"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» மிலிட்டரி சரக்க ஓசியில வாங்கஃத்தான்...!!
by அ.இராமநாதன் Today at 3:05 pm

» இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைக்கு பாரம்பரிய அந்தஸ்து
by அ.இராமநாதன் Today at 2:55 pm

» பென்குவின் பறவைகள்
by அ.இராமநாதன் Today at 2:50 pm

» ரசித்ததில் பிடித்தது - (பல்சுவை) தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 2:32 pm

» உளுந்து வடையைத் தின்னுட்டு ’அதிரசம்’ நல்லா இருக்கு’ன்னு சொல்றாரே...!!
by அ.இராமநாதன் Today at 2:23 pm

» ஒண்ணா சரக்கடிக்க வச்சுட்டார்....!!
by அ.இராமநாதன் Today at 11:51 am

» மாற்றம் என்பது...
by அ.இராமநாதன் Today at 11:35 am

» வீட்டில் கழிவறை இல்லாவிட்டால் சம்பளம் 'கட்'
by அ.இராமநாதன் Today at 8:33 am

» நாங்க இப்படிதானுங்க!: ஜாலியான அலியா!
by அ.இராமநாதன் Today at 8:28 am

» எனது அரசியல் வாரிசு யார்?: மாயாவதி பரபரப்பு பேட்டி
by அ.இராமநாதன் Today at 8:23 am

» 'வவ்வால் மூலம் 'நிபா' பரவவில்லை'
by அ.இராமநாதன் Today at 8:21 am

» பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம்
by அ.இராமநாதன் Today at 8:20 am

» காலக்கூத்து - சினிமா விமரிசனம்
by அ.இராமநாதன் Yesterday at 11:37 pm

» ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 11:17 pm

» ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன்? எப்படி? சசிகலாவின் வழக்குரைஞர் விளக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 11:04 pm

» அடடே அப்படியா...
by அ.இராமநாதன் Yesterday at 4:51 pm

» மாறுவேடப் போட்டி
by அ.இராமநாதன் Yesterday at 4:48 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Yesterday at 4:46 pm

» வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்
by அ.இராமநாதன் Yesterday at 4:38 pm

» பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
by அ.இராமநாதன் Yesterday at 4:34 pm

» போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு Added : மே 26, 2018 14:41
by அ.இராமநாதன் Yesterday at 4:33 pm

» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Yesterday at 1:38 pm

» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Yesterday at 1:30 pm

» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
by அ.இராமநாதன் Yesterday at 12:10 pm

» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா
by அ.இராமநாதன் Yesterday at 12:01 pm

» சினிமா -முதல் பார்வை: செம
by அ.இராமநாதன் Yesterday at 11:58 am

» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 8:01 am

» புறாக்களின் பாலின சமத்துவம்
by அ.இராமநாதன் Yesterday at 7:57 am

» குதிரை பேர வரலாறு
by அ.இராமநாதன் Yesterday at 7:56 am

» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
by அ.இராமநாதன் Yesterday at 7:53 am

» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
by அ.இராமநாதன் Yesterday at 7:51 am

» இந்திரா கவிதைகள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:59 pm

» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:56 pm

» பட்ட காலிலேயே படும்....
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:49 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:46 pm

» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:41 pm

» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:22 pm

» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:21 pm

» எளிய மருத்துவக் குறிப்புகள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:19 pm

» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:10 pm

» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது
by அ.இராமநாதன் Fri May 25, 2018 2:27 pm

» பலவித முருகன் உருவங்கள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 2:23 pm

» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:45 am

» பி.வி. சிந்துவும் இறக்கையும்!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:36 am

» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:34 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கிளி! கிலி! கிழி!

Go down

கிளி! கிலி! கிழி!

Post by udhayam72 on Mon Jun 10, 2013 7:28 pm

கிளி! கிலி! கிழி!




நான் அந்த வீட்டுக்குப் போய்ச் சேர்ந்த போது எனக்கு முன்பாகவே தினேஷும், கான்ஸ்டபிள்களும் வந்து விட்டிருந்தனர், பைக்கை நிறுத்திவிட்டு நான் இறங்கவும். தினேஷ் சல்யூட் அடித்து என்னை வரவேற்றார். நல்ல நிறமாக, ஐந்தே முக்காலடி உயரத்தில், இளந் தொந்தியோடு சுமாரான பருமனில் ‘மங்காத்தா’ அஜீத் போல பர்ஸனாலிட்டியாக இருக்கும் தினேஷ் எனக்குக் கீழ் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர்! “பாடி எங்க இருக்கு?” கேட்டபடி நான் நடக்க. “மாடிப் போர்ஷன் ஸார்...” என்றார் தினேஷ் உடன் வந்தபடி. மாடிப்படிகளேறி அந்தப் போர்ஷனுக்குள் நுழைந்ததுமே கண்ணில் அறைந்தது அந்தக் காட்சி.

சோபாவில் பாதியும் தரையில் பாதியுமாகக் கத்திக்குத்து காயங்களுடன் கிடந்தது அந்த இளம் பெண்ணின் உடல். அவளது உயிரற்ற விழிகள் நேர்ப்பார்வை பார்த்தபடி உறைந்து நின்றிருக்க, அவை என்னை முறைப்பது போலத் தோன்றியது எனக்கு. கர்ச்சீப் எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டேன். உயிருடன் இருந்த காலத்தில் பலரின் தூக்கத்தைக் கெடுத்திருப்பாள்! சுற்றிலும் பார்வையைப் போட்டபடி, “தினேஷ்! ஃபாரன்ஸிக் பீப்பிள்க்கு சொல்லிட்டீங்களா?” என்று கேட்க. “வந்துட்டிருக்காங்க ஸார்” என்றார் பணிவாக.


“இவ பேர் என்ன? அக்கம்பக்கத்துல என்கொயரி பண்ணியாச்சா? வீட்டை சர்ச் பண்ணினீங்களா?” என்ற என் தொடர் கேள்விகளுக்கு பொறுமையாய் பதிலளித்தார் தினேஷ். “இவ பேர் ப்ரீத்தி ஸார். இனிமேதான் அக்கம் பக்கம் என்கொயரி பண்ணணும். வீட்டை ஃபுல்லா ஸர்ச் பண்ணலை ஸார். பாத்ரூம்ல கொலை செய்யப் பயன்படுத்தின கத்தியை கண்டெடுத்தேன். கொலைகாரன் ரத்தக்கறைய கழுவிட்டு கீழ போட்டுட்டு போயிட்டான் போலருக்கு, கர்சீப்ல சுத்தி வெச்சிருக்கேன். வேற எதுவும் பாக்கலை ஸார்...” என்றார்.

‘‘சரி, நீங்க போய் ஹவுஸ் ஓனரைக் கூட்டிட்டு வாங்க. என்கொயரி பண்ணிடலாம்’’ என்றேன். அவர் கீழே இறங்கிச் சென்றார். ஒவ்வொரு அறையாகப் பார்வையிடத் தொடங்கினேன். படுக்கையறையில் கட்டிலுக்குக் கீழே மின்னிய ‘அது’ என் கண்ணில் பட்டது. எடுத்தேன். ‘K.R.' என்கிற இன்ஷியல் பொறித்த மோதிரம். அதை பேண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டேன்.

பாரன்ஸிக் ஆட்கள் வந்து ரேகை சேகரிக்கத் துவங்கினர். அவளின் படுக்கையறை அலமாரியில் கிடைத்த டைரியுடன் நான் வெளியே வர, தினேஷ் வீட்டுச் சொந்தக்காரருடன் வந்தார். நாகேஷ் போல ஒல்லியாக, வழுக்கைத் தலையுடன் இருந்த அவரிடம், ‘‘இந்தப் பொண்ணு எவ்வளவு நாளா இங்க இருக்கா? இவளைப் பத்தி உங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் சொல்லுங்க...’’ என்றேன் அதட்டலாக.

‘‘ஸார்... ஆறு மாசமா இங்க குடியிருக்கா. இவளுக்கு உறவுன்னு சொல்லிக்க யாரும் இல்லன்னு *சொன்னா ஸார். *ஏதோ கால் சென்டர்ல வேலைன்னு சொன்னா. நேரங்கெட்ட நேரத்துக்கு வருவா, போவா. சில ஆம்பளைங்க வேற அடிக்கடி சந்திக்க வர்றதுண்டு. இவ நடவடிக்கை பிடிக்காம காலி பண்ணும்படி கூடச் சொல்லிட்டேன். அதெல்லாம் முடியாதுன்னு எதிர்த்துப் பேசிட்டிருந்தா ஸார். நானே போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைண்ட் தரலாம்னு இருந்தேன். அதுக்குள்ள இப்படியாயிடுச்சு...’’ என்று கடகடவென்று ஐந்தாம் வாய்ப்பாடு ஒப்பிப்பது போல ஒப்பித்தார். கால்கள் வெடவெடவென்று ஆடிக் கொண்டிருந்தன. ‘போலீஸ்’ என்றாலே நடுங்குகிற ஆசாமிபோல! மனதிற்குள் சிரித்துக் கொண்டேன். அக்கம்பக்கத்தில் விசாரணை செய்தபோதும் ஏறக்குறைய ஹவுஸ் ஓனர் சொன்னது போலத்தான் சொன்னார்கள். புதிய தகவல் எதுவும் பெயராததால், பாடியை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பிவிட்டு, வீட்டை சீல் வைத்துவிட்டுக் கிளம்பினோம்.

‘தினேஷ்! போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் என்ன சொல்லுது?’’ எனக் கேட்டேன் நான். ‘‘கொலை செய்யப்படறதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி உடலுறவு கொள்ளப்பட்டிருக்கா ஸார். அவ உடம்புல மூணு கத்திக்குத்துக் காயங்கள் அழுத்தமா விழுந்திருக்கு. குத்தப்பட்ட கோணத்தை வெச்சுப் பாக்கறப்போ, கொலையாளி ஒரு இடதுகைக் காரனா இருக்கணும்னு டாக்டர் குறிப்பிட்டிருககார் ஸார்...’’

‘‘அப்படியா?’’ என்றேன். ‘‘அப்புறம் ஸார்... ஃபாரன்ஸிக்லருந்து வந்த ரிப்போர்ட்ல கத்தியிலயும், டெலிஃபோன்லயும் கிடைச்ச கை ரேகைகள் இருக்கு ஸார். ஸாலிட் எவிடென்ஸ். ஆள் யாருன்னு தெரிஞ்சிட்டா கம்பேர் பண்ணிப் பாத்துடலாம்...’’ என்றார்.

‘‘தினேஷ்! அவளோட டைரியப் படிச்சுப் பாத்தேன். அவ வேலை பாத்த கம்பெனிலயும் என்கொயரி பண்ணிட்டேன். அவ வேலை பாத்த கம்பெனி எம்.டி. அருண்கூட சுத்தியிருக்கா. அதைத் தவிர இளங்கோ, ராஜான்னு இரண்டு பேரை காதலிக்கிறதா சொல்லி ஏமாத்தியிருக்கா. இவங்களைத் தவிரவும் பல பேர் இருக்கணும்னு எனக்குத் தோணுது. எல்லாரையும் டீடெய்லா என்கொய்ரி பண்ணினதுல இவங்க மூணு பேர்தான் என் சந்தேக வளையத்துக்குள்ள வர்றாங்க. ஏன்னா இவங்க மூணு பேருமே லெஃப்ட் ஹேண்டர்ஸ்! நீங்க கான்ஸ்டபிள்ஸை அனுப்பி இவங்க மூணு பேரோட கைரேகையையும் அவங்களுக்குத் தெரியாம, கலெக்ட் பண்ணிட்டு வாங்க. ஃபாரன்ஸிக்ல கம்பேர் பண்ணினா உண்மை வெளில வந்துடும். அப்புறம் இருக்கு கச்சேரி...’’ என்றேன். ‘‘பண்ணிடலாம் ஸார்...’’ என்று துடிப்பாகக் கிளம்பிச் சென்றார் அந்த இளைஞர்.

அடுத்த இரண்டாம் நாள் அவர் கைரேகைகளுடன் வர, அதை லேபுக்கு அனுப்பிவிட்டு மேலும் ஒரு தினம் காத்திருக்க வேண்டியிருந்தது. மூன்றாம் நாள் மதியம் தினேஷ் பரபரப்பாக வந்தார். ‘‘ஸார்...! நாம கலெக்ட் பண்ணின மூணு ரேகைகள்ல அவளோட கம்பெனி எம்.டி. அருணோட கைரேகை நூறு சதம் ஒத்துப் போகுதுன்னு ரிப்போர்ட் வந்திருக்கு ஸார்...’’ என்றார்.

உடன் செயல்பட்டு அரெஸ்ட் வாரண்ட் வாங்கி, அவனை ‘ரெட் செல்’லில் வைத்து ‘கவனித்தோம்’.. ‘‘ஸார்... நான் அவகூட நெருங்கிப் பழகினது நிஜம். ஆனா சம்பவம் நடந்த அன்னிக்கு நான் போனப்ப அவ சாகற தருவாய்ல இருந்தா. ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டுப் போலாமேன்னு கத்திய உருவினேன். உடனே செத்துட்டா. கத்தியை க்ளீ்ன் பண்ணிட்டு பயத்துல ஓடிட்டேன். சத்தியமா நான் கொலை பண்ணலை ஸார்...’’ என்று கதறினான் அவன். ‘‘மயிலே, மயிலேன்னா இறகு போடாது. இவனுக்கு இன்னும் விசேஷ சிகிச்சை கொடுங்க. இன்னு்ம் அரை மணில இவன் உண்மைய ஒத்துக்கணும்’’ என்று கோபமாகப் பேசிவிட்டு ‘ரெட் செல்’லை விட்டு வெளியே வந்தேன்.

என் இருக்கைக்கு வரும்போது டெலிஃபோன் மணி ஒலித்தது. இடது கையால் ரிஸீவரை எடுத்து, ‘‘எஸ்... இன்ஸ்பெக்டர் கல்யாணராமன் ஹியர்’’ என்றேன். ‘‘என்ன கல்யாண், அந்த ப்ரீத்தி கேஸ் என்னாச்சு? ஏதும் க்ளூ கிடைச்சுதா?’’ என்றார் எதிர்முனையில் கமிஷனர். ‘‘ஸார்... அவ வேலை பாத்த கம்பெனி எம்.டி. அருண்தான் குற்றவாளி. ஸ்ட்ராங் எவிடென்ஸ் கிடைச்சிருக்கு. அரெஸ்ட் பண்ணிட்டு வந்துட்டேன். கேஸ் முடிஞ்சிடுச்*சு ஸார்’’ என்றேன். என்னைப் பாராட்டி விட்டு அவர் ஃபோனை கட் செய்ய, ரிஸீவரை வைத்துவிட்டுப் பெருமூச்சு விட்டேன்.

நல்லவேளை...! ப்ரீதியின் வீட்டில் 'K.R.' என்று இன்ஷியல் *போட்ட என் மோதிரம் என் கண்ணிலேயே பட்டது. தினேஷ் பார்த்திருந்தால் இவ்வளவு ஈஸியாக விஷயம் முடிந்திருக்குமா, என்ன..? ப்ளடி பிட்ச்! காதலிப்பதாய் நடித்து, என்னுடைய சைடு வருமானத்தைப் பூராவும் கறந்து விட்டு என்னையே ஏமாற்றினால்... விட்டு விட முடியுமா என்ன? என் ஸ்டேஷன் லிமிட்டுக்குள்ளேயே அவள் குடியிருந்த வீடு இருந்தது என் அதிர்ஷ்டம்தான்!
avatar
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 35
Location : bombay

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum