"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 10:59 pm

» நெருப்பின் தாகம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 20, 2018 9:06 pm

» நம் சமையல் அறையில்...
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 5:42 pm

» இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:51 am

» ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:38 am

» பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:35 am

» சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:33 am

» சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:32 am

» இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:31 am

» 2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:30 am

» ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:29 am

» அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:28 am

» பூ பூப்பதும் உலகச் செய்திதான்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 11:20 pm

» சின்னச் சின்ன சிந்தனைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:46 pm

» குடம் குடமாய் பாலாபிஷேகம் - எக்ஸ்பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 6:13 pm

» குழந்தையை தவறவிட்டவர் கையில் பத்திரமாக இருந்தது கைப்பேசி...!!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 6:08 pm

» உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:35 pm

» உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:32 pm

» மூலிகை உணவு
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:15 pm

» அவசரம் - X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 5:06 pm

» X பிரஸ் கதைகள்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 4:53 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 3:30 pm

» ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 3:09 pm

» நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 2:59 pm

» படமும் செய்தியும்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 2:53 pm

» சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:04 am

» தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:00 am

» முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 10:00 am

» தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:43 am

» 20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:41 am

» ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
by அ.இராமநாதன் Mon Mar 19, 2018 9:39 am

» தனிமையில் வாடும் பொம்மை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இராமசெயம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Mar 18, 2018 11:02 pm

» அமரர் கல்கி பற்றி அவரது மகள் ஆனந்தி,
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 9:34 pm

» இருமலை விரட்டலாம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 9:01 pm

» காதலரை மணந்த ஸ்ரேயா; மும்பையில் ரகசிய திருமணம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 8:58 pm

» அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 8:50 pm

» மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 8:41 pm

» களவும் கற்று மற...!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 3:33 pm

» மின் ஒளியாக அவள்...!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 3:26 pm

» ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:30 pm

» கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:30 pm

» அப்பாவுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:29 pm

» போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிரியா வாரியர்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:29 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 12:28 pm

» பிருதிவிராஜின் புதிய தோற்றம்
by அ.இராமநாதன் Sun Mar 18, 2018 7:59 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines மௌனமே பார்வையால்..

Go down

மௌனமே பார்வையால்..

Post by udhayam72 on Tue May 21, 2013 12:52 pm

மௌனமே பார்வையால்...
அவனை செல்லமாக பப்புன்னு கூப்பிடுவாங்க. நல்ல செல்வாக்கான குடும்பத்தில் செல்லமாய் வளர்ந்தவன். எத்தனை வளர்ந்து பெரியவனானாலும் அவன் அம்மா இன்னும் அவனை சிறு பிள்ளை போல் கொஞ்சுவார். வீட்டில் எல்லாருக்கும் செல்ல பிள்ளை. கேட்பது மட்டுமல்ல அவன் கேட்காமலே அவனுக்கு விருப்பமான எல்லாம் அவனை தேடி வரும். அத்தனை அன்பு அவன் மேல். சிறு பிள்ளையாய் இருந்த போதிலிருந்தே அம்மாவுடன் தினமும் எங்கள் வீட்டு வழியாக வாக்கிங் போவது வழக்கம். இப்போதெல்லாம் அவன் அம்மா இயலாமையால் அவனோடு வருவதில்லை. ஆனால் பப்பு ஒரு நாளும் வாக்கிங் வர தவறியதில்லை. அவனை நான் தினமும் பால் வாங்க போகும் போது வழியில் காண்பது வழக்கம். அவனும் என்னை அன்போடு ஒரு பார்வை பார்ப்பது உண்டு.

சில நாட்களாக அவனோடு ஒரு பெண்னையும் காண நேர்ந்தது. பப்பு எப்போதும் அந்த பெண் பின்னால் போவதாக எனக்கு தான் தோன்றுகிறதோ என நினைத்திருந்தேன். ஆனால் என் சந்தேகம் உண்மை தான் என புரிந்தது.

அவள் பேரழகி. மாநிறம், மெலிந்த தேகம், ஆனால் நல்ல லட்சணமான முகம் என்றே சொல்ல வேண்டும். நாளெல்லாம் பார்த்தாலும் திகட்டாத அழகு. பப்பு வீழ்ந்ததில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. பாவம் அவளுக்கு உறவென்று யாருமில்லை. அவளை பப்புவின் குடும்பம் ஏற்குமா என்பது தான் எனக்கு பெரிய கேள்வி. பப்புவும் குறைந்தவன் அல்ல. அதே மாநிறம், கம்பீரமான தோற்றம், எந்த வம்பு தும்புக்கும் போகாத மென்மையான குணம். அவனை போல் ஒரு துணை கிடைக்க அவளும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

தினமும் இவர்களை காண்பதில் எனக்குள் ஒரு மகிழ்ச்சி. ஒருவர் பின் ஒருவராக போனவர்கள் இப்போதெல்லாம் இணைந்தே போகிறார்கள். இருவரும் பார்வையாலேயே பேசி கொள்வார்கள். பேசி பார்த்ததே இல்லை நான். ஆனால் அந்த பார்வை வார்த்தையால் சொல்லிவிட முடியாத காதலை பரிமாறும். இது என்ன புது விதமான காதல் என்றே தோன்றியது...

இரண்டு நாட்களுக்கு முன் வழக்கம் போல் நான் பால் வாங்கிட்டு வரும் போது பப்புவை அவன் அம்மாவுடன் கண்டேன். பாவம் அந்த பெண். பப்புவுடன் போக முடியாத நிலையில் தயங்கி ஓரமாய் நின்று பார்த்ததை நான் கவனித்தேன். பப்புவும் அவளை ஏக்கமாய் ஒரு பார்வை பார்த்து “நான் என்ன செய்ய... அம்மா வரணும்னு ஆசைப்பட்டாங்க”னு பார்வையால் சொல்வது புரிந்தது.

"என்னங்க... ரொம்ப நாளுக்கு பின் உங்களை பார்க்கிறேன். நல்லா இருக்கீங்களா??”

“ரொம்ப நல்லா இருக்கேன்... நீங்க எப்படி இருக்கீங்க?”

நானும் அம்மாவும் பேசுவதை பப்பு ஒரு பய பார்வை பார்த்தான். எங்கே அவர் காதல் விஷயத்தை சொல்லி விடுவேனோ என்று.
”நல்லா இருக்கேங்க. என்ன இன்னைக்கு இந்த பக்கம்? உடம்பு முடியுறதில்லை இப்பலாம்னு சொன்னாங்க...”

“ஆமாம்... அதனால் தான் முன் போல் காலையில வாக்கிங் கூட வர முடியல. இன்னைக்கு பால்காரர் வரல, கூடவே வீட்டில் அடைஞ்சு கிடக்க கஷ்டமா இருக்கில்ல. அதான் பால் வாங்கும் சாக்கில் ஒரு வாக் போன மாதிரியும் ஆச்சு வெளி காற்றை சுவாசிச்ச மாதிரியும் ஆச்சுன்னு நானே கடைக்கு வந்துட்டேன்.”

“ஓ... சரிங்க, உடம்பை பார்த்துக்கங்க. வீட்டில் எல்லாரும் டீக்காக காத்திருப்பாங்க... போய் தான் அடுப்ப பத்த வைக்கனும். நான் கிளம்பறேன்” என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்தேன். பப்புக்கு நிம்மதி பெருமூச்சு வந்திருக்கும். எனக்கென்னவோ அவர்களை போட்டு கொடுத்து அந்த அழகான இளம் காதலை பிரிப்பதில் விருப்பமில்லை.

நேற்று காலை மீண்டும் பப்புவுடன் அந்த பெண்ணை காண நேர்ந்தது. வழக்கம் போல் மவுனமே பார்வையால் காதல் சொன்னது.

அவர்களை கடந்து சென்ற நான் அவர்களை கண்டும் காணாதது போல் சென்றேன். நான் கடந்து போனது கூட பப்புவின் கவனத்தில் பதிந்தது போல் தெரியவில்லை. பாலை வாங்கி விட்டு வீடு திரும்பும் சமயம்... எங்கள் தெருவின் முனையில்... ஒரு பக்கம் பப்புவும், அவன் காதலியும்... மறு பக்கம் மூவர். யார் இவர்கள் புதிதாக இருக்கிறார்களே என சற்று யோசித்தபடியே வந்தேன். இவர்களுக்குள் ஏதோ பிரச்சனை என யூகிக்க முடிந்தது.

“என்ன தைரியம்டா உனக்கு... எங்க ஏரியா பொண்ண கரக்ட் பண்ணிட்டு வந்துட்ட...” மூவரில் ஒருவர்.

“நான் மட்டுமா விரும்பறேன், அவளும் தான் என்னை விரும்பறா...” இது பப்பு

“எங்களை விட இவன் ஒசத்தியா உனக்கு?” மூவரில் ஒருவர்.

“எத்தனை நாள் கேட்பாரில்லைன்னு என்னை மிரட்டி விரட்டிருப்பீங்க... இப்போ வாங்க பார்க்கலாம். இதோ என் துணை... சிங்கம் போல... நீங்களாம் இவர் கிட்ட கூட நிக்க முடியாது...” என தைரியமாய் அவர்களை எதிர்த்து பப்புவின் அருகிலேயே நின்றாள் அவள். அவள் துணையோடு பப்புவுக்கும் சற்றே தைரியம் அதிகமாகவே தெரிந்தது. அவர்கள் பார்வையில் இவள் தெருவை சேர்ந்தவர்கள் தான் அந்த மூவர் என்றும், பப்புவை அவள் விரும்புவதால் இவர்களுக்குள் மோதல் என்றும் தெளிவாக புரிந்தது. என்ன நடக்குமோ... எப்படி கடந்து போவது??? எனக்குள் ஒரு பதட்டம் தொற்றி கொண்டது அந்த அதிகாலை நேரத்தில். யாராவது கண்ணில் படுகிறார்களா என தேடினேன்... அடடா... யாரையும் காணோமே. பயம் இன்னும் அதிகமானது. பப்புவை நினைத்தால் பதறியது... அவனுக்கு ஏதும் ஆகிவிடுமோ என்ற கவலையும் கூட. ஆண்கள் யாராவது வந்து இவர்களை விலக்கி விடக்கூடாதா என தவித்தேன்.

ஆனால் அதுக்கு நேரமே இல்லாமல்... ஆரம்பமானது இருதரப்பினருக்கும் நடுவே மோதல் !!!

”உர்ர்....”

“கொர்...”

“கிர்ர்ர்... வவ்... வவ் வவ்... “ இது பப்பு. இதுவரை கண்டிறாத முகம்!!! பப்புவுக்கு கோவமும் வருமோ?? அது சரி... தன்னையே நம்பி துணிச்சலாக ஒரு பெண் அருகில் நிற்கும் போது எந்த ஆணுக்கு தான் தைரியம் வராது?! காதலியை விட்டுக்கொடுக்க அவனுக்கு மட்டும் மனம் வருமா என்ன.

பெண் ஜோடி எதை பற்றியும் கவலை இல்லாமல் பப்புவின் அருகே நின்றதை கண்டு வந்த மூவரும் இடத்தை காலி செய்தனர்.

வீணாக நடுவே பூந்து கடி வாங்க வேண்டாம் என ஒதுங்கி நின்ற நான் அப்போது தான் தைரியமாய் ஒரு அடி முன் வைத்தேன். பப்புக்கு எங்கடா இத்தனை தைரியம் தெரு நாய்களோடு சண்டை போடன்னு ஆச்சர்யமாக பார்த்தபடி அவர்களை கடந்து வந்தேன். அவன் இப்போதும் என்னை ஒன்னுமே நடக்காத மாதிரி அன்பாகவே பார்த்தான். இன்றும் இவர்களை ஜோடியாக கண்டதில் ஒருவித மகிழ்ச்சி எனக்குள்.
[img][url="http://pzy.be/v/3/preeti-armpits.jpg"][You must be registered and logged in to see this image.][/url][/img]
avatar
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 35
Location : bombay

Back to top Go down

Re: மௌனமே பார்வையால்..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed May 22, 2013 11:44 am

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum