"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அறி
by Ramalingam Yesterday at 9:22 am

» அனுமனுக்கு மறுக்கப்பட்ட அலவன்சு...!
by அ.இராமநாதன் Mon Jan 23, 2017 9:00 pm

» கல்யாணிக்கு கல்யாணம்
by அ.இராமநாதன் Mon Jan 23, 2017 9:00 pm

» ஐயோ....கம்ப்யூட்டர் இப்போ மெஸ்ஸடு அப் ஆயிடுச்சு...!!
by அ.இராமநாதன் Mon Jan 23, 2017 8:59 pm

» நமக்கு எதுக்கு ஊர் வம்பு...!!
by அ.இராமநாதன் Mon Jan 23, 2017 8:58 pm

» வேண்டாம் மாட்டிக்குவோம்னு சொன்னா ஏட்டய்யா!’’
by அ.இராமநாதன் Mon Jan 23, 2017 8:57 pm

» ஓட்டல் சாப்பாடு ஜெயில் சாப்பாடு மாதிரி டேஸ்டா இருக்காமா..?
by அ.இராமநாதன் Mon Jan 23, 2017 8:56 pm

» வாய்க்குள்ள கொசு போயிடுச்சு!
by அ.இராமநாதன் Mon Jan 23, 2017 8:55 pm

» அடேங்ங்ங்ங்ங்ங்ங்கப்பா! எவ்வளவு அதிகாரங்கள்…..?
by அ.இராமநாதன் Mon Jan 23, 2017 8:54 pm

» நில் ,கவனி, வண்டியை எடுத்துச் செல்...!!
by அ.இராமநாதன் Mon Jan 23, 2017 8:53 pm

» சிங்கம் 3-க்கு விளம்பரம் தேடியதாக விமரிசனம் செய்த பீட்டாவுக்கு சூர்யா நோட்டீஸ்!
by அ.இராமநாதன் Mon Jan 23, 2017 8:33 pm

» ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி
by அ.இராமநாதன் Mon Jan 23, 2017 8:31 pm

» குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ நெய் ரூ.25-க்கும், கிலோ சர்க்கரை ரூ.10-க்கும் வழங்கப்படும்
by அ.இராமநாதன் Mon Jan 23, 2017 8:30 pm

» தபால் வாக்குகளை மின்னணு முறையில் அனுப்பும் திட்டம் கோவாவில் அறிமுகம்
by அ.இராமநாதன் Mon Jan 23, 2017 8:30 pm

» சர்வம் ஜல்லிக்கட்டு மயம்...
by அ.இராமநாதன் Mon Jan 23, 2017 8:29 pm

» "போராட்டத்தை கைவிடுகிறோம்'
by அ.இராமநாதன் Mon Jan 23, 2017 8:28 pm

» ஜல்லிக்கட்டு தடைக்காக மேனகா காந்தி உச்ச நீதிமன்றத்தை நாடவில்லை: நிர்மலா சீதாராமன்
by அ.இராமநாதன் Mon Jan 23, 2017 8:27 pm

» பிஹாரில் 34 பேரை கொலை செய்த 4 பேருக்கு மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு: குடியரசுத் தலைவர் பிரணாப் உத்தரவு
by அ.இராமநாதன் Mon Jan 23, 2017 8:26 pm

» ’கோக், பெப்சிகளை விற்க மாட்டோம்’ - ஜல்லிக்கட்டு போராட்டத்தின் அடுத்த அதிரடி
by அ.இராமநாதன் Mon Jan 23, 2017 8:26 pm

» போராட்டத்தால் ஜல்லிக்கட்டு தடை நீங்குமென்றால் கம்பாலா தடையையும் நீக்க முடியும்: கர்நாடகா!
by அ.இராமநாதன் Mon Jan 23, 2017 8:23 pm

» தடியடி: ஐகோர்ட் விசாரணை
by அ.இராமநாதன் Mon Jan 23, 2017 8:22 pm

» உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு "கேவியட்' மனு
by அ.இராமநாதன் Mon Jan 23, 2017 8:21 pm

» பள்ளி, கல்லூரிகள் இன்றுமுதல் வழக்கம்போல் இயங்கும்
by அ.இராமநாதன் Mon Jan 23, 2017 8:21 pm

» தமிழக சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டுக்கான சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றம்
by அ.இராமநாதன் Mon Jan 23, 2017 8:19 pm

» ஜல்லிக்கட்டுக்கு பேரவையில் சட்டம்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி
by அ.இராமநாதன் Mon Jan 23, 2017 8:19 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sat Jan 21, 2017 9:19 pm

» பீட்டாவுக்கு தெரியுமா ...?
by கவிப்புயல் இனியவன் Sat Jan 21, 2017 2:25 pm

» ஆத்தாடி – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Jan 21, 2017 12:25 pm

» அடடே – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Jan 21, 2017 12:25 pm

» அடடடா – ஒரு கதை
by அ.இராமநாதன் Sat Jan 21, 2017 12:24 pm

» அப்படியா – ஒரு பக்கதை
by அ.இராமநாதன் Sat Jan 21, 2017 12:23 pm

» படித்ததில் பிடித்த பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Jan 21, 2017 12:21 pm

» குரங்கு – சிறுகதை
by அ.இராமநாதன் Sat Jan 21, 2017 12:19 pm

» எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், - விடுகதைகள்
by அ.இராமநாதன் Fri Jan 20, 2017 10:09 pm

» பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன? - விடுகதைகள்
by அ.இராமநாதன் Fri Jan 20, 2017 10:08 pm

» தொட்டுப் பார்க்கலாம் எட்டிப் பார்க்கமுடியாது - விடுகதைகள்
by அ.இராமநாதன் Fri Jan 20, 2017 10:07 pm

» விடுகதைகள்...
by அ.இராமநாதன் Fri Jan 20, 2017 10:06 pm

» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிதாயினி கஸ்தூரி ராமராஜ் !
by eraeravi Fri Jan 20, 2017 9:17 pm

» இனிக்கும் ​இன்பகாதல் கவிதை
by arony Fri Jan 20, 2017 12:50 am

» பாட்டு என்னை படைப்பாளியா மாத்திச்சி! ‘465’ டைரக்டர் பரவசம்
by arony Fri Jan 20, 2017 12:48 am

» புல் தானாகவே வளர்கிறது - ஓஷோ.
by அ.இராமநாதன் Thu Jan 19, 2017 11:48 pm

» பாம்பனில் 2ம் எண் கூண்டு
by அ.இராமநாதன் Thu Jan 19, 2017 8:48 pm

» போதும் உங்கள் அடக்குமுறை ......
by கவிப்புயல் இனியவன் Wed Jan 18, 2017 10:13 pm

» உத்திர பிரதேச தேர்தல் -
by அ.இராமநாதன் Tue Jan 17, 2017 10:11 pm

» தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை: பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை
by அ.இராமநாதன் Tue Jan 17, 2017 10:09 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உருவி எடுக்கப்பட்ட கனவு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா சென்ராயன் !செல் 994298123 நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

View previous topic View next topic Go down

உருவி எடுக்கப்பட்ட கனவு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா சென்ராயன் !செல் 994298123 நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi on Sat Feb 16, 2013 9:57 am

உருவி எடுக்கப்பட்ட கனவு !
நூல் ஆசிரியர் கவிஞர் இரா சென்ராயன் !செல் 994298123
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

அமுதமதி வெளியீடு ,65.மேலபச்சேரி ,திருப்பரங்குன்றம் .மதுரை .625005 விலை ரூபாய் .செல் 30.8608341428.

நூல் ஆசிரியர் கவிஞர் இரா செராயன் திருப்பரங்குன்றத்தில் வாழும் கட்டிடப்
பொறியாளர் மட்டுமல்ல புதுக்கவிதைக் கட்டுவதிலும் வல்லவர் என்பதை
மெய்ப்பிக்கும் நூல் இது .திருப்பரங்குன்றத்து கவிதைக் குன்று புலவர்
தமிழ்க்கூத்தனார் கவிதைப் பட்டறையில்
வளர்ந்தவர் .திருப்பரங்குன்றத்து 16 கால் மண்டபத்தில் நடக்கும்
கவியரங்கங்களில் என்னோடு கவிதை பாடும் இனிய நண்பர் .
எழுத்தாளர் ,நல்ல
சிந்தனையாளர் ,இயக்குனர் பாரதி கிருஷ்ணா குமார் அணிந்துரை
அழகுரையாக உள்ளது .
மனிதனுக்கும் தேனீக்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்தும் புதுக் கவிதை .இதோ !
பிரியமான தேனீக்கள்
இரவிலும் சிறகசைக்கின்றன
நானோ
ஒரு துளி
வியர்வை பொறுக்காமல்
விசிறிக் கொண்டு இருக்கிறேன் !

திருப்பரங்குன்றத்தில் எந்த ஒரு கூட்டம் என்றாலும் இலக்கியக் கூட்டம்
என்றாலும்,கட்சிக் கூட்டம் என்றாலும் மக்கள் கூடுமிடம் 16 கால் மண்டபம்
.இந்த நூலின் தலைப்புக்கான கவிதையும் இதுதான் .

16 கால் மண்டபம் !

எங்கோ இருந்த ஒரு மலையின்
ஆழ்ந்த உறக்கத்திலிருந்து
உருவி எடுக்க்கப்பட்ட
பெரும் கனவு
நிற்கிறது 16 கால்களுடன் !
யாத்திரை நடந்திருக்கிறது
அரசியல் கூட்டங்களின் மகவரியாக
பலரது வீட்டின் முகவரியாகவும் !

கவிதைக்கு கற்பனை அழகு .கவிஞனுக்கு சிந்தனை அழகு. நூல் ஆசிரியர் கவிஞர் இரா சென்ராயன்வித்தியாசமாக சிந்தித்து உள்ளார் .

வரம் !
சீவப்பட்ட பென்சிலில்
மனதின் காயங்களை
எழுதுகிறோம் !
வசதியாக !
பென்சிலின் காயங்களை
மறந்துவிட்டு !

வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலார் போல சீவிய பென்சிலுக்காக வாடி உள்ளார் .

பேச்சிக்கா கவிதையில் கிராமிய மண் வாசனை சொற்கள் மண் மணம் வீசுகின்றன
.நூல் ஆசிரியர் கவிஞர் இரா சென்ராயன் வாழ்வில் சந்தித்த நிகழ்வுகளை
,மனிதர்களை, இயற்கையை , மண்ணை மரத்தை உற்று நோக்கி கவிதை வடித்துள்ளார் .
இயற்கையை நூல் படிக்கும் வாசகர்களுக்கு காட்சிப் படுத்தி வெற்றி பெறுகின்றார் .

இட்லி வெந்து விட்டதா என்பதை பார்க்க அம்மா விரல் விட்டு பார்க்கும்
பழக்கத்தை கவனித்து ஒரு கவிதை
இதோ ! இந்தக் கவிதை படிக்கும் ஒவ்வொரு
வாசகருக்கும் அவரது அம்மாவையும் , அவர் சாப்பிட்ட இட்லியையும் நினைவூட்டும் .

ஆவி பறக்க
ஈடு ஈடாய் அவித்துத் தட்டிய
இட்லிகள் சிலவற்றில்
அம்மாவின் ஆட்காட்டி விரல் இட்ட
பள்ளங்கள் சூடு தணிந்து
ஆறியிருந்த பின்னும்
பள்ளங்கள் முழுக்க
நிரம்பியிருக்கும்
விரலைச் சுட்ட வேக்காடு !

எத்தனையோ இசைக் கருவிகள் உண்டு .ஆனால் பறை ஒலிக்கு ஈடான ஓசையை எந்த இசைக்
கருவிகளும் எழுப்புவதில்லை .தமிழ் மொழி தெரியாத அயல் நாட்டவர்கள் கூட மெய் மறந்து பறை ஒலி ரசிக்கின்றனர் .பறை பற்றி ஒரு கவிதை .

பறை !
இசைவானின் உறை !
அடிக்க அடிக்க
காற்றின் கரத்தில்
சுழல்கிறது வாள் !
அதிகாரத்தின் மூச்சுக்காற்று திணறுகிறது !
அதிர்கிறது கோட்டை !

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல ஒரே கவிதையில் உயர்ந்த தமிழையும் , உயர்ந்த பனை மரத்தையும் பாராட்டி உள்ளார் .பாராட்டுக்கள் .

சங்க இலக்கியத்துக்கு
ஓலைகள்
தந்த செருக்கு
நிமிர்ந்தே வளர்கிறது
புவியில் பனை !

.நிலவைப் பாடாத கவிஞர் இல்லை .நிலவைப் பாடாதவர் கவிஞர் இல்லை என்பது உண்மை .
கவிஞர் இரா சென்ராயனும் நிலவைப் பாடி உள்ளார் .

நிலா ஏழு !
தேய்வது வளர்வது
வளர்வது தேய்வது
காணாமல் போவது
வாழ்வின் கவிதை இது !

இன்பம் , துன்பம் இரண்டும் கலந்ததுதான் வாழ்க்கை .இறுதியில் மறைந்து
போவதுதான் வாழ்க்கை என்ற வாழ்வியல் கருத்தை நிலவின் மூலம் விளக்கி உள்ளார். பாராட்டுக்கள் .

நண்பர்களின் உள்ளத்தை படம் பிடித்துக் காட்டும் கவிதை நுட்பமான வரிகள் .

உழைப்பின் திரு !

நண்பர்களோடு வசிக்கிற
குறுகிய அறையின் சுவர்கள்
வருகைகள் குறித்த கவலைகளற்று
அகன்று கொடுக்கும் !

உண்மை பணம் இருப்பவர்களிடம் மனம் இருப்பதில்லை மாளிகையில் வசிப்பவர்களுக்கு
நண்பர்களுக்கு இடம் அளிக்கும் குணம் இருபதில்லை .ஆனால் ஏழைகள் குடிசையாக
இருந்தாலும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள் .வறுமையிலும் செம்மையாக
வாழும் நண்பர்களை பாராட்டி உள்ளார் .

விபத்தில் இருந்து தப்பியவர்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் நடந்த நிகழ்வை நினைத்துப் பார்க்கும் கவிதை .

தப்பிய வாசம் !

23 தையல்களால் நிறுத்தப்பட்டது
தலையில் பீறிட்ட ரத்தம்
ஒரு கணம் தப்பியதால் தப்பியது
ரோசாப் பூ மாலைகளின் வாசம் !

வலிகள் மிகுந்ததுதான் வாழ்க்கை ! என்பதை மெய்ப்பிக்கும் கவிதை ஒன்று .

என் மீது எறியப்பட்ட துரோகத்தின் ஈட்டிகளை
பிடுங்கிக் கொண்டே இருக்கிறேன் .
தீர்ந்தபாடில்லை ! இன்னும் !
காண்டா விளக்கு போல்தான் வாழ்வும் வெளிச்சத்தை விட
கரிப்புகையே அதிகம் !

புதுக்கவிதை என்ற பெயரில் புரியாத இருண்மை கவிதை எழுதி வரும் கூட்டம் உள்ளது
.ஆனால் இவர் கவிதை எளிமையாகவும் , இனிமையாகவும் எல்லோருக்கும் புரியும் படி உள்ளது
.பாராட்டுக்கள் .

--

.

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2049
Points : 4583
Join date : 18/06/2010

Back to top Go down

Re: உருவி எடுக்கப்பட்ட கனவு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா சென்ராயன் !செல் 994298123 நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Mar 12, 2013 2:40 pm

தலைப்பே வித்தியாசம்... பாராட்டுகள் தங்களுக்கும்... மிக்க மகிழ்ச்சி

_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=

கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 34
Location : வேலூர்

Back to top Go down

Re: உருவி எடுக்கப்பட்ட கனவு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா சென்ராயன் !செல் 994298123 நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi on Tue Mar 12, 2013 8:01 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2049
Points : 4583
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum