"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்குமாறு உத்தரவு
by KavithaMohan Today at 1:47 pm

» மும்பையில் கல்வாரி என்று பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
by KavithaMohan Today at 1:42 pm

» இருமல்,சளி ஜலதோஷம் - மருத்துவம்
by அ.இராமநாதன் Yesterday at 10:44 pm

» இயற்கை மருத்துவம் (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Yesterday at 10:33 pm

» பகைவனும் நம்மை மதிக்க தொடங்குவான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:24 pm

» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Yesterday at 10:22 pm

» வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா
by அ.இராமநாதன் Yesterday at 9:39 pm

» விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
by அ.இராமநாதன் Yesterday at 9:36 pm

» வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
by அ.இராமநாதன் Yesterday at 9:05 pm

» உலகைச்சுற்றி - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 8:27 pm

» வங்கி கணக்கு – ஆதார் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 8:20 pm

» ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
by அ.இராமநாதன் Yesterday at 8:18 pm

» ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
by அ.இராமநாதன் Yesterday at 8:18 pm

» இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
by அ.இராமநாதன் Yesterday at 8:17 pm

» சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
by அ.இராமநாதன் Yesterday at 8:14 pm

» காவல் ஆய்வாளர் குடும்பத்திற்கு 1 கோடி நிவாரணம் - முதலமைச்சர் பழனிச்சாமி!
by KavithaMohan Yesterday at 7:04 pm

» அரசு மீது மக்கள் பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர் : மோடி
by KavithaMohan Yesterday at 6:59 pm

» அதிக நோய்களை பரப்பும் ஈக்கள்
by அ.இராமநாதன் Yesterday at 4:14 pm

» ரேக்ளா வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது... நீதிபதிகளின் தீர்ப்பில் முடிவு...
by KavithaMohan Tue Dec 12, 2017 6:34 pm

» புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் முதலமைச்சர் பழனிசாமி
by KavithaMohan Tue Dec 12, 2017 6:33 pm

» ரஜினியின் பிறந்த நாளில் வெளியாகிறது.. கஜினிகாந்த் பர்ஸ்ட்லுக்.!
by KavithaMohan Mon Dec 11, 2017 5:49 pm

» “ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
by KavithaMohan Mon Dec 11, 2017 5:34 pm

» குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
by KavithaMohan Mon Dec 11, 2017 5:29 pm

» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 12:07 pm

» சொறிந்து கொள்ள மிஷின்!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 10:04 am

» மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று...
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 10:01 am

» மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:55 am

» பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு...!!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:52 am

» மொபைல் ஸ்கேனர்
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:24 am

» குதிரையில் பர்ச்சேஸ்!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:20 am

» நாய் ஹாரன்!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:19 am

» ஜிக்ஸா சாதனை!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:17 am

» ராகிங்!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:11 am

» பெண் எனும் பிரபஞ்சம் கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Dec 10, 2017 3:44 pm

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat Dec 09, 2017 9:23 pm

» இனி பாத்திரத்தை பார்த்து உணவின் நிலை தெரிந்து சாப்பிடலாம்..!
by KavithaMohan Sat Dec 09, 2017 12:48 pm

» குஜராத்தில் பிரதமர் மோடி கண்ணீருடன் பிரச்சாரம்
by KavithaMohan Sat Dec 09, 2017 12:40 pm

» 1300 முறை அத்துமீறி தாக்குதல்: இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு
by KavithaMohan Sat Dec 09, 2017 12:31 pm

» ஜன.,1 முதல் ஓடிபி மூலம் ஆதார்- மொபைல் எண் இணைப்பு வசதி
by KavithaMohan Sat Dec 09, 2017 12:27 pm

» முக்கனி! நூல் ஆசிரியர் : கவிநயச் செல்வர் மன்னை பாசந்தி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Dec 09, 2017 10:56 am

» சென்னை மீனவர்கள் போராட்டம் எதிரொலி: மெரினாவில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!
by KavithaMohan Fri Dec 08, 2017 4:04 pm

» சேகர் ரெட்டியிடம் பணம்பெற்ற ஓ.பி.எஸ்., ? டைரி தகவலால் புதிய பரபரப்பு
by KavithaMohan Fri Dec 08, 2017 3:59 pm

» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
by KavithaMohan Fri Dec 08, 2017 3:58 pm

» தட்டை விஞ்ஞானி!
by அ.இராமநாதன் Fri Dec 08, 2017 10:33 am

» வாட்ஸ் அப் - நகைச்சுவை (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Fri Dec 08, 2017 10:17 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines மதிவாணா!!!

View previous topic View next topic Go down

மதிவாணா!!!

Post by udhayam72 on Fri May 10, 2013 4:30 pm

மதிவாணா!!!
(தமிழரசி)


விழிப்பு வர மெதுவாய் கண் திறந்து பார்க்க மணி மதியம் 3.40...
மதி தன்னை எனக்கு போர்த்தி படுத்திருந்தான்... சில்லு சில்லாய் சிதறிய செல் போன்... இறைந்து கிடந்த காய்கறிகள்... பலவருடங்களுக்கு பிறகு அந்த ஸ்பரிசம் பிடித்திருந்தது... இன்னும் நெருங்கி அனணத்துக் கொண்டேன். தூங்கிக் கொண்டிருந்த அவனை ரசிக்க தோனும் போதே நினைவுகள் பின்னோக்கி சென்றது...

அர்விந்த் அப்பா, என் கணவர், இறந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வேலைக்கு போகனும் என்ற கட்டாயம்.

இப்ப அர்விந்துக்கு வயது நான்கு... பச்சைபுள்ளையை பிரியவும் மனமில்லை... வயிற்றுக்காக மட்டுமல்ல அவன் எதிர்க்காலமும் என் கையில் தானே... ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேந்தேன்... சென்றுக் கொண்டிருந்தது வாழ்க்கை... இந்த சூழலில் தான் எங்க கம்பெனியின் வேறு கிளையில் பணி புரியும் மதிவாணன் அங்கு வேலை நிமித்தம் வர அவன் எனக்கு அறிமுகமானான்.

கல்வி தகுதி... இன்னும் படித்துக் கொண்டேயிருக்கிறான் அவன் அறிவுக்கு எட்டியதை எல்லாம்... அழகு, அதை அவன் பொருட்டாக எண்ணியதாய் தெரியவில்லை... வசதி, வானமே எல்லை... என இவன் ஒரு ஆச்சிரியக்குறி அனைவருக்கும்... பலரும் பல கருத்துக்கள் சொல்வாங்க... முரடன், கோவக்காரன், நேர்மையானவன், பொய் சொல்ல பிடிக்காதவன், என...

என்னை அவனுள் பெரிசாய் ஈர்த்தது அவனுடைய திமிர்... மாதமொரு முறை அல்லது இருமுறை எங்கள் அலுவலகம் வருவான். தானாய் பூக்கும் புன்னகையை என் மேல் சிதறவிட்டு செல்வான். நாளடைவில் அலைபேசியில் அளவலாவத் தொடங்கினோம். தப்பித் தவறிக்கூட என் மேல் அவன் பச்சாதாபப் பார்வை வீசவில்லை. பரிதாபப்படவில்லை. சந்தர்ப்பவாதியாய் அவன் என்னிடம் நடந்து கொண்டதேயில்லை.

இவன் நட்பு வீடு வரை வர வீட்டில் அம்மா அப்பா கேட்டாங்க... "மதியை கல்யாணம் பண்ணிக்கிறயாமா?". நான் பொட்டு வைப்பதையோ, பூ வைப்பதையோ, என் உடைகளில் கட்டுப்பாடோ அம்மாவோ அப்பாவோ என் கணவரின் குடும்பத்தில் யாரும் எனை தடுக்கவில்லை. அலுவலகத்திலும் என்னை யாரும் தனித்து பார்த்ததில்லை... கால மாற்றமா இருக்கலாம்... இப்படி வீட்டில் கேட்டதும் ஏன் என்னை சந்தேகப்படறீங்களான்னு கேட்க... இல்லை, மதி தான் கேட்கச் சொன்னான் என்றனர். அர்விந்தும் ரொம்ப ஒட்டுதலா இருக்கான் அவனிடம்... ஆச்சிரியம் இல்லை எனக்கு... இது தான் மதி. கண்டிப்பா என் மேல் எந்த வித கரிசனத்துக்காக கேட்டிருக்கமாட்டான்.

பழகிய வரை அவனை நல்லாத் தெரியும் எனக்கு... அவன் தங்கைக்கு திருமணமாகி விட்டதால் வீட்டிலும் எந்த பிரச்சனையும் இல்லை... நெஞ்சழுத்தக்காரன் சில நாள் நேரமாகிவிட்ட போது கூட தன் வண்டியில் என்னை அலுவலகத்திலோ வீட்டிலோ விட்டது இல்லை. நான் கேட்ட போது கூட ஆட்டோ கூப்பிடறேன் போய் சேர்ன்னு தான் சொல்வான். ஒன்னறை ஆண்டு பழக்கம் அவன் கண்களில் காதலை பார்த்ததேயில்லை... வீட்டுக்கு வந்து அர்விந்தை வெளியே அழைத்து செல்லும் போது மனசுகுள்ள ஆசையா இருக்கும்... நீல நிறகாட்டன் சேலையில் மல்லிகை பூ வச்சிகிட்டு வண்டியில் இவன் பின்னால் உட்கார்ந்து தோளில் கைப் போட்டு போகனுமுன்னு... ராஸ்கல் இவனுக்கு இப்படியெல்லாம் இருந்திருக்குமோ என்னவோ இதுவரை வெளிக்காட்டிக் கொண்டதில்லை... ஆனால் இப்ப வீட்டில் வந்து இப்படி சொல்லியிருக்கான். மறுக்கச்சொல்லி ஒரு நொடி கூட மனசில் தோனாமல் உங்களுக்கும் அவனை பிடிச்சிருக்கான்னு கேட்க எனக்கு பிடிச்சிருக்குன்னு வீட்டில் தெரிஞ்சிகிட்டாங்க...

கல்யாண நாள் நிர்ணயிக்கப்பட்டது ஊரை கூட்டி கல்யாணம் பண்ணி என்னை தியாகியாவும் அவளை பலர் போகட்டும் பாவமுன்னு தேவையான்னு பேசுவதை நான் விரும்பலை..ரெண்டு வீட்டு பெரியவங்க என் அவள் நண்பர்கள் வந்தால் மட்டும் போதும் நம்ம வீட்டிலேயே கல்யாணம் வெச்சிக்கலாம். அர்விந்ததை கூட்டிகிட்டு கட்டின புடவையோட அவ வந்தா போதும் என சொல்லிவிட்டு போனான்..பேசும் போது என்னை உரிமையாய் அவன் அவ ன்னு சொன்னது எனக்கு பிடித்திருந்தது என்னிடம் அவன் எடுத்து கொண்ட உரிமை தெரிந்தது.என் முதல் திருமணம் காதல் திருமணம் வரிந்து வழிந்து காதலிச்சிட்டு வந்த அவர் கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்ன வந்து எங்க வீட்டு கெளரவத்துக்கு ஏத்தமாதிரி நகை போட்டு வான்னு சொன்னது இப்ப மீண்டும் கேட்டது...

திருமண நாள் வீட்டிலேயே எளிமையா அலங்கரிக்கப்பட்டு அவன் வாங்கி தந்த பச்சை காட்டன் பட்டு புடவையில் நான் ... கண்டிப்பா சொல்லியிருந்தேன் எந்த நகையும் போட்டுக்க மாட்டேன்... திருமாங்கல்யம் மட்டும் தங்கத்தில் இருந்தால் போதும் என்று... அழகாய் இருந்தான் வெள்ளை அரைக்கை சட்டை, வெள்ளை வேட்டியில்... வெட்கம் வரவில்லை எனக்கு... ஒருவேளை வெட்கப்படத் தெரியலையா...? இரண்டாவது திருமணம் என்பதாலான்னும் தெரியலை... இயல்பா வந்து என் பக்கம் அமர்ந்த அவன் கண்களை பார்க்க ஆசைப்பட்டேன் முதல் முதலாய்... திமிர் பிடிச்சவன் என்னை கண்டுக்காத மாதிரி "எத்தனை நாள் லீவு சொன்ன ஆபீஸுக்கு" என கேட்க பதில் சொல்லாமல் முறைத்தேன்... நடுவில் வந்த அர்விந்துக்கு என்ன புரிந்ததோ இல்லையோ தெரியலை அம்மா ஈவனிங் நான் மதி கூட போய் அந்த ரிமோட் கார் வாங்கப் போறேன்னு சொன்னான். சரி போங்கன்னு சொன்னேன். சுமார் முப்பது நாற்பது பேர் மட்டுமே இருந்ததால் ஒரு பங்ஷன் மாதிரி இருந்தது திருமணம். என் கழுத்தில் மதி தாலிகட்டி மாங்கல்யத்திற்கு பொட்டு வைக்க... ஒவ்வொரு நாளும் காலையில் குளித்து சாமிக்கு விளக்கேத்தி மாங்கல்யத்திற்கு குங்குமம் வைப்பேன்... அதை எதேச்சையா பார்த்த அவர் ஒரு நாள், "நானிருக்கேன்னு பார்த்துட்டு நடிக்கிறயா" எனக் கேட்டது அந்த நொடி நினைவுக்கு வர... நீ அப்படி இருக்க மாட்ட தானடான்னு கண்களால் கேட்டேன்... என்னை தனதாக்கிய சந்தோஷத்தில் இருந்தான் மதி... இரவு எந்த ஏற்பாடும் வேண்டாம் என மறுத்த மதியை பார்த்து முதல்முதலா பயந்தனர் என் பெற்றோர்... நாங்க இன்னும் ரெண்டு நாளில் தனியா போறோம். மத்தது அப்பறம் பாத்துக்கலாமுன்னு சொல்லி அர்விந்த் ஸ்கூல் கிட்ட வீடு பார்த்திருக்க அடுத்த ரெண்டு நாளில் புதுவீட்டுக்கு வந்துட்டோம் நானும் மதியும் அர்விந்தும்.

அன்றிரவு அர்விந்த் தூங்கியதும் என்பக்கத்தில் வந்து அமர்ந்து என் கையை பிடிச்சிகிட்டு சொன்னான்... இங்க பார்டா வேலைக்கு போறதும் போகாததும் உன் விருப்பம்... உனக்கு என்ன தோனுதோ அத பண்ணு... என் கருத்துன்னு நான் எதையும் உன்மேல் திணிக்கமாட்டேன். ஆனால், இப்ப குழந்தைக்கு தேவை அரவணைப்பு. அவன் வர நேரம் நீ விட்டில் இருந்து அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து, விளையாட்டு காட்டி, அவனோட இருந்தால் நல்லதுன்னு நான் நினைக்கிறேன்னு சொன்னவனை விழி உயர்த்தி பார்க்கிறேன்... முழித்துக் கொண்டிருப்பதால், அது கனவும் அல்ல... சரி வேலையை விடலாமா வேணாமான்னு யோசிச்சிகிட்டே தூங்கப்போயிட்டேன். காலையில் ஒரு முடிவோடு சொன்னேன்... சரி நான் அப்புறம் போய் ரிசிக்னேஷன் லெட்டர் கொடுத்திடரேன்னு சொன்னேன். மதி போலாமான்னு ஸ்கூல் பேகோடு அர்விந்த். ஹேய் இங்க வா இனிமேல் மதின்னு கூப்பிடக்கூடாது சரியான்னு சொல்லும் போதே இடைமறிக்கிறான்... ஏன் அப்படி சொல்ற அவன் குழந்தை அவன் விருப்பத்துக்கு விடு... உனக்காகவும் மத்தவங்க கேப்பாங்கன்னும் அவனை மாத்தாதேன்னு என்னை கடிந்து கொண்டான்.


எனக்கு ரெண்டாவது திருமணமா இருந்தாலும் மதிக்கு இது முதல் மணம் தானே... ஆனாலும் என்கிட்ட எப்பவும் போல தான் இருந்தான்... நேரம் கிடைக்கும் போது வெளியே போனோம் மூவரும்... நீல நிறகாட்டன் சேலை மல்லிக்கைபூ கனவு பலிக்க சொல்லவண்ணா சந்தோஷம்... தொட்டு பேசும் அந்த சில கனங்கள் ரொம்ப பிடிச்சிருந்தது. டீ கொடுக்கும் போது முத்தம் கொடுப்பான்... அர்விந்த இருந்தால் உனக்கொன்னு அம்மாவுக்கு ஒன்னுன்னு சொல்லி சமாளிக்கும் அவன் சமத்து எனக்கு ரொம்ப பிடிக்கும். சாப்பாடு போடும் போது எனக்கு ஒரு வாய் அர்விந்துக்கு ஒரு வாய் ஊட்டிவிட்டு தான் சாப்பிடுவான்... தன்னோடு என்னை சாப்பிடசொல்லி வற்புறுத்தினாலும் அவனுக்கு பரிமாறுவது எனக்கு பிடித்திருந்தது. வேலை நேரம் போக எங்களோடு தன் நேரத்தை செலவழிப்பான்...
ஆனால் என்னை கடுப்பேத்தும் விஷயம் என்று பார்த்தால் அவன் ப்ரண்ட்ஸ் மற்றும் கொலிக்ஸ் அதுவும் தோழிகள் பேசினால் அப்படியே நெருப்பாய் மாறிடுவேன் எதார்த்தமாயும் வேலை நிமித்தம் மட்டுமே அவர்கள் பேச்சு இருந்தாலும் உடனே எனக்கு தலைவலி வந்திடும் நடவடிக்கை மாறிவிடும். ஆனாலும் எடுத்து சொல்லவும் கேட்கவும் தயக்கம். இது தெரியுமோ, திருடன் தெரிந்தும் தெரியாமல் இருப்பானோ தெரியாது.

தினம் இரவு மட்டும் இன்னும் தனிமையில் தான்... அவனும் அதை கண்டுக்கவில்லையா... இல்லை, என்னை வற்புறுத்த விரும்பலையா தெரியலை. நான் ஏற்கனவே அடிபட்டவள்... அதனால், பயமாயிருந்தது. வீட்டில் எத்தனை உறவினர் இருந்தாலும் என்னை கட்டாயப்படுத்தும் என் கடந்த காலம் நினைவுக்கு வந்தது. காலையில் எழுந்து வந்தவங்களும் கேட்பாங்க இங்கிதம் இல்லாமல் 12 மணிக்கு மேல் உன்னைய காணோமே என்று? இப்படி என் இறந்தகால துன்பங்கள் என்னை அவனிடம் நெருங்க துணிவின்றி செய்துவந்தது... இருந்தபோதும் பல நேரங்களில் அவனை கட்டிப்பிடிச்சி நான் சொல்லும் ஐ லவ் யூக்களில் அவன் சிலிர்த்து போவான். உதடு தீண்டி அவன் முத்தமிடும் போதெல்லாம் செத்து பிழைக்க நேரிடும். இப்படி ஒன்பது மாதங்கள் கடந்து போக...


இன்று காலை மார்க்கெட் போன என்னை என் உறவினர் ஒருவர் பார்த்து எப்படி இருக்க... மதியை கட்டிக்க நீ கொடுத்து வச்சிருக்கனும்... யாரு இருக்கானுங்க இந்த காலத்தில இப்படி... உன்னைய பத்தி தெரிஞ்சும் கட்டிக்கிட்டு ராணி மாதிரி வச்சிருக்கானாமேன்னு!!! கேட்க... அந்த வார்த்தையில் நெருப்பும் எரிச்சலும் பொறாமையும் கலந்திருப்பதை என்னால் உணரமுடிந்தது. யாரோ ஒருத்தி அறிந்ததை, நான் எப்படி உணராமல்... என்றோ நடந்தவைகளை இவனோடு ஒப்பிட்டு பார்த்து என்னை ஏமாற்றிக் கொண்டும் என்னை உயிராய் நேசிக்கும் அவனையும் ஏமாற்றிக் கொண்டும்...
இன்று லீவ் போட்டு வீட்டில் தான் இருக்கான். எனக்கு ஏனோ உடனே அவனை பார்க்கனும் போல இருக்கவே வாங்கிய காய்கறி வரை போதுமுன்னு வீட்டுக்கு திரும்ப... பெட்ரூமில் லேப்டாப்பில் வேலை செய்துக்கொண்டே அலைபேசியில் மதி... "இல்ல கீது அத நான் வந்து அனுப்பறேன். நீ மத்த வேலையை மட்டும் முடிச்சிட்டு எனக்கு போன் பண்ணு".

எனக்கு அப்படியே ஓடி வந்த அந்த ஆசையில் மண் விழுந்த மாதிரி... எனக்கு அவன் மேல் சந்தேகமில்லை... என்னை மாதிரி யாரும் அவனை நேசிக்க கூடாது என்ற பேராசை மத்தவங்க அவனை நேசிப்பதை கூட என்னால் தாங்க முடியாது... அவன் எனக்கானவன் எனக்கே எனக்கானவன். கோவம் பொங்க அப்படியே வீசியெறிந்தேன் காய்க்கறி கூடையை... வேகமா போய் கையிலிருந்த அலை பேசியை வாங்கி வீசியெற சில்சில்லாய் உடைந்தது...


கண்களில் கண்ணீர் எட்டிப்பார்க்க ஜன்னல் ஓரம் போய் வெளியே வெறிக்க... பின்னால் வந்து என் தோளில் கை வைத்து என்னை தன் பக்கம் திருப்பி "என்னடா என்ன ஆச்சி" என்றவன், என்னை அழைத்து போய் கட்டிலில் அமர்த்தி சொன்னான்... நீ வேற அவங்க வேற இதையும் அதையும் போட்டு குழப்பிக்காதே... இது நம்பிக்கை ஒப்பந்தம் இதை மீறுவது கடைப்பிடிப்பது அவரவர் மன நிலை பொருத்தது நமக்குன்னு நிறைய கடமை பொருப்பு இருக்கு என் மீதானா உன் காதல் மட்டும் உன் வாழ்க்கையில்லை. வாழ்கையில் ஒரு பகுதி காதல்... காதலே வாழ்க்கையில்லை. எல்லாத்துக்கும் மீறி நான் உன்னை நேசிக்கிறேன் உன்னை மட்டுமே நேசிக்கிறேன்.. உடலிருந்து பார்க்கும் காதல் வேறு, இதயத்திலிருந்து பார்க்கும் காதல் வேறு உன் காதலை நான் குறை கூறவில்லை... நான் உனக்கானவன்டி என்று அவன் சொல்ல... அதிலும் முதல் முதலாய் என்னை `டி` சொல்லவும் வெற்று மார்போடு இருந்த அவனை அப்படியே இறுக தழுவிக் கொள்ள... அவன் கரங்களும் என்னை அப்படியே அணைத்துக்கொள்ள... மாறி மாறி முத்தமிட்டு மயங்கியபடி நீ வேனும்டா என அவன் காதில் வெட்கமாய் கிசுகிசுத்தேன் என்னிலை மறந்தவளாய்...

அவன் தன்னை தரத் தர என் மதிக்குள் மெல்ல மெல்ல மூழ்கிப் போனேன்... மதி என்னும் நானும்... அப்போதும் நீ எனக்கு மட்டும் தாண்டா என சொல்லிக்கொண்டே..


இதோ கண்விழிக்க என்னவனை பார்க்கிறேன்... வாழ்க்கையை ரசிச்சி வாழ பழகி கிட்டா வாழ்க்கைக்கு வயசாகாதுன்னு சொன்னவனை அவன் அசந்து துங்கும் அழகை ரசித்துக் கொண்டே... ராட்சசா எங்கிருந்து வந்தடா எனக்காக என நினைத்துக் கொண்டேன்... இழந்த ஒன்பது மாத வாழ்க்கை பெரிதாய் தெரியவில்லை... இந்த தருணம் உயிருள்ளதாய் வாழும் நான், வாழும் வரை.... சில உண்மைகள் புரிந்தது. புரிதலில் மட்டுமே உள்ளது சில சிதறுதலும் சிறப்பாய் வாழ்வதும் என்று...
avatar
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 35
Location : bombay

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum