"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Yesterday at 7:45 am

» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Yesterday at 7:38 am

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Yesterday at 7:32 am

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Yesterday at 7:30 am

» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:08 pm

» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:46 pm

» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:33 pm

» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:31 pm

» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:27 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:23 pm

» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:15 pm

» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:11 pm

» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:09 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:02 pm

» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:57 pm

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:16 pm

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 6:02 pm

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 5:25 pm

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:58 pm

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:57 pm

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:53 pm

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:50 pm

» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:30 pm

» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:27 pm

» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:23 pm

» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:16 pm

» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 12:07 pm

» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:59 am

» தக்காளி விஷயத்தில் கவனிக்க....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:55 am

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:53 am

» பன்னாட்டுப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:41 am

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:36 am

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:45 am

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:42 am

» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:19 am

» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:13 pm

» சிந்திக்க சில நொடிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:02 pm

» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:25 am

» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:18 am

» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:18 am

» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:11 am

» முருங்கைக்கீரை கூட்டு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:54 am

» பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:52 am

» வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:44 am

» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 8:32 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by nandagopal.d on Wed Feb 13, 2013 1:16 am

[You must be registered and logged in to see this image.]
வணக்கம் நண்பர்களே

திடுக் திடுக் என்று பதட்டம் அடைந்து விட்டது என் மனம்,இன்று இந்த செய்தியை படித்து விட்டு,
காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீ ச்சு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட
காரைக்காலைச் சேர்ந்த வினோதினி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஒரு தலை காதலால் ஒரு சில மனித மனம் முற்றிலும் சுயறிவற்ற விலங்கினமாக மாறி வருகிறது என்பதற்கு
இது ஒரு உதாரணம் இளைஞ்சர்களை பையித்தியமாக ஆக்கி விட்டது.
கற்பனை காதல்ஏற்கனவே திருச்சியில் கல்லுரி மாணவி ,சேலம் நூற்பாலையில் வேலை செய்து வந்த பெண்ணும் ,
கோவையில் ஒரு பெண்ணின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளான் ஒருவன் இப்படி மாதத்திற்கு இப்பொழுது எல்லாம்
இரண்டு மூன்று செய்திகள் வருகிறது இதை போல் ஒரு தலை காதலால் வந்த,வக்கிரத்தின் உச்சகட்டம்
ஒரு பெண்ணின் முகம் ,கை கால் சதைகள் சிதைக்கப்பட்டு,கண் பார்வை பறிக்கப்பட்டு மற்றும் உயிரும் சேர்ந்து பறிக்கப்பட்டு உள்ளது.
இப்பொழுது அவதிபடுவது யார் பெண்ணை இழந்ததோடு இல்லாமல், இத்தனை நாள்கள் அந்த பெண்ணின்
குடும்பத்தினர் அனுபவித்த வேதனையின் வலி எத்தனையோ... மீண்டு வந்துவிடுவார் என்று கனவோடு இருந்திருப்பார்கள் அல்லவா.
அந்த ஒரு தலை காதல் (தறுதலை ) பைத்தியங்கள் செய்யும் செயல் அவரை சுற்றி உள்ளவரையும் பயித்தியமாக ஆக்கி விடுகிறது
இந்த பைத்தியங்கள் சொல்லும் சில வசனங்கள் சினிமாவில் நிரந்தரமாக குடிகொண்டுள்ள ஓன்று
"எனக்கு கிடைக்காத ஓன்று யாருக்கும் கிடைக்ககூடாது என்பது" ,
கதாநாயகர்கள் எல்லாம் வில்லனாகி விட்ட காலம் இது.
இந்த காதல் வெறியை)யாரால் ஏற்றி வைக்கபடுகிறது என்ற விவாதத்தில் முதலிடம் பிடிப்பது சினிமாதான்,
அடுத்து நண்பர்கள் வட்டம் , "ஒருத்தியும் திரும்பி பாக்கலையாட மச்சி "ஏன்டா நீயெல்லாம் உன் பிறப்பே வேஸ்ட்டா" என்பது மாதிரி
சொல்லி ஏற்றி விடும் மடையர்களின் வசனம். மீதம் இருப்பது,அவர்கள் சூழ்ந்துள்ள சூழ்நிலைகள், காதல் என்பதே இங்கு இருவர் முடிவு செய்ய வேண்டியது.
விருப்பம் இல்ல பெண்ணினிடம் போய் காதலி,காதலி என்றால் எப்படி ?
பிடிக்கவில்லை,என்றால் விட்டு விட வேண்டியதுதானே.அதை தொடர்ந்து மிரட்டி காதலிக்க சொல்லுவது முட்டாள்தனம் என்பது தெரியாத( இந்த ஒருதலை காதலுக்கு)
ஒரு பெண் எதோச்சியமாக பார்க்கும் பார்வையை கூட புரியாமல் அந்த பெண்ணின் பின்னாலே சுற்றுவது (என் கவிதையில் கூட சொல்லி உள்ளேன் )
அப்புறம் அவள் என்னை ஏமாற்றி விட்டாள் என்று கதறுவது சாராய கடையில் போயி சரக்கு அடிக்க வேண்டியது
அங்கு பொறுக்கி திங்கும் நண்பர்கள் வட்டம் அதை கொளுத்தி கொளுத்தி போட்டு கடைசியில் அந்த பெண்ணையே கொளுத்தி விடுவதருக்கு துண்டுகின்றனர்.
என்ன சொல்வது இந்த முட்டாள் நண்பர்களையும் ஒரு தலை காதலையும்
இங்கு என்னதான் பெண் சுதந்திரம் பேசினாலும்,எழுதினாலும் ஒன்றும் ஆவதில்லை என்பதைத்தான் இந்த சம்பவம் காட்டுகிறது.
எப்படி பெண்களின் பெற்றோர்களுக்கு ஆறுதல் சொல்வது ஒரு சொட்டு கண்ணீரை தவிர,
இன்னும் ஒரு வினோதினிக்கு இந்த கொடுமை நேருமுன் சட்டம் விழித்துக் கொள்ளுமா??
குற்றம் புரிந்தவனுக்கான கடுமையான தண்டனை எதுவாக இருந்தாலும் அதை
பொதுஇடத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
மறைந்த அந்த பெண்ணின் ஆத்மா இறைவன் திருவடி நிழலில் சாந்தி அடைய வேண்டுகிறேன்.

நன்றிகள்
அன்புடன்
த.நந்தகோபால்
avatar
nandagopal.d
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 55
Points : 145
Join date : 23/11/2012
Age : 39
Location : salem (tamilnadu)

Back to top Go down

Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Feb 13, 2013 8:20 am

நிறைய வலிக்கத்தான் செய்கிறது.

சென்ற ஆண்டு ஆந்திராவில் ஆசிட் வீசிய இரண்டு ஆண்களை என்கவுண்டர் செய்ததாக செய்திகள் வெளியாயின... அதன் பிறகு இம்மாதிரியான சம்பவம் நடப்பதில்ல. இங்கும்தேவை ஒரு என்கவுண்டர்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 12:04 am

Dull Dull - chennai,இந்தியா
13-பிப்-201318:40:19 IST Report Abuse

அன்பு சகோதரி வினோதினிக்கு ஒரு மடல்.... இன்று உன்னுடைய மரணசெய்தி அறிந்ததும் ஜாதி,மத,இன உணர்வுகளையெல்லாம் தாண்டி சகமனிதன் என்ற முறையில் என்னுடைய உள்ளம் கலங்கி துடிக்கிறது.... முதல்கனமாக சகஇந்தியன் என்றமுறையில் உன்னுடைய இந்த நிலையை எண்ணி வெட்கிதலைகுனிகிறேன்.உன்னை காப்பாற்றாமல் போனதற்கு கைசேதப்படுகிறேன். ஆசிட்வீச்சில் சிதைந்தது உன்னுடைய அழகியமுகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியர்களின் மனசாட்சியும்தான் என்று எண்ணும்போது உள்ளம் உறுத்துகிறது... மரணபடுக்கையில் கிடக்கும்போதுகூட குற்றவாளிக்கு தண்டனை கொடுங்கள் என்று குமுறினாயே......நம் நாட்டு சட்டங்களில் உள்ள ஓட்டைகளின் வழியாக உன்னை கடித்த விஷப்பாம்பு எளிதாக தப்பிவிடும் என்று எந்த முகத்தைவைத்துகொண்டு நான் உன்னிடம் சொல்வது.... தமிழர்களுக்கு விஸ்வரூபத்தை பற்றியும் நமிதா எந்த கட்சியில் சேர்வார் என்பது பற்றியும் பேசவே நேரம் போதவில்லை பிறகு எப்படி அவர்கள் உன்னை பற்றி சிந்திப்பார்கள்.... உன்விஷயத்தில் மத்திய,மாநில அரசுகளின் அலட்சியபோக்கு எங்கள் மனதில் அரசின் மீது இருந்த கொஞ்சநஞ்சம் நம்பிக்கையையும் இழக்கசெய்துவிட்டது... இனி வார்த்தைகள் இல்லை...உன்னுடைய இழப்பை தாங்கும் சக்தியை உனது பெற்றோருக்கு கொடுக்கவும் இனி ஒரு பெண்ணிற்கும் இதுபோன்ற அவலம் ஏற்ப்படாது இருக்கவேண்டுமென்றும் இறைவனை பிரார்த்தித்து நிறுத்துகிறேன்.....

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 12:05 am

சுலைமான் - தோஹா ,கத்தார்
13-பிப்-201318:15:13 IST Report Abuse

இதனால் தான் எனக்கு தமிழிலேயே பிடிக்காத வார்த்தை "காதல்"

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 12:05 am

arabuthamilan - manama,பஹ்ரைன்
13-பிப்-201317:16:00 IST Report Abuse

முதலாவது சினிமா சீரியல் சம்பத்தபட்ட தொழில்களை, காட்சிகளை அரசாங்கம் தடை செய்து, ஆக்கப் பூர்வமான வழியில் நம் இளைஞர்களை நடத்த வேண்டும். செய்வார்களா?

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 12:06 am

Chandra Bose - marthandam,ஐக்கிய அரபு நாடுகள்
13-பிப்-201316:46:11 IST Report Abuse

இனியொரு வினோதினியும் சுரேஷும் உருவாகாமல் அல்லது உருவாக்கப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதே நமது அடுத்த கட்ட நடவடிக்கையாக இருக்க வேண்டும். 1. பெண்ணை போக பொருளாக, கவர்ச்சி பதுமையாக பார்க்காமல் ஒரு தாயாக, மகளாக, சகோதரியாக பார்க்கின்ற மனநிலையை நாம் ஒவ்வொருவரும் நமது இல்லங்களிலிருந்து துவக்க வேண்டும், நமது நண்பர்களோடு, சகோதரர்களோடு இதை பற்றி விவாதிக்கவும் கற்று கொடுக்கவும் வேண்டும். குடும்பங்கள் சரியானால் அது சமுதாயம் சரியாக உதவும். 2. ஒரு பெண்ணின் அனுமதியில்லாமல் அவளை தொடுவது (பால் ரீதியிலான தொடுதல்) கொடும் குற்றம் என்பதை இளம் தலைமுறைக்கு பள்ளிகூடங்களிலேயே கற்று கொடுக்கவேண்டும். 3. மதுவுக்கு எதிராக அதை முற்றிலும் தடை செய்ய மகளிர் அமைப்புகளும் நல்ல அரசியல்வாதிகளும்(திரு. நல்லகண்ணு போன்றோர்) முன்வர வேண்டும். மது குறைந்த பட்சம் 50% சமுதாய மற்றும் குடும்ப பிரச்சினைகளுக்கும் காரணம் என்பதை யாரும் மறக்க முடியாது.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 12:06 am

Nallavan Nallavan - jubail,சவுதி அரேபியா
13-பிப்-201316:11:17 IST Report Abuse

இறக்கும் முன்பு "எனது கதி யாருக்கும் நேரக் கூடாது" என்று அப்பெண் கூறியதாய்த் தனியார் தொலைகாட்சி செய்தியில் பார்த்தேன் ... இது என்னை நெகிழ வைத்தது .... இது போன்ற குற்றங்களுக்கும் தூக்குதான் சரி ....

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 12:07 am

Sarva Manikandan - chennai,இந்தியா
13-பிப்-201315:22:28 IST Report Abuse

மனிதனாய் இருந்தால் யோசித்து பார்ப்பான். மிருகங்கள் தான் இவ்வாறு செய்யக்கூடும். மிருகங்களுக்கு கூட மிருக வதை சட்டம் உண்டு ஆனால். மனித உயிரை கொல்லும் இப்படிப்பட்டவர்களை மிருகத்திற்கும் கீழாக மதிக்க வேண்டும்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 12:07 am

ashraff - tiruvarur,இந்தியா
13-பிப்-201315:14:36 IST Report Abuse

அந்த சகோதரி ஆன்மா அமைதி பெறட்டும்.கொடூரம் புரிந்த இதயம் வெந்து சாகட்டும்.சில சினிமாக்களை அரசு தடை செய்யட்டும்.காதல் ஆசை ஒழியட்டும்.கணவன் மனைவி காதல் வாழட்டும்.பிப் 14 நாசமாகட்டும்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 12:08 am

SURESH SURESH - bangalore,இந்தியா
13-பிப்-201314:32:20 IST Report Abuse

இந்தியாவில் கடுமையான சட்டம் தேவை. இங்குள்ள அரசியல் வாதிகளின் வோட்டு வங்கிக்காக மற்றும் தங்களின் ஆட்சயை காப்பற்றி கொள்ள உடனடி சட்டத்தை ஏற்றி நடவடிக்கை எடுக்கிறார்கள்.ஏன் இதற்க்கு முன் இது போன்று பெண்கள் பாதிக்கபட்டதில்லையா ? அப்போதெல்லாம் எங்கே போயிற்று இந்த பத்திரிகை ,அரசாங்கம் மற்றும் சட்டங்கள்.?

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 12:08 am

SURESH SURESH - bangalore,இந்தியா
13-பிப்-201314:22:51 IST Report Abuse

முதலில் மார்க்கெட்டில் ஆசிட் விற்பனை தடை செய்ய வேண்டும். இவர்களுக்கு ஆசிட் எங்கே கிடைக்கறது ? பின்னர் திரைப்படங்கள் வன்முறை கட்சிகளை தடை செய்யவேண்டும். கதை தயாரிபளர்கள் உண்மை சம்பவம் என்று கூறி திரைபடங்கள் எடுப்பது அறவே ஒழிக்க வேண்டும். இந்த சம்பவம் 18/9 படம் போன்று உள்ளது

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 12:09 am

uttalakadi jo jo - begalona,பெர்முடா 13-பிப்-201318:26:18 IST Report Abuse
ஜல்லி கலவை மசின் ஆபரேட்டர் அந்த ஆள் , அவனுக்கு ஒரு தலை காதல் இன்ஜினியரிங் படித்த பட்டதாரிமேல் . ஒத்துக்கொள்ளவில்லை என்றல் ஆசிட் வீச்சு . இந்த மாதிரி ஒரு தலை காதலை ஊக்குவிக்கும் தமிழ் நவீன சினிமாக்களை வருடம்தோறும் இதே நினைவுநாளில் செருப்பால் அடிக்கவேண்டும் . அப்போதுதான் பையன்கள் திருந்துவார்கள் ....

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 12:10 am

Dull Dull - chennai,இந்தியா
13-பிப்-201314:05:19 IST Report Abuse

தந்தை ஜெயபாலனின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் இஸ்லாம்.. “என் மகள் வாழ்க்கையைச் சிதைத்து சின்னாபின்னமாக்கிய அவனுக்குத் தூக்கு தண்டனை கொடுத்தால் ஒரு நொடியில் உயிர் போய்விடும். அது போதாது... என் மகளைப் போல் அவனும் வேதனையை அனுபவிக்க வேண்டும்.” இப்படிச் சொன்னவர் விநோதினியின் தந்தை ஜெயபாலன். ஜெயபாலனின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம்தான். ஒருவேளை ஷரீஅத் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெறுவதாக வைத்துக்கொள்வோம். விநோதினி எப்படிக் கொல்லப்பட்டாரோ அதே முறையில்தான் குற்றவாளியும் கொல்லப்படவேண்டும் என்று ஷரீஅத் தீர்ப்பளிக்கும். பாதிக்கப்பட்ட ஜெயபாலனின் உணர்வுகளுக்குத்தான் இறைநெறி இஸ்லாம் மதிப்பளிக்கிறது. தமது மகளைக் கொடூரமாகக் கொலை செய்த குற்றவாளியும் அதே போல் கொல்லப்படவேண்டும் எனும் அவருடைய நியாயக் குரலுக்குத்தான் ஷரீஅத் மதிப்பளிக்கிறது. ‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கொலைக்குக் கொலை என்பதெல்லாம் காட்டுமிராண்டித்தனம்’ என்று வக்கணை பேசும் மனித உரிமைவாதிகள் இப்போது விநோதினியின் தந்தை ஜெயபாலனைப் பார்த்து ‘நீ ஒரு காட்டுமிராண்டி’ என்று சொல்வார்களா? மனித உணர்வுகளுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்தான் என்பதை நம்நாட்டு மனித உரிமைவாதிகள் புரிந்துகொண்டால் சரிதான்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 12:10 am

RAJA - chennai,இந்தியா
13-பிப்-201314:04:15 IST Report Abuse

இவ்வளவு வன்மம் மக்களுக்கு வருவதற்கு மிக பெரிய கரணம் தொலைக்காட்சி சீரியல் மற்றும் திரைப்படங்கள் தான் அதுவும் சில திரைப்படங்களில் சாதாரண கூலி வேலை செய்பவனை பணக்கார வீட்டு பெண் பார்த்த மாத்திரத்தில் காதல் வயபடுவார் இப்படி நிறைய திரைப்படங்கள் வருகிறது ,திரைபடத்தை பிரித்து பார்க்க முடியாமல் இருக்கும் சில பேர் நம்மையும் இப்படி தான் காதலிப்பார்கள் போல என்று நினைத்து அப்படி கிடைக்க வில்லை என்றால் என்ன செய்வது என்று அதற்கும் திரைப்படங்களே வழி சொல்கிறது வழக்கு என் என்ற படமும் இதே போல் திராவகம் வீசப்படும் கதை தான் . அடுத்து தொலைக்காட்சி சீரியல் இவர்கள் பண்ணும் கொடுமை இருகிறதே எதை எடுத்தாலும் பழி வாங்கவது ,தந்திரம் செய்து பிரிப்பது இப்படி தான் எடுக்கிறார்கள் அதவும் நேற்று ஒரு சீரியல் கொஞ்ச நேரம் பார்த்தேன் அதில் கள்ள காதலி தன காதலனின் மனைவியை குழந்தையை கொள்ள காரில் வெடிகுண்டு வைத்து கொல்ல பார்கிறார் ,அதில் குழந்தை காணமல் போய் விடுகிறது ,அதற்க்கு அந்த கள்ள காதலிக்கு உதவும் பெண் வந்து சொல்கிறார் அந்த குழந்தை இந்நேரம் நரி ஓநாய் கடித்து குதறி இருக்கும் கவலை படாதே என்று இப்படி எல்லாம் எடுத்தால் மக்கள் மனதில் எப்படி நஞ்சை விதைகிரார்கள் இதற்க்கு எல்லாம் கண்டிப்பாக தணிக்கை வரவேண்டும் வாய்க்கு வந்தது போல் இனி நாடகம் எடுக்க முடியாதது போல் தடை வர வேண்டும் எதை எடுத்தாலும் கள்ள காதல் சண்டை இப்படி தான்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 12:11 am

RAJA - chennai,இந்தியா
13-பிப்-201313:57:25 IST Report Abuse

நான் அந்த பெண்ணை இருமுறை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினேன்,முதலில் சில நண்பர்கள் சேர்ந்து ஒரு தொகை மருத்துவ செலவிற்காக ஜனவரி ஒன்றாம் தேதி ஆதித்யா மருத்துவமனிக்கு சென்று வினோதினி அவர்களின் தந்தையிடம் கொடுத்துவிட்டு தங்கை விநோதின்யையும் பார்த்து வந்தோம் ,அப்பொழுது உண்மையில் இளகிய இதயம் இருப்பவர்கள் பார்த்து இருந்தால் அவ்வளவுதான் உண்மையில் மயக்கமே போட்டு இருப்பார்கள் அப்படி இருந்தார் அவர் ,ஒரு ரோஜா பூவை அமிலத்தில் முக்கி எடுத்தது போல் இருந்தார் ,அடுத்து தைபூசம் அன்று மீண்டும் நண்பர்கள் மூலம் வந்த பணத்தை கொடுக்க சென்றோம் அப்பொழுது நன்றாக பேசினார் ,நன்றி கூறினார் ,கண்டிப்பாக நான் மீண்டு வருவேன் என்று கூறினார் ஆனால் அடுத்த இருபது நாளுக்குள் இப்படி இறைவனடி சேர்வார் என்று கனவிலும் நினைக்கவில்லை அவ்வளவு தெளிவாக இருந்தார் அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 12:12 am

Rajasekaran Palaniswamy - georgia,யூ.எஸ்.ஏ
13-பிப்-201313:50:25 IST Report Abuse
இந்த சுரேஷ் யார்? அவர் குடும்ப பின்னணி என்ன? அவருக்கு உதவிய நண்பர்கள் விவரம் என்ன? இதை ஏன் ஊடகங்கள் வெளியிட மறுக்கின்றன? காவல்துறை அந்த விவரங்களை தரவில்லையென்றால் அதற்க்கு வேறு ஏதேனும் காரணங்களோ சட்ட முறைகளோ இருக்ககூடும். ஆனால் மற்றவர்கள் ஏன் இதை இருட்டடிப்பு செய்கின்றார்கள்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 12:12 am

Krishnan (Sarvam Krishnaarpanam....) - chennai,இந்தியா
13-பிப்-201313:36:17 IST Report Abuse

ஒன்று, சட்டத்தை திருத்தி அமைக்கணும். இல்லையேல், பெண்களுக்கு விரைவில் திருமணம் செய்ய பெற்றோர் முன்வரவேண்டும். இரண்டு குழந்தைகள் கூட வேண்டாம் என்று நினைத்து, கொடியவர்களிடன் தன் பிள்ளையை பறிகொடுத்து, வம்சத்தை இழந்து நிற்கும் பெற்றோர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 12:13 am

Snake Babu - salem,இந்தியா
13-பிப்-201313:23:40 IST Report Abuse

வினோதினி ஆத்மா சாந்தி அடையட்டும். ஆசிட் ஊற்றியவன் உலகில் வாழ தகுதி யற்றவன். ஆணாதிக்கத்தின் உச்ச கட்டம். சமுதாய சிரழிவே இதற்கு காரணம். சிறுவயதிலே காதல் போன்ற படங்கள். என்னமோ காதலே இல்லையென்றால் ஒன்றும் இல்லாதது போல ஒரு மாயை உருவாக்கி எடுக்கும் படங்கள், பார்க்க பார்க்க காதல், இளைஞ்சர்களை வேறு நோக்கமே இல்லாமல் செய்வது, வன்முறையை தூண்டும் நெடுந்தொடர்கள் - வெட்டு குத்து, கொலை மட்டும் வன்முறை இல்லை. மாமியார் மருமகள், அண்ணன் தம்பி, இப்படி பல மோதல்கல் . நோக்கம் ஒன்றே பிடிக்காதவரை எப்படி எல்லாம் கொடுமை படுத்த முடியுமோ அவ்வளவும் தொடரில் வருகிறது. வந்ததே வரகூடாது என்று புதிது புதிதாக யோசித்து, நம்முடைய கலாசாரத்தை கெடுத்து நாசமாக்கி கொண்டிருக்கிறார்கள். நமக்குள் கூடி அமர்ந்து பேசும் பழக்கம் செத்தே விட்டது எனலாம். பண்டிகை காலங்களிலும் தொலைகாட்சி தொல்லை தொடர்கிறது. வெளியூருக்கு போனாலும் விட்டில் இருப்பவர்கள் தொடரை தேடிக்கொண்டு தான் செல்கிறார்கள். கல்வி முழுவதும் வியாபாரமாகி போனது. 'அறம் செய விரும்பு' என்றால் எவ்வளவு ஏளன பார்வை. திருக்குறள் போராகி போச்சு. பள்ளியில் சேர்க்கும் போதே எதில் சேர்த்தால் நல்ல சம்பாதிக்க முடியும் என்ற எண்ணத்திலே சேர்த்தால் - கலாசாரம் என்பதை பிஞ்சு வயதிலே கெடுத்து விடுகிறோம். நண்பனுடைய குழந்தை அவனை பார்த்து கேட்டது. ' ஒரு கார் வாங்க முடியல நிஎல்லாம் எதுக்கு இருக்கியோன்னு' இது அப்பா மகன் கலாச்சாரம். இப்படியே போனால் அங்கொன்று இங்கொன்று என கேள்விப்படும் விஷயம் எங்கும் நடக்கும். வினொதினியொடு முடித்து கொள்வோம், கலாசாரத்தை காப்போம். கூடி வாழ்வோம். சொந்தங்களை பேணுவோம். வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவோம்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 12:13 am

Freedom_to_Express - new delhi,இந்தியா
13-பிப்-201312:51:32 IST Report Abuse

காதல் காதல் காதல். காதல் போயின் சாதல் சாதல் சாதல்... அந்த கயவன் தன்னை மாய்திருக்க வேண்டும். அடுத்தவரை கொல்ல யார் அனுமதி கொடுத்தது? எந்த பெண்ணும் தனது காதல் தோல்விக்காக ஆண்கள் மீது acid வீசியதாக தகவல் இல்லை... ஏன் இந்த கொடுமை ஆண்களால் பெண்கள் மீது? Acid ஆண்களுக்கு மட்டும் விற்கபடுகிறதா? சிங்கார மகளை இழந்த வினோதினியின் பெற்றோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அந்த கயவனை அணு அணுவாக சித்ரவதை செய்து கொல்ல வேண்டும். நமது சட்ட முறைகள் மாற வேண்டும்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 12:14 am

Moses Gsekaran - chennai,இந்தியா
13-பிப்-201312:49:29 IST Report Abuse

சு கவனித்தால் எதிர்காகவுன்சிலிங் நோயாளிகளுக்கு மட்டும் அன்றி ஒட்டு மொத்த சமுதாயத்திற்கே இப்போது தேவை படுகிறது . பள்ளி பிள்ளைகளிடம் இருந்தே ஆரம்பித்துவிடவேண்டும் முன்பெல்லாம் மாரல் கிளாஸ் என்று நடக்கும் அது எங்கே போயிற்று . படி மார்க் எடு பிறகு எப்படியாவது போ .மனஅழுத்தம் ,எல்லார் மொபைலிலும் செக்ஸ் படம், பெண்களின் இப்போது உடைகள் எல்லாமே காரணம் . பெரியவர்கள் வந்தால் எழுந்து இடம் அளிப்பது இல்லை . ட்ரெயினில் ஷு காலோடு மரியாதையை இல்லாமல் எதிர் சீட்டில் கால் வைப்பது ,பள்ளியில் இருந்தே பாடத்தோடு சட்டம் ஒழுங்கு, ட்ராபிக் ரூல்ஸ் ,மாறலிட்டி, தியானம் போன்றவை அரல சமுதாயமாவது திருந்தும்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 12:15 am

Bava Husain - riyad,சவுதி அரேபியா
13-பிப்-201312:29:00 IST Report Abuse

மிகக்கொடுமையான விஷயம் இது ... உண்மையான காதலுள்ளவர்கள், தன் காதலியை தண்டிக்க நினைக்க மாட்டார்கள்... இதையெல்லாம் காதலென்று சொல்வது முட்டாள்தனம்... பறந்து திரிந்த ஒரு பட்டாம்பூச்சியை படுபாதகன் கொன்று விட்டான்....அதனால் அவன் சந்தோஷமாக இருக்கிறானா? நிச்சயமாக இருக்க முடியாது...அவனுக்கு கொடுக்கப்போகும் தண்டனை, இந்த ஆசிட் கலாச்சாரத்திற்கு ஒரு முற்றுப்புள்ளியாய் இருக்க வேண்டும்... பெண்ணை பெற்றவர்களின் மனதில் பால்வார்பதாய் இருக்க வேண்டும்... அந்த சகோதரியை இழந்து வாடும் அவரின் பெற்றோர்களுக்கு, அந்த இழப்பை தாங்க கூடிய மன உறுதியையும், பொறுமையையும் இறைவன் நல்கட்டும்.....

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 12:15 am

Pa. Saravanan - kovai,இந்தியா
13-பிப்-201311:53:25 IST Report Abuse

வருத்தமான செய்திதான் நண்பர்களே. புரிதல் இல்லையென்றால் அது காதலே இல்லை. அதிகபட்சக் காதல் என்ன செய்யும்.... தான் விரும்பியவள் தன்னை விரும்பவில்லை என்று தெரிந்ததும் அவளின் மகிழ்ச்சி கருதி அவளை விட்டு விலகும். வற்புறுத்தி காதல் வராது என்று உணரும். அந்தப் புரிதல் அவனுக்கு இல்லையே. பலர் அந்தக் கொடியவனுக்கும் திராவக தண்டனை தரவேண்டும் என்று கூறிவருகின்றனர். திரைப்படங்களில் கதாநாயகன் செய்வதுபோல் ஒரு அரசாங்கம் நினைத்த உடன் நினைத்த மாதிரி தண்டனை தர முடியாது. காரணம் இருதரப்பு நியாயங்களையும் கேட்டறிந்த பின்தான் தீர்ப்பு வழங்கப்படவேண்டும் என்பது நாம் இயற்றிவைத்துள்ள ஜனநாயக ரீதியான சட்ட வரைமுறை. அவன் செய்த தவறையே நாமும் செய்யமுடியுமா? அதற்கு சட்டம் எதற்கு. கருணாநிதி அவர்கள் சொன்னதுபோல் வாழ்நாளெல்லாம் அவனைத் தனிமைச் சிறையில் தள்ளலாம். அதுவே சிறந்த தண்டனையாக இருக்கும். மரணத்தைவிடத் தனிமை கொடுமையானது. குற்றத்தை வெறுப்போம், குற்றவாளிகளை அல்ல.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 12:16 am

Vithya Anbalagan - tirunelveli,இந்தியா
13-பிப்-201311:51:21 IST Report Abuse
நம்மீது ஒரு சிறிய தீ காயம் பட்டாலே நம்முடைய பெற்றோரால் தாங்க முடிவதில்லை வினோதினியின் பெற்றோர் மிகவும் வேதனை அடைந்திருப்பார்கள் இந்த 3 மாதமும்......அதே போல் வினோதினியின் வேதனையை வார்த்தையால் சொல்ல முடியாது.... இந்த வேதனையை அரசு புரிந்து கொண்டு அந்த கயவனுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும்........ இந்த தண்டனை எல்லாருக்கும் ஒரு படமாக அமைய வேண்டும்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 12:16 am

PRAKASH - chennai,இந்தியா
13-பிப்-201311:36:29 IST Report Abuse
அந்த கொடூரன் இப்போது எங்கு உள்ளான்? சிறையிலா அல்லது ஜாமீனில் வெளியில் உள்ளனா ?? வாழ்க நம் சட்டம் ...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 12:16 am

G.Prabakaran - chennai,இந்தியா
13-பிப்-201311:31:47 IST Report Abuse
இதே குற்றம் ஈரானில் நடந்து இருந்தால் குற்றம் நடந்த ஒரு வாரத்தில் அந்த சுரேஷ் முகத்தில் ஆசிட் ஊற்றி தண்டனை நிறைவேற்றி இருப்பார்கள். பாவம் அந்த வினோதினி கடந்த நான்கு மாதங்களாக எவ்வளவு வேதனை அனுபவத்திருப்பார்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: ஒரு தலை காதலும் சில தறுதலைகளும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum