"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இந்திரா கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:59 pm

» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்
by அ.இராமநாதன் Yesterday at 10:56 pm

» பட்ட காலிலேயே படும்....
by அ.இராமநாதன் Yesterday at 10:49 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:46 pm

» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....
by அ.இராமநாதன் Yesterday at 10:41 pm

» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
by அ.இராமநாதன் Yesterday at 7:22 pm

» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
by அ.இராமநாதன் Yesterday at 7:21 pm

» எளிய மருத்துவக் குறிப்புகள்
by அ.இராமநாதன் Yesterday at 7:19 pm

» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி!
by அ.இராமநாதன் Yesterday at 7:10 pm

» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது
by அ.இராமநாதன் Yesterday at 2:27 pm

» பலவித முருகன் உருவங்கள்
by அ.இராமநாதன் Yesterday at 2:23 pm

» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்!
by அ.இராமநாதன் Yesterday at 10:45 am

» பி.வி. சிந்துவும் இறக்கையும்!
by அ.இராமநாதன் Yesterday at 10:36 am

» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்
by அ.இராமநாதன் Yesterday at 10:34 am

» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்?: அமெரிக்கா சந்தேகம்
by அ.இராமநாதன் Yesterday at 10:31 am

» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்
by அ.இராமநாதன் Yesterday at 10:22 am

» அரேபியாவின் பங்களிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 8:33 am

» உலகின் முதல் உறவு
by அ.இராமநாதன் Yesterday at 8:31 am

» உலக தைராய்டு தினம்
by அ.இராமநாதன் Yesterday at 8:28 am

» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை
by அ.இராமநாதன் Yesterday at 8:24 am

» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை
by அ.இராமநாதன் Yesterday at 8:21 am

» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
by அ.இராமநாதன் Yesterday at 8:20 am

» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 8:16 am

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Thu May 24, 2018 8:23 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu May 24, 2018 3:49 pm

» முக்கியமான மூன்று விஷயங்கள்
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:49 pm

» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:43 pm

» உரைவேந்தர் ஔவை துரைசாமி! நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed May 23, 2018 10:26 pm

» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு
by அ.இராமநாதன் Wed May 23, 2018 8:35 am

» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை
by அ.இராமநாதன் Wed May 23, 2018 8:29 am

» ஒரே நாளில் 11 படங்களா?: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:52 pm

» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:50 pm

» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:49 pm

» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:47 pm

» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 6:52 pm

» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி
by அ.இராமநாதன் Tue May 22, 2018 3:48 pm

» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:45 am

» தியானம் செய்தால் நல்ல சிந்தனை
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:05 am

» 24 மணி நேரத்தில் மழை வரும்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:01 am

» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:59 am

» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:58 am

» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:56 am

» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:58 pm

» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:55 pm

» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:52 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்

Post by aarul on Tue Feb 19, 2013 9:20 am

First topic message reminder :

புதிய
ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்( தேசியத்தலைவரின் 12 வயது
கடைசி மகன்)கையில் சிற்றுன்டியோடு சித்திரவதையை எதிர் நோக்கிய பயத்தோடு...


[You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]

தம்பி... ஐக்கிய நாதாரிகளும்,அரசியல் நாதாரிகளும்,நாங்களும் சேர்ந்தே உன்னை வஞ்சித்தோம்.
இயன்றவரை உனக்காய்,நமகாய்,உன்னைப்போல ஏதுமறியாமல் எங்கள் இனத்தில்
பிறந்ததுக்காய் இளமையில் வித்தாய் போனவர்களுக்காய் முடிந்தவரை
போராடுவோம்... :'

முள்ளிவாய்க்காலின் இறுதிநேரக் கொடூரக்
காட்சிகளால் உலகமே அதிர்ச்சியுற்றிருக்கையில், இப்போது கிடைத்திருப்பவை
இதயத்தை ஒருகணம் நிறுத்தி வைக்கக் கூடிய அதி கொடூரங்கள் நிறைந்த காட்சிகள்
என The Independent பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஒரு சந்தைப்
பகுதியில் தொலைந்து போன சிறு குழந்தை போல் ஒரு மூலையில் அந்தச் சிறுவன்
இருத்தி வைக்கப்பட்டுள்ளான். அவனுக்கு ஏதோ சிற்றுண்டி கொறிக்க
வழங்கப்பட்டிருக்கின்றது. அவன் நிமிர்ந்து பார்க்கிறான். யாராவது தெரிந்த
முகங்கள் தென்படாதா என்ற ஓர் ஏக்கம் அவன் விழிகளில்.அந்தச்
சிறுவன் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்
அவர்களின் புதல்வன் பாலச்சந்திரன். 12 வயதுடைய சிறுவன். புதிய ஆதாரப்
புகைப்படங்கள் ஒரு நெஞ்சை உருக்கும் கதையைச் சொல்கின்றது.

இந்தச்
சிறுவன் போரிலோ அல்லது குறுக்குச் சூடுகளிலோ கொல்லப்படவில்லை. சிறீலங்கா
இராணுவத்தால் பிடிக்கப்பட்டுப் பதுங்கு குழியினுள் சிலமணி நேரங்கள்
இராணுவக் காவலுடன் வைத்திருக்கப்பட்டு அதன் பின்னர் கொடூரமாகச் சுட்டுக்
கொல்லப்பட்டுள்ளார். அதன் பின்னர் மீண்டும் இவரது உடலம் புகைப்படம்
எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் கிடைக்கப்பெற்ற போரின் பின்னரான
கொடூரப் படுகொலைகள் பற்றிய காணொளியில் பாலச்சந்திரனின் உடலம் காட்டப்படது.
ஆனால் இப்போது சிறீலங்கா இராணுவத்தினர் தமது வெற்றியின் கொண்டாட்ட விருதாக
இந்தச் சிறுவனைச் சுட்டுக் கொண்டிருப்பது கண்கூடாக நிரூபணம் ஆகியுள்ளது.

இப்பொழுது
கிடைத்திருக்கும் ஆதாரங்கள் பாலச்சந்திரன் உயிருடன் பிடிக்கப்பட்டுப்
பின்னர் படுகொலை செய்யப்பட்டிருப்பது சந்தேகங்கள் எதுவுமின்றி
நிரூபிக்கின்றது. இது மிகவும் இராணுவத்தினரின் விருப்பத்தின் பேரில்
இராணுவத்தாலோ அல்லது அவர்களுடன் இணைந்து படுகொலைகள் புரியும் துணைக்
குழுக்களாலோ மிகவும் திட்டமிட்டு நடாத்தப்பட்ட படுகொலையாகும். அதுவும் ஒரு
சிறுவன் மீது.

கிடைக்கப்பட்ட நான்கு டிஜிட்டல் படங்களும் ஒரேநாள்
ஒரே புகைப்படக் கருவி மூலம் எடுக்பட்டிருப்பதை புகைப்பட ஆதாரங்களை
அராய்ந்தறியும் நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர். இதில் இரண்டு படங்கள்
பாலச்சந்திரன் உயிருடன் இருப்பதையும் இரண்டு படங்கள் அவர்
கொல்லப்பட்டிருப்பதையும் பதிவு செய்துள்ளது.

கடந்த வருடம்
கிடைக்கப் பெற்ற காணொளித் தடயங்களும் இந்தப் படங்களையும் ஆராய்ந்த புகழ்
பெற்ற தடயவியல் நிபுணர் Professor Derrick Pounder உடலத்தின் குண்டுபட்ட
இடத்தின் நிறத்தையும் அது சிதைந்துள்ள விதத்தையும் வைத்து பாலச்சந்திரன்
மிகவும் அருகில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்பதனை
நிரூபித்துள்ளார்.

துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த திசையையும்
குண்டு துளைத்த உடலின் துவாரங்களையும் வைத்து முதலாவது குண்டு
சுடப்பட்டவுடன் பாச்சந்திரன் கீழே விழுந்துள்ளார் என்றும் அதன் பின்னர்
அவர் மேலும் நான்கு தடவை சுடப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தள்ளார்.மேலும்
அவர் இந்தப் படங்கள் எந்த விதமான மாற்ங்களுங்கோ ஏமாற்றுகளுக்கோ உட்படாதவை
என்றும் படங்கள் நூறு சதவீதம் உண்மையானவை என்றும் தெரிவித்தள்ளார். அதன்
பின்னர் எடுக்கப்பட்டுள்ள காணொளியும் ஆய்வுக்கு உள்ளாக்கப்பட்டு உறுதி
செய்யப்பட்டுள்ளது.

மேலும் Callum Macrae கூறுகையில் இதுவரை இலங்கை
அரசுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டதாக எந்தவொரு ஆதாரமும்
வழங்கப்படவில்லை என கூறினார்.

இலங்கை அரசு ஏற்கனவே கூறுகையில்
போரின் போது அப்பாவி மக்கள் யாரும் கொல்லப்படவில்லை என்று கூறியுள்ளது.
ஆனால் மனித உரிமை செயளாலராக பான் கீமுன் இருந்த போது அவர் அனுப்பிய
குழுவானது மேற்கொண்ட ஆய்வறிக்கையில் 40,000 க்கும் அதிகமான அப்பாவி மக்கள்
கொல்லப்பட்டுள்ளனர் என அறிவித்தது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள
இப்புகைப்படங்களால், டேவிட் கேமரூன் வரும் நவம்பர் மாதம் பங்கு பெறுவதாக
உள்ள உலகப் பொது மாநாட்டில் பங்கு கொள்வதில் பெரும் சிக்கலாக அமையும்.
அனால் தற்போது இந்தியா வந்துள்ள கேமரூன் இம்மாநாட்டில் பங்கு பெறுவது
குறித்து இன்னும் முடிவு ஏதும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

ஆனாலும் சில சமூக அமைப்புகளும், வெளிநாட்டு அமைப்புகளும் இம் மாநாட்டில் பங்கு பெறக்கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.

இதில்
பாலச்ந்திரனின் உடலத்தின் அருகில் இராணுவத்தினரின் நடமாட்டம்
அவதானிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மகிந்த இராஜபக்ச அரசு இன்னமும் விடுதலைப்
புலிகளின் போர்க்குற்றம் பற்றியேதான் பேசிக் கொண்டிருக்கப்போகின்றது என தெ
இண்டிபெண்டண்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

aarul
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 17
Points : 25
Join date : 28/06/2010
Age : 38
Location : erode

Back to top Go down


Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 19, 2013 6:34 pm

Guru - batam,இந்தோனேசியா
19-பிப்-201311:01:57 IST Report Abuse
இது இல்லங்கை ராணுவத்துக்கு அவமானம், 14 வயது சிறுவனை சிறைபிடித்து பின்பு சுட்டு கொள்வதா... கேவலம்

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 19, 2013 6:38 pm

(3ம் இணைப்பு)

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் மகன் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தவேளை, அவரை ஒரு பகுதுங்கு குழிக்கு ஓராமாக அமரச்சொல்லியுள்ளது இராணுவம். பாலச்சந்திரனுக்கு பிஸ்கட் பக்கட் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதனை அவர் உண்ணும்போது, அவர் பிறிதொரு இடத்தை பார்த்துக்கொண்டு இருப்பதை நீங்கள் புகைப்படத்தில் காணலாம். குறிப்பிட்ட அவ்விடத்தில் விடுதலைப் புலிகளின் பிற முக்கியஸ்தர்கள் சிலரையும் இலங்கை இராணுவம் விசாரித்துக்கொண்டு இருந்திருக்கிறது. பின்னர் அவர்கள் அனைவரையும் ஒன்றன் பின் ஒன்றாகச் சுட்டுள்ள இலங்கை இராணுவத்தின் 53 படைப்பிரிவினர். இறுதியில் பாலச்சந்திரன் பக்கம் திரும்பியுள்ளார்கள்.

பாலச்சந்திரனின் முதுகில் இராணுவத்தினர் சுடவில்லை. மாறாக அவரின் முன் நெஞ்சில் சுட்டுள்ளார்கள். அதுவும் இடதுபுறமாக மிகவும் நிதானத்துடன் சுட்டுள்ளார்கள் இராணுவத்தினர். இடது புறமாக(இதயம் இருக்கும் பக்கம்) 2 சூடுகளும், மேலும் வலது புறமாக 2 சூடும், அவர் உடலில் தெளிவாகக் காணப்படுகிறது. தன்னை இலங்கை இராணுவம் கொலைசெய்யப் போகிறது என்ற விடையம், பாலச்சந்திரணுக்கு இறுதியாகவே தெரிந்திருக்கும் என நம்பப்படுகிறது. பிஸ்கட்டை சாப்பிடக் கொடுத்துவிட்டு பின்னர் ஈவு இரக்கம் இன்றி சுட்டுக்கொன்றுள்ளார்கள்.

இராணுவத்திடம் சரணடைந்த பாலச்சந்திரனை ஏன் அந்த இடத்திலேயே சுடவில்லை ? அவர் சரணடைந்து சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்தே கொல்லப்பட்டிருக்கலாம் என்று, வீடியோவை ஆதாரம் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது. பாலச்சந்திரனை தமது பிடியில் வைத்திருந்த இராணுவத்தினர், கொழும்பில் உள்ள தமது தலைமையோடு தொடர்புகளை மேற்கொண்டுள்ளார்கள். அங்கிருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவின் பெயரிலேயே பாலச்சந்திரன் கொல்லப்பட்டிருக்கிறார். எனவே அதிபர் மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலர் கோட்டபாய ராஜபக்ஷ, மற்றும் இராணுவத்தளபதி ஆகியோரே இக் கொலையின் சூத்திரதாரிகள் என்பது புலனாகிறது.

பின் குறிப்பு: இலங்கையில் இருந்து தப்பிவந்த 2 இராணுவ உயரதிகாரிகளிடம், பாலச்சந்திரன் கொலை தொடர்பாக கேள்விகளைக் கேட்டுள்ளது சனல் 4 தொலைக்காட்ச்சி. அவர்கள் தெரிவித்த கருத்துக்களுக்கு அமைவாக பாலச்சந்திரன் மற்றும் அவருடன் சென்ற 5 மெய்பாதுகாப்பாளர்கள் அனைவரையும் இராணுவம் கொலைசெய்து, பின்னர் எரித்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்கள் அவர்கள்.


(2ம் இணைப்பு)

விடுதலைப் புலிகளின் தலைவர், பிரபாகரன் அவர்களின் கடைசி மகன் இராணுவத்தால் படுகொலைசெய்யப்பட்டார் என்ற செய்திகள் ஏற்கனவே வெளியாகியிருந்தது. ஆனால் அது தலைவரின் மகன் அல்ல என்று முதலில் இராணுவம் தெரிவித்தது. பின்னர் அது தலைவரின் மகன் தான் என்றும் இருப்பினும் சண்டை நடந்தவேளை, இடையே மாட்டி அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கோத்தபாய கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் 5 மெய்பாதுகாப்பாளர்களோடு, இலங்கை இராணுவத்திடம் சரணடைந்துள்ளார் தலைவரின் மகன் பாலச்சந்திரன். அவரை இலங்கை இராணுவமானது ஒரு இடத்தில் இருத்திவைத்துள்ள காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. பிறிதொரு இடத்தில் நடக்கும், விசாரணைய பாலச்சந்திரன் உற்றுப்பார்த்துக்கொண்டு இருக்கும் காட்சிகள் தற்போது அதிர்வு இணையத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

இவருடன் வந்த நபர்களை சுட்டு படுகொலைசெய்த இராணுவம், மேலும் சில முக்கிய நபர்களையும் அவர்களின் மனைவிமாரையும் சுட்டுக்கொன்றிருக்கிறார்கள். இறுதியாக பலச்சந்திரனையும் அவர்கள் ஈவு இரக்கம் இன்றி சுட்டுக்கொன்றுள்ளார்கள். பாலச்சந்திரன் சரணடைந்து , உயிரோடு இராணுவத்தின் பிடியில் உள்ளதை அதிர்வு இணையமானது தற்போது வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மேலதிகச் செய்திகள் விரைவில் வெளியாக உள்ளது. பாலச்சந்திரன் மற்றும் ஏனைய முக்கியஸ்தர்களை இலங்கை இராணுவம் சுட்டுக் கொன்ற வீடியோக் காட்சிகளும் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 19, 2013 11:12 pm

[You must be registered and logged in to see this image.]

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்

Post by கலைநிலா on Wed Feb 20, 2013 10:30 am

மனதை உருக்கும் செய்திகள் கண்டு மனம் வேதனை செய்கிறது...

மேலும் தமிழ் ஈழம் பற்றி பேசும் போது அனைவரும்...யென் முன்னாள் முதல்வரை குறை சொல்லி குற்றம் சாட்டி கூண்டில் ஏற்றுகிறார்கள்?

ஏனோ தெரிய வில்லை...தடை சொன்ன இந்நாள் முதல்வர் பற்றி வாய் திறக்க மறுக்கிறார்கள்...ஆனால்...

அவர்யவர் அரசியல் சூழ்நிலை யாக இருக்கலாம்...

2000 ம் ஆண்டுக்கு பின் என்ன நடந்தது ஆதரித்தவர்கள் கூட இல்லை என்றார்கள்...அன்றைய நிலை அரசியல் சூழ்நிலை...

திமுக ஆட்சி கலைக்கப்பட்ட காரணம்..என்ன ஆதரித்ததால் தான் யென்று சொன்னார்கள்...

அதை ஊர்ஜிதம் படுத்தியது போல ராஜீவ் கொல்லப்பட ஆட்சி செய்த திமுக
ஒரே இடத்தில் தான் வெற்றி பெற்றது ...

இணையத்தில் எப்போதும் ஈழம் யென்று வந்தால் குறை சொல்லுவது மட்டும் முன்னாள் முதல்வரை தான்...ஏனோ ? ஆச்சரியம்

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 53
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Feb 20, 2013 5:04 pm

வாசகர்கள் அரசியல்வாதிகளிடம் அதிக நம்பிக்கை வைத்துள்ளதுதான் காரணம் என்று நினைக்கிறேன் நண்பரே.

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்

Post by பார்த்திபன் on Wed Feb 20, 2013 6:42 pm

தினமலரில் கருத்து எழுதியிருக்கும் சிலர் இத்தகைய கொடுமையான புகைப்படத்தைப் பார்த்த பிறகும், புலிகளையே சாடுகிறார்கள் என்றால், இவர்களைவிடக் கேவலமான பிறவிகள் யாருமில்லை. இன்னமும் சொல்லப் போனால், சிங்கள ராணுவத்திற்கும் இவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. புலிகள் சிறுவர்களை கட்டாயப்படுத்தி மனித வெடிகுண்டாக்கினார்கள் என்பதை இவர்கள் நேரில் சென்று பார்த்தார்களா?

தமிழ்ப் போராளிகள் எல்லாம் கொள்கைகளின் பால் ஈர்க்கப்பட்டு வந்தவர்கள்தாம். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருவரும் பழி தீர்ப்பதற்பதற்காக தானே முன்வந்து தற்கொலைப் படையில் சேர்ந்தார்களேயொழிய, யாரும் துப்பாக்கி முனையில் சேர்க்கவில்லை. மனித வெடிகுண்டாக செயல்பட்ட தாணுவும் அமைதிப்படையால் தான் கர்பையும் குடும்பத்தையும் இழந்தவள்தான்.
avatar
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 41
Location : பெங்களூரு

Back to top Go down

Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்

Post by அரசன் on Wed Feb 20, 2013 8:12 pm

பெரும் கொடுமை ... இதிலும் கல் நெஞ்சம் படைத்த கயவர் கூட்டம் கயம
பேச்சை அள்ளி தெளிப்பது தான் கொடுமை

_________________
***************************************************************************
நான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்
பெரு மகிழ்வு அடைகிறேன்....


கரைசேரா அலை...


***************************************************************************
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 28
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Feb 20, 2013 11:07 pm

வாங்க அரசன் அக்கரையாக பதிவுக்கு வந்து சேர்ந்து இருக்கிறீர்கள்!

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: புதிய ஆதாரம்...கொல்லப்படுவதற்கு முன்னர்,பாலசந்திரன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum