"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» முக்கியமான மூன்று விஷயங்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:49 pm

» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..
by அ.இராமநாதன் Yesterday at 10:43 pm

» உரைவேந்தர் ஔவை துரைசாமி! நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 10:26 pm

» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு
by அ.இராமநாதன் Yesterday at 8:35 am

» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை
by அ.இராமநாதன் Yesterday at 8:29 am

» ஒரே நாளில் 11 படங்களா?: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:52 pm

» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:50 pm

» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:49 pm

» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:47 pm

» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 6:52 pm

» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி
by அ.இராமநாதன் Tue May 22, 2018 3:48 pm

» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:45 am

» தியானம் செய்தால் நல்ல சிந்தனை
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:05 am

» 24 மணி நேரத்தில் மழை வரும்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:01 am

» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:59 am

» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:58 am

» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:56 am

» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:58 pm

» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:55 pm

» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:52 pm

» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா?
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:47 pm

» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:44 pm

» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:36 pm

» கடனில் முன்னிலை!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:35 pm

» பளபள பார்பி!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:35 pm

» கடல்கன்னி
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:34 pm

» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:26 pm

» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி?
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:18 pm

» குதிரைகள். - கவிதை
by அ.இராமநாதன் Mon May 21, 2018 6:00 pm

» - கோடும் கோலமும் - கவிதை -
by அ.இராமநாதன் Mon May 21, 2018 2:42 pm

» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு!
by அ.இராமநாதன் Mon May 21, 2018 11:03 am

» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:51 am

» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:36 am

» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:34 am

» கடவுளைப் பூரணமாக நம்பு
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:32 am

» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:30 am

» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்
by அ.இராமநாதன் Mon May 21, 2018 10:29 am

» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது
by அ.இராமநாதன் Sun May 20, 2018 10:25 pm

» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை
by அ.இராமநாதன் Sun May 20, 2018 10:18 pm

» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....!!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 9:42 pm

» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:09 pm

» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்
by அ.இராமநாதன் Sun May 20, 2018 8:08 pm

» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! யார் இட்ட சாபம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun May 20, 2018 1:56 pm

» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்
by அ.இராமநாதன் Sun May 20, 2018 12:52 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun May 20, 2018 12:48 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines “எல்லாப் பறவைகளுக்கும் இறைவன் உணவைக் கொடுத்துள்ளான்; ஆனால், அவற்றின் கூட்டினுள் வைக்கவில்லை”.

Go down

“எல்லாப் பறவைகளுக்கும் இறைவன் உணவைக் கொடுத்துள்ளான்; ஆனால், அவற்றின் கூட்டினுள் வைக்கவில்லை”.

Post by கணபதி on Thu Mar 21, 2013 8:43 pm

பறவைகள் விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை!!

உணவு கூட்டினுள் இல்லை

“எல்லாப் பறவைகளுக்கும் இறைவன் உணவைக் கொடுத்துள்ளான்; ஆனால், அவற்றின் கூட்டினுள் வைக்கவில்லை”. இந்த வரிகள் முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டியவை.

பறவைகளுக்கான உணவு உள்ளது; ஆனால் அவை வசிக்கும் கூட்டினுள் இல்லை. அந்த உணவு இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து, அங்கு சென்று உண்ணவேண்டும், வேறு பறவைகள் முந்திவிட்டால், உணவைத்தேடி வேறு இடம் செல்ல வேண்டும், உள்ளுணர் அறிவு (Intuition) என்ற துணைகொண்டு தம் வாழ்நாளை மிகவும் இயல்பாக, மகிழ்ச்சியாக வாழ்ந்து மறைகின்றன பறவைகள்.

இந்த உள்ளுணர் அறிவு நமக்கு இல்லையா என்ற கேள்வி எழும். உள்ளது. ஆனால், அது சொல்வதைக் கேட்கப் பொறுமையில்லாமல் பழக்கத்தின் காரணமாக நாம் செயல்படுவதால் இன்பமும் துன்பமும் மாறி மாறி வருகின்றன.

கடின உழைப்பு
பட்டினியால் பறவை இறந்ததாக இதுவரை தகவல் இல்லை. இடைவிடா முயற்சி நாம் விரும்புவதைக் கொண்டுவந்து சேர்க்கும் என்பதற்குப் பறவைகள் சிறந்த உதாரணம். உணவுக்காக நம் வீட்டுக்கு வரும் பறவைகள் எந்த அளவு சுறுசுறுப்பாக இயங்குகின்றன என்பது நமக்குத் தெரியும்.

வினாடி நேரம் தாமதித்தாலும், பாதிப்பு வரும் என்பதை நன்கு உணர்ந்து, மிக விரைவாகச் செயல்படுகின்றன பறவைகள். சுறுசுறுப்பு மகிழ்ச்சியைத் தரும்; மகிழ்ச்சி சுறுசுறுப்பைத் தரும். இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தே உள்ளன. சோம்பி இருந்தால் தம் வாழ்க்கையை இழந்து விட நேரும் என்பதை உணர்ந்தே செயல்படுகின்றன.

இத்தகைய சுறுசுறுப்பும் இடைவிடாமுயற்சியும், செயல்களின் மீது ஈடுபாடும் கொண்டு செயல்படுபவர்களிடம் வெற்றித்தேவதை கை குலுக்கும்.
நாம் கற்றுக்கொள்ள வேண்டியது

உடல்நலம்
இந்தப் பிறவியில் நமக்குக் கிடைத்துள்ள மாபெரும் பொக்கிசம் நம் உடல்தான். தினமும் இரவு உறங்கி, மறுநாள் காலை எழும் நாம், அன்றைய பணிகளுக்காக நம் உடலைத் தயார்படுத்துவதைப் பறவைகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி, குளியல், உணவுதேடல், பொழுதுபோக்கு (பாட்டுப்பாடுதல்), எச்சரிக்கை உணர்வுடன் விழிப்புநிலையில் செயல்படுதல் ஆகியன அவை நமக்குக் கூறுபவை. பெரும்பாலான சிறுவர்கட்கு உடற்பயிற்சியின் முக்கியத்துவம் சொல்லித்தரப்படவில்லை. காரணம், அவர்களது பெற்றோருக்கும் தெரியாததுதான். எனவே, சூரிய உதயத்துக்கு முன் எழுவதும் குளித்தபின்பே பணிகளைத் துவக்குவதும், ஏதேனும் உடற்பயிற்சிகள் செய்வதும், சரியான நேரத்தில் சத்தான எளிமையான உணவு உட்கொள்வதும் உடலை நலத்துடன் பராமரிக்கும்.

மனமகிழ்ச்சி
இயற்கையோடு இணைந்து வாழ்வதால் மனமகிழ்ச்சியாகவே பறவைகள் உள்ளன. எவ்வித வறட்சி, வெள்ளம் போன்ற நிலைகளிலும், தனது உள்ளுணர் அறிவால் தேவைப்பட்டால் இடத்தை மாற்றிக்கொண்டு, கிடைத்ததை உண்டு அமைதியாக வாழ்ந்து வருகின்றன.

மற்றபறவைகளோடு ஒப்பிடுவதும், அளவுக்கு அதிகமாக சேமிப்பதும், சோம்பி இருப்பதும் பறவைகளுக்கு என்னவென்று தெரியாது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மகிழ்ச்சியைத் தன் குரல் மூலம் (பாட்டாக) வெளிப்படுத்தி சூழ்நிலையை ரம்மியமாக்குகிறது.

ஒத்தும் உதவியும் வாழ்தல்
தம் சுற்றத்துடன் அன்பாக இருப்பதும், எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க ஆவண செய்வதும் பறவைகளின் உடன் பிறந்த குணங்கள். சுயநலமே இல்லாமல் வாழ்ந்து வருபவை. பாதுகாப்பு உணர்வுடன் கூட்டமாகப் பயணிப்பவை. பறவைகட்கு விரோதி – வலிமை வாய்ந்த பறவைகள், மிருகங்கள் மற்றும் மனிதர்கள் தான்.

வலிய பறவை, எளிய பறவையைத் தாக்குவதும், சில மிருகங்கள் தம் உணவுக்குப் பறவைகளைக் கொல்வதும் இயற்கையின் அமைப்பு. ஆனால், பகுத்தறிவு இருந்தும், விஞ்ஞானத்தில் முன்னேறியும், பிரபஞ்ச பரிணாமத்தை நன்கு உணர்ந்து கொண்ட பின்பும் மனிதன், தன் உணவுக்காகப் பறவைகளைக் கொல்வது, வளர்த்து பின் கொல்வது, மகிழ்ச்சிக்காக, அவைகளைச் சிறைப்படுத்தி வைப்பது மிருக குணங்களின் வெளிப்பாடாகவே உள்ளது.

தனது ஆற்றலை அறியாத காரணத்தால் தான், மனிதன் மிகவும் எளிய பறவைகளைச் சிறைப்படுத்தி (வளர்ப்பது)யும், உணவாக உண்டும் வாழ்கிறான். இதைப் பரிசீலித்து தெளிவு பெறவேண்டும்.

அன்புக்கு நான் அடிமை

அம்மா என்றால் அன்பு. அன்புக்கு பாரபட்சம் கிடையாது. சாதி, மத பேதங்களைக் கடந்தது அன்பு. உலகம் முழுவதுமுள்ள பறவைகளில் ஒவ்வோர் பிரிவும் (உதாரணம் கிளி, புறா, கோழி) ஒரே மாதிரியான சப்தம் (மொழி) மூலம் தம் எண்ணங்களை வெளிப்படுத்தி வாழ்கின்றன. தம் உயிர்காத்தல் என்பதுதான் அவற்றின் மிக முக்கியப் பணி.

ஆடம்பரங்களை என்றுமே விரும்பாத மனநிலையில் வாழ்கின்றன. தன் இனத்தில் ஒன்றுக்கு ஏதேனும் பாதிப்பு என்றால், குழுவாகக் கூடித் தம் அன்பை வெளிப்படுத்தி தேவைகளைச் சமயோசிதமாய் தெரிவித்து, உதவி பெற்று அன்புடன் வாழ்கின்றன.
பிறந்தது முதல் இறக்கும் வரை உழைப்பு, உழைப்பு, ஓயா உழைப்பு தான். உழைப்பையே ஓய்வாக நினைத்துக்கொண்டு விருப்பத்தோடு செயல்பட்டு வருகின்றன. எந்தப் பகுதிக்கு, எந்த நேரம் சென்றால் உணவு கிடைக்கும் என்று தெளிந்து அந்த இடம் செல்வதை என்னவென்று சொல்வது?

சாதாரணப் பறவைகட்கு இவ்வளவு திறமை இருக்கும்போது, நமக்கு இந்தத் திறமைகள் இல்லையா? என யோசியுங்கள். நமக்கு அவைகளை விட ஏராளமான திறமைகள் உள்ளன. அவைகளைத் தெரியவிடாமல் செய்பவை, பொறாமை, பேராசை, ஈகோ (Ego) எனும் ஆணவம்.

எனவே, இவைகளை நீக்குவோம். வானம் பாடிகளாய், இந்த மனித வாழ்க்கையை வாழ்ந்து மகிழ்வோம்.
நன்றி தன்னம்பிக்கை
avatar
கணபதி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1328
Points : 3838
Join date : 01/02/2013
Age : 62
Location : chennai

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum