"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 8:12 am

» பெருமழையும் சிறுதூறலும் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 11:28 pm

» டெஸ்ட் எடுக்காமலேயே எனக்கு கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
by அ.இராமநாதன் Yesterday at 11:22 pm

» எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
by அ.இராமநாதன் Yesterday at 10:29 pm

» கருகிய ரோஜாவும் கடைசிக் கேள்விகளும் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:14 pm

» எளிய பயிற்சி முறை என்பது முத்ரா பயிற்சிதாங்க....
by அ.இராமநாதன் Yesterday at 9:53 pm

» உடல் நலம் தரும் விரல் முத்திரைகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:50 pm

» உளியின் யுத்தம்! நூல் ஆசிரியர் : கவிஞர் பல்லவி குமார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:50 pm

» உலக தண்ணீர் தினம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:48 pm

» விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
by அ.இராமநாதன் Yesterday at 5:39 pm

» டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
by அ.இராமநாதன் Yesterday at 12:49 pm

» மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
by அ.இராமநாதன் Yesterday at 11:14 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 7:59 am

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Mar 21, 2018 10:59 pm

» நெருப்பின் தாகம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 20, 2018 9:06 pm

» நம் சமையல் அறையில்...
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 5:42 pm

» இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:51 am

» ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:38 am

» பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:35 am

» சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:33 am

» சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:32 am

» இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:31 am

» 2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:30 am

» ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:29 am

» அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:28 am

» பூ பூப்பதும் உலகச் செய்திதான்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 11:20 pm

» சின்னச் சின்ன சிந்தனைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:46 pm

» குடம் குடமாய் பாலாபிஷேகம் - எக்ஸ்பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 6:13 pm

» குழந்தையை தவறவிட்டவர் கையில் பத்திரமாக இருந்தது கைப்பேசி...!!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 6:08 pm

» உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:35 pm

» உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:32 pm

» மூலிகை உணவு
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:15 pm

» அவசரம் - X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:06 pm

» X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 4:53 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 3:30 pm

» ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 3:09 pm

» நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 2:59 pm

» படமும் செய்தியும்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 2:53 pm

» சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:04 am

» தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:00 am

» முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:00 am

» தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:43 am

» 20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:41 am

» ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:39 am

» தனிமையில் வாடும் பொம்மை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இராமசெயம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Mar 18, 2018 11:02 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines மரணத்திற்கும் மனமுண்டு... (தமிழரசி)

Go down

மரணத்திற்கும் மனமுண்டு... (தமிழரசி)

Post by udhayam72 on Fri May 10, 2013 4:23 pm

மரணத்திற்கும் மனமுண்டு...
(த
மிழரசி)


இராத்திரி சாப்பிட்ட தூக்கமாத்திரைகள் பலன் ஏதும் தராததால் எப்பவும் போல் காலையில் விழிப்பு வந்து எழுப்பிவிட்டது..

மரணம் கூட மனமிறங்கவில்லையே ஏன்?

இல்லை எடுத்த முடிவில் எந்த மாற்றமுமில்லை இந்த வாழ்க்கை வேண்டாம் தீர்க்கமான முடிவோடு வீட்டில் ஹாலில் இருக்கும் கிணற்றில் விழ தீர்மானித்து பாவாடை தாவணி சட்டை என எதுவும் விலகாமல் இருக்குமாறு ஏற்பாடு செய்து கிணற்றின் மேல் ஏறி நிற்கிறேன்.

கிணற்றை ஓட்டி மாடிக்கு போகும் வழி...மேல் குடியிருக்கும் கல்லூரி மாணவர்களில் ஒருவன் பார்த்துவிட்டு கேட்கிறான் ஏய் என்னப் பண்ணப்போற என்று?

இராட்டினத்திற்கு எண்ணை விடுவதும் இராட்டினத்தில் சிக்கி கொள்ளும் கயிற்றை எடுக்கவும் அடிக்கடி கிணற்றின் மேல் ஏறும் என்னை பார்த்த அவனுக்கு அன்று ஏனோ நான் அதற்க்காக கிணற்றின் மேல் நிற்கவில்லை எனத்தெரிந்தது போலும்... கிணற்றடியில் பூஜைக்காக கழுவ கொண்டுவரப்பட்ட வீட்டு பிள்ளையார் முருகன் சிலைகள் பூஜைக்கு தயார்பட்டுக் கொண்டிருந்த தாத்தா.... ஒருமுறை கிணற்றைப் பார்க்கிறேன் பாறைகள் பயமுறுத்துகிறது.. ஆழமான கிணறு.. ம்ம்ம்ம்ம்ம்.. எத்தனை ஆண்டு உன்னை சுற்றி ஒளிந்து விளையாடி இருப்பேன். இன்று உன்னுள் உறையப்போகிறேன் எனப்பார்க்கிறேன்..

திட்டவட்டமாக உணர்ந்து கொண்டான் அவன், நான் தற்கொலைக்காக மட்டுமே கிணற்றின் மேல் நிற்கிறேன் என்று?

ஹேய் என என் பெயர்ச் சொல்லி இறங்கு கீழே என்கிறான்... மெல்ல மரணப்பயம் என்னை சூழ இறங்கிவிடலாமா என யோசிக்கிறேன்... சே அவன் வேறு பார்த்துவிட்டான் ஏற்கனவே அவன் தந்த காதல் கடிதத்தை நிராகரித்து இருக்கிறேன்... அவன் காதலையும் இப்ப அவன் பார்த்திட்டான்... இப்ப குதிக்காமல் போனால் இன்னும் அசிங்கம் என அடுத்த நொடி தொபுக்கடீர் என குதித்தும் விட்டேன்....

எப்படி தெரியும் என உணர்த்த முடியவில்லை வெளியே தெரித்தது தண்ணீர்...
அம்மா கண்ணூ என அலறுகிறார்...
என் தாத்தா...என் செல்லமே என...
அம்மா, ஐய்யோ...................... குழந்தை கிணற்றில் விழுந்து விட்டதே என...
நடக்க இயலாத என் தெய்வம் பாட்டி...
எல்லாம் கேட்கிறது எனக்கு...

குபு குபுன்னு தண்ணீரில் மூழ்கிப்போன எனக்கு மூச்சு திணறுகிறது... முடியவில்லை... ஐய்யோ யாரவது காப்பாற்றுங்களேன்னு அலற எத்தனித்தாலும் முடியலை... தண்ணீரிக்குள் இருட்டு வேறு மரணிக்கும் நேரத்திலும் என்னை பயமுறுத்துகிறது... கிடுகிடுன்னு கிணற்றின் ஆழ்பகுதிக்கு சென்று அதே வேகத்தில் என்னை வெளிக் கொணர்கிறது தண்ணீர்... ஐய்யோ மரணமும் இத்தனை வலிக்குமா?

மீண்டும் உள்ளே இழுத்து செல்லப்படுகிறேன்... இன்னும் சாகவில்லையே தாங்க முடியலையே இந்த வலின்னு அழும் கண்ணீரை கண்டுக் கொள்ளவில்லை... மீண்டும் என்னை வெளிக் கொணர்கிறது... அங்கு என் அக்கா தங்கை தம்பி தாத்தா பாட்டி என் வீட்டில் குடியிருக்கும் சுமார் 14 குடும்பங்கள் எனக்காக கதறுவதும் கேட்கிறது... அதற்குள் எங்கள் வீட்டில் மாடியில் குடியிருக்கும் அத்தனை மாணவர்களும் கிணற்றில் சுமார் ஆறு ஏழு பேர் என்னால் வெறுக்கப்பட்டு முகம் சுழிக்கப்பட்டவர்கள் கிணற்றில்.... மூன்றாவது முறை நீருக்குள் செல்கிறேன் பழக்கி போனது எனக்கு அந்த மூச்சுதிணறல் சந்தோஷம் இதோ சாகப்போகிறேன்... மரணவலியும் உணர்ந்தாயிற்று என்னவர்கள் முகம் பார்க்க ஏங்க மூன்றாவது முறை வெளிக் கொணர்கிறது நீர்... எனக்கு உயிர் தானம் தந்து இதோ கத்துகிறான் அவன் `பிடி கயிற்றை` என்று... ம்ம்ம்ம் என்னால் முடியவில்லை அவனே நீரில் இறங்கி என்னை பிடித்து தூக்கி கைமாற்றப்பட்டு கரைசேர்க்கின்றனர் என்னை...

மரணம்...................மரணம்....................மரணம்....................
வாழ்வின் கடைசி வலி உணர்ந்து வெளிவருகிறேன்... லேசா நினைவு தவறுகிறது... வயசான என் பாட்டி அழுவது மட்டும் எனக்கு அந்த மரணத்தை விட வலித்தது ஐய்யோ என் குழந்தைக்கு என்ன ஆச்சின்னு....இப்ப நினைச்சாலும் உடம்பெல்லாம் நடுங்கும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் கொடூரம்..ம்மா என்னம்மா ஒத்துங்க ஆஸ்பிடல் போகனும் என அதிர்ச்சியில் உரைந்தும் அலறும் என் தந்தை....உண்மையிலேயே நான் அதிர்ஷ்டசாலி கரடு முரடான பாறைகள் கொண்ட அந்த கிணற்றில் எனக்கு காயம் ஏற்பட்டிருக்கும் என அனைவரும் அஞ்சி எனை ஆராய நினைவிழக்கிறேன் நான். எந்த சின்ன காயமும் இன்றி சுமார் நாற்பது நாட்களுக்கு மேல் சுய நினைவு தவறி இருந்தேன்.

எனக்கும் ஒரு நாள் திருமணம் ஆயிற்று...


ஒரு நாள் தங்கை சொல்கிறாள் அக்கா கிணற்றில் வீழ்ந்துட்டாங்க உங்களுக்கு தெரியுமா என?
எனக்குள் பயம் ஐய்யோ இவர் பதறிடப்போறார் என்று... என்னை அழைத்த அவர் கேட்டார் உன்னை எத்தனை பேர் தொட்டு தூக்கினார்கள் துணி ஏதேனும் விலகி இருந்ததா அப்போது என்று?
மீண்டும் ஒரு கொடூரவலி... அன்று உணர்ந்த மரணத்தை விட வலிப்பதை உணர்ந்தேன்... மரணத்தை விட மனிதன் ஆபத்தானவன் என்று...
எனக்காக தங்கள் உயிரை மதிக்காமல் கிணற்றில் குதித்த அவர்கள் எங்கே?
என்னை காப்பாற்ற என் பெற்றோர் என்னை குழந்தையாய் கிட்ட தட்ட ஒரு வருடம் வெளியே அனுப்பாமல் உடன் இருந்து பாதுகாத்த என் தங்கை தம்பி எங்கே?
இறைவன் படைப்பில் எல்லாரும் மனிதர்களே.... இப்பவும் தண்ணீர் இருட்டு என்றால் எனக்கு பயம் ஆனால் மரணத்திடம் பயமில்லை ஏனெனில் அதற்கு மனமுண்டு....

நான் ஏன் கிணற்றில் விழுந்தேன்னு சொல்லவேயில்லை இல்லையா? இவரை திருமணம் செய்ய வீட்டில் சம்மதிக்காததால் தான்?????????????????
avatar
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 35
Location : bombay

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum