"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» படித்ததில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 2:55 pm

» மகாபாரதம் உணர்த்தும் உண்மைகள்
by அ.இராமநாதன் Yesterday at 2:44 pm

» ஓலம்! - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 2:27 pm

» தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
by அ.இராமநாதன் Yesterday at 2:24 pm

» இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
by அ.இராமநாதன் Yesterday at 2:22 pm

» தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
by அ.இராமநாதன் Yesterday at 2:19 pm

» சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
by அ.இராமநாதன் Yesterday at 2:18 pm

» சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
by அ.இராமநாதன் Yesterday at 2:18 pm

» பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: டில்லி, மும்பைக்கு இடம்
by அ.இராமநாதன் Yesterday at 2:17 pm

» ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
by அ.இராமநாதன் Yesterday at 2:16 pm

» போர்க்கவசம் கூடத் தரிக்காமல், வலையால் உடம்பை மூடிக்கிட்டே போறாரே
by அ.இராமநாதன் Yesterday at 9:19 am

» 'டிவி' சீரியலில் எமி ஜாக்சன்!
by அ.இராமநாதன் Yesterday at 9:15 am

» மசாலா கதைகளில் விஜயசேதுபதி
by அ.இராமநாதன் Yesterday at 9:11 am

» சங்கமித்ரா’ நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 8:56 am

» தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்…
by அ.இராமநாதன் Yesterday at 8:55 am

» இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
by அ.இராமநாதன் Yesterday at 4:05 am

» நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ கிடையாது
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 10:18 pm

» நல்ல மனைவி....
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 10:09 pm

» கட்டைப்பையும் காணாமல் போன கூச்சமும்.... - ஒரு குடும்ப தலைவரின் தீபாவளி பர்ச்சேஸ்
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 9:44 pm

» நீரிழிவு நோய்க்கு ஒரு நல்ல செய்தி
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 9:34 pm

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sat Oct 21, 2017 8:54 pm

» நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:48 pm

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:45 pm

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:44 pm

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:37 pm

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:36 pm

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:35 pm

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:34 pm

» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:33 pm

» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:33 pm

» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:32 pm

» ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:31 pm

» ஹைக்கூ பாவை! நூல் ஆசிரியர் : கவிஞர் ந.க. துறைவன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Oct 20, 2017 10:27 pm

» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Fri Oct 20, 2017 9:17 pm

» வெற்றிப் பூக்கள்! நூல் ஆசிரியர் : சிந்தனைக் கவிஞர் கவிதாசன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!
by eraeravi Fri Oct 20, 2017 8:14 pm

» அம்மாவின் முத்தம்! நூல் ஆசிரியர் : முனைவர் மருதம் கோமகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Oct 20, 2017 8:12 pm

» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2017 4:50 pm

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2017 4:49 pm

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2017 4:48 pm

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2017 4:35 pm

» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2017 4:33 pm

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2017 4:31 pm

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2017 4:30 pm

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2017 4:30 pm

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by அ.இராமநாதன் Fri Oct 20, 2017 4:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines "யாருடா மகேஷ்" திரை விமர்சனம்

View previous topic View next topic Go down

"யாருடா மகேஷ்" திரை விமர்சனம்

Post by udhayam72 on Mon May 13, 2013 2:19 pm

"யாருடா மகேஷ்" படத்தின் தலைப்பைப் போன்றே வித்தியாசமும், விறுவிறுப்புமான கதையம்சத்துடன் வெளிவந்திருக்கும் இப்படமும், இதன் காட்சியமைப்புகளும் "யாருடா இந்தப்படத்தின் இயக்குனர் என்று கேட்க வைக்கும் ரகமென்றால் மிகையல்ல.
கதைப்படி சோம்பேறி கதாபாத்திரமான சிவா என்னும் சந்தீப்புக்கு, தன் கல்லூரியில் படிக்கும் சிந்தியா எனும் டிம்பள் மீது காதல்.

நண்பன் வசந்த் எனும் செம்புலி, ஜெகனின் காதலி உதவியுடன் டிம்பளை உஷார் பண்ணும் சந்தீப், கல்லூரி இறுதி தேர்வில் பத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறாமல் போகிறார்.

அவரது காதலி, டிம்பளோ கல்லூரியின் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று அடுத்த விமானத்திலேயே அமெரிக்கா பறக்கிறார்.

இதில் அதிச்சியாகும் சந்தீப், அரியர்ஸை கிளியர் செய்து அடுத்த ஆறு மாதத்திற்குள் அமெரிக்கா போய் காதல் வளர்ப்பார் எனப் பார்த்தால், ஆறு வாரத்திற்குள்ளாகவே அமெரிக்காவில் இருந்து டிம்பள் ரிட்டர்ன் ஆகிறார். காரணம், சந்தீப்பின் கரு, டிம்பளின் வயிற்றில் வளருவது தான்.

அச்சச்சோ, அப்புறம்? அப்புறமென்ன...? நாயகன், நாயகியின் அப்பா-அம்மாக்கள் ஆரம்பத்தில் ஈகோ மோதலில் இறங்கி, அதன் பின்னர் வேறு வழியின்றி சம்மந்தி ஆகின்றனர். குழந்தை பிறக்கிறது.

குழந்தையோடு, குழந்தையாக விளையாடியபடி காலத்தை தள்ளும் நாயகன் சந்தீப்பை திருத்த, நாயகி டிம்பள் தன் கஸின் பிரதரும், மனநல மருத்துவருமான ஸ்ரீநாத்துடன் சேர்ந்து கொண்டு செய்யும் அதிர்ச்சி வைத்தியம் தான் "யாருடா மகேஷ்" படத்தின் அதிர்ச்சியும், ஆச்சர்யமான, கலகலப்பும், கலாய்ப்புமான மீதிக்கதை.

சிவா என்னும் கதாப்பாத்திரத்தில் சந்தீப், தனது முந்தைய படமான "மறந்தேன் மன்னித்தேன்" படத்தை காட்டிலும், "யாருடா மகேஷ்" படத்தில் யாருடா சந்தீப் எனக் கேட்கும் அளவிற்கு கேஸீவலாக நடித்து ஜொலித்திருக்கிறார்.

டிம்பள் செமயூத்புல், கிளாமர் அப்பீல்... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவர், நயன்தாரா, காஜல் அகர்வாலை எல்லாம் கூடிய விரைவில் ஓரங்கட்டினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

நம் கண்களுக்கு மட்டுமல்ல, தன் கண்களிலும் எத்தனை கவர்ச்சி விருந்து வைக்கிறார்.


[You must be registered and logged in to see this link.]


நாயகன் நண்பர் வசந்தாக வரும் செம்புலி ஜகன் இனி, டபுள்மீனிங் ஜகன். மனநல மருத்துவராக வரும் ‌கொமெடி ஸ்ரீநாத், மகனிடம் மேற்படி சி.டி. கேட்கும் நாயகனின் அப்பா லிவிங்ஸ்டன், அம்மா உமா பத்மநாபன், சுவாமிநாதன், சிங்கமுத்து உள்ளிட்ட எல்லோரும் "யாருடா மகேஷ்" படத்தை தங்கள் கலர்புல் கொமெடிகள் மூலம் தூக்கி நிறுத்தியிருக்கின்றனர்.

புதியவர் கோபிசுந்தரின் புதுமையான இசையும், ராணாவின் இனிமையான ஒளிப்பதிவும், சத்தியநாராயணனின் பளிச் படத்தொகுப்பும், ரா.மதன்குமாரின் எழுத்து-இயக்கத்தில், "யாருடா மகேஷ்" படத்தை மீண்டும் ஒருமுறை "பாருடா" என்று நம்மை தூண்டி விடுகின்றன.[You must be registered and logged in to see this image.]
avatar
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 35
Location : bombay

Back to top Go down

Re: "யாருடா மகேஷ்" திரை விமர்சனம்

Post by udhayam72 on Mon May 13, 2013 3:47 pm

இந்தப் படத்தின் ட்ரைலரே செம கலக்கல். படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டிவிட்டது. ட்ரைலரிலேயே இவ்வளவு கலகலப்பு என்றால் படம் எப்படி இருக்கும் என்ற ஆர்வம் நிறையவே இருந்தது.

ஒரு செம நக்கல் புடிச்ச இயக்குநர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கிறார். அவருக்கு மொதல்ல பூங்கொத்து குடுத்து வரவேற்போம். வெல்கம் ஆர்.மதன்குமார்.

கதைன்னு யோசிச்சா.. த்தா இதெல்லாம் ஒரு கதையான்னு யோசிக்க வைக்கிற கதைதான். ஆனா அதை இவர் பிரசன்ட் பண்ணியிருக்கிற விதம் தான் ஜாலி. தமிழ் சினிமாவுக்கு இந்த பிரசன்டேசன் புதுசுதான். சாதாரண சீனில் கூட எதாவது ஒரு லைனில் பஞ்ச் பிடித்து காமெடி பண்ணிவிடுகிறார்.

இப்பவே டிஸ்க்ளைமர் குடுத்துடுறோம் பாஸு. படம் ஒரு தினுசாத்தான் இருக்கும். தமிழ் கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கம், ஹவ் கான் எ கேர்ள் ஸ்லீப் வித் அ பாய் பிபோர் மேரேஜ், நெறி, பொறிண்ணு உங்க ஜீன்ல நிறைய இருந்துச்சுன்னா இந்தப் படம் உங்களுக்கு புடிக்கிறது கஷ்டம் தான். படத்தைப் பார்த்துட்டு வாட் நான்சென்ஸ் ஆப்த இடியட்ஸ் ஆப்த கல்சுரல் ஆப்தன்னு பத்து பக்கத்துக்கு பேசி பிரஸர கூட்டிப்பீங்க.

இல்ல இதெல்லாம் சகஜம் மாமேன்னு எடுத்துக்குற பார்ட்டின்னா இந்த படமும் ஜாலியாத்தான் இருக்கும். there is something about mary, american pie series இது போன்ற ஒரு படம் தான் இந்த யாருடா மகேஷ். ஸோ த சாய்ஸ் இஸ் யுவர்ஸ் யுவர் ஆனர்.

கதைன்னு பார்த்தா ஒரு சாதாரண ஒரு கல்லூரி காதல், நைட் புல்லா போன் பேசல், வீட்டில் ஆள் இல்லாத போது பொங்கல், பூரி அப்புறம் சாரி..அந்த சாரி போர்வைக்குள் காணாமல் போக சரி கதை இப்படி போகுதா என நாம யோசிப்பதற்குள் டக்கென காலேஜ் முடிஞ்சு பொண்ணு அமெரிக்காவுக்கு படிக்க போகுது.. நம்ம ஹீரோக்கு 10 சப்ஜெக்டும் அரியர்ஸ். இதெல்லாம் கிளியர் பண்ணிட்டு நீயும் அமெரிக்கா வா நாம ஒண்ணா இருக்கலாம் என லாவகமாய் கட் பண்ணிட்டு போகுது இந்த புள்ள.

நம்ப பய பீலிங்ஸ் ஆப்த லவ் ஆப்த டிசப்பாய்ண்ட்மெண்டில் அமெரிக்காவுக்கு மிஸ்டு கால் குடுத்துக்கிட்டிருக்க..கொஞ்ச நாள் கழிச்சுத்தான் கால் வருது. சாரி நான் ரொம்ப பிஸியா இருந்தேன். ஒரு முக்கியமான மேட்டரு.. நான் இந்தியா வர்றேன். நீ ஏர்போர்ட் வா என மேடம் உத்தரவு போட.. அதை நிறைவேற்றாமல் நம்ம ஆள் தூங்கி விட..ஆக்கசுலா மேட்டர் என்ன்னா அம்மணி பிரக்னெண்டாம். இது குடும்பத்துக்கும் தெரிஞ்சு ஆளாளுக்கு மாறி மாறி அறைஞ்சு தங்கள் கோபத்தை தீர்த்துக்கொண்டு ரெண்டு பேருக்கும் கல்யாணத்தை பண்ணிவைக்கிறார்கள். ரெண்டு வருசம் கழிச்சு பார்த்தா ஒரு குழந்தையோட இருக்காங்க.. ஆனாலும் நம்ம பயபுள்ள இன்னும் அரியர்ஸ் கிளியர் பண்ணாம வீட்டுல உக்காந்து கொஞ்சிகிட்டு இருக்க அவன என்ன பண்ணி திருத்தலாம்னு நினைக்கிறப்ப ஒரு ஐடியா வர அப்ப இன்டர்வலும் வர அப்புறம் தான் யாருடா மகேஷ் தேடல். மீதியை நீங்க வெள்ளித்திரையில் காணுங்க.

நகைச்சுவை நடிகர் ஜெகனுக்கு இந்தப் படம் நல்ல ப்ரேக் என சொல்லலாம். சந்தானத்தின் இடத்தை நிரப்புவதற்கு எல்லா தகுதிகளும் இவருக்கும் இருக்கு என நிரூபித்திருக்கிறார். சில டயலாக்குகள் மொக்கையென்றாலும் பல வசனங்கள் சிரிப்பை வரவைக்கின்றன. படம் முழுக்க இவரது தோளில் தான் சவாரி செய்கிறது. குடித்துவிட்டு தன் ஆளை தூக்கி எறிந்து கலாய்ப்பதாகட்டும், பின் அவள் பின்னால் கெஞ்சி அலைவதாகட்டும்..மனிதர் கலக்குகிறார்.

கதாநாயகி டிம்பிள். கொஞ்சம் ஷாலினி கொஞ்சம் ஜெயமாலினினு கலந்து கட்டின மாதிரி. களையான முகவாகு, கண்ணுக்கு குளிர்சியான உடல் வாகு..அப்படியே கலவரப்படுத்தும் உடைவாகும். க்ளாமர் விசயத்தில் தாராளக்கொள்கையுடைய மேடம் கண்டிப்பா ஒரு பெரிய ரவுண்டு வருவாங்க. கண்டு ரசியுங்கள் ரசிக மகா ஜனங்களே.

படத்தில் வரும் க்ளப் ஷாங்கிலும் (அதாங்க குத்துப்பாட்டு) க்ளாமர் படு தூக்கல் தான். டைரக்டர் ஒரு முடிவோடதான் இறங்கியிருக்கார். வழக்கமா இரட்டை அர்த்த வசனங்கள் வரும்போது கொஞ்சம் தயங்கி தயங்கிதான் வைப்பார்கள் இயக்குநர்கள். இவர் எந்த தயக்கமும் இல்லாமல் எப்படியும் ஏ சர்டிபிகேட் தான் தரப்போறாங்க என துணிந்து விளையாடியிருக்கிறார்.

ஆங்காங்கா சின்னச்சின்ன குறைகள் உண்டு. லிவிங்ஸ்டன் கதாபாத்திரம் அதில் ஒன்று. ஜாலியான அப்பா என்பதற்காக என்னேரம் பையனிடம் ப்ளூபிலிம் சிடி கேட்டி ஜொள்ளு விடுவதாக காட்டுவதெல்லாம் கடி. அதேபோல இரண்டாம் பாதியில் மகேஷ் என்ற ஒரு கதாபாத்திரம் இருக்கு என கதாநாயகனுக்கு தெரிந்த போது எந்த வித எமோசனும் இல்லாமல் ஏதோ காணமல் போன தங்க வாளை தேடுவதுபோல ஒரு உணர்ச்சியற்று அலைவது சிறுபிள்ளைத்தனம்.

அதே மாதிரி யாருடா மகேஷ்னு இந்த குழப்பத்தை உருவாக்குனதுக்கு இவிங்க குடுக்குற வெளக்கம் இருக்கே.. நிஜமாவே நான்சென்ஸ்.

ஆனால் காமெடி என முடிவு பண்ணி அதற்காகவே காட்சிகள் அமைத்திருப்பதால் இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை பாஸுன்னு டைரக்டர் விளக்கம் குடுப்பாரென்பதால் அதெல்லாம் பத்தி இதுக்கு மேல பேசவேண்டாம்.

கதாநாயகன் சந்தீப் கிஷன். லக்கி பெல்லோ.. ஏன்னா ஸ்கிரீன் ப்ளே ஜாலியாப் போறதால அவரோட நடிப்பப் பத்தி யாரும் பெருசா எடுத்துக்கல. அவரும் பெருசா அலட்டிக்கல.

இசை பரவாயில்லை.
[You must be registered and logged in to see this link.]


படத்துல ஒளிப்பதிவாளர் ராணாவின் பங்கு முக்கியமானது. புதுமுகங்களை வைத்து எடுக்கப்படும் படங்களில் தரம் இருக்கிறதா இல்லையா என முதலில் தீர்மானிப்பது ஒளிப்பதிவை வைத்துத்தான். அந்த விதத்தில் இது டுபாக்கூர் படமெல்லாம் இல்லை..நல்ல படம் தான் என முதல் ஃரேமிலிருந்து அவர் நிரூபிக்கிறார்.

மொத்தத்தில் ஜாலியாய் ஒரு கதையை எழுதி ரொம்ப ஜாலியா எடுத்திருப்பாங்க போல.. டைம்பாஸ்க்கு ஓக்கே. மாரல் ஆஃப் த ஸ்டோரி.. கல்யாணத்துக்கப்புறம் வீட்ல சும்மாருக்க கூடாது தம்பி.. உம்புள்ளைக்கு அப்பன் நீ தானானு கூட டௌட்ட கிரியேட் பண்ணி ரோட் ரோடா அலைய விட்டுடுவானுங்க.. தட்ஸ் ஆல் யுவர் ஆனர்.
[You must be registered and logged in to see this image.]
avatar
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 35
Location : bombay

Back to top Go down

Re: "யாருடா மகேஷ்" திரை விமர்சனம்

Post by அ.இராமநாதன் on Tue Jun 04, 2013 3:19 am

[You must be registered and logged in to see this image.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23697
Points : 51253
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: "யாருடா மகேஷ்" திரை விமர்சனம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Jun 12, 2013 3:52 pm

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum