"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அன்று சொன்னவை இன்று நடக்கிறது
by கவிப்புயல் இனியவன் Today at 1:56 pm

» எதை விட்டுக் கொடுப்பது? – தென்கச்சி கோ. சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Today at 11:38 am

» நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
by அ.இராமநாதன் Today at 11:29 am

» ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
by அ.இராமநாதன் Today at 11:27 am

» லூயி பாஸ்டர்
by அ.இராமநாதன் Today at 11:25 am

» அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்
by அ.இராமநாதன் Today at 11:22 am

» புற்று நோயால் பாதித்த 5 வயது சிறுமியின் திருமண ஆசையை நிறைவேற்றிய பெற்றோர்
by அ.இராமநாதன் Today at 11:20 am

» பெண்களுக்காக பொது கூட்டம் நடத்தப் போறாராம்...!!
by அ.இராமநாதன் Today at 10:55 am

» மனைவிக்கும் டாக்டர் பட்டம் வேண்டுமாம்…!!
by அ.இராமநாதன் Today at 10:46 am

» பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 8:29 pm

» நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
by அ.இராமநாதன் Yesterday at 8:28 pm

» ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
by அ.இராமநாதன் Yesterday at 8:27 pm

» ‘உள்ளுவதெல்லாம்’ நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Jun 22, 2017 9:55 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Thu Jun 22, 2017 9:50 pm

» வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் யாழ் சு. சந்திரா, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி !
by eraeravi Thu Jun 22, 2017 9:06 pm

» இரா. இரவியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் யாழ் சு. சந்திரா, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி !
by eraeravi Thu Jun 22, 2017 9:06 pm

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:50 pm

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:47 pm

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:46 pm

» கடன் பாட்டு…!!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:43 pm

» பிசுக்கு – பொசுக்கு (வீட்டுக்குறிப்புகள்)
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:33 pm

» நீட் எக்ஸாம்…
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:32 pm

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:31 pm

» நம்பிக்கை – குட்டி கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:31 pm

» பழமொழிகள்…
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:29 pm

» நண்பரால் நன்மை பலவுண்டு – கவிதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:21 pm

» சீற்றம் – கவிதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:20 pm

» படிக்கணும் நாமும் படிக்கணும்
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:20 pm

» அன்பு போர்வை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:19 pm

» சாதனைக்கு மட்டும் அல்ல
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:19 pm

» வாசகர் கவிதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:17 pm

» எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:51 pm

» நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:50 pm

» புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:50 pm

» டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:49 pm

» ரேஷன் கார்டு கதைகள்…!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:49 pm

» ஓங்கி அடிச்சா…!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:48 pm

» ஆறு வித்தியாசம்…
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:48 pm

» சிரிக்கலாம்வாங்க..
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:47 pm

» உன் லவ்வர் கிரிக்கெட் பிளேயரா…?
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:46 pm

» உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:46 pm

» நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:46 pm

» இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:45 pm

» தங்கரதம் ! திரைப்பட விமர்சனம்; கவிஞர் இரா .இரவி ! இயக்கம்; பாலமுருகன் ! நடிப்பு ;வெற்றி !
by eraeravi Tue Jun 20, 2017 8:07 pm

» தத்துவம் மச்சி தத்துவம்
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 2:40 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மனசுக்குள் சந்தேகம்

View previous topic View next topic Go down

மனசுக்குள் சந்தேகம்

Post by udhayam72 on Sun May 12, 2013 3:58 pm

மனசுக்குள் சந்தேகம்

"என்னால நம்ப முடியலே...." என்றேன் உரக்க. கையிலிருந்த ஆங்கில பெண்கள் இருவார இதழைக் கீழே வீசினேன். மஞ்சுளா தண்ணீர்ச் சொம்பை அதன் இடத்தில் வைத்து விட்டு என் அருகில் கட்டிலில் வந்து அமர்ந்தாள்.

"எதை நம்ப முடியலே."

"உள்ளே பிரிச்சுப் பாரு....பர்சனல்னு ஒரு பகுதி வருதில்லே....வாசகர்கள் தங்கள் பிரச்னையைச் சொன்னா, பத்திரிகைகாரங்க
பதில் தராங்களே..."

"அதுல என்னவாம்?"

"ஒருத்தி எழுதியிருக்கா.....ஆங்.....இதுதான்...இதைப்படி"

மனசுக்குள் படித்தாள் மஞ்சுளா.

கணவன் அப்பெண் மேல் உயிரையே வைத்திருக்கிறான். இரண்டு குழந்தைகளும் இருக்கிறது. ஆனால், இவளுக்கு இன்னொரு நபர் மேல் காதலாம், மறக்க முடியவில்லையாம். ஒரு வாசகி தன் பிரச்னையை எழுதி இருந்தாள்.

"இதுக்கு என்ன?"

"என்ன அநியாயம்..இந்த மாதிரி நல்ல குடும்பம் அமைஞ்சும்....ஒருத்தி வேறொரு நபரை லவ் பண்றதா....ஷிட்...."

"தப்புதான்"

"உதைக்கணும்......கட்டிவச்சு தோலை உரிக்கணும். நடுரோட்டுல நாயா சுடணும்."

"ரொம்ப உணர்ச்சிவசப்படாதீங்க." என்றாள் கேலியாக.

"நெஜம்மாவே எனக்கு எரிச்சலா இருக்கு.."

"சாரிங்க....ஆனா ஒரு விசயம், இதுல முழு விவரமும் இருக்கிறதா எனக்குத் தோணலே.'

"என்ன சொல்றே." என்றேன் புரியாமல்.

"கணவர் அன்பாவே நடக்கட்டும். ஆனா, அந்தப் பெண்ணுக்கு சில ரசனைகள் இருக்கலாம்....சில திறமைகள் இருக்கலாம்..அதை ரசிக்கிற ...வளர்க்கிற குணம் அவருக்கு இல்லாமே அதனாலே உள் மனசு ஏங்கி வேறொரு ரசனையான நபரகிடைச்சதும் அன்பாயிருச்சோ என்னவோ.."

"அடி செருப்பாலே...இப்படி ஒவ்வொரு விசயத்துக்கும் ஒவ்வொரு ஆளா வச்சுக்க முடியுமா? பொதுவா புருசன் நல்லவனா...அன்பானவனா இருக்கானான்னு பார்த்தா... போதாதா..."

"அப்படி இருக்கலாமோன்னு நான் நினைச்சதைச் சொன்னேன். ஆனா, நீங்க சொல்ற மாதிரி இது தப்புத்தான்..." என்றாள் மெல்ல.

என் மனதைப் பேய் பிடித்துக் கொண்டது.

அருகில் படுத்து நிச்சிந்தையாய் உறங்கிப் போனவளை சந்தேகமாய் உற்றுப்பார்த்தேன். நானும் கூட நல்லவனாக...அன்பானவனாக மட்டுமே இருக்கிறேன். இவளுடைய ரசனைகளைப் புகழ்வதில்...வளர்ப்பதில் ஏதாவது அக்கறை காட்டி இருப்பேனா...

ஒருவேளை அது எல்லாம் இவள் மனசையும் பாதித்திருக்குமோ...
இவளும்...அந்தப் பத்திரிகை வாசகி மாதிரி வேறு ரசனையான நபரை...ச்சே....என்ன மனசு இது!...அபத்தமாய்க் கற்பனை செய்துகொண்டு...

தூக்கம் வராமல் புரண்டேன்.

காலையில் கண்கள் 'ஜிவ்'வென்று இருந்தன. இரவில் சாரியான தூக்கமில்லை. தேவையில்லாத மனசுக் குழப்பம்தாம். ஆனாலும் ஆட்டி வைக்கிறதே...

"என்னங்க, இன்னைக்குத்தானே உங்க நண்பரும் அவர் மனைவியும் நம்ம வீட்டுக்கு சாப்பிட வர்றாங்க..."

தலை குளித்திருந்தாள். ஈர முடியை நுனியில் முடிச்சிட்டு.....புசு புசுவென்றிருந்த லெமன் கலர் காட்டன் சாரியில்....வாவ்!...என்ன அழகு..!.

"இங்கே வாயேன்!"

"ம்ஹூம். நேரமில்லை...மணி ஏழரை...இப்பவே சமையல் ஆரம்பிச்சாதான் ஒன்பது மணிக்குள்ள முடிச்சிட்டு மகாபாரதம் பார்க்கலாம்.."

"புருசனைக் காட்டிலும் டிவிதான் முக்கியமா..."

"உளறாதீங்க, சமைக்க வேணாமா...அவங்களும் ஒன்பது மணிக்கே வந்திருவாங்களே..."

தன்னுடைய மனைவியுடன் இன்று வருகிறான் மணி. ரொம்ப நெருங்கிய நண்பன். போன மாதம்தான் திருமணம் ஆனவன்.

அவசரமாய் ஷேவிங் செய்து....குளித்து....ரெடியானதும்....மணியும், மணியின் மனைவியும் வரவும்...சாரியாக இருந்தது.

"வாங்க......வாங்க..." இருவரும் வரவேற்றோம்.

சம்பிரதாய பேச்சுவார்த்தைகளுக்குப் பின்....டிவியில் பாரதம் பார்த்துவிட்டு சாப்பிட அமர்ந்தோம்.

"சமையல் பிரமாதம். இவளும் இருக்காளே" என்றான் மணி.

அவன் மனைவி முகம் சட்டென்று சுருங்கியது.

சாதாரணமாகவே பளிச்சென்று பேசிவிடுவான் மணி. மற்றவர்களிடமாவது தொலைகிறது...தாலிகட்டி ஒரே மாதத்திலா...மனைவிக்கும் விமர்சனம்....எனக்கே என்னவோ போலிருந்தது.

ஏதோ பேச்சை திசை திருப்பி...சாப்பாடு ஆனதும் கொஞ்ச நேரம் பேசி ....அவர்களை வழி அனுப்பினோம்.

"ரொம்ப பெருமையா இருக்குமே இப்ப உனக்கு. உன் சமையலை ஆகா ஓகோன்னு புகழ்ந்துட்டு போனானே..."

"இல்லீங்க..." என்றாள் மெதுவாக.

"என்ன?"

"சமையல்..மத்த விசயம் எல்லாம் அப்பப்ப தேவையைப் பொறுத்துதாங்க...
ஆனா....தாலி கட்டின மனைவியும் ஒரு மனுஷிதான்! ரத்தமும், சதையும் கூடவே மனசும்....உணர்ச்சியுமா இருக்கிற ஜீவன்தான். அவ மனசு புண் படற மாதிரி பேசக் கூடாதுன்னு ஒரு அடிப்படை ஞானம் வேணாமா ஒரு மனிதருக்கு....அது புரியாத ஆளை என்னன்னு சொல்றது....
அந்த விசயத்துல நான் ரொம்ப கொடுத்து வச்சவ....என்னை எப்பவுமே நீங்க விட்டுக் கொடுத்து பேசினதில்லே...என் மனசு வருத்தப்படற மாதிரி நடந்ததில்லே...."
என்றாள் கண்களில் உண்மை பளிச்சிட.

பளீரென்று மனசுக்குள் மேகம் விலக....இழுத்து அணைத்துக் கொண்டேன்.
avatar
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 35
Location : bombay

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum