"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அவசரப்படாதே மச்சி!!
by அ.இராமநாதன் Yesterday at 9:32 pm

» பாப்பி – நகைச்சுவை
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்…?
by அ.இராமநாதன் Yesterday at 9:26 pm

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by அ.இராமநாதன் Yesterday at 9:22 pm

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by அ.இராமநாதன் Yesterday at 9:21 pm

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by அ.இராமநாதன் Yesterday at 9:20 pm

» கடல் போல் இருக்கும் மனைவி!
by அ.இராமநாதன் Yesterday at 9:19 pm

» நமக்கு வாய்த்த தலைவர்
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:02 pm

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by அ.இராமநாதன் Yesterday at 8:50 pm

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by அ.இராமநாதன் Yesterday at 8:48 pm

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Mon Aug 14, 2017 3:12 pm

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 9:10 pm

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 7:02 pm

» திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமனம்
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:42 pm

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:41 pm

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:40 pm

» - இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:39 pm

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:37 pm

» பாரதி - சிறுகதை
by varun19 Sat Aug 12, 2017 2:13 pm

» அனுபவ மொழிகள்
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 1:28 pm

» பிரபஞ்ச உண்மைகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Fri Aug 11, 2017 4:45 pm

» நகைச்சுவைப் படமாக உருவாகிறது ‘தொல்லைக்காட்சி’
by அ.இராமநாதன் Wed Aug 09, 2017 1:53 pm

» தனி மனிதன் தருகின்ற தண்டனை பற்றிய கதை
by அ.இராமநாதன் Wed Aug 09, 2017 1:50 pm

» கண்ணுக்கு குலமேது?
by அ.இராமநாதன் Wed Aug 09, 2017 1:40 pm

» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Sat Aug 05, 2017 10:22 pm

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Sat Aug 05, 2017 9:59 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Sat Aug 05, 2017 9:35 pm

» நறுக்குக் கவிதைகள்
by அ.இராமநாதன் Fri Aug 04, 2017 10:07 pm

» பெய்யும் மழையின் அழகு…!!
by அ.இராமநாதன் Fri Aug 04, 2017 10:05 pm

» காய்ந்து போகாத கவிதை மை
by அ.இராமநாதன் Fri Aug 04, 2017 10:04 pm

» இனியேனும் போராடு
by அ.இராமநாதன் Fri Aug 04, 2017 9:59 pm

» விக்ரம் வேதா – திரைப்பட விமரிசனம்
by அ.இராமநாதன் Thu Aug 03, 2017 9:41 pm

» அருளே திருளே - கவிதை
by அ.இராமநாதன் Thu Aug 03, 2017 9:33 pm

» ஏன் வதைக்க வேண்டும்
by அ.இராமநாதன் Thu Aug 03, 2017 9:25 pm

» கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …!
by அ.இராமநாதன் Thu Aug 03, 2017 4:18 pm

» எப்போதும் தமிழில் அச்சனை...!
by அ.இராமநாதன் Thu Jul 27, 2017 9:29 pm

» உபயோகமில்லாத பொருள் ஏதாவது இருந்தா கொடுங்க தாயீ
by அ.இராமநாதன் Thu Jul 27, 2017 9:22 pm

» சொல்றதுக்கெல்லாம் சரின்னு தலையாட்டுவா...!!
by அ.இராமநாதன் Thu Jul 27, 2017 9:17 pm

» சின்ன வீடு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:48 am

» வண்ணக் கனவுகள்!
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:26 am

» வாசகர் கவிதை
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:19 am

» கைப்பேசி யாருக்கு - காத்துவாயன் கவிதை
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:18 am

» இக்கரை அக்கரை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:09 am

» நியாயமா- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 3:54 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines தீர்ப்பு...

View previous topic View next topic Go down

தீர்ப்பு...

Post by udhayam72 on Tue May 21, 2013 12:42 pm

தீர்ப்பு...
"அப்பா ப்ளீஸ்... வேண்டாம்... நான் முடிவு பண்ணிட்டேன்... டைவர்ஸ் தான்"

"அஞ்சலி..."

"ப்ளீஸ்'ப்பா... வேற வழி இல்ல. தினம் தினம் அடி திட்டுனு எனக்கு வெறுத்து போச்சுப்பா"

"அதில்லம்மா..."

"என்னோட இஷ்டத்துக்கு எதுவுமே செய்ய முடியாம என்ன லைப்'பா இது. வேண்டாம்'ப்பா போதும்"

"அது..."

"அப்பா, ஒரு நாள் இல்ல ரெண்டு நாள் இல்ல, பத்து வருசமா இந்த டார்ச்சர்... போதும்'ப்பா ப்ளீஸ்"

"என்ன இருந்தாலும்..."

"அத்தன பேர் முன்னாடி என்னை எப்படி இன்சல்ட் பண்ணி... ச்சே"

"ஆனா..."

"நீங்க என்ன சொல்ல போறீங்கனு எனக்கு தெரியும்'ப்பா. தனியா எப்படினு தானே... எனக்கு நீங்க போதும்பா, உங்க பொண்ணா இருந்துக்கறேன்'ப்பா"

"நீ நெனைக்கற மாதிரி..."

"என்னால முடியும்'ப்பா"

"நான் சொல்றத கொஞ்சம்..."

"இங்க பாருங்கப்பா. நீங்க இன்னும் என்னை கம்பெல் பண்ணினா நான் வீட்டை விட்டு போய்டுவேன்"

"என்னது?"

"ஆமாம்'ப்பா எனக்கு வேற வழியில்ல"

"எங்கம்மா போவ?"

"எங்கயோ போறேன்"

"நான் என்ன சொல்றேன்னா..."

"வேண்டாம்'ப்பா, எதுவும் சொல்ல வேண்டாம். உங்க பிரெண்ட் அதான் லாயர் நாராயணன், அந்த அங்கிளை நாளைக்கி காலைல போய் பாக்கலாம். இப்ப எனக்கு தூக்கம் வருது, நான் போய் தூங்கறேன் குட் நைட்'ப்பா" என எழுந்து தன் அறைக்குள் சென்றாள் அஞ்சலி

மகள் செல்வதையே பார்த்து கொண்டிருந்த சரவணன், மௌனமாய் தன் அறைக்குள் சென்றார்

அறைக்குள் வந்தவரை பார்த்த அவர் மனைவி தேவி, தான் படித்து கொண்டிருந்த புத்தகத்தை மடித்து வைத்து விட்டு நிமிர்ந்தாள்

"என்ன? அப்பா பொண்ணு பேச்சு வார்த்தை எல்லாம் முடிஞ்சதா?" என தேவி கேட்க, அதுவரை கட்டுப்படுத்தி இருந்த சிரிப்பை அதற்கு மேல் அடக்க மாட்டாமல் வாய் விட்டு சிரித்தார் சரவணன்

"எதுக்கு சிரிக்கறீங்க?" என தேவி விழிக்க

"அது..." என தொடங்கியவர், மீண்டும் சிரிக்க தொடங்க

"ஒண்ணு, சொல்லிட்டு சிரிங்க. இல்லைனா சாவுகாசமா சிரிச்சு முடிச்சுட்டு என்னை எழுப்புங்க. குட் நைட்" என தேவி கூறவும்

"இரு இரு... ஹா ஹா ஹா... கேட்டா நீயும் பயங்கரமா சிரிக்க போற" என மறுபடியும் சிரிக்க

"அப்படி என்ன தான் சொன்னா உங்க சீமந்த புத்திரி" என கோபமாய் கேட்க

"நான் உன்னை டைவர்ஸ் பண்ணனுமாம்" என்று கூறிவிட்டு சிரிக்க

"என்னது?" என அதிர்ச்சியாய் எழுந்து நின்றாள் தேவி

"ஏய்...எங்க போற?" என சரவணன் தடுக்க

"ம்... உங்க பொண்ண கொஞ்ச போறேன்... எவ்ளோ கொழுப்பு இருந்தா அப்படி சொல்லும் அந்த குட்டி சாத்தான்" என சரவணன் தடுக்க தடுக்க மகளின் அறைக்குள் சென்றாள் தேவி

அஞ்சலியின் அறை விளக்கை உயர்பித்தவள் "என்னடி சொன்ன உங்க அப்பாகிட்ட?" என தேவி கோபமாய் கேட்க, அஞ்சலி தன் தந்தையை முறைத்தாள்

"ஐயோ... நான் ஒண்ணும் சொல்லல..." என பொய் பயம் காட்டி சிரிப்பை அடக்கினார் சரவணன்

"என்னை டைவர்ஸ் பண்ணனும்னு சொன்னியாடி?" என தேவி மிரட்ட

"அப்பா... நான் தூங்கணும், உங்க wife'ஐ கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணாம இருக்க சொல்லுங்க"

"என்னடி சொன்ன?" என தேவி முறைக்க

"அப்பா, உங்க wifeக்கு பெரிய ஜோதிகானு நெனப்பு, மொறைச்சு மொறைச்சு ஷோ காட்ட வேண்டாம்னு சொல்லுங்க"

அதை கேட்டதும் சரவணன் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட, தேவி முறைத்தாள்

"மீ சைலண்ட்" என மௌனமானார் சரவணன்

"மொளச்சி மூணு இல விடல பேச்ச பாரு" என தேவி அடிக்க கை ஒங்க

"ஏய் தேவி.. கொழந்தய போய்..." என சரவணன் தடுக்க

"கொழந்தனா கொழந்த மாதிரி இருக்கணும்... இது கொழந்த பேசற பேச்சா? பத்து வயசுக்கு இந்த பேச்சு பேசினா பல்லை தான் ஒடைக்கணும்"

"கூல் டௌன் தேவி ப்ளீஸ்" என சரவணன் சமாதானம் செய்ய

"அப்ப உங்க பொண்ண எங்கிட்ட சாரி கேக்க சொல்லுங்க"

"நான் எதுக்கு சாரி கேக்கணும். இன்னிக்கி சாயங்காலம் என் பிரெண்ட்ஸ் முன்னாடி என்னை திட்டினதுக்கு உங்க wife தான் என்கிட்ட சாரி கேக்கணும்'ப்பா"

"போட்டேனா ஒண்ணு வாய் மேல. பெரிய பிரெண்ட்ஸ் இவளுக்கு, ஹோம் வொர்க் பண்ணாம மத்த பிளாட் பசங்க கூட வெளையாடிட்டு இருந்தா திட்டாம கொஞ்சுவாங்களா... என்னடி மொறைக்கற?"

"எப்ப பாத்தாலும் இத செய்யாத அத செய்யாதனு டார்ச்சர் ச்சே... எனக்கு வாழ்க்கையே வெறுத்து போச்சு"

"நீ பேசலடி... நீ பாக்கற டிவியும் சினிமாவும் கத்து குடுக்கறது தான் எல்லாமும். அத ஒளிச்சு கட்டினா தான் இது உருப்படும்"

"அப்பா... டைவர்ஸ்'க்கு அப்புறம் நீங்க என்கூட இருக்க போறீங்களா இல்ல உங்க wife கூட இருக்க போறீங்களானு இப்பவே முடிவு பண்ணிக்கோங்க"

"கழுத உன்ன..." என தேவி அடிக்க ஸ்கேல் எடுக்க, பாய்ந்து தந்தையின் பின்னால் சென்று ஒளிந்து கொண்டு கையில் சிக்காமல் ஓடினாள் அஞ்சலி

"ஒகே ஒகே... ரெண்டு பேரும் பேசாம இருங்க கொஞ்ச நேரம்" என மனைவியையும் மகளையும் ஆளுக்கு ஒரு புறம் அமர்த்திய சரவணன்

"தேவி, என்ன இருந்தாலும் நீ அஞ்சலிய அவ பிரெண்ட்ஸ் முன்னாடி திட்டினது தப்பு தான்... என்ன சொல்லணும்னாலும் தனியா கூப்ட்டு சொல்லு"

"ஆனா..."

"உஷ்... நாட்டமை தீர்ப்பு சொல்லும் போது நடுல பேசக் கூடாது" என மனைவியை அமைதிப்படுத்தியவர் "அஞ்சலி குட்டி, நீயும் ஹோம்வொர்க் பண்ணாம விளையாடினது தப்பு தான்"

"அப்பா..."

"உஷ்... நான் இன்னும் முடிக்கல" என்றவர், தொடர்ந்து "ரெண்டு பேர் மேலயும் தப்பு இருக்கு. So, மாத்தி மாத்தி சாரி சொல்லிட்டு பிரெண்ட்ஸ் ஆகணும் இப்போ, இல்லைனா ரெண்டு மாசத்துக்கு நோ Outing நோ ஐஸ்கிரீம் நோ ஜாலிடே... இதான் என்னோட தீர்ப்பு" என நாட்டாமை சொல்லி முடிக்க

சிறிது நேர யோசனைக்கு பின் "நாங்க எப்பவும் பிரெண்ட்ஸ் தான்... இல்லம்மா" என அஞ்சலி முதல் பந்தை வீச

"ஆமாண்டி செல்லம்" என அதை கேட்ச் பிடித்தாள் தேவி

"இந்த அப்பா தான் சும்மா எதாச்சும் சொல்லி நம்மள சண்டை போட வெக்கறது... இல்லம்மா"

"ஆமாடி செல்லம்"

"அப்படினா இந்த அப்பா தான அம்மா நம்மகிட்ட சாரி கேக்கணும்" என அஞ்சலி குறும்பாய் சிரிக்க

"கரெக்ட்டுடி செல்லம்" என தேவியும் சிரிப்பை அடக்கி கொண்டு கூற

"அடப்பாவிங்களா... உங்களுக்கு நாட்டாமை வேலை பாக்க வந்தா என்னை காமெடி பீஸ் ஆக்கரீங்களா அம்மாவும் மகளும் சேந்துட்டு... நாட்டாமையை அவமதிச்ச குற்றத்துக்கு ரெண்டு மாசத்துக்கு நோ Outing நோ ஐஸ்கிரீம் நோ ஜாலிடே, இதான் என்னோட புது தீர்ப்பு..." எனவும்

"நாட்டமை, தீர்ப்ப மாத்தி சொல்லு" என அம்மாவும் மகளும் ஒரே குரலில் கூற, அதன் பின் அங்கு எழுந்த சிரிப்பு அலையில் மூவரின் குரலும் சங்கமித்து ஒலித்தது
avatar
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 35
Location : bombay

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum