"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 8:10 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 7:38 pm

» எஸ்.ஜே.சூர்யாவின் வில்லன் அவதாரம்!
by அ.இராமநாதன் Yesterday at 7:37 pm

» கதையின் நாயகியான தன்ஷிகா!
by அ.இராமநாதன் Yesterday at 7:36 pm

» தமிழில் ஹீரோவாகும் மலையாள நடிகர்!
by அ.இராமநாதன் Yesterday at 7:36 pm

» நேரடி தமிழ் படத்தில் மஞ்சுவாரியர்
by அ.இராமநாதன் Yesterday at 7:34 pm

» 'இமேஜ்' வட்டத்திற்குள் ஓவியா!
by அ.இராமநாதன் Yesterday at 7:33 pm

» ஜி.வி.பிரகாஷின் சமூக சேவை!
by அ.இராமநாதன் Yesterday at 7:33 pm

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:25 am

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by அ.இராமநாதன் Yesterday at 8:55 am

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by அ.இராமநாதன் Yesterday at 8:52 am

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by அ.இராமநாதன் Yesterday at 8:50 am

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by அ.இராமநாதன் Yesterday at 8:49 am

» எல்லாம் பிறர்க்காகவே!
by அ.இராமநாதன் Yesterday at 8:46 am

» புதிரான போர் - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:42 pm

» காதல் என்பது...
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:40 pm

» காதல் - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:34 pm

» கறுப்பு - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:33 pm

» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு ! தமிழ்காக்கக் கொட்டு முரசே கொட்டு ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sat Sep 23, 2017 5:01 pm

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Sat Sep 23, 2017 2:58 pm

» இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:23 pm

» முதல் பெண் போலீசார் 40 ஆண்டுக்கு பின் சந்திப்பு
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:21 pm

» 7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:19 pm

» பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:17 pm

» 2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:16 pm

» நவீன தொழில்நுட்பத்துடன் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:11 pm

» அந்த நாள் -செப் 22 --2016
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 12:57 pm

» நதிக்கரை - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:39 pm

» நாட்டு நடப்பு - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:38 pm

» நீ என்ன தேவதை - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:31 pm

» புகைப்படம் - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:28 pm

» பெயருக்குத்தான் - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:18 pm

» அழகு - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:16 pm

» விநோதமான வேலை!
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:05 pm

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:04 pm

» விஷ சேவல் கோழி மீன்
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 2:19 pm

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 2:09 pm

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:57 am

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:55 am

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:53 am

» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Thu Sep 21, 2017 9:15 pm

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:04 pm

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:04 pm

» முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி உடல்நல குறைவு
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:03 pm

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:02 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சேட்டை............திரை விமர்சனம்

View previous topic View next topic Go down

சேட்டை............திரை விமர்சனம்

Post by udhayam72 on Mon May 13, 2013 2:32 pm

கைமாறிப் போகும் கடத்தல் வைரமும் அதைக் கண்டு பிடிக்க நடக்கும் சுவாரசியம் தான் சேட்டையின் கதை.
இதை கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் முகச் சுழிப்பு, கொஞ்சம் சேட்டை கலந்த கலவையாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் கண்ணன்.

[You must be registered and logged in to see this image.]



இந்தியில் வெளியாகி ஒரு சாராரின் வரவேற்பை மட்டுமே பெற்ற டெல்லி பெல்லி படத்தின் ரீமேக்தான் இந்தப் படம். மும்பையில் வெளியாகும் ஒரு தமிழ்ப் பத்திரிகையில் நிருபராகப் பணியாற்றுபவர் ஆர்யா.

அவருடன் கார்ட்டூனிஸ்டாக வேலை பார்க்கிறார் பிரேம்ஜி. பின்னர் நடுப்பக்கம் நக்கி என்ற கிசுகிசு எழுத்தாளராக வருகிறார் சந்தானம்.

ஆர்யாவின் பணக்காரக் காதலி ஹன்சிகா, ஏர் ஹோஸ்டஸ் ஆக பணிபுரிகின்றார். ஒன்சைட் காதலி அஞ்சலி. ஆங்கிலப் பத்திரிகை நிருபர். ஒரு நாள் ஹன்சிகா ஒரு பார்சலை ஆர்யாவிடம் கொடுத்து, அதை தன் தோழியிடம் கொடுக்கச் சொல்கிறார்.

ஆர்யா அதை சந்தானத்திடம் கொடுக்கிறார். போகும் வழியில் இலியானா சிக்கன் என்ற பாஸ்ட் புட் அயிட்டத்தை ஏக மசாலாவோடு சேர்த்துத் தின்றதால் சந்தானம் பாத்ரூமே கதியென கிடக்கிறார்.

மருத்துவமனையில் அவரது மோஷன் சாம்பிள் கேட்கிறார்கள். ஒரு பெரிய டப்பாவில் அதை அடைத்து லேபில் தரச்சொல்லி பிரேம்ஜியிடம் தருகிறார். கூடவே அந்த பார்சலையும் கொடுத்து அனுப்புகிறார். பார்சல் மாறிப் போகிறது.

ஹன்சிகா கொடுத்த பார்சலில் ரூ 2 கோடிக்கு கடத்தல் வைரங்கள் இருப்பது தெரியாமல், அதை லேபிலும், சந்தானத்தின் பார்சலை கடத்தல் கும்பல் தலைவன் நாசரின் அடியாளிடமும் பிரேம்ஜி சேர்த்துவிட, இந்த வைரங்கள் கடைசியில் யார் கைக்குப் போகின்றன என்பதை சொல்லியிருக்கிறார்கள்.

படத்தில் நாசர்தான் வில்லன். கிட்டத்தட்ட தமாஷ் வில்லன். பஞ்சு சுப்பு, அலி, மனோபாலா, சாயாஜி ஷிண்டே, சுஜா வருணி ஆகியோரும் வந்து போகின்றனர்.

வசனம், இசை, ஒளிப்பதிவு ஜான் மகேந்திரன் வசனம் எழுதியிருக்கிறார். இந்தக் காலத்துக்கேற்ப சின்னச் சின்ன உரையாடல்கள். கொமெடிப் பகுதிக்கு மட்டும் சந்தானமே எழுதியுள்ளார். தமனின் இசை, பாடல்கள் இரண்டுமே சுமார்தான். ஒளிப்பதிவு பிஜி முத்தையா.
[You must be registered and logged in to see this image.]
avatar
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 35
Location : bombay

Back to top Go down

Re: சேட்டை............திரை விமர்சனம்

Post by udhayam72 on Mon May 13, 2013 3:51 pm

ஆர்யாவும் ப்ரேம்ஜியும் மும்பையில் ஒரு கார்ப்பரேசன் குப்பைத்தொட்டி போன்ற ரூமில் ரூம்மேட்ஸ். ஆர்யாவின் வேலை ஒரு பத்திரிக்கை ரிப்போர்டர். அந்த அருவருப்பான ரூமில் தானாய் வந்து வலையில் விழுந்து ஒட்டிக்கொள்கிறார் சந்தானம். ஆனால் ஆர்யாவின் காதலியோ ஹைகிளாஸ் ஹன்சிகா. ஏர் ஹோஸ்டஸாய் வேலை. அவர் தன் ஃப்ரெண்டு ஒருத்தி சாதாரணமாய் கேட்ட ஒரு சின்ன உதவியை செய்யப் போக அதுதான் கதையை ஆரம்பித்து வைக்கிறது. அதாவது ஏர்போர்டில் ஒரு பார்சலை வாங்கி ஒரு அட்ரஸில் குடுக்கும் உதவி.
[You must be registered and logged in to see this image.]


வேலை முடிந்ததும் நேராய் யூனிபார்ம் கூட மாற்றாமல் தன் காதலன் ஆர்யாவின் ரூமுக்கு வந்து ரூம்மேட்கள் முன்னாலேயே கொஞ்சி விட்டு, போகிற போக்கில் தன் ஃப்ரென்டுக்கான பார்சலை ஆர்யாவிடம் குடுத்து அந்த அட்ரஸில் குடுக்க சொல்ல, ஆர்யா சந்தானத்திடம் குடுக்க, ஒரு ரோட்டோர சிக்கனை சாப்பிட்டு லூஸ்மோசனில் அலையும் சந்தானம் அந்த பார்சலை ப்ரேம்ஜியிடம் குடுக்க, ப்ரேம்ஜி ஒரு குழப்பத்தில் பார்சலை மாற்றிக்குடுத்துவிட.. பார்சலுக்காக காத்திருக்கும் தாதா நாசர் கடுப்பாக அதன் தொடர்சியான சம்பவங்கள் தான் கதை. இடையில் இன்னொரு ரிப்போர்டராய் வரும் அஞ்சலியுடன் ஒரு லேசான காதல் எபிசோட் ஒன்று.

இந்த படத்தின் பலமே கதைதான். இன்னும் தெளிவாய் சொல்லப்போனால் திரைக்கதைதான். நாம் வழக்கமாய் பார்த்து பழகிய, அல்லது எதிர்பார்க்கும் எந்த சீன்களும் இல்லாமல் இருப்பதுதான் பெரிய பலம். அதற்கு காரணமும் இருக்கிறது. இந்தப் படத்தின் ஒரிஜினலான டெல்லி பெல்லி படத்தின் ஸ்கிரிப்டை எழுதியவர் அக்சத் வர்மா. அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் கல்லூரியில் சினிமாக் கலை பயிலும் போது அதற்கான ப்ராஜக்டாக எழுதியதுதான் இந்த ஸ்கிரிப்ட். அதனால் தான் நமது இந்திய சினிமாவின் தாக்கம் எள்ளவும் இல்லை. பின் பல போராட்டங்களுக்குப் பின் ஆமிர் கானில் தயாரிப்பு நிறுவனத்தில் அந்த ஸ்கிரிப்ட் ஓக்கேயானது தனிக்கதை.

இதைத் தமிழ் படுத்திய டைரக்டர் ஆர்.கண்ணனும் ஸ்கிரிப்டை பெரிய அளவில் எதுவும் மாற்றிவிடவில்லை. சில பாடல்களை மட்டும் இடையில் சொருகி படத்தின் சீரான ஓட்டத்தை சற்று தடைபடுத்தியிருக்கிறார். மற்றபடி கதையும் மும்பையிலேயே நடப்பதாய் வைத்துவிட்டதால் தமிழ் கலாச்சாரத்துக்கென பெரிய மெனக்கெடல் எதுவும் தேவைப்படவில்லை. ஹிந்தி டெல்லி பெல்லியில் இருந்த எல்லாமே அப்ப்ப்ப்ப்ப்படியே இதிலும் இருக்கிறது. கண்ணனின் பலமும் அதுதான் பலவீனமும் அதுதான். இவர் ரீமேக் செய்யும் போது ஒரிஜினிலை எந்த விதத்திலும் சிதைத்துவிடுவதில்லை. இன்னும் கமர்சியலாக்குறேன் பார் என்ற கந்தர்வகோலமெல்லாம் பண்ணி கெடுப்பதில்லை. அப்படியே அதே எஃபக்டை இங்கும் கொண்டுவந்துவிடுகிறார். அதனால் தான் ரீமேக் கிங் என்ற நற்பெயரை சம்பாதித்து பெரிய பட்ஜெட்டில் ரீமேக் என்றால் முதலில் தன் பெயர் தான் வரும் என்ற இடத்தை பிடித்துவிட்டார் ஆர். கண்ணன்.
அதே சமயம் நாம் இன்னொரு விசயத்தையும் நோட் பண்ண வேண்டும். இப்படி ரீமேக் பண்ணும்போது க்ரியேட்டிவ்வாக இவரது பங்களிப்பு என்று பெரிதாய் எதுவும் இருந்துவிடுவதில்லை. அந்த ஒரிஜினல் படத்தை விட இன்னும் சிறப்பாய் எடுக்கிறேன் என்ற ஏரியாவுக்கே இவர் போவதில்லை. ஆகவே ஒரு முழுமையான இயக்குனர் என்ற பார்வையில் கண்ணனை இன்னும் பார்க்க முடியவில்லை. அதற்கு அவரது சொந்த சிந்தனையில் உருவாகும் படம் வரும் வரை காத்திருக்கவேண்டும்.

ஹன்சிகாவுக்கு பணக்கார காதலி வேடம். இயல்பாய் பொருந்துகிறார். கொஞ்சம் எடையை குறைத்து நமது சந்தோசத்தை கூட்டுகிறார். பெரிய அளவுக்கு கதையிலே காதலிலோ அவருக்கு வேலை இல்லை. உண்மையை சொல்லப்போனால் அனைவருக்குமே தனிப்பட்ட முறையில் பெரிய முக்கியத்துவமெல்லாம் இல்லை. (ஆனால் இன்றைக்கு ஹன்சிகாவின் அழகுக்கு இருக்கும் டிமாண்டுக்கு அவர் வந்தாலே போதும் என்ற நிலை என்பது வேறு விசயம்). திரைக்கதைக்கு தேவைப்பட்ட அளவுக்கு மட்டுமே ஒவ்வொரு கதாபாத்திரமும் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதுவும் திரைக்கதையின் பலமாகிறது. ஆர்யா ஹீரோ என்பதற்காக தனியாய் எந்த பில்டப்பும் இல்லை. ஹீரோயிசமான சண்டைக்காட்சிகள் இல்லை. அவர் அந்த பாத்திரத்துக்கு தேவையானதை கச்சிதமாய் செய்திருக்கிறார்.

அஞ்சலி ஃப்ரஷ்சாக இருக்கிறார். கலகலப்பில் க்ளாமர் அவதாரம் எடுத்த அவருக்கு இதில் இன்னொரு விதமான தோற்றம்.
தமனின் இசையில் பாடல்கள் பெரிய அளவில் சொல்லும் படி இல்லைதான். ஆனால் பின்னணி இசையில் ஸ்கோர் பண்ணுகிறார்.

ப்ரேம்ஜியின் 'லோ ஹிப்' ஷாட்கள். சந்தானத்தில் அடிவயிறு கலக்கலின் விளைவுகள், அது தொடர்பான பாத்ரூம் டீடெய்லகள், சவுண்ட் எஃபெக்ட்கள் என கொஞ்சமாய் அதிர்ச்சியளிக்கும் காமெடி-நெடிகள் படம் முழுவதும் உண்டு. அதை என்ஜாய் பண்ணுவதும், நெளிவதும் அவரவர் விருப்பம். ஆனால் டெல்லி பெல்லி படத்தில் இருந்த அளவுக்கு ராவான காட்சிகள், டயலாக்குகள் இங்கே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

பெரிய அளவில் ஃபீல் பண்னுவது அல்லது மனதை தொடுவது அல்லது மிரட்சியடைவது இதெற்கெல்லாம் இந்தப் படத்தில் வேலை இல்லை. ஒரு ரெண்டு மணி நேரத்தை போரடிக்காமல், வழக்கமான பார்த்து புளித்த காட்சிகள் இல்லாமல் கலகலப்பாய் ஓட்டும் நிறைவான படம் இது. பாருங்கள்.[You must be registered and logged in to see this image.]
avatar
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 35
Location : bombay

Back to top Go down

Re: சேட்டை............திரை விமர்சனம்

Post by அ.இராமநாதன் on Tue Jun 04, 2013 3:19 am

[You must be registered and logged in to see this image.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23302
Points : 50232
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: சேட்டை............திரை விமர்சனம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Jun 12, 2013 3:52 pm

[You must be registered and logged in to see this image.]

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum