"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» மிலிட்டரி சரக்க ஓசியில வாங்கஃத்தான்...!!
by அ.இராமநாதன் Today at 3:05 pm

» இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைக்கு பாரம்பரிய அந்தஸ்து
by அ.இராமநாதன் Today at 2:55 pm

» பென்குவின் பறவைகள்
by அ.இராமநாதன் Today at 2:50 pm

» ரசித்ததில் பிடித்தது - (பல்சுவை) தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 2:32 pm

» உளுந்து வடையைத் தின்னுட்டு ’அதிரசம்’ நல்லா இருக்கு’ன்னு சொல்றாரே...!!
by அ.இராமநாதன் Today at 2:23 pm

» ஒண்ணா சரக்கடிக்க வச்சுட்டார்....!!
by அ.இராமநாதன் Today at 11:51 am

» மாற்றம் என்பது...
by அ.இராமநாதன் Today at 11:35 am

» வீட்டில் கழிவறை இல்லாவிட்டால் சம்பளம் 'கட்'
by அ.இராமநாதன் Today at 8:33 am

» நாங்க இப்படிதானுங்க!: ஜாலியான அலியா!
by அ.இராமநாதன் Today at 8:28 am

» எனது அரசியல் வாரிசு யார்?: மாயாவதி பரபரப்பு பேட்டி
by அ.இராமநாதன் Today at 8:23 am

» 'வவ்வால் மூலம் 'நிபா' பரவவில்லை'
by அ.இராமநாதன் Today at 8:21 am

» பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம்
by அ.இராமநாதன் Today at 8:20 am

» காலக்கூத்து - சினிமா விமரிசனம்
by அ.இராமநாதன் Yesterday at 11:37 pm

» ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 11:17 pm

» ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன்? எப்படி? சசிகலாவின் வழக்குரைஞர் விளக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 11:04 pm

» அடடே அப்படியா...
by அ.இராமநாதன் Yesterday at 4:51 pm

» மாறுவேடப் போட்டி
by அ.இராமநாதன் Yesterday at 4:48 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Yesterday at 4:46 pm

» வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்
by அ.இராமநாதன் Yesterday at 4:38 pm

» பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
by அ.இராமநாதன் Yesterday at 4:34 pm

» போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு Added : மே 26, 2018 14:41
by அ.இராமநாதன் Yesterday at 4:33 pm

» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Yesterday at 1:38 pm

» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Yesterday at 1:30 pm

» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
by அ.இராமநாதன் Yesterday at 12:10 pm

» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா
by அ.இராமநாதன் Yesterday at 12:01 pm

» சினிமா -முதல் பார்வை: செம
by அ.இராமநாதன் Yesterday at 11:58 am

» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 8:01 am

» புறாக்களின் பாலின சமத்துவம்
by அ.இராமநாதன் Yesterday at 7:57 am

» குதிரை பேர வரலாறு
by அ.இராமநாதன் Yesterday at 7:56 am

» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
by அ.இராமநாதன் Yesterday at 7:53 am

» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
by அ.இராமநாதன் Yesterday at 7:51 am

» இந்திரா கவிதைகள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:59 pm

» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:56 pm

» பட்ட காலிலேயே படும்....
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:49 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:46 pm

» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:41 pm

» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:22 pm

» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:21 pm

» எளிய மருத்துவக் குறிப்புகள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:19 pm

» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:10 pm

» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது
by அ.இராமநாதன் Fri May 25, 2018 2:27 pm

» பலவித முருகன் உருவங்கள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 2:23 pm

» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:45 am

» பி.வி. சிந்துவும் இறக்கையும்!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:36 am

» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:34 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அச்சச்சோ.... அப்படி இல்ல...

Go down

அச்சச்சோ.... அப்படி இல்ல...

Post by udhayam72 on Mon May 13, 2013 12:46 pm

அச்சச்சோ.... அப்படி இல்ல...
(புவனா கோவிந்த்)




"ஹலோ நந்தினியா? நான் சுதா பேசறேன்"

"சொல்லு சுதா, எப்படி இருக்க? ஸ்ருதி குட்டி நல்லா இருக்காளா?"

"அவளுக்கு என்ன? நல்லா என்னை படுத்தி எடுத்துட்டு இருக்கா? அப்புறம் ஸ்ருதி பர்த்டே பார்ட்டி வர்ற சனிக்கிழமை சாயங்காலம் வெக்கலாம்னு இருக்கோம். நீ நேரத்துலையே வா நந்து எனக்கு கொஞ்சம் ஹெல்ப் வேணும்"

"கண்டிப்பா வரேன் சுதா. எதாவது ஷாப்பிங் உதவி வேணும்னா சொல்லு. நான் வெள்ளிக்கிழமை எப்படியும் இந்தியன் ஸ்டோர் போவேன்"

"சொல்றேன் நந்து. ஒகே ஸ்ருதி வர்ற நேரம் ஆச்சு நான் அப்புறம் பேசறேன். பை நந்து"

"ஒகே சுதா"

நந்தினிக்கு அப்போதே உற்சாக மனநிலை ஆனது. திருமணமாகி பல வருடங்கள் ஆகியும் குழந்தைசெல்வம் இல்லாத நந்தினிக்கு குழந்தைகள் கூடும் பிறந்த நாள் விழாக்கள் என்றால் கொள்ளை இஷ்டம்

சின்ன சிட்டுகளிடம் இருக்கும் அந்த சிறிது நேர நினைவுகளை மனதில் நிரப்பி கொண்டு அடுத்த நிகழ்வுக்காய் காத்திருப்பாள்

அப்போதே ஸ்ருதியின் பிறந்த நாள் விழா பற்றி கணவனிடம் கூற ஆவல் தோன்ற தொலைபேசியை எடுத்தாள்

"என்னங்க நான் தான்"

"சொல்லு நந்து. என்ன இந்த நேரத்துல போன் பண்ற. நான் இன்னும் ஒரு மணி நேரத்துல ஆபீஸ்ல இருந்து கெளம்பிடுவேன். எதாவது வாங்கிட்டு வரணுமா?" என அவள் கணவன் ராகவ் கேட்க

"எதாவது வாங்கிட்டு வரணும்னா தான் நான் உங்க கிட்ட பேசணுமா? சும்மா கூப்பிட கூடாதா?" என சிணுங்கினாள் நந்தினி


"ஹா ஹா... டென்ஷன் ஆகாத நந்துமா சும்மா சொன்னேன்"

"சுதா போன் பண்ணி இருந்தா. ஸ்ருதி குட்டிக்கு சனிக்கிழமை பர்த்டே பார்ட்டி வெச்சு இருக்காங்களாம்"


"அப்படியா? இப்ப தான் ஸ்ருதியோட நாலாவது பர்த்டேக்கு போன மாதிரி இருக்கு... அடுத்தகுள்ள அடுத்த பர்த்டே... நாள் பறக்குது இல்ல நந்து?"

"ஆமாங்க டைம் ஓடிடுது. நமக்கும் சுதா மாதிரி கல்யாணம் ஆனதும் ஒரு பாப்பா இருந்துருந்தா இப்ப ஏழு வயசு இருக்கும்...."


மனைவியின் ஏக்கம் அறிந்த ராகவ் பேச்சை மாற்ற முயன்றான்


"நந்து, ஸ்ருதிக்கு என்ன வாங்கலாம்னு யோசிச்சு வெய்யி. நாம நாளைக்கி ஷாப்பிங் போகலாம்"


"நாளைக்கா? இன்னைக்கே போகலாம். அத சொல்றதுக்கு தான் போன் பண்ணினேன்" என்றாள் அவசரமாய்


"யாரோ கொஞ்சம் நேரம் முன்னாடி 'நான் உங்கள சும்மா கூப்பிட கூடாதான்னு' டென்ஷன் ஆனதா ஞாபகம்" என சீண்டினான்


"போங்க நீங்க, என்னை கிண்டல் பண்ண என்ன சாக்குன்னு காத்துட்டு இருப்பீங்க"


"சரிம்மா நீ ரெடியா இரு நான் வந்ததும் ஷாப்பிங் போகலாம்"


"ஓகே பா வெச்சுடறேன்"


ராகவ் மனைவி கலங்கினால் தாங்க மாட்டான். எதாவது பேசி சிரிக்க செய்து விட்டால் தான் நிம்மதி

பெற்றோருக்கு ஒரே பிள்ளை என்ற போதும் குழந்தை இல்லாதது குறித்த அனைவரின் விசாரிப்பின் போதும் மனைவியை ஒரு போதும் விட்டு கொடுக்க மாட்டான்


சனிக்கிழமை காலை முதலே நந்தினிக்கு இருப்பு கொள்ளவில்லை. எப்போதடா மணி மூன்றாகும் சுதா வீட்டுக்கு செல்வோமென இருந்தாள்


காரை விட்டு இறங்கியதும் ஸ்ருதி ஓடி வந்து கட்டிக்கொள்ள நந்தினி அவளை அள்ளி அணைத்தாள்

சுதா நந்தினியின் நெருங்கிய தோழி. ஸ்ருதி பிறந்தது முதல் அறிந்த நந்தினியிடம் நன்றாக ஒட்டி கொள்வாள்

"வா நந்து. வாங்க ராகவ். நந்து இவள நீ ரெடி பண்ணு, நான் மத்த வேலை எல்லாம் பாக்கறேன்"'என்றாள் சுதா

"ஒகே சுதா. ஸ்ருதி குட்டி வா நாம போய் உனக்கு மேக் அப் பண்ணலாம்"

"ஆண்ட்டி என்னோட பர்த்டே டிரஸ் உனக்கு காட்றேன் வா"

குழந்தைகள் எல்லாம் வரதொடங்கவும் ஒரே கலகலப்பானது. நந்தினி அனைத்து குழந்தைகளையும் அமரவைத்து சாப்பிட வைத்தாள்.

பெரியவர்கள் எல்லாம் ஒரு புறம் கதை பேசிக்கொண்டிருக்க குழந்தைகள் பட்டாளாம் தனி ரகளையாய் இருந்தது

ஸ்ருதி மற்றொரு குழந்தையுடன் ஏதோ பொம்மைக்காக சண்டையிடுவதை பார்த்து நந்தினி சமாதானம் செய்ய சென்றாள்

"ஸ்ருதி குட்டி நீ குட் கேர்ள் தானே. கொஞ்ச நேரம் உன்னோட பொம்மைய மது பாப்பா கிட்ட ஷேர் பண்ணிக்கணும் சரியா?"

"ஆன்ட்டி அவளுக்கு இந்த பேபி பொம்மைக்கி feed பண்ணவே தெரியல"

"சரி இரு மது குட்டிக்கு நான் சொல்லி தரேன். மது குட்டி இங்க பாரு பேபி பொம்மைய இப்படி மடில வெச்சுட்டு..." அதற்குள் ஸ்ருதி இடை மறித்தாள்

"அச்சச்சோ... அப்படி இல்ல... போ ஆண்ட்டி. உங்க வீட்டுல பாப்பா இல்லாததால உனக்கு பாப்பாவ வெச்சுக்கவே தெரியல" என ஸ்ருதி கூற

நந்தினியின் கண்கள் தன்னையும் அறியாது துளிர்த்தது. அந்த மழலை சொன்ன சின்ன வார்த்தை தன்னை இப்படி நிலை குலைய செய்யுமென அவள் நினைக்கவில்லை

குழந்தை அறியாமல் அதன் அர்த்தம் கூட புரியாமல் சொன்ன சொல் என்று தெரிந்தும் மனம் தவித்தது

குழந்தைகள் தவிர்த்து எல்லோரும் முன் பக்க அறையில் இருந்ததால் யாரும்
இவளது தவிப்பை காண நேரவில்லை

ஒரு நிமிடமேனும் வெளிக்காற்றை சுவாசித்தால் தான் இயலும் என்று நினைத்தவளாய் சட்டென முன் வாசல் வழியாய் வெளியேறினாள் நந்தினி

மற்றவர்கள் பேச்சு சுவாரஸ்யத்தில் காணாத போதும் நந்தினி வெளியேறுவதை கண்ட ராகவ் மற்றவர் கவனத்தை ஈர்க்காமல் ஒரு நிமிடம் பொறுத்து மனைவியை பின் தொடர்ந்து வந்தான்

பக்கத்தில் இருக்கும் பூங்காவிற்கு சென்ற நந்தினி, தனிமை கிடைத்ததும் உடைந்து அழதொடங்கினாள்

பின்னோடு வந்து கொண்டிருந்த ராகவ் மனைவி அழுவதை பார்த்து விரைந்து அருகில் வந்தான்

பதறியவனாய் "என்ன நந்து என்னடா ஆச்சு?" என கேட்க

ராகவை கண்டதும் மேலும் உடைந்து போனாள் நந்தினி. அழுகையினூடே நடந்ததை கூறினாள்

"நந்து நீ இப்படி சென்சிடீவா இருக்க கூடாது டா. கொழந்தை ஏதோ விளையாட்டா சொன்னதுக்கு போய் இப்படி... என்ன நந்து இது?" என அவளை சமாதானம் செய்ய முயன்றான்

"நீங்க சொல்றது எல்லாம் அறிவுக்கு புரியுதுங்க. மனசுக்கு புரியல. ஒரு கொழந்தை சொன்ன வார்த்தைல நான் நொறுங்கி போற அளவுக்கு என் மனசு ரணப்பட்டு போய் இருக்கு. குழந்தை இல்லேன்னா உலகத்துல வாழவே தகுதி இல்லைங்கற மாதிரி எல்லாரோட பேச்சும் பார்வையும் சித்ரவதையா இருக்குங்க. குழந்தை இல்லாத ஒரு ஒரு பொண்ணும் செத்து தான் போகணும்னா உலகத்துல கால்வாசி மக்கள் தொகை இல்லாம போய்டும்"

"விடு நந்து, பேசறவங்களுக்கு என்ன?" என அவளை தோளோடு சாய்த்து ஆறுதல்படுத்தினான் "விட முடியலைங்க. நெறைய பேரு நான் என்னமோ வேண்டாம்னு இருக்கற மாதிரி அக்கறை இல்லாம இருக்கற மாதிரி பேசறப்ப ரெம்ப வேதனையா இருக்கு... நாம டாக்டர் கிட்ட போறப்ப பாக்குறமே எத்தனை பேரு எத்தனை வருசமா மருந்து மாத்திரை ஊசின்னு, அது நீண்ட நாள் தொடர்ந்து எடுக்கறப்ப பல உயிராபத்தான நோய்கள் வரக்கூடிய பின் விளைவுகள் இருக்குனு தெரிஞ்சும் declaration form ல கையெழுத்து போட்டுட்டு கொஞ்ச கொஞ்சமா தெரிஞ்சே விஷத்த சாபிடறோமே..." என மீண்டும் கண்ணீரில் கரைந்தாள்

"நந்து ப்ளீஸ் மனச போட்டு கொழப்பிக்காம இரும்மா.."

"முடியலப்பா...நிஜமா சொல்றேன், குழந்தை பெத்துக்கரவளுக்கு அந்த ஒரு நாள் வலிதாம்பா. என்னை மாதிரி இருக்கறவளுக்கு இந்த சமுதாயத்தோட ஏளன பார்வைல இருந்து தப்பிக்க முயற்சிக்கற ஒரு ஒரு நாளும் பிரசவம் தான்..." கட்டுப்படுத்த இயலாமல் உடைந்து அழுதாள் நந்தினி

செய்வதறியாது மனைவியை மார்போடு அணைத்துக்கொண்டான் ராகவ்

சமுதாயத்தின் பார்வை மாறும் வரை இந்த மாதிரி பெண்களுக்கு விடிவு காலம் இல்லை.....



(முற்றும்)
avatar
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 35
Location : bombay

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum