"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
by அ.இராமநாதன் Today at 5:17 pm

» விவேக் படத்தில் யோகி பி பாடல்
by அ.இராமநாதன் Today at 3:11 pm

» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
by அ.இராமநாதன் Today at 3:10 pm

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by அ.இராமநாதன் Today at 3:03 pm

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by அ.இராமநாதன் Today at 3:02 pm

» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by அ.இராமநாதன் Today at 3:01 pm

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by அ.இராமநாதன் Today at 2:59 pm

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by அ.இராமநாதன் Today at 2:58 pm

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Today at 3:57 am

» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by அ.இராமநாதன் Today at 3:54 am

» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by அ.இராமநாதன் Today at 3:52 am

» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by அ.இராமநாதன் Today at 3:50 am

» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by அ.இராமநாதன் Today at 3:47 am

» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by அ.இராமநாதன் Today at 3:45 am

» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 8:10 pm

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by அ.இராமநாதன் Yesterday at 7:57 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 7:56 pm

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 7:55 pm

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by அ.இராமநாதன் Yesterday at 7:54 pm

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by அ.இராமநாதன் Yesterday at 7:53 pm

» கோடை டிப்ஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 7:48 pm

» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
by அ.இராமநாதன் Yesterday at 7:45 pm

» ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:37 pm

» இல்லையென ஆகிவிடுமா?
by அ.இராமநாதன் Yesterday at 7:30 pm

» சமூகக் குற்றம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:53 pm

» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:45 am

» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:38 am

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:32 am

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:30 am

» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:08 pm

» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:46 pm

» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:33 pm

» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:31 pm

» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:27 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:23 pm

» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:15 pm

» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:11 pm

» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:09 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:02 pm

» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:57 pm

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:16 pm

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 6:02 pm

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 5:25 pm

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:58 pm

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:57 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines நம்பிக்கையின் பலவீனங்கள்

Go down

நம்பிக்கையின் பலவீனங்கள்

Post by கணபதி on Mon Apr 08, 2013 6:07 pm


நம்பிக்கை (BELIEVE) என்பது வாழ்க்கையின் பலம் என்பது தான் நாம் கற்றதும் கற்றுக்கொண்டிருப்பதும். நம்பிக்கை இருந்தால் அனைத்தையும் சாதிக்கலாம், அனைத்திலும் வெற்றி அடையலாம் என்பது தினம் தினம் பல வழிகளில் பலரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் தகவலாக அமைகின்றது. குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என வாழ்வில் எந்த நிலையில் இருந்தாலும் இந்த நம்பிக்கைதான் வாழ்க்கை என்று போதிக்கப்படுகிறார்கள். இங்கே நான் போதனை என்று கூறுவதற்கான காரணம் இந்த நம்பிக்கை என்பது வார்த்தைப் பரிமாற்றமாக அமைவது தான். ஏனெனில் நம்பிக்கையின் அடித்தளம் தெளிவுபடுத்தப்படாமல் கொடுக்கப்படுவதாகவும் ஏற்றுக்கொள்ளப் படுவதாகவும் இருப்பதுதான் காரணமாக அமைகின்றது.

இந்த நம்பிக்கை என்ற சொல்லைப் பயன்படுத்துபவர்கள் அனைவரும் மற்றவர்களுக்குப் புத்தி சொல்பவர்களாக இருப்பார்கள். தங்களை அறிவு ஜீவிகளாகக் காட்டிக்கொள்வதற்கு இவர்கள் பயன்படுத்தும் சொல்லாயுதம் தான் இந்த நம்பிக்கை எனும் சொல். உன்னை நம்பு, உலகை நம்பு, கடவுளை நம்பு என எல்லாவற்றையும் நம்பு என்ற போதனைகள் எமது மண்டைக்குள் மிக இலகுவாகப் புகுந்து விடுகின்றன. அத்துடன் மிக இறுக்கமாகவும் பதிவாகிவிடுகின்றன.

நம்பிக்கை என்றால் என்ன? அதற்கான வரைவிலக்கணம் என்ன? என்று சொல்பவரிடம் கேட்டால் அதற்கான விளக்கம் கிடைப்பதில்லை. காரணம் , நம்பிக்கை என்பது அதன் தன்மையில் நாம் ஊகித்துக்கொள்ளும் பொருளுக்கு முற்றிலும் மாறான தன்மையைக் கொண்டிருப்பது தான். அதாவது நம்பிக்கை சந்தேகத்தை அடித்தளமாகக் கொண்டுள்ளது என்பது தான். நம்பிக்கையின் அடித்தளம் 'சந்தேகம்'. இதுவே நம்பிக்கையின் ஒரு பலவீனம். ஆச்சரியமாக இருக்கிறதா? ஆச்சரியம் வேண்டாம். இதோ அதற்கான விளக்கம்.

சந்தேகத்தின் அடித்தளம் தெளிவின்மை என்பது நாம் எல்லோரும் அறிந்துள்ள விடயம். ஒன்றின் மீது எமக்கு தெளிவு இல்லாத போது நாம் சந்தேகிக்கின்றோம். உதாரணத்தைப் பார்ப்போம். ஒரு மாலை நேரம். நாம் நடந்து செல்லும் பாதையில் இருக்கும் பொருளின் மீதான ஒளித்தெறிப்பு மிகவும் குறைவான நேரம். பாதையில் ஏறத்தாள ஒன்றரை அடி நீளமான ஒரு பொருள் வளைந்து கிடப்பது தெரிகிறது. ஆனால் அது என்ன என்பது தெளிவாக இல்லை. இந்த நிலையில் உடனடியாக நமக்குத் தோன்றுவது, அது ஒரு கயிறாக இருக்கலாம் அல்லது காய்ந்த மரத்தடியாக இருக்கலாம் அல்லது பாம்பாக இருக்கலாம் அல்லது எதோ ஒன்றாக இருக்கலாம் என்பதுதான். இங்கே 'இருக்கலாம்' என்பது சந்தேகத்தின் வெளிப்பாடு. இதே சம்பவத்தை நம்பிக்கையின் பார்வையில் செலுத்துவோமாயின் இதே இயல்பைக் காணலாம். அதாவது, 'நான் கயிறு என்று நம்புகிறேன்' அல்லது 'காய்ந்த மரத்தடி என்று நம்புகிறேன்' அல்லது 'பாம்பு என்று நம்புகிறேன்' எனக் கூறுகிறோம். ‘நம்புகிறேன்' என்பதும் 'இருக்கலாம்' என்ற அதே சந்தேகத்தை அடிப்படையாகக் கொண்டதே. அந்தப் பொருள் என்ன என்பது தெளிவாக அறியப்பட்டதும் சந்தேகமோ அல்லது நம்பிக்கையோ அவசியமற்றதாகிவிடுகிறது. இப்போது நம்பிக்கை அல்லது நம்புதல் என்பது சந்தேகத்தை அடித்தளமாகக் கொண்டுள்ளது என்பது நிரூபணமாகிவிட்டதல்லவா! உண்மையில் 'நம்பிக்கை' என்ற போலிக்குள் நாம் அகப்பட்டு அல்லற்படாமல் வாழ்வதற்கு 'அறிதல்', 'புரிதல்', 'உணர்தல்' என்பவற்றை அடித்தளமாகக் கொள்ளல் வேண்டும்.

நம்பிக்கையின் இரண்டாவது பலவீனம் சந்தேகத்தை விட அதிதீவிரமானது. சந்தேகம் தெளிவை நோக்கிய ஒரு தேடலுக்கு வாய்ப்பளிக்கலாம். ஆனால் நம்பிக்கையின் இந்தப் பலவீனம் எமது பகுத்தறிவுத் திறனுக்கு முழுக்குப் போட்டுவிடும். அதாவது நம்பிக்கை ஒரு பொழுதும் பகுத்தறிவுடன் இணைவதில்லை. ஏனெனில், நாம் ஒன்றை முற்றுமுழுதாக நம்பிவிட்டதன் பிற்பாடு அந்த நம்பிக்கைக்கு அடிமையாகி நாம் நம்பியுள்ளதற்கு அப்பால் எமது அறிவைப் பயன்படுத்த அனுமதிப்பதில்லை. அதாவது தேடுதலுக்கு இடமளிப்பதில்லை. அத்தோடு எப்பொழுதும் இறந்தகாலத்தில் மட்டும் வாழப்பழகிவிடுவதால் நிகழ்காலம் வீணாகிவிடுகின்றது. நம்பிக்கையின் அடிமைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படக்கூடாது என்பதில் நம்பிக்கைவாதிகள் மிகவும் விழிப்பாக இருக்கிறார்கள். நம்பிக்கை அடிமைகளை இறந்தகாலத்திலேயே வைத்திருப்பதில் இவர்கள் மிகச் சிறந்த தேர்ச்சி பெற்றவர்களாக உள்ளார்கள். நம்பிக்கைக்கு நாம் அடிமைகளாக இருக்கும் வரை நம்பிக்கைவாதிகள் நம்மீது சவாரி செய்துகொண்டே இருப்பார்கள். தவறு அவர்களுடையதல்ல.

நம்பிக்கைக்கு அவசியம் இல்லாத வாழ்க்கை தான் எமக்குக் கிடைத்திருக்கும் இந்த அற்புதமான வாழ்க்கையும் வாய்ப்பும். இந்த வாழ்க்கையினதும், வாய்ப்பினதும் உச்சப் பயன் என்பது அறிதல், புரிதல், உணர்தல் மூலம் வாழ்வதால் மட்டுமே சாத்தியமாகும்.

நன்றியுடன் KG Master
avatar
கணபதி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1328
Points : 3838
Join date : 01/02/2013
Age : 62
Location : chennai

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum