"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வைகை ஆறு! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:39 pm

» முனைவர் நிர்மலா மோகன் புலமை நலம்! பதிப்பாசிரியர் : பேராசிரியர் முனைவர் பா.வளன் அரசு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 8:27 pm

» மாம்பழ சர்பத்
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 8:56 pm

» 2018ல் வருகிறது புதிய ஆபத்து
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 7:26 pm

» பல்சுவை - வாட்ஸ் அப்-ல் பெறப்பட்டவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 7:02 pm

» ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 3:03 pm

» சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 12:04 am

» பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்…!!
by அ.இராமநாதன் Mon Nov 20, 2017 12:03 am

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 11:05 pm

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:13 pm

» இயக்குனராகும் மதுபாலா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:12 pm

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:12 pm

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:11 pm

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by அ.இராமநாதன் Sun Nov 19, 2017 9:10 pm

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat Nov 18, 2017 9:04 pm

» டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:17 am

» முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:15 am

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by அ.இராமநாதன் Sat Nov 18, 2017 5:11 am

» எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:56 pm

» ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:56 pm

» கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:55 pm

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:42 pm

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:36 pm

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:34 pm

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:26 pm

» - மேய்ச்சல் - கவிதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:44 pm

» பயம் - கவிதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:44 pm

» கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:23 pm

» சென்னையில் 5ஜி சேவை: நோக்கியா தகவல்!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:18 pm

» போர்ப்ஸ் பத்திரிக்கையின் இளம் கண்டுபிடிப்பாளர்கள் பட்டியலில் இடம்பிடித்த சென்னை பெண்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:12 pm

» உரிய அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படும்: இந்திய அணுசக்தி கழகம்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:09 pm

» குரலை இனிமையாக்கும் மாங்கனி
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:07 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:18 pm

» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:17 pm

» கழுதை போச்சே! - சிறுவர் கதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:12 pm

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:03 pm

» ‘இம்சை அரசன்’ படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:56 pm

» சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:56 pm

» கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:55 pm

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:51 pm

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:50 pm

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:49 pm

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:48 pm

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:47 pm

» பத்மாவதி படத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:45 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உதயம் NH4 ...திரை விமர்சனம்

View previous topic View next topic Go down

உதயம் NH4 ...திரை விமர்சனம்

Post by udhayam72 on Mon May 13, 2013 2:29 pm

"பொல்லாதவன்", "ஆடுகளம்" உள்ளிட்ட வெற்றி படைப்புகளை தந்த இயக்குனர் வெற்றிமாறனின் எழுத்து-படைப்பு வடிவமைப்பிலும், அவரது உதவியாளர் மணிமாறன் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் திரைப்படம் தான் உதயம் NH4.
சென்னையிலிருந்து பெங்களூருக்கு படிக்கப் போகிறார் சித்தார்த். அதே கல்லூரியில் அஷ்ரிதா ஷெட்டியும் படிக்கிறார்.

[You must be registered and logged in to see this link.]




ஒரே கல்லூரியில் படிக்கும் இருவரும் ஒரு கால கட்டத்தில் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.

இவர்கள் காதல் விடயம் அஷ்ரிதா ஷெட்டியின் அப்பாவான அவினாஷூக்கு தெரிந்துவிடுகின்றது. அவினாஷ் பெங்களூரில் மிகப்பெரிய அரசியல்வாதி. தனது மகளின் காதலை பிரிப்பதற்காக அஷ்ரிதாவை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க முடிவெடுக்கிறார்.
இந்த விவகாரம் காதல் ஜோடிகளுக்கு தெரியவர, இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். அஷ்ரிதா ஷெட்டிக்கு 18 வயது பூர்த்தியடைய ஒருநாள் இருக்கும் பட்சத்தில் இருவரும் பெங்களூரை விட்டு சென்னைக்கு செல்ல வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.

தனது பண பலத்தையும், அதிகார பலத்தையும் வைத்து இருவரையும் பிடிக்க என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் பொலிஸ் அதிகாரியான கே.கே.மேனனை ரகசியமாக நியமிக்கிறார் அவினாஷ்.

சித்தார்த் - அஷ்ரிதா ஜோடி பெங்களூர்-சென்னை நேஷனல் ஹைவேயில் போய்க் கொண்டிருப்பதை மொபைல் சிக்னல் மூலமாக கண்டறியும் கே.கே.மேனன், அவர்களை பிடிக்க துப்பாக்கியும், கையுமாக பின் தொடர்கிறார்.

இறுதியில் சித்தார்த்-அஷ்ரிதா ஜோடி ஒன்று சேர்ந்தார்களா? அஷ்ரிதா 18 வயது பூர்த்தியடைவதற்குள் கே.கே.மேனன் பிடித்து தந்தையிடம் ஒப்படைத்தாரா? என்பதே மீதிக்கதை.

இதுவரை சாக்லேட் நாயகனாக ரசித்து வந்த சித்தார்த் இந்த படத்தின் மூலம் தனக்கு ஆக்ஷன் கதைக்களத்திலும் அதிரடி காட்டமுடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.

புத்திசாலித்தனமாக இவர் செய்யும் ஒவ்வொரு நகர்வும் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கிறது. ரொம்பவும் ஆர்ப்பாட்டமில்லாமல் இயல்பாக நடித்துள்ளார். படத்தில் தமிழ் பேசும் ஒரே நபர் இவரே.

அஷ்ரிதா ஷெட்டி குடும்ப பாங்கான தோற்றத்தில் அழகாக இருப்பதோடு, நடித்திருக்கவும் செய்திருக்கிறார். இவர் காதல் செய்யும் காட்சிகள் குறைவாக இருந்தாலும், சித்தார்த்தோடு இணைந்து ஓடுவதில் நன்கு தெரிவுப் பெற்றிருக்கிறார்.

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக வரும் கே.கே.மேனன் தமிழுக்கு புதுசு என்றாலும் படத்தில் ரசிக்கக்கூடிய கதாபாத்திரம் இவருடையதுதான். சில இடங்களில் பார்வையாலேயே மிரட்டுகிறார். மேலும் இவருடைய செய்கைகள் பல இடங்களில் கைதட்டல் பெறுகின்றன.

சித்தார்த்தின் நண்பர்களாக வருகின்ற அஜய், கலை, கார்த்தி, தீபக் மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோரும் தங்கள் பணியை அழகாக செய்திருக்கின்றனர்.

சாதாரண கதையாக இருந்தாலும் கொஞ்சம் சுவாரஸ்யமாக சொன்ன இயக்குனர் மணிமாறனை பாராட்டியே ஆகவேண்டும். இருப்பினும் இந்த படத்தில் இவருக்குன்னு தனி முத்திரை இல்லை. தனியாக படம் பண்ணும்போதுதான் இவருடைய முழு திறமையை கண்டறிய முடியும் என்பது நம் எண்ணம்.

படத்திற்கு மிக முக்கிய பலமே வெற்றிமாறனின் திரைக்கதையும் வசனம்தான். பெங்களூர்காரர்கள் எப்படி பேசுவார்கள் என்பதை ஆராய்ந்து அதை அப்படியே படத்தில் வசன மழையாக அள்ளி தெளித்திருக்கிறார் வெற்றிமாறன்.

படத்தில் அங்கங்கே சில சஸ்பென்ஸ் வைத்து படத்தை நகர்த்துவதால் படம் பார்க்கும்போது சளிப்பு ஏற்படவில்லை.

ஜி.வி.பிரகாஷின் இசையில் ‘யாரோ இவன்’, ஓரக்கண்ணாலே’ உள்ளிட்ட பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. வேல்ராஜின் ஒளிப்பதிவில் சித்தார்த் ரயிலில் தப்பிப் போகும் காட்சியும், கடைசிக் காட்சியும் பேசக்கூடியவை.

படத்தில் சில காட்சிகள் ரசிக்க வைத்தாலும், இடையிடையே வரும் பாடல்கள், சகிக்க முடியாத காதல் காட்சிகள் படத்தின் வேகத்திற்கு தடை போடுகின்றன.

மொத்தத்தில் ‘உதயம் என்.ஹெச் 4’ குடும்பத்தோடு பயணிக்கலாம். ஆகமொத்தத்தில், "உதயம்", தமிழ் சினிமாவுக்கு "புதிய உதயம்".
[You must be registered and logged in to see this image.]
avatar
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 35
Location : bombay

Back to top Go down

Re: உதயம் NH4 ...திரை விமர்சனம்

Post by udhayam72 on Mon May 13, 2013 3:43 pm

வெற்றிமாறனின் எழுத்தில், அவரது அஸிஸ்டென்ட் மணிமாறன் இயக்குநராய் அறிமுகமாகும் படம். வெற்றிமாறனுடன் இணைந்து தயாநிதி அழகிரி (தான் புதிதாய் துவங்கியிருக்கும் மீகா என்டர்டெய்ன்மென்ட் சார்பாக) தயாரித்து, அதை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் வெளியிடும் படம் என பலவித பில்டப்புகளுடன் தான் வந்திருக்கிறது இந்த உதயம் NH4.

இது ஒரு ரொமாண்டிக் படம்.. ஆனால் ரொமான்டிக் படங்களுக்கேயுரித்தான திரைக்கதையமைக்காமல் ஒரு ஆக்சன் படத்துக்கான பிரசன்டேசனை திரைக்கதையில் குடுத்திருக்கிறார் வெற்றிமாறன். ( இவர் பொல்லாதவனை இயக்குவதற்கு முன்பு இந்தக் கதையைத்தான் தேசிய நெடுஞ்சாலை என ஆரம்பித்து பல போராட்டங்களுக்குப்பின் இது ட்ராப்பாகி பொல்லாதவனை எடுத்தார்)

கர்நாடகாவின் பிரபலமான அரசியல்வாதி(அவினாஷ்) ஒரு நாள் காலையில் ஒரு போலிஸ் அதிகாரியை(கே கே மேனன்) அழைத்து, தன் பெண்ணை சில ரௌடிகள் கடத்திவிட்டார்கள், கேஸ் குடுத்தா பிரஸ்டீஜ் பிராப்ளம், ரகசியமா கண்டுபுடிச்சி கொண்டுவான்னு அனுப்புறார். இந்த போலிஸ் அதிகாரியும் அந்த பசங்களோட ப்ரெண்ட்ஸை அடிச்சி விசாரிச்சா இது கடத்தல் பிரச்சினை இல்லை லவ் மேட்டர்னு தெரியுது. அரசியல்வாதிட்ட கேட்க ஆமாய்யா லவ் மேட்டர்தான். எப்படியாச்சும் என் பொண்ண கொண்டுவா, அதுவும் இன்னிக்கே நைட் 12 மணிக்குள்ள கொண்டுவா.. ஏன்னா 12 மணிக்கு அப்புறம் அவளுக்கு 18 வயசாயுடும் மேஜர் பொண்ணாயிடுவா, அப்படியே வர்றப்ப அந்த பசங்களை காலி பண்ணிடு என கேசுவலாய் உத்தரவு குடுக்க, கே கே மேனனின் தேடுதல் வேட்டை துவங்குகிறது.

அந்தப் பசங்களாகப்பட்ட சித்தார்த் மற்றும் நண்பர்கள் இந்த தேடுதல் வேட்டையிலிருந்து தப்பிக்க எப்படியெல்லாம் ஐடியா பண்ணுகிறார்கள், போராடுகிறார்கள், அலைகிறார்கள் கடைசியில் இந்த காதலர்கள் ஒன்று சேர்கிறார்களா இல்லை மாட்டிக்கொள்கிறார்களா என்பதுதான் மீதிக்கதை.

படத்தில் ஆங்காங்கே சின்ன சின்ன ஃப்ளாஸ்பேக்கில் சித்தார்த், அஷ்ரிதா ஷெட்டிக்கு இடையே காதல் வந்த எபிஷோட்கள் காண்பிக்கப்படுகிறது. மற்றபடி கதை முழுவதும் பெங்களூரிலிருந்து தமிழ்நாட்டுக்கு இந்த ஜோடியும் நண்பர்களும் எப்படி வருகிறார்கள் என ஓடுவதும், துரத்துவதும் தான்.

பெங்களூரில் படிக்க போய், ஆக்சுவலா நாங்க குடிக்கத்தான் இங்க வந்தோம், படிப்பு அப்புறம் தான் என பப்களை தேடி அலையும் நன்பர்களுடன் கதை துவங்குகிறது. ப்ளாஸ்பேக்கின் பெரும்பாலான காட்சிகள் பப்களிலேயே நடப்பது ஒரே மாதிரியாய் தெரிகிறது. அதை போரடிக்காமல் காப்பாற்றுவது அந்த நண்பர்களில் ஒரு குண்டு நண்பரின் லைட்டான காமெடி டயலாக்குகள் தான்.

தேடித்துரத்தும் போலிஸ் அதிகாரியாய் வரும் கே.கே.மேனனின் கதாபாத்திரமும், அவரது நடிப்பும் சுவாரஸ்யம். அவருக்குள் இருக்கும் இன்னொரு மனிதனை, அவரது முன்கதையை, தொடர்ந்து வரும் அவரது மனைவியின் போன் கால்கள் மூலமே காட்டியிருப்பது அருமை. அந்தப் பெண்ணின் முகத்தைக்கூட காட்டாமல் வெறும் வசனத்திலேயே, அவர்கள் இருவருக்குமான அன்னியோன்யம், அன்டர்ஸ்டான்டிங் என பல விசயங்கள் உணர்த்தப்படுவது தைரியமான முயற்சி. வசனங்களில் வெற்றிமாறன் பளிச்சிடுகிறார்.

பிரபுவாக வரும் சித்தார்த்திற்கு அலட்டிக்கொள்ளாத காரக்டர். நீ செத்துட்டா நான் செத்துடமாட்டேன் ஆனா லைப் புல்லா மனசுல ஒரு வலி இருந்துகிட்டே இருக்கும் பரவாயில்லையா எனக் கேட்கும், பப்பில் சிகரெட் பிடிக்கும் பெண்ணை நக்கலாய் பார்க்காமல், கலாய்க்காமல் சகஜமாய் லைட்டர் இருக்கா எனக் கேட்கும், எல்லாவற்றையும் ஒரு பாலன்சுடன் பார்க்கும் மெச்சூரான கேரக்டர். ஆள் இப்பவும் கல்லூரி மாணவனாய் கச்சிதமாய் பொருந்தும் இளமையுடன் இருப்பது ஆச்சர்யம். தமிழில் காதலில் சொதப்புவது எப்படிக்கு அப்புறம் மீண்டும் ஒரு நல்ல படமாய் ஸ்கோர் பண்ணுகிறார். இந்த வருடம் முழுவதும் தமிழ் படங்கள் தானாம். வரட்டும்.

அவரது காதலியாய் வரும் அஷ்ரிதா ஷெட்டிக்கோ நேர் மாறாய், ஒரு குழந்தைத்தனமான, யார் என்ன சொன்னாலும் நம்பும், கான்வென்ட் ஆங்கிலத்தில் இன்னொசன்டாய் பேசும் கதாபாத்திரம். அழகாய் ப்ரெஷ்ஸாய் இருக்கிறது. அவரும் இருக்கிறார்.

ரொமாண்டிக் படங்களில் காதலன் காதலிக்கிடையே பத்திக்கிட்டு ஓடுற பீலிங்ஸ், எமோசன்ஸ் எல்லாமே இங்கே ரொம்ப அன்டர்பிளேயாக இருப்பது புதிதாய் இருக்கிறது. ஆனால் அதனாலோ என்னவோ இருவருக்கும் அந்த கெமிஸ்ட்ரின்னு ஒன்னு சொல்லுவாங்கே அது ஒரு மாதிரி மிஸ்ஸிங். டல்லடிக்கிறது.

ஜிவி பிரகாஷ் குமாரின் "யாரோ இவன்" ஏற்கனவே செம ஹிட்டான பாடல்.. ரம்மியமாய் இருக்கிறது விஷுவலுடன் பார்க்க. கானா பாலாவின் பாடலும் கவனத்தை ஈர்க்கிறது. அந்தப் பாடலை கதைக்குள் கொண்டு வந்திருப்பதிலும் இயக்குநரின் புத்திசாலித்தனம் தெரிகிறது.

அதேபோல சைபர் க்ரைம் டிபார்ட்மெண்டில் செல்போனை எப்படியெல்லாம் ட்ராக் பண்ணுகிறார்கள் என விலாவரியாய் காமிப்பதிலும் இயக்குநர் பிரகாசிக்கிறார். அங்கே போய் ஆறு மாசம் வேலை செஞ்சிருப்பார் போல.

பெரும்பாலும் ஹைவே ட்ராவலிங்கில் இருக்கும் படமாதலால் ஒளிப்பதிவாளர் வேல்ராஜிற்கு செம தீனி. பல ஆங்கிள்களில் பிரம்மாண்டத்தை கொண்டு வருகிறார். காரிலிருந்து ட்ரெயினுக்குள் சென்று மீண்டும் காருக்குள் பிரயாணம் செய்யும் கேமரா மூவ்மெண்ட் க்ராபிக்ஸ் உதவியுடன் என்றாலும் பாராட்டப்படவேண்டியது.

ஒரு ரொமான்ஸ் படத்திற்கான மென்மையான ட்ராவல் இல்லாமல் வேகமாய் சுறுசுறுப்பாய் இருக்கிறது. ஆனால் இன்னொரு புறம் ஹைவேயில் ஓட, துரத்த என இருக்கும் கதையில் அதற்கான ஆக்சன்களோ விறுவிறுப்போ குறைவாகவே இருக்கிறது.

மொத்தத்தில் ஆஹா ஓகோ என பாராட்டும்படியில்லாவிட்டாலும் ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தை குடுக்கும் படம் இது. பார்த்து ரசிக்கலாம். கல்லூரிப்பெண்களை கவரும் டீசன்டான காதல் கதை அப்ரோச் இருப்பதால் அவர்களின் ஆதரவு நிறைய கிடைக்கும் என்பது நமது யூகம்.
avatar
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 35
Location : bombay

Back to top Go down

Re: உதயம் NH4 ...திரை விமர்சனம்

Post by அ.இராமநாதன் on Tue Jun 04, 2013 3:19 am

[You must be registered and logged in to see this image.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24376
Points : 53010
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: உதயம் NH4 ...திரை விமர்சனம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Jun 12, 2013 3:52 pm

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum