிரகாசிக்கிறது. அதுதான் தெய்வீக ஞானொளி.அந்த ஞானம்தான் கடவுள்.அனைத்து சுயபோகங்களையும் கடந்து உள்ளிருக்கும் அந்த ஒன்றே ஒன்றுதான் தெய்வீகம்.அதாவது எப்போது நீயே இறைவன் என்ற உண்மையை உணர்கிறாயோ அப்போதே நாம் பெற்றிருக்கும் இந்த உடலானது பொய்யானதுதான் என்பது புரிந்துவிடுகிறது.நமக்குள்ளிருக்கும் தெய்வீகம் எனும் ஆன்மாவிற்கு பெயர் என்பது கிடையாது.உயிரெனும் ஆன்மா நமது உடலில் இருக்கும் வரைதான் நமது உடலுக்குத்தான இந்த உலகம் பெயர் சொல்லி அழைக்கிறது.உயிரெனும் ஆன்மா உடலை விட்டு ஓடி விட்டால் பெயரழிந்து பிணம் என்ற பொதுவான பெயர்தான் குப்பையாகிப்போன உடலுக்கு வழங்கப்படுகிறது..அப்பெயரும் அப்பிணம் எரியூட்டப்படும்வரைதான்.அதற்குபின் அது சாம்பல்தான்.இந்த உண்மை எல்லோருக்கும் தெரியத்தான் செய்கிறது.ஆனாலும் இந்த உலகத்தின் சாபக்கேடு யாரையும் விட்டு வைப்பதில்லையே.பாவம் !உலகின் மாயைநிலையிலிருந்து தப்புவதென்பது கடினமாகிறது.அதற்கான பயிற்சிகளை பெறுவதற்கும் பொறுமை இழந்துவிடுகிறோம் .பசியெனும் கொடுமையும் பகட்டு எனும் ஆசையும் இவ்வுலக மக்களை மெய்மையை உணரவிடாது கட்டிப்போட்டிருக்கிறது. இம்மயக்கத்திலிருந்து இவ்வுலகமக்களைக் காக்கப் பகவானே நீதான் வந்தாக வேண்டும்.ஓம் நமோ நாறாயண பவ.
avatar
pitchiah p
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 11
Points : 11
Join date : 24/01/2013
Age : 69
Location : chennai

Back to top Go down

Re: கும்மிப் பாட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum