"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இந்த ஆஸ்பத்திரிக்கா உயிரையே கொடுத்தவங்க...!!
by அ.இராமநாதன் Today at 2:12 am

» நாச்சியார் விமர்சனம்
by அ.இராமநாதன் Yesterday at 11:50 pm

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by அ.இராமநாதன் Yesterday at 11:24 pm

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by அ.இராமநாதன் Yesterday at 11:20 pm

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by அ.இராமநாதன் Yesterday at 11:17 pm

» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
by அ.இராமநாதன் Yesterday at 6:38 pm

» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
by அ.இராமநாதன் Yesterday at 6:37 pm

» பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
by அ.இராமநாதன் Yesterday at 6:36 pm

» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
by அ.இராமநாதன் Yesterday at 6:35 pm

» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Yesterday at 6:33 pm

» மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
by அ.இராமநாதன் Yesterday at 6:32 pm

» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
by அ.இராமநாதன் Yesterday at 6:31 pm

» ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 6:25 pm

» ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
by அ.இராமநாதன் Yesterday at 6:24 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 2:26 pm

» நீரிழிவு நிலை உள்ளவர்களா உங்கள் உணர்திறன் குறைவடையும்
by அ.இராமநாதன் Yesterday at 2:24 pm

» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது
by அ.இராமநாதன் Yesterday at 2:07 pm

» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
by அ.இராமநாதன் Yesterday at 2:06 pm

» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 2:05 pm

» சனீஸ்வரா காப்பாத்து!
by அ.இராமநாதன் Yesterday at 2:02 pm

» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
by அ.இராமநாதன் Yesterday at 2:01 pm

» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
by அ.இராமநாதன் Yesterday at 1:59 pm

» 10 செகண்ட் கதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 11:03 pm

» பொது அறிவு - வினா, விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:50 pm

» படித்ததில் பிடித்தது - பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:40 pm

» உயிர்த்தெழும் கதாபாத்திரங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:25 pm

» முத்தங்களை கக்கிய பொழுதுகள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:21 pm

» கண்கள் பாதிப்பை குறைக்கும் உடற்பயிற்சிகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 3:05 pm

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:58 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டுன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:53 pm

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:44 pm

» தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி நீரை தர வேண்டும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:38 pm

» தாய்ப்பால் கொடுத்த முதல் திருநங்கை அமெரிக்காவில் சாதனை படைத்த மருத்துவர்கள்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:34 pm

» மகன் வாங்கிய காரில் மருமகள் செல்வதா? காரை தீயிட்டு கொளுத்திய தாய்!
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:29 pm

» சென்னையில் கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 2:27 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Fri Feb 16, 2018 2:19 pm

» தமிழ் சிதைந்தால் தமிழினமே சிதைந்து போகும்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Feb 16, 2018 8:42 am

» ஓலமிடும் ஆற்று மணல் ! நூல் ஆசிரியர்கள் : மூத்த எழுத்தாளர் ப. திருமலை, கே.கே.என். ராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Fri Feb 16, 2018 8:35 am

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 15, 2018 11:00 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Thu Feb 15, 2018 10:58 pm

» மனசில் இருப்பதை உடனெ பேசி விடுங்கள்
by அ.இராமநாதன் Thu Feb 15, 2018 10:57 pm

» மனிதர்களைப் போல பூனையும் குறட்டை விடும்...!!
by அ.இராமநாதன் Thu Feb 15, 2018 10:44 pm

» நகைச்சுவை கதம்பம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 15, 2018 10:35 pm

» மணத்தக்காளி சூப்
by அ.இராமநாதன் Thu Feb 15, 2018 10:34 pm

» ரசித்தவை - பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 15, 2018 10:11 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ஒழுக்கம் என்பது உணர்வுள்ள மனிதன் வாழுகின்ற முறை

Go down

ஒழுக்கம் என்பது உணர்வுள்ள மனிதன் வாழுகின்ற முறை

Post by கணபதி on Mon Apr 08, 2013 6:05 pm

ஒழுக்கம் என்றால் என்ன என்பதற்கு ஒவ்வொருவரும் தமது அறிவுக்கெட்டிய வரையில் அவரவர் விளக்கங்களைக் கொடுக்கின்றனர். ஒருவர் திருவள்ளுவர் சொன்னதைச் சொல்வார். இன்னொருவர் கம்பராமாயணம், பாரதம் என்பவற்றில் அவரால் ஒழுக்கம் என்று புரிந்துகொள்ளப்பட்ட விடயத்தைக் கூறுவார். வேறு சிலர் யாரோ ஒருவருடைய சுய சரிதையை உதாரணம் காட்டி அதில் உள்ளது தான் ஒழுக்கம் என்பார். இன்னும் சிலர் மத நூல்களில் சொல்லப் பட்டவற்றை தான் ஒழுக்கம் என்பார்.

இவ்வாறாக அவரவர் எதையெல்லாம் ஒழுக்கம் என்று புரிந்துகொண்டார்களோ அதை எல்லாம் ஒழுக்கம் என்பர். ஒழுக்கம் பற்றி நாம் இதுவரையில் அறிந்து கொண்ட விடயங்களைப் பற்றி சிறிது அலசிப் பார்ப்போம்.

முதலில், ஒரு மனிதனின் வாழ்க்கை எப்போதோ, எவராலோ உருவாக்கப்பட்ட விதிகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டதாக அமைய வேண்டுமா என்பது பற்றிப் பார்ப்போம். மனிதனைத் தவிர ஏனைய உயிரினங்கள் அனைத்தும் இயற்கையின் ஒழுங்குகளை உள்வாங்கி வாழ்க்கையை மகிழ்ச்சியாக நகர்த்தும் போது எமக்கு மட்டும் ஏன் விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும்? இந்த விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் ஓட்டுமொத்த மனித குலத்துக்கும் ஏற்புடையதாக அமைக்கப்பட முடியாமைக்குக் காரணம் என்ன? ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு மரபும் மனித இனத்தைக் கூறு போட்டதைத் தவிர வேறு எதைச் சாதித்திருக்கிறது? அது மட்டுமல்ல. இந்த மதங்களாலும், மரபுகளாலும் நாம் மந்தைகளாக மாறிவிட்டோமே, ஏன்?

நாம் எப்படி மந்தைகளாக்கப்பட்டு விட்டோம் என்பதை ஒரு காட்சியாகப் பார்ப்போம். இந்தக் காட்சியின் பாத்திரங்கள், ஒரு இடையன், ஒரு கைத்தடி, மந்தைக்கூட்டம். இங்கே கால மாற்றத்துக்கு இடமளிக்காத மதக் கோட்பாடுகளையும், மரபுகளையும் சுமந்து திரிபவன் தான் இடையன். மதமும் மரபும் உருவாக்கியுள்ள ஒழுக்க விதிகள் தான் கைத்தடி. இடையனின் வழிகாட்டலை ஆய்வுக்கு இடமின்றி ஏற்றுக்கொள்ளும் கூட்டம் தான் மந்தைக்கூட்டம். இடையனின் தொழில் தனது தேவைக்கு ஏற்ப மந்தைகளை மேய்ப்பதும் பின்னர் பண்ணைக்கு அழைத்துச் செல்வதும் தான். ஏற்கனவே இந்தச் சுழற்சிக்குப் பழக்கப்பட்டுள்ள மந்தைகளை மேய்ப்பது இடையனுக்கு மிகவும் சுலபம். தற்செயலாக, அந்த மந்தைக் கூட்டத்தில் இருக்கும் ஒன்று ஏதோ ஒரு விழிப்புணர்வால் இடையனுடைய செயற்பாட்டில் மாற்றம் வேண்டும் என்று கேட்டாலோ அல்லது ஒரு புதிய பாதையைத் தெரிவு செய்யவேண்டும் என்ற நோக்கில் அந்தக் கூட்டத்தில் இருந்து வேறுபட முயற்சித்தாலோ இடையனால் அதைத் தாங்க முடியாது. தன்னிடமுள்ள கைத்தடியால் அந்த ஒற்றைக்கு ஒரு அடி . அத்துடன் இடையனின் சுழற்சிக்குப் பழகிப் போய் அதுதான் உலகம் என்று தம்மை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் அந்த மந்தைக் கூட்டத்தில் இருக்கும் ஏனையவைகூட ஆத்திரமடைந்து 'இன்னுமொரு அடி போடுங்கள்! இன்னுமொரு அடிபோடுங்கள்!!' என்று இடையனை உற்சாகப்படுத்தும், பாவம், அந்த ஒற்றைதான் என்ன செய்யும்?

மந்தையால் முடியாது. ஆனால் மனிதனால் முடியும்! எப்படி முடியும் என்று கேட்கிறீர்களா? ஒழுக்க விதி என்று சொல்லப்படுகின்ற ஒன்று, ஒரு இனத்தையோ, மதத்தையோ, கலாச்சாரத்தையோ அல்லது ஒரு மரபையோ ஏனையவற்றை விட உயர்ந்தது என்று பறை சாற்றுகிறதோ அதைக் குழி தோண்டிப் புதைத்து விடுங்கள். வேண்டாம்! வேண்டாம்!! குழிதோண்டிப் புதைத்துவிட்டால் பிறிதொரு காலத்தில் புதைபொருள் ஆராய்ச்சிக்குள் அகப்பட்டு மீண்டும் மனிதர்களை மந்தைக் கூட்டங்களாக்கிவிடும். எனவே எரித்துவிடுங்கள். மதங்களும், மரபுகளும், கலாச்சாரங்களும் மனிதன் மனிதனாக வாழவேண்டும் என்பதற்காகத் தரப்பட்டவையே அன்றி மனிதனை மந்தைகளாக்குவதற்கு அல்ல. உண்மையில் ஒரு மனிதன் ஒழுக்கமாக வாழ்வதற்கு உணர்வுள்ள மனிதனாக இருந்தால் போதும். ஏனெனில் ஒழுக்கம் என்பது உணர்வுள்ள மனிதன் வாழுகின்ற முறை. அதாவது உணர்வுள்ள மனிதனின் வாழ்க்கைப் பாணி தான் ஒழுக்கமே அன்றி வேறு எதுவுமேயில்லை.

http://www.kgmaster.com/

avatar
கணபதி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1328
Points : 3838
Join date : 01/02/2013
Age : 62
Location : chennai

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum