"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 11:41 pm

» இறக்கை லிங்கம்!
by அ.இராமநாதன் Yesterday at 5:36 pm

» அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 12:50 pm

» கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
by அ.இராமநாதன் Yesterday at 12:47 pm

» பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
by அ.இராமநாதன் Yesterday at 12:46 pm

» மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
by அ.இராமநாதன் Yesterday at 12:45 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Yesterday at 12:43 pm

» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 11:29 am

» மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 11:25 am

» ஆதிசங்கரர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:20 am

» தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 11:15 am

» விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 11:08 am

» பாம்பு இருக்கற இடத்துல பல்லி எப்படி இருக்கும்...?
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 9:06 pm

» ‘டியர்... நான் உங்க இதயத்துல இருக்கேனா?’’
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:57 pm

» இந்த போட்டோ கி.மு.விலே எடுத்தது...!!
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:46 pm

» படி! படி! - சிறுவர் கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:38 pm

» செயல் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:30 pm

» கனவு - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:29 pm

» வெட்கம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:27 pm

» அழகிய தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:26 pm

» யாப்பு
by lakshmi.P.R Tue Feb 20, 2018 8:26 pm

» நடவு & ஆசை - கவிதைகள்
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:23 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Mon Feb 19, 2018 8:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:29 am

» வித்தியாசமான வேடத்தில் சமந்தா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:23 am

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:52 am

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:51 am

» சமந்தா வரவேற்பு!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:50 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:49 am

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:48 am

» மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:37 am

» இந்த ஆஸ்பத்திரிக்கா உயிரையே கொடுத்தவங்க...!!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 2:12 am

» நாச்சியார் விமர்சனம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:50 pm

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:24 pm

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:20 pm

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:17 pm

» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:38 pm

» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:37 pm

» பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:36 pm

» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:35 pm

» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:33 pm

» மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:32 pm

» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:31 pm

» ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:25 pm

» ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:24 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines வீரப்பன் கூட்டாளிகள்

Page 2 of 2 Previous  1, 2

Go down

வீரப்பன் கூட்டாளிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 3:04 pm

First topic message reminder :

தினமலர்...
தமிழகம் - கர்நாடகா எல்லையில், 1993ம் ஆண்டு, 22 போலீசாரை, கண்ணிவெடி மூலம் படுகொலை செய்த குற்றத்திற்காக, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட, "சந்தன கடத்தல்' வீரப்பன் கூட்டாளிகள், நான்கு பேரின் கருணை மனுக்களை, ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி நிராகரித்துள்ளார். இதனால், தமிழகத்தைச் சேர்ந்த, அந்த நான்கு பேருக்கும், விரைவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

கடந்த, 1980, 90ம் ஆண்டுகளில், தமிழகம், கர்நாடகா வனப் பகுதியில், சந்தன கடத்தல் வீரப்பன், கொள்ளை ராஜ்யம் நடத்தி வந்தான். அடர்ந்த காடுகளில் செழிப்பாக வளர்ந்திருந்த சந்தன மரங்களை வெட்டி கடத்தியும், யானைகளை கொன்று, அவற்றின் தந்தங்களை திருடியும்,
அட்டூழியம் செய்து வந்தான்.

கண்ணி வெடி
:வீரப்பனின் கொட்டத்தை அடக்க, இரு மாநில அரசுகளும், அதிரடி படைகளை அமைத்து, அவனை பிடிக்க முயற்சித்த போது, காட்டுக்குள் சென்ற வனத்துறை அதிகாரிகளையும், போலீசாரையும், வீரப்பன் மற்றும் அவனின் கும்பல், கொடூரமாக கொன்றது.கடைசியாக, 25 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த வீரப்பன், 2004ம் ஆண்டு, தர்மபுரி மாவட்டம், பாப்பாரபட்டி அருகே சுட்டு கொல்லப்பட்டான்.வீரப்பனை பிடிக்கும் முயற்சியில், 1993, ஏப்ரல், 9ம் தேதி, தமிழகம் - கர்நாடகா மாநிலங்களின் எல்லையில் உள்ள, பாலார் என்ற இடத்தில், போலீஸ் குழுவினர் காட்டுக்குள் சென்றனர். போலீசார் வருவதை அறிந்த வீரப்பன் மற்றும் அவனின் கூட்டாளிகள், அவர்கள் வரும் பாதையில், பயங்கர கண்ணிவெடிகளை புதைத்து வைத்தனர். அதில் சிக்கிய 22 போலீசார், உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். இதில், எஸ்.பி., ஒருவரும் இறந்தார். 14க்கும் மேற்பட்டவர்கள், படுகாயம் அடைந்து, இப்போதும் ஊனமாக உள்ளனர்.அத்தாக்குதலை அடுத்து நடந்த தேடுதலில், வீரப்பன் தப்பிய போதும், அவனது கூட்டாளிகள், ஆறு பேர் கொல்லப்பட்டனர்; 18 பேர் பிடிபட்டனர். அவர்கள் மீது, கர்நாடகாவில் தொடரப்பட்ட வழக்குகளில், சிலர் வழக்கில் ஆதாரம் இல்லாததால், விடுவிக்கப்பட்டனர். அதே சமயம், கண்ணிவெடி தாக்குதலில் ஈடுபட்ட, ஞானபிரகாஷ் ஜோசப்,
சைமன் அந்தோணியப்பா, "மீசை' மாதையன், பிலவேந்திரா மாரி கவுடா ஆகியோருக்கு, மைசூரு, "தடா' நீதிமன்றம், ஆயுள் தண்டனை விதித்தது.இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், கர்நாடக அரசு மேல் முறையீடு செய்தது. விசாரணைக்கு பின், அந்த, நான்கு பேருக்கும், 2004, ஜனவரியில், மரண தண்டனை விதிக்கப்பட்டது.தீர்ப்பு வெளியான நாள் முதல், நான்கு பேரும், கர்நாடகா மாநிலம், பெல்காம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். "தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும்' என, நான்கு பேர்சார்பில், ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பப்பட்டிருந்தது. கடந்த, 2004ம் ஆண்டு முதல், நிலுவையில் இருந்த கருணை மனுக்களை, ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி, சில நாட்களுக்கு முன் தள்ளுபடி செய்தார். அத்தகவலும் முறைப்படி சிறை அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டது, சிறை அதிகாரியும் சம்பந்தப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு கருணை மனு நிராகரிப்பு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வழக்கறிஞர் தகவல் :
இது குறித்து, வீரப்பன் கூட்டாளிகள் சார்பில், கோர்ட்டில் ஆஜரான, வழக்கறிஞர் மற்றும் மனித உரிமை அமைப்பு ஒன்றின் தலைவரான, பாலமுருகன் நேற்று "கருணை மனு நிராகரிப்பு தகவலை' நிருபர்களிடம் தெரிவித்தார்,"அவர்கள் தூக்கிலிடப்படும் தேதி இன்னும் முடிவாகவில்லை. விரைவில் தண்டனை நிறைவேற்றப்படுவது மட்டும் உறுதி' என, பெல்காம் மத்திய சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்களை, முந்தைய ஜனாதிபதிகள் விரைவாக பரிசீலிக்காத நிலை இருந்தது. கடந்த, ஜூலை மாதம், ஜனாதிபதியாக பொறுப்பேற்ற, பிரணாப் முகர்ஜி, கருணை மனுக்களை விரைவாக, பைசல் செய்து வருகிறார்.பதவியேற்ற ஏழு மாதங்களில் மும்பை தாக்குதல் பயங்கரவாதி, அஜ்மல் கசாப், பார்லிமென்ட் தாக்குதல் தீவிரவாதி, அப்சல் குரு ஆகியோரின் கருணை மனுக்களை அவர் நிராகரித்தது இப்போது பரபரப்பாக பேசப்படும் விஷயம். இந்த சூழ்நிலையில் அடுத்ததாக நான்கு பேரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

தண்டனையை தடுக்கமும்முரம்:
"தூக்கு தண்டனை விதிக்கப் பட்டு, நீண்ட காலம்

Advertisement
ஆன பிறகு, தண்டனையை நிறைவேற்றக் கூடாது' என கூறி, கர்நாடக ஐகோர்ட்டில், மேல் முறையீடு செய்ய, மனு தாக்கல் செய்ய போவதாக, வீரப்பன் கூட்டாளிகளின் வழக்கறிஞர், பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது:நான்கு பேருக்கும், தூக்கு தண்டனை விதித்து, ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. இவ்வளவு ஆண்டுகள் கழித்து, அவர்களின் கருணை மனுவை நிராகரித்து, தூக்கிலிடுவது, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இந்த அடிப்படையில் தான், ராஜிவ் கொலையாளிகள் மூவரின் வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.எனவே, மீசை மாதையன், பிலவேந்திரன், சைமன், ஞானபிரகாஷ் ஆகியோர் சார்பில், தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி, கர்நாடக ஐகோர்ட்டில், வழக்கு தாக்கல் செய்ய உள்ளோம்."தடா' கோர்ட்டில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு, சுப்ரீம் கோர்ட் தூக்கு தண்டனை விதித்துள்ளது. எனவே, இத்தண்டனையை ரத்து செய்ய, வழக்கு தொடர உள்ளோம்.இவ்வாறு, பாலமுருகன் கூறினார்.

- நமது நிருபர் -

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down


Re: வீரப்பன் கூட்டாளிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 3:16 pm

Minnal - doha ,கத்தார் 14-பிப்-201309:06:16 IST Report Abuse
நான் அப்துல் கலாமின் ஆதரவாளன் அல்ல. என்னை போல் பல முஸ்லிம்களுக்கும் அவர் எட்டிக்காய் தான். ஆனால் அவர் இனப்பற்றின் காரணமாக அப்சல் குருவின் கருணை மனுவை நிராகரிக்கவில்லை என்ற உங்கள் கருத்தை ஏற்க இயலவில்லை...அப்துல் கலாமின் நாட்டு பற்று 100 விழுக்காடு சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது என்பதை புரிந்து கொள்ளுங்கள் நண்பரே.....

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: வீரப்பன் கூட்டாளிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 3:17 pm

Thangairaja - dammam,சவுதி அரேபியா
14-பிப்-201300:37:21 IST Report Abuse
அப்சல் குருவை தூக்கிலிட்டதன் பிறகு ஏற்பட்டுள்ள ரியாக்ஷன் காங்கிரசுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவே தெரிகிறது. அது மறக்கடிக்க பட வேண்டுமானால் எதிர்ப்பில்லாத நாலு பேருக்கென்ன இன்னும் கூட தூக்கு எண்ணிக்கை அதிகரிக்கும். ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் போல பாஜகவை சமாளிக்க கசாப்பில் ஆரம்பித்து......எப்போதோ போய் சேர்ந்திருக்க வேண்டியவர்களின் உயிர்களுக்கு இப்போது விலை வந்திருக்கிறது.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: வீரப்பன் கூட்டாளிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 3:18 pm

14-பிப்-201300:15:31 IST Report Abuse
இன்றைய சூழ்நிலையில் இந்த தண்டனை கூடாது என்றாலும் தப்பு செய்தவர்களுக்கு எப்படி தண்டை தருவது. இந்த நால்வரில் ஒருவர் 70 வயது கடந்தவர். ஒரு இந்தியனின் சராசரி வயதைவிட அதிகம்.இவருக்கு மரண தண்டனை தருவது மனிதாபிமனத்திர்க்கே தண்டனை தருவது போலாகும்.ஆகவே இந்த தூக்கு தண்டனையை குறைக்கமுடியுமா என அரசாங்கம் யோசிக்கலாம்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: வீரப்பன் கூட்டாளிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 14, 2013 3:23 pm

என் கருத்து

தனிப்பட்ட முறையில் தூக்குத் தண்டனையை நான் ஆதரிக்கிறேன்!. உண்மையாகத் தவறு செய்தவரைத் தூக்கிலிடத்தான் வேண்டும். காரணம் இருக்கிறது. அதுதான் குற்றத்தைக் கட்டுப்படுத்தும் அல்லது ஒரு பயத்தையாவது உண்டாக்கும். தூக்குத்தண்டனை இல்லையென்றால் எந்தத் தவறையும் செய்யலாம் என்ற அசாத்திய தைரியம் உண்டாகிவிடும். இப்படி சொன்னால் தூக்குத் தண்டனை எதிர்ப்பாளர்களுக்குப் புரியும் என நினைக்கிறேன். எந்தத் தவறுமே செய்யாத அப்பாவிப் பொது மக்கள் 50,60 பேர் வெடிகுண்டுத் தாக்குதலுக்குப் பலியாகிறார்களே! அவர்களுக்கு என்ன பதில் சொல்வீர்கள். அந்த 50,60 பேர்களின் சாவுக்குக் காரணமானவரை தூக்கிட்டால் என்ன தவறு இருக்கிறது. அந்த 50,60 பேர்களோடு தூக்கிலிடும் ஒன்றிரண்டு பேர்களையும் சேர்த்து பலியின் எண்ணிக்கை 51-52, 61-62 என்று வைத்துக்கொள்ள வேண்டியதுதான். சரி கடைசியாக ஒன்று கேட்கிறேன்: தூக்குத் தண்டனைக் கைதியை தூக்கிலிடாமல் வைத்துக்கொண்டிருந்தால் மட்டும் 1000 ஆண்டுகளா வாழ்ந்துவிடப்போகிறான்?. மனிதாபிமானம் என்று பேசுபவர்களிடம் ஒன்று கேட்கிறேன்: தூக்குத் தண்டனைக் கைதியை தூக்கிடாமல் இருக்க அவன் என்ன மருத்துவனா? சிறையிலேயே மருத்துவம் பார்த்து பலரின் உயிரைக் காப்பாற்றுவான் என்று விட்டுவிட. அறிவியல் கண்டுபிடிப்பாளனா? எதாவது தாய்நாட்டுக்குப் புதிய கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்துத் தருவான் என்ற நோக்கத்திற்காக உயிரோடு வைத்திருக்க? (உடனே மருத்துவனும் விஞ்ஞனியும் பெருந்தவறுகள் செய்யலாமா என்று கேட்டுத்தொலைக்காதீர்கள்) எனவே உண்மையாகத் தவறு செய்தவரைத் தூக்கிலிடத்தான் வேண்டும். (தூக்குத் தண்டனைக் கைதி தப்பிக்கப்பார்தான் என்று எண்கவுன்டர் செய்தால் எண்கவுன்டர் என்ற போலி நடவடிக்கையை ஏற்றுக்கொள்வீர்களா?) தூக்குத் தண்டனையும் எண்கவுன்டரும் ஒன்றுதான். இந்தியாவில் பெருகி வரும் பெருங் குற்றங்களைத் தடுக்க தூக்குத் தண்டனை தேவையானதுதான்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: வீரப்பன் கூட்டாளிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum