"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» 2018 - தைப்பொங்கல் வாழ்த்துகள்
by ராஜேந்திரன் Yesterday at 7:49 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 7:31 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல் -தொடர்பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 9:13 am

» யுத்தம் செய்யும் கண்கள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Jan 17, 2018 8:56 pm

» வீணையின் நாதம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Jan 17, 2018 8:55 pm

» நினைவுப் பெட்டகம்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jan 17, 2018 8:54 pm

» பண்டிகை காலங்களில் ரயில் கட்டணம் உயர்வு?
by அ.இராமநாதன் Wed Jan 17, 2018 5:31 pm

» கின்னஸ் சாதனை படைத்த வீடியோ கேம் (வீடியோ இணைப்பு)
by ராஜேந்திரன் Tue Jan 16, 2018 9:00 pm

» 40 மில்லிபவுன் எடையில் சிவலிங்கம்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 3:45 pm

» விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 2:46 pm

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 2:40 pm

» ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 2:34 pm

» இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 2:21 pm

» ஒரு வரி தகவல்கள்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 12:47 pm

» அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 12:34 pm

» ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 10:17 am

» டோர் டெலிவரி திட்டத்திற்கு ‛ஒகே' : மனம் மாறிய டில்லி துணை நிலை கவர்னர்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 10:15 am

» இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 10:15 am

» சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 10:13 am

» பிரவீன் தொகாடியா மயக்க நிலையில் மீட்பு..!'' விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அதிர்ச்சி
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 9:53 am

» ஊர் சுற்றும் மனசு! - ஹைகூ
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 11:40 pm

» அழகிய புருவங்கள்! - ஹைகூ
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 11:38 pm

» விலைவாசி உயர்வு - ஹைகூ
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 11:36 pm

» சபலம் தந்த சங்கடம்...!
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 10:08 am

» மனதோடு மழைச்சாரல் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இந்துமதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sun Jan 14, 2018 2:37 pm

» ஜன.26 முதல் தமிழகம் முழுவதும் சுற்று பயணம் : கமல்
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 10:15 am

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by yarlpavanan Sun Jan 14, 2018 10:03 am

» கூடங்குளத்தில் விரைவில் மின்உற்பத்தி நீராவி சோதனை நடப்பதால் பீதிவேண்டாம்
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 10:03 am

» பிரதமர் மோடி தமிழில் பொங்கல் நல்வாழ்த்து
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 10:00 am

» இலங்கை துறைமுகத்தை மேம்படுத்த ரூ.294 கோடி இந்தியா நிதி உதவி
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 9:56 am

» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன் Sun Jan 14, 2018 6:48 am

» *உலகின் முக்கிய தினங்கள்
by அ.இராமநாதன் Sat Jan 13, 2018 11:36 pm

» மனைவி கத்த ஆரம்பிச்சதும்....
by அ.இராமநாதன் Sat Jan 13, 2018 11:32 pm

» வாழ்க்கைச் சக்கரத்தில் ஆணென்ன? பெண்னென்ன? (நாவல்) நூல் ஆசிரியர் : நவரஞ்சனி ஸ்ரீதர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Jan 13, 2018 4:15 pm

» இரத்த அழுத்தம்
by அ.இராமநாதன் Sat Jan 13, 2018 2:56 pm

» புரோஸ்டேட் சுரப்பி என்றால் என்ன?
by அ.இராமநாதன் Fri Jan 12, 2018 10:10 pm

» பொங்கல் ஸ்பெஷல்: அவல் சர்க்கரைப் பொங்கல்
by அ.இராமநாதன் Fri Jan 12, 2018 9:32 pm

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu Jan 11, 2018 6:50 pm

» ஊர் சுற்றும் மனசு! நூல் ஆசிரியர் : கவிஞர் தயாநிதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jan 10, 2018 8:36 pm

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue Jan 09, 2018 10:07 pm

» வாட்ஸ் அப் பகிர்வுகள் -தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 4:05 pm

» ஹீமோகுளோபின் அதிகரிக்க....
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 4:00 pm

» சாப்பிட்டது குறைவு, மீதம் விட்டது அதிகம்ا
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 3:56 pm

» 27 நட்சத்திரங்களுக்கும் உரிய காயத்திரி மந்திரங்ள்...
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 3:50 pm

» அற்புத_தூபங்கள்
by அ.இராமநாதன் Mon Jan 08, 2018 3:19 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 'எதிர்நீச்சல்' திரை விமர்சனம்

View previous topic View next topic Go down

'எதிர்நீச்சல்' திரை விமர்சனம்

Post by udhayam72 on Mon May 13, 2013 2:10 pm

தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நகைச்சுயைாக நடித்து வெளிவந்திருக்கும் 'எதிர்நீச்சல்' ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

[You must be registered and logged in to see this link.]


எதிர்நீச்சல் படத்திற்கு விமர்சகர்களும் நல்ல கருத்துக்களைக் கூறி இருப்பதால் நாளுக்கு நாள் திரையரங்குகளின் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது. பாக்ஸ் ஆபிசில் கலக்கிக் கொண்டிருக்கும் இந்தப் படத்தின் மூலம் சிவகார்த்திகேயனுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக திரைப்பட வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

[You must be registered and logged in to see this link.]

நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாத சிவகார்த்திகேயன் அம்மா, தனக்கு நல்லபடியாக சுகபிரசவம் நடந்தால் "உன்னுடைய பெயரையே சூட்டுகிறேன்’’ என குலதெய்வத்திடம் வேண்டுகிறார். அடுத்த சில மாதங்களிலேயே அவருடைய வேண்டுதல் பலித்து, சிவகார்த்திகேயன் பிறக்கிறார்.

வேண்டுதலின் படி தனது குலசாமியின் பெயரான ‘குஞ்சிதபாதசாமி’ என்ற பெயர் சிவகார்த்திகேயனுக்கு வைக்கப்படுகிறது. வளர்ந்து பெரியவனாகி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் சிவகார்த்திகேயனுக்கு தன்னுடைய பெயரை அனைவரும் சுருக்கி அழைப்பது மிகுந்த மனக்கஷ்டத்தை உண்டாக்குகிறது.

இதனால் வேலையை விட்டுவிடுகிறார். இவர் ஒருதலையாக காதலிக்கும் பெண்ணும் பெயர் சரியில்லை என்று சொல்லி இவரது காதலை ஏற்க மறுக்கிறார்.

விரக்தியடைந்த சிவகார்த்திகேயன் தனது பெயரை ஹரிஷ் என்று மாற்றி அதை பதிவும் செய்கிறார். தனது இருப்பிடத்தையும் மாற்றிக் கொள்கிறார். இதையடுத்து பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் ப்ரியா ஆனந்தை சிவகார்த்திகேயன் சந்திக்கிறார். பார்த்தவுடனேயே அவர் மீது காதல் வயப்படும் சிவகார்த்திகேயன், அவருடன் நட்பாக பழகி இறுதியில் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயனின் பழைய பெயர் ப்ரியா ஆனந்த்-க்கு தெரிய வருகிறது. இந்த சிறு விஷயத்தை தன்னிடம் மறைத்ததற்காக சிவகார்த்திகேயன் மீது கோபப்படுகிறார் பிரியா ஆனந்த். அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார் சிவகார்த்திகேயன். இந்நிலையில், பெரிதளவில் ஏதாவது சாதித்தால் தனது பழைய பெயர் மறைந்துவிடும் என்ற நண்பனின் யோசனைப்படி, சென்னையில் நடக்கும் மராத்தான் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற முடிவெடுக்கிறார்.

அவருக்கு பயிற்சியளிக்க ஜெயபிரகாஷை சிவகார்த்திகேயனுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார் பிரியா ஆனந்த். ஆனால், ஜெயபிரகாஷோ தனது மாணவியான நந்திதாவை சிவகார்த்திகேயனுக்கு பயிற்சி அளிக்க அனுப்புகிறார். இந்த பயிற்சியில் தேர்ச்சி பெற்று மராத்தான் போட்டியில் கலந்து கொண்டு சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா? அவமானமாக கருதும் தனது பெயரை அழித்தாரா? தனது காதலியான ப்ரியா ஆனந்த்தை கரம்பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

நாயகனான சிவகார்த்திகேயன் குஞ்சிபாதம் என்ற பெயரை வைத்துக் கொண்டு அவஸ்தைபடுவதாகட்டும், ப்ரியா ஆனந்தை துரத்தி துரத்தி காதலிப்பதாகட்டும், முதல் பாதியில் கொமடியில் கலக்கியிருக்கிறார். பாடல் காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார். ஆனால் பிற்பாதியில் ஓட்ட வீரனாக ஸ்கோர் பண்ண வேண்டிய இடத்தில் கொஞ்சம் சொதப்பிவிட்டார். முற்பாதியில் ஆசிரியராக வரும் ப்ரியா ஆனந்த்-க்கு தனது முந்தைய படங்களை விட இப்படத்தில் நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை அவர் நிறைவாக செய்திருக்கிறார். பிற்பாதியில் இவர் அவ்வளவாக தலைகாட்டாதது ஏமாற்றத்தை தருகிறது.

பணக்கார வர்க்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழை ஓட்ட வீராங்கனையாக, சிவகார்த்திகேயனுக்கு பயிற்சியாளராக வருகிறார் ‘அட்டக்கத்தி’ நந்திதா. அருமையான கதாபாத்திரத்தை அளவான நடிப்பால் மெருகேற்றியிருக்கிறார். சிவகார்த்திகேயனின் நண்பனாக வரும் சதீஷ் தன்னுடைய பங்குக்கு பின்னியெடுத்திருக்கிறார். சிவா-சதீஷ் கூட்டணி இனிவரும் படங்களில் ஒரு புது கொமடி கூட்டணியை உருவாக்கலாம். மனோபாலா, மதன்பாப் ஆகியோரும் தங்களது கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை திறமையாக வெளிப்படுத்தியுள்ளனர்.

நம் மூத்தோர் நமக்கு வைக்கும் பெயர் நம் சந்ததியின் அடையாளம். எனவே பெயரை மாற்றுவதைவிட சொந்த பெயரை வைத்து பேர் எடுப்பதே திறமை என்ற அழகான சமூக கருத்தை நகைச்சுவை, செண்டிமென்ட் கலந்து சொன்னதற்காக இயக்குனருக்கு பாராட்டுக்கள். அனிருத் இசையில் ஏற்கெனவே பாட்டுக்கள் அனைத்தும் நல்ல வெற்றியடைந்துள்ளன. பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். இளைஞர்களின் நாடித் துடிப்பை நன்றாக கணித்து இசையமைத்திருக்கிறார்.

‘லோக்கல் பாய்ஸ்’ என்ற பாடல் படத்தில் வலிந்து திணிக்கப்பட்டிருந்தாலும், தனுஷ், சிவா, நயன்தாரா ஆகியோரின் குத்தாட்டம் ரசிகர்களை குதூகலிக்க வைத்திருக்கிறது. ஒரு மனிதனுக்குள் மாறி மாறி தோன்றும் இரு உணர்வுகளை அழகாக காட்டியிருக்கிறது வேல்ராஜின் ஒளிப்பதிவு. ‘வெளிச்ச பூவே’ பாடல் அழகாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

படத்தின் முதற்பாதியை கொமடிகளை கட்டினாலும், பிற்பாதி ஆமை வேகத்தில் நகர்கிறது. அடுத்து என்ன காட்சி என்பதை முன்பே ஊகிக்கும் விதமான காட்சிகளே நிறைய அமைந்திருக்கிறது. சில காட்சிகளை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். மற்றபடி ‘எதிர்நீச்சல்’ ஜாலியாக பயணம் செய்யலாம்.[You must be registered and logged in to see this image.]
avatar
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 35
Location : bombay

Back to top Go down

Re: 'எதிர்நீச்சல்' திரை விமர்சனம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon May 13, 2013 2:14 pm

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: 'எதிர்நீச்சல்' திரை விமர்சனம்

Post by udhayam72 on Mon May 13, 2013 3:40 pm

இது ஆக்சுவலா ரெண்டு படம். இரண்டு வேறுவேறு கதைகள் ஒன்றுடன் ஒன்று பெரிதும் சம்பந்தம் இல்லாத, ஒன்றிலிருந்து ஒன்று முற்றுலும் வேறுபட்ட, வெவ்வேறு உணர்வுகள், வெவ்வேறு தளங்களில் பயணிக்கிற இரு கதைகளை கொண்ட படம்.

கதை ஒன்று: ஒரு பெயரினால் ஒரு மனிதன் படும் அவஸ்தைகளை காமெடியாய் சொல்லும் கதை. குஞ்சுதபாதம் என்ற பெயரை சிவகார்த்திகேயனுக்கு அவன் பெற்றோர் வைத்துவிட அதன் விளைவாக அவர் சிறுவானாக விளையாடுவதிலிருந்து, காதலில் விழுவது வரை அனைத்திடங்களிலும் படும் அவஸ்தைகளை கலகலப்பாய் சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு மனுசனுக்கு பிரச்சினை வேற எதுவும் இல்லை அவன் பெயர்தான் என்ற அடிப்படையில் ஒரு கதை என்ற போதே அட புதுசா இருக்கே என்ற எண்ணம் நமக்கு தோன்றுகிறது. தன் பெயரை சொல்லி கிண்டல் பண்ணுவார்கள் என்பதால் ஒரு விளையாட்டில் முன்னிலையில் இருக்கும் சிறுவன் கூட தன்னை பின்தள்ளிக்கொள்கிறான் என்ற விசயத்தை லைட்டாய் டச் பண்ணிய இயக்குநருக்கு பாராட்டுகள். அதை இன்னும் ஆழமாய் சொல்வதற்கு இந்தக் கதையில் இடமில்லை என விட்டுவிட்டார்.
[You must be registered and logged in to see this link.]


முதலில் ஒரு பொண்ணை குஞ்சிதபாதம் டாவடிக்க, அவரும் திரும்ப லுக்கெல்லாம் குடுத்து ஒரு டூயட் பாடலையும் ஆடிவிட்டு எல்லாம் ஓக்கே ஆனா உன் பேருதான்.. எதுக்கும் ஒரு ரெண்டு நாள் யோசிச்சு சொல்றேன் என்றவர் சொல்லாமல் கொல்லாமல் வீட்டை காலிபண்ணிவிட்டு எஸ்கேப்.

இனி ஆவதில்லை என பெயரை மாற்றுகிறார். ஹரீஸ் ஆகிறார். அன்றே கீதா மிஸ்( ப்ரியா ஆனந்த்) இவர் கண்ணில் படுகிறார். அடுத்தடுத்து எல்லாமே நல்லவிதமாய் போகிறது.

காதலில், விழுந்து, அப்படி இப்படி தட்டுத்தடுமாறி செட்டில் ஆகும் சமயத்தில் ஒரிஜினல் பெயர் வேறு என தெரியவர ஏன் சொல்லவில்லை என்ற சின்ன சண்டையில், இன்டர்வெல் விட்டு, அப்புறம் தனுஷையும் நயன்தாராவையும் ஆடவிட்டு, சரி நாம பெயர் நிக்குற மாதிரி எதாச்சும் உருப்படியா செய்யனும்னு யோசிச்சு மராத்தான்ல ஓடுவோம்னு சிவகார்த்திகேயன் முடிவெடுக்கிறது தான் கதை ஒண்ணு. இதுவரை பார்க்கும் போது பரவாயில்லை.. பெரிய விசயம் இல்லாட்டியும் காமெடியா இருக்கு.. என நாம் யோசித்துக்கொண்டிருக்கும் போது கதை இரண்டு துவங்குகிறது.

கிராமத்து பள்ளியில் படிக்கும் நந்திதா. மின்னலாய் ஓடுகிறார். ஓட்டப்பந்தயத்தில் அவ்வளவு ஆர்வமும் திறமையும். இந்த கிராமத்து பொண்ணெல்லாம் மேல வர்றது கஷ்டம்.. அடுத்த வருசம் கட்டிக்குடுத்துடுவானுங்க.. அதுக்கடுத்த வருசம் கையில புள்ளையோட இருக்கும் என ஒரு பிடி வாத்தியார் சொல்வதைக் கேட்ட நந்திதாவின் அப்பா ஒரு முடிவெடித்து தன் மகளுக்கு வேண்டிய அனைத்தையும் தன் சக்திக்கு மீறி செய்து ஆசிய அளவில் பெரிய சாதனையை படைக்கும் இடத்திக்கு போகும் போது, பணபலம், விளையாட்டுக்குள் அரசியல் என புகுந்து அவர் வாழ்க்கையை எப்படி சீரழிக்கிறது என்பது இரண்டாவது கதை. கொஞ்ச நேரம் வந்தாலும் மிக அழுத்தமான கதை இது.

இறுதியில் இந்த நந்திதா அந்த சிவகார்த்திகேயனுக்கு கோச்சிங் கொடுத்து ஜெயிக்க வைக்கிறாரா என்பது கிளைமாக்ஸ்.

முதல் பாதி கதை சிவகார்த்திகேயனுக்காவே எழுதப்பட்டது. அவரது ட்ரேட்மார்க் டைமிங் காமெடிகள், அதற்கேற்ற சிச்சுவேசன்கள் என அடுத்தடுத்து எதாவது காரணத்தால் நம்மை சிரிக்க வைத்துக்கொண்டே செல்கிறார்கள். சிவா மிக எளிதாய் ஸ்கோர் பண்ணுகிறார்.

ப்ரியா ஆனந்த் நர்சரி பள்ளியில் கீதா மிஸ்ஸாக. பள்ளிப்பருவத்து வயதில் எல்லாப் பசங்களுக்கும் பிடித்த ஒரு மிஸ் இருப்பாரே.. அந்த அத்தனை மிஸ்களின் மொத்த உருவமாய். சேலையில் வரும் போது நிஜமாகவே சிலைபோலத்தான் இருக்கிறார். என்னா அழகு சார். இவரை இத்தனை வருடங்களாய் சுடிதாரில் காண்பித்து நம்மையெல்லாம் ஏமாற்றிய அத்தனை இயக்குநர்களையும் இந்த நேரத்தில் நாம் வன்மையாய் கண்டிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

இரண்டாவது பாதியில் நந்திதாவுக்கு மிக அழுத்தாமான கதாபாத்திரம். ஹீரோயினாத்தான் நடிப்பேன்னு அடம் புடிக்காம இதை ஏற்று நடித்த அவருக்கு பாராட்டுக்கள். ஏழ்மையில் திறமை என்ற அவஸ்தையான அனுபவத்தை கண்முண் கொண்டு வரும் கதையில் நம்மை வெகுவாய் பாதிப்பது அவரது தந்தையின் கதாபாத்திரம். கிராமத்து ஆள் எனக்கென்ன தெரியும் என இருந்துவிடாமல்.. ஒரு வீராங்கனையாவதற்கு என்னெல்லாம் செய்ய வேண்டும் எனத்தெரியாவிட்டாலும் எந்த ஒரு சின்ன அட்வைஸ், சின்ன தடம் கிடைத்தாலும் அதைப் பிடித்து எப்படியாவது மகளுக்கு வேண்டியதை செய்துவிடத்துடிக்கும் பாசக்கார தகப்பனாய் வாழ்ந்திருக்கிறார் மனிதர். எதற்காகவோ பஸ்ஸில் போய்கொண்டிருக்கும் போது வழியில் ஏதோ ஒரு கிரவுண்டில் யாரோ ஒருவர் சிலருக்கு ஓட்டப்பந்தய பயிற்சி கொடுப்பதை பார்த்து பரபரத்து கண்டக்டரினில் விசிலை எடுத்து ஊதி பஸ்ஸை நிறுத்தி, அந்த கோச்சிடம் போய் ஏதோ பேசி எப்படியோ தன் மகளுக்கும் அந்த பயிற்சியை பெற்றுத்தருகிறார் பாருங்கள். நிச்சயமாய் இயக்குநர் இதை ஒரு நிஜ கதாபாத்திரத்திலுருந்தான் எடுத்திருக்க வேண்டும். அத்தனை ஆயிரம் உணர்வுகள் அதில் பொதிந்திருக்கிறது.

பயிற்சியாளராய் வரும் ஜெயப்பிரகாஷ் வழக்கம் போல் கம்பீரம்.

அவ்வப்போது காதலுக்கும், டாஸ்மாக்கும் உதவும் நண்பனாய் சதீஷ். காமெடிக்கும் உதவுகிறார்.

இசை அனிருத். ஏற்கனவே அனைத்துப் பாடல்களும் பட்டையை கிளப்பிய ஹிட். அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. பின்னணி இசையிலும் ஜொலிக்கிறார். அதிலும் இறுதிக்கட்ட ஓட்டபந்தய காட்சிகளை வேல்ராஜின் ஒளிப்பதிவுடன் சேர்ந்து உயிரூட்டுவது இசையும் எடிட்டிங்கும் தான்.

படத்தில் சின்ன உருத்தல் என்றால் சிவகார்த்திகேயன் கதையில், அவர் இந்த மராத்தானில் கலந்து கொள்ள சொல்லும் காரணங்கள் அந்த அளவுக்கு உணர்வுப்பூர்வமாய் இல்லை என்பதுதான். அதிவும் காதலி ப்ரியா ஆனந்தும் அடுத்த நாளே வந்து இவரைப் புரிந்து கொண்டு சண்டையை மறந்து ஷாப்பிங் கூட்டிச்சென்று ஷு வாங்குக்குடுத்துவிடுவதால் கதையில் அடுத்த பெரிய எதிர்பார்ப்போ டிவிஸ்டோ இல்லை. ஆனால் அதையெல்லாம் நந்திதா கதை ஈடுகட்டிவிடும் என்ற நம்பிக்கை இயக்குநருக்கு இருந்திருக்க வேண்டும். உன்மைதான்.

ஆனாலும் நந்திதாவின் கதையை ஒரு முழுப்படமாய் எடுத்திருக்க வேண்டுமே இப்படி பாதியிலேயே சுருக்கிவிட்டாரே என்ற எண்ணம் தோன்றத்தான் செய்கிறது. விளையாட்டில் நடக்கும் பாலிடிக்ஸை இன்னும் ஆழமாய் காண்பித்திருந்தால் படம் நிச்சயம் இன்னொரு லெவலுக்கு போயிருக்கும்.

எனினும் படம் முடியும் போது நமக்கு எந்த உருத்தலும் கேள்வியும் இல்லை. நிறைவாகவே இருக்கிறது. இயக்குநர் துரை செந்தில்குமாருக்கும் தயாரிப்பாளர் தனுஷுக்கும் நமது பாராட்டுக்கள். கட்டாயம் பாருங்கள்.


********************************************************************************************
avatar
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 35
Location : bombay

Back to top Go down

Re: 'எதிர்நீச்சல்' திரை விமர்சனம்

Post by அ.இராமநாதன் on Tue Jun 04, 2013 3:20 am

[You must be registered and logged in to see this image.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25106
Points : 54708
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: 'எதிர்நீச்சல்' திரை விமர்சனம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Jun 12, 2013 3:51 pm

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: 'எதிர்நீச்சல்' திரை விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum