"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இருமல்,சளி ஜலதோஷம் - மருத்துவம்
by அ.இராமநாதன் Yesterday at 10:44 pm

» இயற்கை மருத்துவம் (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Yesterday at 10:33 pm

» பகைவனும் நம்மை மதிக்க தொடங்குவான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:24 pm

» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Yesterday at 10:22 pm

» வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா
by அ.இராமநாதன் Yesterday at 9:39 pm

» விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
by அ.இராமநாதன் Yesterday at 9:36 pm

» வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
by அ.இராமநாதன் Yesterday at 9:05 pm

» உலகைச்சுற்றி - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 8:27 pm

» வங்கி கணக்கு – ஆதார் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 8:20 pm

» ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
by அ.இராமநாதன் Yesterday at 8:18 pm

» ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
by அ.இராமநாதன் Yesterday at 8:18 pm

» இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
by அ.இராமநாதன் Yesterday at 8:17 pm

» சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
by அ.இராமநாதன் Yesterday at 8:14 pm

» காவல் ஆய்வாளர் குடும்பத்திற்கு 1 கோடி நிவாரணம் - முதலமைச்சர் பழனிச்சாமி!
by KavithaMohan Yesterday at 7:04 pm

» அரசு மீது மக்கள் பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர் : மோடி
by KavithaMohan Yesterday at 6:59 pm

» அதிக நோய்களை பரப்பும் ஈக்கள்
by அ.இராமநாதன் Yesterday at 4:14 pm

» ரேக்ளா வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது... நீதிபதிகளின் தீர்ப்பில் முடிவு...
by KavithaMohan Tue Dec 12, 2017 6:34 pm

» புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் முதலமைச்சர் பழனிசாமி
by KavithaMohan Tue Dec 12, 2017 6:33 pm

» ரஜினியின் பிறந்த நாளில் வெளியாகிறது.. கஜினிகாந்த் பர்ஸ்ட்லுக்.!
by KavithaMohan Mon Dec 11, 2017 5:49 pm

» “ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
by KavithaMohan Mon Dec 11, 2017 5:34 pm

» குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
by KavithaMohan Mon Dec 11, 2017 5:29 pm

» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 12:07 pm

» சொறிந்து கொள்ள மிஷின்!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 10:04 am

» மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று...
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 10:01 am

» மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:55 am

» பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு...!!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:52 am

» மொபைல் ஸ்கேனர்
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:24 am

» குதிரையில் பர்ச்சேஸ்!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:20 am

» நாய் ஹாரன்!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:19 am

» ஜிக்ஸா சாதனை!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:17 am

» ராகிங்!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:11 am

» பெண் எனும் பிரபஞ்சம் கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Dec 10, 2017 3:44 pm

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat Dec 09, 2017 9:23 pm

» இனி பாத்திரத்தை பார்த்து உணவின் நிலை தெரிந்து சாப்பிடலாம்..!
by KavithaMohan Sat Dec 09, 2017 12:48 pm

» குஜராத்தில் பிரதமர் மோடி கண்ணீருடன் பிரச்சாரம்
by KavithaMohan Sat Dec 09, 2017 12:40 pm

» 1300 முறை அத்துமீறி தாக்குதல்: இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு
by KavithaMohan Sat Dec 09, 2017 12:31 pm

» ஜன.,1 முதல் ஓடிபி மூலம் ஆதார்- மொபைல் எண் இணைப்பு வசதி
by KavithaMohan Sat Dec 09, 2017 12:27 pm

» முக்கனி! நூல் ஆசிரியர் : கவிநயச் செல்வர் மன்னை பாசந்தி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Dec 09, 2017 10:56 am

» சென்னை மீனவர்கள் போராட்டம் எதிரொலி: மெரினாவில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!
by KavithaMohan Fri Dec 08, 2017 4:04 pm

» சேகர் ரெட்டியிடம் பணம்பெற்ற ஓ.பி.எஸ்., ? டைரி தகவலால் புதிய பரபரப்பு
by KavithaMohan Fri Dec 08, 2017 3:59 pm

» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
by KavithaMohan Fri Dec 08, 2017 3:58 pm

» தட்டை விஞ்ஞானி!
by அ.இராமநாதன் Fri Dec 08, 2017 10:33 am

» வாட்ஸ் அப் - நகைச்சுவை (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Fri Dec 08, 2017 10:17 am

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu Dec 07, 2017 9:50 pm

» விடையில்லா விடுகதை ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Dec 07, 2017 8:58 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ஆசிர்வாதம்...

View previous topic View next topic Go down

ஆசிர்வாதம்...

Post by udhayam72 on Fri May 10, 2013 1:50 pm

ஆசிர்வாதம்...
(புவனா கோவிந்த்)

"ஆஷிஷ்... எங்க போற?"

"தண்ணி வேணும் மம்மி"

"ரெண்டு நிமிஷம் முன்னாடி தான தண்ணி குடிச்ச?"

"ஓ... சாரி... பாத்ரூம் போகணும்... மறந்து போய்ட்டேன்"

"ஹா ஹா ஹா..." சிரிப்பு சத்தம் கேட்க

"என்ன சிரிப்பு இப்போ?" என கணவர் சங்கரை முறைத்தாள் ராஜி

"பாவம் ராஜி கொழந்த.... கொஞ்சம் ப்ரீயா விடேன்" என பிள்ளைக்கு பரிந்து கொண்டு வர

"அப்படியா? இந்தாங்க... நீங்களே இன்னைக்கி ஹோம் வொர்க் எழுத வெய்யுங்க" என புத்தக குவியலை சோபாவில் அமர்ந்திருந்த சங்கரின் மடியில் போட்டுவிட்டு கோபமாய் அமர்ந்தாள்

"ஏய்... டென்ஷன் ஆகாத ராஜிம்மா. இப்ப தானே பர்ஸ்ட் ஸ்டான்டார்ட் படிக்கறான், கொஞ்சம் பொறுமையா சொன்னா ஆஷிஷ்குட்டி கேட்டுப்பான்... இல்லடா கண்ணா?" என பிள்ளையை மடியில் இருத்தி கன்னத்தில் இதழ் பதித்தவாறே சொன்னான் சங்கர்

"ஆமா டாடி... மம்மிக்கு பொறுமையே இல்ல" என கொஞ்சம் மழலையும் கொஞ்சம் பெரிய மனுஷத்தனமுமாய் ஆஷிஷ் கூற

"ஓஹோ அப்படியா... அப்ப அடுத்த வாரம் பேன்சி டிரஸ் காம்படிசனுக்கு பொறுமையா உங்க டாடியவே உன்னை ரெடி பண்ண சொல்லு" என ராஜி வேண்டுமென்றே முகம் திருப்ப, உடனே சங்கரிடமிருந்து ராஜியின் மடிக்கு தாவினான் ஆஷிஷ்

பிள்ளையை கண்டுகொள்ளாமல் ராஜி தவிர்க்க, பெற்றவளின் தாடையை பற்றி "என் ஸ்வீட் மம்மி தானே மம்மி நீ. நான் உன் செல்லம் தான் மம்மி, டாடி செல்லம் இல்ல. டாடிக்கு ஒண்ணுமே தெரியாது, நீ தான் ஸ்மார்ட் மம்மி" என தாஜா செய்ய, அதற்கு மேல் தன்னை கட்டுப்படுத்திகொள்ள முடியாமல் மகனை அணைத்து சிரித்தாள் ராஜி

"டேய் பிராடு... உனக்கு சப்போர்ட் செஞ்சா எனக்கே ஒண்ணும் தெரியாதுங்கறயா?" என சங்கர் பொய் கோபத்துடன் அடிப்பது போல் பாவனையுடன் கிச்சுகிச்சு மூட்ட, நெளிந்து தப்பித்து வெளியே விளையாட ஓடினான் ஆஷிஷ்

ஓடும் மகனை ரசித்தபடியே "இன்னைக்கி ஹோம்வொர்க் அவ்ளோ தான்" என பெருமூச்சு விட்டாள் ராஜி

"விடும்மா... காலம் பூரா படிப்பு தான் ஓட்டம் தான், இப்பவாச்சும் கொஞ்சம் நிம்மதியா இருக்கட்டும்"

"நீங்க ஈஸியா சொல்லிட்டீங்க, பேரண்ட்ஸ் மீட்டிங்'ல நான் தான கை கட்டி நிக்கணும்"

"அதுக்கு பதிலா தான் நான் தினமும் உனக்கு கை கட்டி நிக்கறனே" என சங்கர் மையலாய் சிரிக்க

"ஹும்க்கும்... ரெம்பத்தான்" என கணவனை பழித்தாள் ராஜி

"டயர்டா இருக்கு ராஜி. ஒரு காபி குடேன்" எனவும்

"இப்பவெல்லாம் அடிக்கடி டயர்ட்னு சொல்றீங்க, டாக்டர்கிட்ட செக் பண்ணனும்" என்றாள் ராஜி சற்றே கவலையாய்

"ஆபீஸ்ல வேலை ஜாஸ்திம்மா, உன்னோட காபி சாப்ட்டா டயர்ட் எல்லாம் போயே போய்டும் இட்ஸ் கான்" என விளம்பர பாணியில் சொல்லி சிரிக்க

"ஒரு காபிக்கு இவ்ளோ ஐஸா... ரெம்பத்தான்" என பழித்தபடி சமையல் அறைக்குள் சென்றாள் ராஜி

"ஆஷிஷ், என் பொறுமய சோதிக்காத... கால நீட்டு சாக்ஸ் போடணும்"

"கால் வலிக்குது மம்மி"

"நாள் பூரா குதிச்சா கால் ஒண்ணா வலிக்கும். எல்லாம் தான் வலிக்கும்"

"மம்மி..." என பிள்ளை சிணுங்க

"ஆஷிஷ்..." என மிரட்டி கிளப்பி ஒரு வழியாய் பள்ளி வாகனத்தில் ஏற்றிவிட்டு வந்து "அப்பாடா" என அமர்ந்தாள் ராஜி

சங்கருக்கு பாங்கில் வேலை என்பதால் அப்போது தான் கிளம்பி கொண்டிருந்தான்

"என்ன ராஜிம்மா, ஏதோ போருக்கு போயிட்டு வந்த மாதிரி உக்காந்துட்டு இருக்க?" என சிரித்தபடி அறையை விட்டு வெளியே வந்தான் சங்கர்

"வர வர இவன் குறும்பு தாங்க முடியலங்க"

"உன்னை விடவா?" என விளையாட்டாய் சீண்டியபடி அருகே அமர்ந்தான் சங்கர்

"ப்ச்..." என பொய்யை சலித்தவள் "இன்னைக்கி மன்த்லி டெஸ்ட் இருக்கு. உடனே எல்லா வலியும் வந்துடுச்சு உங்க புள்ளைக்கு" என்றாள் ராஜி

"நேத்து நைட் லேசா டெம்பரேச்சர் இருந்ததுனு நீயே சொன்னியே ராஜி"

"அப்பவே கிரோசின் குடுத்துட்டேங்க. இப்ப நல்லாதான் இருக்கு. ரெண்டு நாள் லீவ்ல மழை தண்ணிலயே குதிச்சான், அதான் கொஞ்சம் ஒடம்பு சூடாய்டுச்சு. வீட்ல இருந்தா இன்னும் ஆடுவான், நேத்து ஸ்டெப்ஸ்ல விழுந்து சிறுமூக்கு ஒடிஞ்சு ரெத்தம் வர வெச்சுட்டான். அதுக்கு ஸ்கூல் போனாலும் பெட்டர்"

"கொழந்தைனா அப்படிதான் ராஜி... ஒரே எடத்துலையா இருக்கும்"

"ம்... அதுசரி, நேத்து டயர்டா இருக்குனீங்க... இப்ப பரவால்லையா?"

"ராஜி பிராண்ட் காபி ட்ரீட்மென்ட் நல்லாவே வொர்க் ஆச்சே... பட் இன்னும் கொஞ்சம் டயர்ட் இருக்கு, அதுக்கு வேற ஒரு ட்ரீட்மென்ட் இருக்கு...அது என்னனா..." என குறும்பாய் சிரித்தபடி சங்கர் தொடங்க

"போதுமே... காலங்காத்தால அரட்டை அடிச்சுக்கிட்டு... டைம் ஆகலையா உங்களுக்கு?" என சற்றே சத்தமாய் கேட்க

"அவன மெரட்டி மெரட்டி இப்ப என்னையும் அதே மாதிரி மிரட்ட ஆரம்பிச்சுட்ட ராஜி" என சங்கர் கேலி செய்ய

"ஆஹா... நீங்க ரெம்ப பயப்படற மாதிரி தான்... சும்மா ஏக்ட் விடாதீங்க. கெளம்புங்க, அப்புறம் டைம் ஆச்சுனு ஸ்பீடா வண்டி ஓட்டுவீங்க"

"ஒகே மேடம்... கெளம்பறேன் மேடம்" என பொய் பவ்யத்துடன் கிளம்பினான் சங்கர்

பதட்டமாய் மருத்துவமனைக்குள் நுழைந்த சங்கர், கவலையுடன் பிள்ளையை மார்போடு அணைத்திருந்த ராஜியின் முகத்தை கண்டதும் இன்னும் பதட்டமானான்

"என்னாச்சு ராஜி?" என்றபடியே தூங்கி கொண்டிருந்த பிள்ளையை அவளிடமிருந்து வாங்கினான். கணவனை கண்டதும் மனஉறுதி தளர கண்ணில் நீர் பனித்தது ராஜிக்கு

"ஏய்... என்ன இது? ஷ்... " என ஆதரவாய் தோளோடு அணைத்து கொண்டான்

"திடீர்னு ஸ்கூல்ல இருந்து போன் வந்ததுங்க, விளையாடும் போது மயங்கி விழுந்துட்டானாம், ஸ்கூல் நர்ஸ் first aid பண்ணி இருக்காங்க. அப்புறம் ரெண்டு மூணு வாட்டி வாமிட் பண்ணிட்டான், காய்ச்சலும் இருக்கு... காலைலயே கொழந்த டல்லாதான் இருந்தான்... நான் தான் சும்மா ஸ்கூல் கட் அடிக்கறதுக்கு அப்படி செய்யறானு நெனச்சுட்டேன்" என குற்ற உணர்வில் புலம்பினாள்

"கொழந்தைகளுக்கு இந்த ஸ்டேஜ்ல ஒடம்புக்கு வர்றது சகஜம் தானே ராஜி. இதுக்கு போய் இப்படி டென்ஷன் ஆகறியே, இன்னும் கொஞ்ச..."

அதற்குள் "மம்மி..." என பிள்ளை சிணுங்க, "ஆஷிஷ் கண்ணா... கண்ணை தெறந்து பாருடா செல்லம்" என சங்கர் எழுப்ப முயல

"டோக்கன் நம்பர் 84" என நர்ஸின் குரலில், பிள்ளையுடன் டாக்டரின் அறைக்குள் சென்றனர்

"வாங்க மிஸ்டர் அண்ட் மிசஸ் சங்கர். எப்படி இருக்கீங்க? என்னாச்சு? ஆஷிஷ்க்கு ஒடம்பு சரியில்லையா?" என தந்தையின் தோளில் இருந்த பிள்ளையை பார்த்தவாறே கேட்டார் டாக்டர் சாரதா

"ஆமா டாக்டர்... காய்ச்சல், வாமிட்டிங் இருக்கு. காலைலேயே ரெம்ப டல்லா இருந்தான் டாக்டர்" என ராஜி கூற

"கொழந்தைக்கு காய்ச்சல்னா அம்மாவுக்கு தான் மருந்து குடுக்கணும் போல இருக்கே" என சூழ்நிலையை இலகுவாக்க கேலியாய் கூறிவிட்டு "சங்கர், ஆஷிஷ அந்த பெட்ல படுக்க வெய்ங்க, செக் பண்ணனும்" என்றார்

"டாடி... ஊசி வேண்டாம்" என ஆஷிஷ் அழ தொடங்க "ஊசி எல்லாம் இல்லடா கண்ணா... ஆஷிஷ் பிக் பாய் தானே... சும்மா செக் அப் மட்டும் தான், ஓகே வா" என குழந்தைக்கு தக்கபடி பேசி வழக்கமான பரிசோதனைகள் எல்லாம் செய்தார் டாக்டர்

"என்ன இது மூக்குல பிளாஸ்டர்?" என டாக்டர் கேட்க

"நேத்து கீழ விழுந்து சிறு மூக்கு உடைச்சுட்டான் டாக்டர். இப்படிதான் தினமும் எதாச்சும் காயம் செஞ்சுக்கறான் டாக்டர்" என்றாள் ராஜி பெற்றவளுக்கே உரிய கவலையுடன்

பரிசோதனை முடிந்து வந்து அமர்ந்த டாக்டரின் முகத்தில் முன்பிருந்த சிரிப்பு மறைந்து போய் இருந்தது "எவ்ளோ நாளா காய்ச்சல் இருக்கு?"

"நேத்து..." என ராஜி தொடங்க, அதை இடைமறித்த சங்கர் "கொஞ்ச நாளா அடிக்கடி இப்படி காய்ச்சல் வருது டாக்டர். வீட்ல இருக்கற மருந்தே குடுத்துட்டு இருந்தோம். அப்போதைக்கு சரியாகுது, மறுபடி வந்துடுது. எதாச்சும் வைரஸ் காய்ச்சலா இருக்குமா?"

"இருக்கலாம். ம்... சாப்பிடரதெல்லாம் நார்மலா சாப்பிடரானா?" என டாக்டர் கேட்க

"முன்னாடிக்கு இப்ப கொஞ்சம் ரகளை தான் டாக்டர்... எதாச்சும் டானிக் குடுத்தா சரியாகும் தானே டாக்டர்" என்றாள் ராஜி தானே டாக்டர் போல்

"கை கால் வலிக்குதுனு எதாச்சும் சொல்றானா?" என டாக்டர் தொடர்ந்தார்

"இன்னிக்கி காலைல சொன்னான் டாக்டர். நேத்து பூரா மழைல விளையாடி..." என ராஜி கூறி கொண்டிருக்க

"என்னாச்சு டாக்டர்... சாதாரண காய்ச்சல் தானே?" டாக்டர் முகத்தில் இருந்த கவலை ரேகைகளை படித்தது போல் கேட்டான் சங்கர்

"ம்... அப்படி தான் இருக்கணும். எதுக்கும் ஒரு ப்ளட் டெஸ்ட் பண்ணிடலாம்" என டாக்டர் 'லாப் ரிக்வஸ்ட் பார்ம்' என லேபில் செய்யப்பட்டிருந்த பைலில் இருந்து எடுத்து எழுத தொடங்கினார்

"இப்பவே ப்ளட் டெஸ்ட் பண்ணிடுங்க. அதோட ஸ்பைனல் ப்ளூயிட் டெஸ்ட், அதாவது முதுகு தண்டுல நீர் எடுத்து ஒரு டெஸ்ட் பண்ணனும். எல்லாம் பண்ணிட்டு நாளைக்கு காலைல வாங்க" என டாக்டர் கூற சங்கரின் முகம் வெளிறியது

இத்தனை அவசரமாய் பரிசோதனை செய்ய சொல்வதும், பிஸியான டாக்டர் மறுநாளே வந்து பார்க்க சொன்னதும் மனதில் பயத்தை தோற்றுவித்தது. ஆனால் ராஜியின் முன் எதையும் காட்டிக்கொள்ள மனமின்றி மௌனமானான். ஆனாலும் ராஜி அன்று உறங்கும் வரை அவனை கேள்விகளால் துளைத்து கொண்டிருந்தாள்

"என்னாச்சு டாக்டர்? நேத்து சொன்ன மாதிரி வைரஸ் பீவர் தான டாக்டர்?" என சங்கர் மிகுந்த நம்பிக்கையுடன் கேட்க, டாக்டர் சாரதா எப்படி ஆரம்பிப்பதென புரியாமல் யோசித்தார்

டாக்டரின் மௌனம் ராஜியின் பயத்தை கூட்ட "ப்ளீஸ் டாக்டர் சொல்லுங்க" என்றாள் பதட்டமாய்

"அது... " என ஆஷிஷை பார்த்து பேச வந்ததை நிறுத்தியவர், நர்சை அழைத்து "ஆஷிஷ் கண்ணா, நர்ஸ் ஆன்ட்டி உனக்கு சாக்லேட் வாங்கி தருவாங்க. போயிட்டு வர்றியா?" என கேட்க, "ஒகே" என உற்சாகமாய் கிளம்பியது குழந்தை

"நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் மனசை திடப்படுத்திக்கணும்" என டாக்டர் தொடங்க, ஏதோ விபரீதம் என புரிந்தவள் போல் ராஜி பலவீனத்தை மறைக்க சங்கரின் கையை இறுக பற்றினாள். இருவருக்கும் எதையும் பேசும் தைரியம் இருக்கவில்லை

மீண்டும் டாக்டரே தொடர்ந்தார் "எனக்கு லேசா ஒரு டவுட் இருந்ததால தான், ப்ளட் கவுன்ட் டெஸ்ட் அப்புறம் ப்லேட்லட் கவுன்ட் டெஸ்ட் எல்லாம் எழுதி குடுத்தேன், அதோட முதுகுதண்டு நீர் டெஸ்ட் பண்ணினதும் அதுக்கு தான். ஆஷிஷ்க்கு ப்லேட்லட் கவுன்ட் ரெம்ப கம்மியா இருக்கு" என்றார் டாக்டர் கவலையுடன்

ராஜியின் கையை ஆதரவாய் பற்றிய டாக்டர் "மிசஸ் சங்கர், நீங்க தான் ரெம்ப ஸ்ட்ராங்கா இருக்கணும்" எனவும், சங்கர் ஏதோ புரிந்தது போல் மௌனமாய் இருந்தான்

"டாக்டர்... இது மெடிசன் குடுத்தா சரியாய்டும் தானே" என முடிக்கும் முன்பே ராஜியின் கண்களில் நீர் நிறைந்திருந்தது

தான் சொல்வதன் அர்த்தம் இவளுக்கு இன்னும் புரியவில்லை என உணர்ந்த டாக்டர் "நான் சொல்றத கொஞ்சம் பொறுமயா கேளுங்க. ப்லேட்லட் கவுன்ட் ஒருத்தருக்கு கொறஞ்சது ஒன்றரை லட்சமாச்சும் இருக்கணும். ஆஷிஷ்க்கு அது வெறும் முப்பதாயிரம் தான் இருக்கு. வெறும் ப்லேட்லட் கவுன்ட் மட்டும் கம்மினா கூட மருந்துல சரி செய்ய முடியும். ஆனா முதுகுதண்டுநீர் எடுத்து பரிசோதித்த டெஸ்ட் ரிசல்ட் பாக்கும் போது இது அடுத்த ஸ்டேஜ்க்கு போய்டுச்சுனு தோணுது. என்னோட பீடியாட்ரிக்ஸ் மேஜர்ல பீடியாட்ரிக் ஆன்க்காலஜியும் ஒரு பிரான்ச் தான். சோ, என்னோட டயக்நோசிஸ் படி..."

"டாக்டர் ப்ளீஸ்... எனக்கு ஒண்ணும் புரியல... கவுன்ட் கம்மினா என்ன? அதுக்கு என்ன பண்றது.. நல்லா சாப்ட்டா சரியாய்டுமா? நான் எப்படியாவது இனிமே ஒழுங்கா சாப்பிட வெச்சுடறேன்" என பதறினாள்

இது சாப்பாட்டில் சரி செய்யும் விசயமில்லை என்பதை இவளுக்கு எப்படி உணர்த்துவது என புரியாமல் டாக்டர் விழிக்க, விசயத்தை கிரகித்து கொண்ட சங்கர் "பிகினிங் ஸ்டேஜ் தானே டாக்டர், சரி பண்ணிடலாம் தானே" எத்தனை முயன்றும் சங்கரின் குரல் நடுங்கியது

"என்ன பிகினிங் ஸ்டேஜ்... என்ன சொல்றீங்க?" என ராஜி சங்கரை பார்த்து பதற்றமாய் கத்தினாள்

"ராஜிம்மா... ப்ளீஸ், கொஞ்சம் பொறுமையா இரு" என சங்கர் சமாதானம் செய்ய முயல

"ப்ளீஸ்ப்பா... என்னனு சொல்லுங்க எனக்கு பயமா இருக்கு" என கெஞ்சினாள்

"அது... கேன்சரா இருக்குமோனு..." அதற்கு மேல் கூற முடியாமல் சங்கர் கண்ணில் நீருடன் நிறுத்தினான். அதிர்சியில் தாக்கபட்டவளாய் அப்படியே உறைந்தாள் ராஜி

"ராஜி...ராஜி..." என அவளை பற்றி உலுக்கினான் சங்கர்

"மிசஸ் சங்கர் ப்ளீஸ் காம் டௌன்... நான் முழுசா சொல்றதுக்குள்ள நீங்க டென்ஷன் ஆகரீங்க... பயப்பட வேண்டாம். சயின்ஸ் ரெம்ப வளந்துடுச்சு, எல்லாத்துக்கும் இப்ப ட்ரீட்மென்ட் இருக்கு" என்றார் டாக்டர்

இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாத குரலில் "ஆனா... கேன்சர் எல்லாம்... ஆஷிஷ்... கொழந்தைக்கு எப்படி டாக்டர்... அடிக்கடி பீவர்னா ஏதோ வைரஸ் தானே..." என்றாள் ராஜி இன்னும் நம்பாமல்

"கேன்சர் நோய்க்கு பெரியவங்க கொழந்தைங்கனு வித்தியாசம் இல்லங்க. இந்தியால பீடியாட்ரிக் கேன்சர் குறைவு தான், ஆனா இருக்கு. குழந்தைகள அதிகம் தாக்கறது ப்ளட் கேன்சர் அப்புறம் பிரைன் கேன்சர், பிரைன் டியூமர்னும் இதை சொல்லுவாங்க. எட்டு வயசுக்கு உட்பட்ட பிள்ளைகள் அதிகம் பாதிக்கப்படறது ப்ளட் கேன்சர்னாலதான். கேன்சர்ங்கற நோய விட கொழந்தைக்கு எல்லாம் கேன்சர் வராதுன்னு நம்ம மக்கள் மத்தில இருக்கற தவறான நம்பிக்கை தான் ரெம்ப ரிஸ்க். இதை பத்திய விழிப்புணர்வு இல்லாம நெறைய பேர் ஏதோ வைரஸ் காய்ச்சல் அது இதுனு நாள் கடத்தி குணப்படுத்த முடியாத ஸ்டேஜ்ல எங்ககிட்ட வர்றாங்க. கேன்சர் செல்கள் ரெத்தத்துல கலக்கும் போது அது நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்குற செல்களை அழிக்க தொடங்கிடும். அதன் காரணமாத்தான் அடிக்கடி காய்ச்சல் வர்றது. சரியா சாப்பிட முடியாம போறது, அதிகபட்ச சோர்வு, எதாச்சும் காயம் பட்டா சரியா ரெத்தம் உறையாம போறது, கால் தசைகளில் வலி எல்லாம் இருக்கும்"

"ஆனா சாதாரண காய்ச்சலுக்கும் இதே மாதிரி சிம்ப்டம்ஸ் இருக்கும் தானே டாக்டர்" என்றான் சங்கர், தன் பிள்ளைக்கும் அது போல இருக்காதா என்ற நப்பாசையில்

"ரெம்ப கரெக்ட் மிஸ்டர் சங்கர். இது எல்லாமும் சாதாரண காய்ச்சலுக்கும் இருக்கற சிம்ப்டம்ஸ் தான். டெஸ்ட் மூலமா மட்டும் தான் இது கேன்சரா இல்ல சாதாரண காய்ச்சலானு கண்டுபிடிக்க முடியும். பெத்தவங்களே டாக்டர் ஆகி மருந்து மாத்திரைனு குழந்தைக்கு குடுக்கறது தான் இன்னைக்கி நெறைய பேர் செய்யற தப்பு. இப்பவெல்லாம் நாப்பது வயசுக்கு மேல வருசத்துக்கு ஒரு முறை மாஸ்டர் ஹெல்த் செக் அப் செஞ்சுக்கறது நல்லதுங்கற அளவுக்கு விழிப்புணர்வு இருக்கு. அது சரி தான். ஆனா கொழைந்தைகளுக்கும் கூட வருஷம் ஒரு முறை ஜெனரல் செக் அப் செய்யறது நல்லது. முக்கியமா கொழைந்தைகளுக்கு மட்டுமாச்சும் ஒரே டாக்டர்கிட்ட தொடர்ந்து காட்டறது பெட்டர். எந்த வியாபார நோக்கத்தோடவும் நான் இதை சொல்லல. ஒரே டாக்டர்கிட்ட காட்டும் போது அவங்ககிட்ட ஹெல்த் ஹிஸ்டரி ரெகார்ட் இருக்கும், எதுவும் எமர்ஜன்சிங்கரப்ப அந்த ரெகார்ட்ஸ் ரெம்ப உதவியா இருக்கும்" என்றார்

"ஆஷிஷ்க்கு எப்படி டாக்டர், எனக்கு தெரிஞ்சு எங்க குடும்பத்துல யாருக்கும் கேன்சர் இல்லையே"

"கேன்சர் ஜெனிடிக் டிசீஸ் இல்ல மிஸ்டர் சங்கர். அப்படி வர்றதுக்கு வாய்ப்பு இல்லைனு சொல்ல முடியாது, ஆனா சுகர், பிரசர், ஹார்ட் டிசீஸ் அளவுக்கு இது ஜீன்ஸ் மூலமா வர்றதுக்கான வாய்ப்பு குறைவு. குடும்பத்துல யாருக்கும் கேன்சர் இருத்துருந்தா அந்த குடும்பத்துல இருக்கறவங்க வருஷம் ஒரு முறை செக் பண்ணிக்கறது நல்லதுனு புள்ளிவிவரம் சொல்லுது. மத்தபடி இது வர்றதுக்கு காரணங்கள்னு பாத்தா உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மாதிரி செய்யும் போது அதை உடல் ஏத்துக்கணுங்கரதுக்காக நம்ம உடம்போட நோய் எதிர்ப்பு சக்திய குறைக்கற சில மருந்துகள் தருவாங்க, அதனால் சிலருக்கு கேன்சர் செல்கள் ஊடுருவ வாய்ப்பு இருக்கு. குழந்தைகளுக்கு வர்ற கேன்சருக்கு நம்ம நாட்ல அதிகம் சொல்ல படர காரணம்னு பாத்தா குழந்தை அம்மாவோட வயத்துல இருக்கும் போது அம்மா எக்ஸ்ரே கதிர்களின் தாக்கத்துக்கு ஆளாகி இருந்தா அந்த குழந்தைக்கு கேன்சர் வர வாய்ப்பு அதிகம். இந்த விழிப்புணர்வும் நம்ம மக்கள் மத்தில வரணும். இது எந்த காரணமும் இல்லாம கூட கேன்சர் வரும், அதை கண்டுபிடிக்க ஆராய்ச்சி செஞ்சுட்டு தான் இருக்காங்க"

"எத்தனையோ நோய்க்கு தடுப்பூசி இருக்கே டாக்டர்... இதுக்கு இல்லையா?"

"பெரியவங்களை தாக்கற லிவர் கேன்சர் மாதிரி சில வகை கேன்சர்களுக்கு தடுப்பூசி இருக்குனு U.S. Food and Drug Administration (FDA) சமீபத்துல அறிவிச்சு இருக்காங்க. எல்லாம் இன்னும் ஆரம்ப கட்டத்துல தான் இருக்கு. ப்ளட் கான்சர் தடுப்பூசி இன்னும் ஆராய்ச்சி அளவுல தான் இருக்கு" என நிறுத்தியவர், ஆஷிஷின் மருத்தவ குறிப்புகள் அடங்கிய பைலை பிரித்தார்

"ஆஷிஷை பிசிகல் எக்சாமினேசன் செஞ்சப்பவே அனீமிக்கா இருக்கறது புரிஞ்சது. அதோட சிம்ப்டம்ஸ் எல்லாமும் கொஞ்சம் யோசிக்க வெச்சது. அதுக்கு தான் ரெகுலர் ப்ளட் டெஸ்ட் மட்டுமில்லாம முதுகுதண்டு நீர் டெஸ்டும் எடுக்க சொன்னேன். என்னோட டியாக்நோசிஸ் படி பிகினிங் ஸ்டேஜ் தான். இதில ரெண்டு வகை இருக்கு, 98% கொழந்தைகளுக்கு Acute Lukemia தான் இருக்கும், அதாவது ரெம்ப சீக்கரமா கேன்சர் செல்கள் பரவிடும். ஆனா ஆஷிஷ்க்கு வந்திருக்கறது Chronic Lukemia , கொஞ்சம் மெதுவா பரவும் வகை. Acute Lukemiaல பாதிக்கப்பட்ட கொழந்தைகளையே இப்ப குணப்படுத்திட்றாங்க. ஆஷிஷ் பத்தி நீங்க பயப்பட வேண்டியதில்ல, எனக்கு தெரிஞ்ச ஒரு பீடியாட்ரிக் ஆன்க்காலஜிஸ்ட்(Oncologist) இருக்காரு, அவர்கிட்ட ரெபர் பண்றேன் போய் பாருங்க... அவர்..."

"ஏன் டாக்டர்? நீங்களே பாக்கலாமே. நீங்க பிஸினு தெரியும். ஆனா, எவ்ளோ செலவானாலும் பரவால்ல...ப்ளீஸ் டாக்டர்" என்றாள் ராஜி அழுகையினூடே

"மிசஸ் சங்கர், நான் பணத்துக்காகவோ இல்ல நேரம் இல்லைனோ வேற டாக்டரை பாக்க சொல்லல. நான் வெறும் பீடியாடிரிசியன் தான். கேன்சர் பத்தி டியக்நோஸ் பண்ற அளவுக்கு தான் எனக்கு நாலேஜ் இருக்கு. இதுக்கு ட்ரீட்மென்ட் எல்லாம் இதுக்கான ஸ்பெசலிஸ்ட் தான் செய்யணும். டாக்டர்ஸ் இப்படி ரெபர் பண்ணும் போது என்னமோ அந்த டாக்டர்கிட்ட கமிஷன் வாங்கிட்டு செய்யறாங்கனு நெறைய பேர் தப்பா புரிஞ்சுக்கறாங்க, அப்படி செய்யறவங்க இல்லைன்னு சொல்ல வரல but exceptions are not examples, right?. இன்னும் சில டாக்டர்ஸ் பெத்தவங்களோட இந்த அறியாமையை யூஸ் பண்ணிக்கிட்டு பீடியாடிரிசியன்ஸே காசுக்காக அரை குறையா கேன்சர் ட்ரீட்மென்ட் குடுத்து குழந்தைகள பலியாக்கிடறாங்க. இதை பத்திய விழிப்புணர்வும் நம்ம மக்கள் மத்தில வரணும்" என்றபடி தான் சொல்லிய டாக்டர் பற்றிய விவரங்களை கொடுத்தார் டாக்டர் சாரதா

"இது எவ்ளோ நாளுல சரியாகும் டாக்டர். என்ன ட்ரீட்மென்ட் பண்ணுவாங்க?" என சங்கர் கேட்டு கொண்டிருக்கும் போதே "ரெம்ப வலிக்குமா டாக்டர்?" என்றாள் ராஜி கண்ணில் நீர் பெருக

"மிசஸ் சங்கர், உங்க தைரியம் தான் ஆஷிஷ்க்கு மொதல் ட்ரீட்மென்ட், புரிஞ்சதா? வலி இருக்காதுன்னு சொல்ல மாட்டேன், அதை தாங்கற சக்திய தைரியத்த நீங்க தான் அவனுக்கு தரணும். எத்தனை நாள்ல சரியாகும்னெல்லாம் சரியா சொல்ல முடியாது மிஸ்டர் சங்கர். Each case is different. ஒரு ஒருத்தர் உடம்பும் மருந்துக்கு ஒரு ஒரு மாதிரி ரியாக்ட் பண்ணும். அப்புறம் ட்ரீட்மென்ட் பத்தி நீங்க ஸ்பெசலிஸ்ட்கிட்ட தான் டிஸ்கஸ் பண்ணனும். எல்லா ட்ரீட்மென்ட்டும் எல்லாருக்கும் பொருந்தாது. சிலருக்கு வெறும் மருந்துகள் மட்டும், சிலருக்கு ரேடியேசன் வேண்டி இருக்கும், சிலருக்கு ட்ரான்ஸ்பிளான்ட் மாதிரி செய்ய வேண்டி வரும். ஆஷிஷை எக்ஸாமின் பண்ணிட்டு ஸ்பெசலிஸ்ட் உங்ககிட்ட இதை பத்தி டிஸ்கஸ் பண்ணுவார். நானும் பாலோ அப் பண்றேன், டோண்ட் வொர்ரி. நான் மொதலே சொன்ன மாதிரி உங்க மன தைரியம் தான் இப்ப பெரிய டானிக். இருங்க ஆஷிஷ கூட்டிட்டு வர சொல்றேன்" என்றார் டாக்டர்

"தேங்க்ஸ் டாக்டர்" என்றனர் இருவரும் ஒரே குரலில்

"மம்மி இங்க பாரு ரெண்டு சாக்லேட்" என்றபடி ஆஷிஷ் தன் அம்மாவின் மடியில் தாவ, அழுகைய கட்டுப்படுத்தியபடி பிள்ளையை அணைத்து கொண்டாள் ராஜி

"..... அப்படியே அந்த மான்ஸ்டர ஏமாத்திட்டு பிரின்ஸ் ஓடி வந்துட்டானாம். அவ்ளோ தான் கதை முடிஞ்சு போச்சு. ஒகே டைம் ஆச்சு தூங்கு கண்ணா" என ராஜி கதையை முடிக்க

"ஐ... சூப்பர்... நானும் பெருசானப்புறம் அந்த பிரின்ஸ் மாதிரி ஸ்ட்ராங் ஆய்டுவேன்... இல்ல மம்மி" என ஆஷிஷ் கேட்க, ராஜி மௌனமாய் மகனை அணைத்து கொண்டாள்

புத்தகம் வாசிப்பது போல் பாவனை செய்தபடி இருவரின் உரையாடலை கேட்டு கொண்டிருந்த சங்கருக்கும் பிள்ளை கூறிய வார்த்தையில் மனம் நெகிழ்ந்தது

"சரி போதும், குட் பாய் தானே ஆஷிஷ்... மம்மி ஒன் டூ த்ரீ சொல்லுவேனாம் அதுக்குள்ள ஆஷிஷ் குட்டி தூங்கிடுவானாம்" என பெற்றவள் கூற

தன் அம்மா சொன்னதே காதில் விழாதவன் போல் "மம்மி... என் பேருக்கு என்ன மீனிங்?" என அடுத்த கேள்வியை ஆரம்பித்தான் ஆஷிஷ்

"ஆஷிஷ்..." என ராஜி பொய்யை மிரட்டுவது போல் கூற

"ப்ளீஸ் மம்மி... இது மட்டும் தான், இனி கேக்க மாட்டேன், ப்ராமிஸ்" என மழலையில் கொஞ்ச

"ஆசீர்வாதம்னு அர்த்தம்" என்றாள் ராஜி

"அப்படினா?" என்றது பிள்ளை

"அப்படினா நீ ஸ்நீஸ்(தும்மல்) பண்ணும் போது உங்க மிஸ் ப்ளஸ் யு (bless you) சொல்லுவாங்கல்ல அதான்"

"ஐ... அப்ப என்னோட பேர் சொல்லும் போதெல்லாம் bless you சொல்றாங்களா? அப்போ எனக்கு டெய்லி எவ்ளோ blessings இல்ல மம்மி" என கண்கள் விரிய கேட்க, அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் ராஜி பிள்ளையை அணைத்து கொண்டு விசும்பினாள்

"ஏய்... ராஜி... " என்றபடி சங்கர் எழுந்து வந்தான்

"ஏன் மம்மி அழுகற?" என ஆஷிஷ் சோகமாய் கேட்க, அவனை தூக்கி மடியில் வைத்து கொண்ட சங்கர் "அது வந்து ஆஷிஷ் கண்ணா, மம்மி சாமிகிட்ட ஒரு வரம் கேட்டாங்களாம், சாமி அது தராம போயிடுமோனு பயந்துட்டு அழறாங்க உன் மம்மி" என சங்கர் கூற

"மம்மி, சாமி குடுக்கலைனா பரவால்ல, நான் பெரிய பையனாகி நெறைய சம்பாரிச்சு உனக்கு வாங்கி தரேன், அழாத" என பெற்றவளின் கண்ணீரை ஆஷிஷ் தன் பிஞ்சு விரல்களால் துடைக்க, ராஜிக்கு அழுகையை கட்டுபடுத்துவது இன்னும் சிரமமானது

"கொழந்த சொன்னத கேட்டல்ல ராஜி. எனக்கு நம்பிக்கை இருக்கு. அவன் பேர் சொல்லும்போதெல்லாம் கிடைச்ச ஆசிர்வாதங்கள் வீணாகாது. உன்னோட தைரியம் ஆஷிஷ்க்கு மட்டுமில்ல எனக்கும் டானிக். தைரியமா இருப்பியா?" என சங்கர் கேட்க

"இருப்பேன்... கண்டிப்பா இருப்பேன், இனி அழ மாட்டேன். என் செல்லகுட்டி பேர் மட்டுமில்ல அவனே எனக்கு கிடைச்ச ஆசிர்வாதம் தாங்க" என புன்னகையுடன் புது நம்பிக்கையுடன் கூறினாள் ராஜி

"ஐ... அழுத புள்ள சிரிக்குது கழுத பால குடிக்குது" என சங்கர் முன் போல் கேலி செய்ய, ஆஷிஷும் அதையே சொல்லி வாய் விட்டு சிரித்தான்

பிள்ளை சிரிக்கும் அழகில் பெற்றவள் மயங்கி நின்றாள்


(முற்றும்...)

avatar
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 35
Location : bombay

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum