"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கற்றாழை சாறு பருக வைத்தாய்....!!
by அ.இராமநாதன் Yesterday at 8:39 pm

» பழைய காதலி இன்னும் மாறவேயில்லை...!!
by அ.இராமநாதன் Yesterday at 8:31 pm

» சரியான வாழ்க்கை முறை...(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Yesterday at 8:26 pm

» காகிதம் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 12:58 pm

» அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
by அ.இராமநாதன் Yesterday at 12:56 pm

» வனநாயகம் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 12:56 pm

» மதுக்கடை ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 12:55 pm

» மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
by அ.இராமநாதன் Yesterday at 12:54 pm

» ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
by அ.இராமநாதன் Yesterday at 12:49 pm

» ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
by அ.இராமநாதன் Yesterday at 12:48 pm

» அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
by அ.இராமநாதன் Yesterday at 12:48 pm

» அரசு பெட்ரோல் பங்க்குகளில் மலிவு விலை மருந்தகம்
by அ.இராமநாதன் Yesterday at 12:46 pm

» ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு
by அ.இராமநாதன் Yesterday at 12:45 pm

» வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
by அ.இராமநாதன் Yesterday at 11:53 am

» இன்று முதல் மழை குறையும்: வானிலை மையம்
by அ.இராமநாதன் Yesterday at 11:49 am

» வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. -தீபா
by அ.இராமநாதன் Yesterday at 11:48 am

» முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்
by அ.இராமநாதன் Yesterday at 11:47 am

» இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு: சீனா பாய்ச்சல்
by அ.இராமநாதன் Yesterday at 11:46 am

» வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
by அ.இராமநாதன் Yesterday at 11:45 am

» மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
by அ.இராமநாதன் Yesterday at 11:45 am

» இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை
by அ.இராமநாதன் Yesterday at 11:44 am

» அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
by அ.இராமநாதன் Yesterday at 11:43 am

» கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 11:41 am

» மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 11:40 am

» ‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 11:39 am

» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by அ.இராமநாதன் Yesterday at 11:38 am

» ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
by அ.இராமநாதன் Yesterday at 11:37 am

» காலை 8 மணிக்கு தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தும் கிராம மக்கள்
by அ.இராமநாதன் Yesterday at 11:35 am

» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:39 pm

» நிஜம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:32 pm

» லவ் டெஸ்ட் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:31 pm

» ஏக்கம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:29 pm

» நாயகன், கையெழுத்து – கவிதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:23 pm

» முடிவு எடுத்தல் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Aug 17, 2017 8:46 pm

» அவசரப்படாதே மச்சி!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:32 pm

» பாப்பி – நகைச்சுவை
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:27 pm

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்…?
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:26 pm

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:22 pm

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:21 pm

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:20 pm

» கடல் போல் இருக்கும் மனைவி!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:19 pm

» நமக்கு வாய்த்த தலைவர்
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:18 pm

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:02 pm

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 8:50 pm

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 8:48 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines கைக்கு எட்டினது....

View previous topic View next topic Go down

கைக்கு எட்டினது....

Post by udhayam72 on Sun May 12, 2013 4:04 pm

கைக்கு எட்டினது....

"சாமி நெனைச்சா என்ன கேட்டாலும் தருவாராப்பா?"

அசோகனின் கால்களைப் பற்றிக் கொண்டு கேட்டது சிந்துஜா. இரண்டரை வயது.

"ம்..."

"நெஜம்மாவா...". குழந்தையின் பார்வையில் கொஞ்சம் சந்தேகம், கொஞ்சம் எதிர்பார்ப்பு.

"ஆமாம்மா....சாக்லேட்.....பிஸ்கட்....பொம்மை....யானை...எது கேட்டாலும் தருவார்."

சில வினாடிகள் யோசனைக்குப் பின் கேட்டாள் சிந்துஜா.

"அம்மாவை?"

எதிரில் அமர்ந்திருந்தாள் நந்தினி. அசோகன் முகத்தில் கவலைக் கோடுகள். வார்த்தைகள் திணறின.

"ஒரு நிமிஷம் எதுவும் பேச முடியலே என்னாலே....குழந்தை மனசுல இவ்வுளவு ஏக்கம் இருக்குன்னு இன்னைக்குத்தான் புரிஞ்சுது....நல்ல வேளை.....எங்கம்மா வந்து...."அப்பா ஆபிஸ் போகணும்...லேட்டாச்சு...சாயங்காலம் பேசலாம்'னு சொல்லி கூட்டிக்கிட்டுப் போயிட்டாங்க."

நந்தினி மெல்ல நிமிர்ந்தாள்.

"அசோக்....இப்பவாவது உங்க தீர்மானத்தை மறுபரிசீலனை பண்ணுங்க.. அட்லீஸ்ட்...உங்க குழந்தையோட ஆசைக்காவது..."

"இல்லே நந்து.....என்னால செத்துப் போன என் மனைவியை மறக்க முடியலே....வீட்டில ஒவ்வொரு மூலையும்....ஒவ்வொரு பொருளும் எனக்கு அவளைத்தான் ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கு.....அவ செத்துப் போனதாகவே
என்னால நினைக்க முடியலே....இன்னமும்.....இப்பவும் உயிரோடதான்...என்கூடவே இருக்கிற மாதிரி பிரமை..."

"அப்புறம் உங்க இஷ்டம் அசோக்" என்றாள் நந்தினி.

அம்மா வாசலில் கவலையுடன் காத்திருந்தாள். அசோக் உள்ளே நுழைந்ததுமே பதறினாள்.

"திடீர்னு குழந்தைக்கு ஜூரம்டா.....ஒரேயடியா உளறாரம்பிச்சுட்டா... 'அம்மா....அம்மா'னு புலம்பல் வேற...."

"டாக்டர்கிட்டே கூட்டிக்கிட்டு போகலையா?" என்றான் பதட்டத்துடன்.

"வந்தார்.....இன்ஜக்ஷன் போட்டுட்டு போயிருக்காரு.... மறுபடி கிளீனிக் மூடற நேரத்துக்கு வரதா சொன்னாரு..."

சிந்துஜாவின் உடம்பு கொதித்துக் கொண்டிருந்தது, லேசான முனகலில், "அம்மா.."

அசோக் தீர்மானித்து விட்டான்.

நந்தினி அவன் கையைப் பற்றிக் குலுக்கினாள் பரவசமாக.

"வாழ்த்துக்கள் அசோக்....நல்ல முடிவை எடுத்திருக்கீங்க...."

"இத்தனை நாள் நீ வாதாடியதும்.....குழந்தை ஏக்கமும் என்னை மனசு மாற வச்சிருச்சு..."

"ஹூம்....நான் ...நீன்னு க்யூவுல நிப்பாங்க....யார் அந்த அதிர்ஷ்டசாலி....அசோக்?"

"நீ.....நீ தான் நந்து....உனக்கு சம்மதம் என்றால்..."

நந்தினி சட்டென்று மவுனமானாள். 'நான்....நானா...'

மனசுக்குள் தவிப்புடன் அவள் பதிலுக்காகக் காத்திருந்தான் அசோக்.

உமா உயிருடன் இருந்தபோதே நந்தினி பழக்கம். மெல்ல மெல்ல தன் குணங்களால் அவனை ஆகர்ஷித்து மனசுக்குள் இடம்பிடித்து இருந்தாள். ஆனால், வெளியில்தான் அவன் காட்டிக் கொள்ளவில்லை.

உமா இடம் வெறுமையானதும், நந்தினியின் நினைவுகள் முழுமையாகவே பற்றிக் கொண்டன.

அவள் என்ன நினைப்பாளோ என்ற தயக்கம் அவனைத் தடுத்துக் கொண்டிருந்தது. அவள் மறுமணத்திற்கு விடாமல் வற்புறுத்திய போதும்...தன் மீதுள்ள அக்கறைதானே காரணம் என்றே நினைத்தான். அன்பில்லாமலா அக்கறை வரும்?

என்ன சொல்லப் போகிறாள்?

"ப்ளீஸ்.....நாளைக்கு சொல்றேனே...." என்றாள்.

"சரி..." என்றான் அரைமனதாக.

சிந்துஜாவிற்கு உடம்பு சயாகி விட்டிருந்தது.

"அப்பா.....இன்னைக்கு பீச்சுக்கு போகலாமா?"

"இல்லேம்மா...நாளைக்கு போகலாம்"

"போப்பா....எவரி சாட்டர்டே பீச்சுனு.... நீதானே....சொன்னே"

ஆமாம். ஆனால், இன்று நந்தினி வரப்போகிறாள். தன் பதிலைச் சொல்லப் போகிறாளே...அவள் வருகிற நேரத்தில் கிளம்பிப் போய் விட்டால்... என்ன நினைப்பாள்?

"போய் விளையாடு.." என்றான் அழுத்தமாக.

"ஊஹூம்...மாட்டேன்....பீச்சுக்குப் போகலாம், வா" என்று அலற ஆரம்பித்தாள்.

"சொன்னா கேட்கணும்....பிடிவாதம் பிடிக்கக் கூடாது...."

"முடியாது.....பீச்சுக்குப் போகணும்"

"உள்ளே போ.....பாட்டிகூட விளையாடு"

"பீச்...."

"சனியனே.....எதுக்கும் ஒரு நேரம்....காலம் கிடையாதா?"

குழந்தை முதல் முறையாக அறை வாங்கிய அதிர்ச்சியில் மிரண்டு....அவனை முறைத்துப் பார்த்தது. மெல்லப் பின்வாங்கி சமையலறைக்குள் ஓடிப் போனது.

அசோக் டென்ஷனாகி நந்தினியின் வரவுக்காகக் காத்திருந்தான். உள்ளே பாட்டியின் அணைப்பில் குழந்தையின் விசும்பல் கேட்டது. நந்தினி......வரவேயில்லை.

மறுநாள்-

ஒரு கடிதம் வந்தது அசோக்கிற்கு.

நந்தினியிடமிருந்துதான்.

'மன்னிக்கவும். வீடு வரை வந்து ....சொல்லாமல்....கொள்ளாமல் திரும்பிப் போனதற்கு. எந்தக் குழந்தைக்காக...மறுமணத்தை வற்புறுத்தினேனோ....அந்தக் குழந்தையின் சந்தோஷம் பறித்து. ...எனக்கு பூவிரிப்பா? சாரி...எனக்கு இதில் விருப்பமில்லை. நீங்கள் வேறு பெண் தேடலாம். மறுபடி சந்திக்க முயற்சிக்க வேண்டாம்.'
avatar
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 35
Location : bombay

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum