"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
by அ.இராமநாதன் Today at 5:17 am

» முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
by அ.இராமநாதன் Today at 5:15 am

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by அ.இராமநாதன் Today at 5:11 am

» எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி…!!
by அ.இராமநாதன் Yesterday at 9:56 pm

» ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க…!!
by அ.இராமநாதன் Yesterday at 9:56 pm

» கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல…!!
by அ.இராமநாதன் Yesterday at 9:55 pm

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:42 pm

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by அ.இராமநாதன் Yesterday at 7:36 pm

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:34 pm

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:26 pm

» - மேய்ச்சல் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:44 pm

» பயம் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 5:44 pm

» கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
by அ.இராமநாதன் Yesterday at 5:23 pm

» சென்னையில் 5ஜி சேவை: நோக்கியா தகவல்!!
by அ.இராமநாதன் Yesterday at 5:18 pm

» போர்ப்ஸ் பத்திரிக்கையின் இளம் கண்டுபிடிப்பாளர்கள் பட்டியலில் இடம்பிடித்த சென்னை பெண்
by அ.இராமநாதன் Yesterday at 5:12 pm

» உரிய அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படும்: இந்திய அணுசக்தி கழகம்
by அ.இராமநாதன் Yesterday at 5:09 pm

» குரலை இனிமையாக்கும் மாங்கனி
by அ.இராமநாதன் Yesterday at 5:07 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல்...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:18 pm

» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Yesterday at 3:17 pm

» கழுதை போச்சே! - சிறுவர் கதை
by அ.இராமநாதன் Yesterday at 3:12 pm

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by அ.இராமநாதன் Yesterday at 3:03 pm

» ‘இம்சை அரசன்’ படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ்
by அ.இராமநாதன் Yesterday at 2:56 pm

» சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
by அ.இராமநாதன் Yesterday at 2:56 pm

» கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
by அ.இராமநாதன் Yesterday at 2:55 pm

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by அ.இராமநாதன் Yesterday at 2:51 pm

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by அ.இராமநாதன் Yesterday at 2:50 pm

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by அ.இராமநாதன் Yesterday at 2:49 pm

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by அ.இராமநாதன் Yesterday at 2:48 pm

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by அ.இராமநாதன் Yesterday at 2:47 pm

» பத்மாவதி படத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by அ.இராமநாதன் Yesterday at 2:45 pm

» வங்கியில் சேமிப்பு கணக்கு ஆரம்பித்தல் (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Yesterday at 11:51 am

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Thu Nov 16, 2017 8:45 pm

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 6:59 pm

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 6:57 pm

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 6:56 pm

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 6:56 pm

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 6:54 pm

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 1:57 pm

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 1:48 pm

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 1:47 pm

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 1:46 pm

» உறக்கம் எப்போது இனிமையாகிறது?
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 11:57 am

» குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்குமா?
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 11:57 am

» பெண்கள் அதிகம் பயன்படுத்தும் ஆயுதம் எது?
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 11:56 am

» காதலியைப் புகழ்வது போல…!! –
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 11:55 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines சூது கவ்வும் விமர்சனம் Soodhu Kavvum Review

View previous topic View next topic Go down

சூது கவ்வும் விமர்சனம் Soodhu Kavvum Review

Post by udhayam72 on Mon Jul 01, 2013 12:47 am

 சூது கவ்வும் விமர்சனம் Soodhu Kavvum இயக்குநர் நலன் குமரசாமி குறும்பட உலகில் ஒரு ஸ்டார் இயக்குநர். அவரது ஆரம்ப கால குறும்படங்களில் நாங்க டீம் நிஞ்சா.. இப்பதான் சினிமா கத்துக்குறோம் தப்பா எடுத்தா கண்டுக்காதீங்க என அடக்கமாய் எடுத்திருந்தாலும் அவற்றில் ஒரு தரம் இருந்தது. அந்த நலன் இப்பொது நன்றாக தன்னை தயார்படுத்திக்கொண்டு எடுக்கும் முழு நீள திரைப்படம் எப்படி இருக்கும் என்ற ஆர்வம் ஒரு பக்கம்.


சூது கவ்வும் படத்தில் முதல் டிசைனிலிருந்து ‘காசு பணம் துட்டு மணி’ பாடல் காட்சிவரை ஒவ்வொரு ஸ்டெப்பாக ஆச்சர்யத்தை கிளப்பிய கிரியேட்டிவிட்டி இன்னொரு பக்கம்.


எனவே ஒரு தரமான படத்தை எதிர்பார்த்துத்தான் சென்றேன். ஆனால் அந்த எதிர்பார்ப்பையும் மிஞ்சி விட்டார் நலன். இந்த அளவுக்கு தன்னை தயார்படுத்திக்கொண்டிருப்பார் என எதிர்பார்க்கவில்லை.


எந்த விதத்திலும் ரிஸ்க் எடுக்காமல், பிரச்சினைகளில் மாட்டிக்கொள்ளாமல் சொகுசாய் ஆட்களை கடத்தி காசு சம்பாதிக்கும் பிஸினெஸ்மேன் விஜய் சேதுபதி. இவர் இன்னும் சில பேரை சேர்த்துக்கொண்டு கடத்தல் வேலைகளை செய்ய அதன் தொடர்ச்சியாய் இன்னொரு வேலை வர, அதை செய்யப்போய் இவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் தான் படத்தின் கரு.


கதை ஒன்றும் அப்படி சினிமாவை புரட்டிப்போடும் வகையறாவெல்லாம் இல்லை. ஆனால்
கதாபாத்திரங்களை உருவாக்கியதில் நலன் காட்டிய அக்கறையும், அவற்றில் இருக்கும் புதுமையும் தான் படத்தின் வெற்றிக்கான பிள்ளையார் சுழியாய் இருந்திருக்கவேண்டும்.


மேலும் ஒரு திரைக்கதை எழுத்தாளராய் நலன் பின்னிப்பெடலெடுக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் அழகாய் செதுக்கி, சொல்ல வேண்டியதை சொல்லி, அதை காமெடியாக்கி ரசிக்கவைத்து, அதே நேரத்தில் பர்பார்மென்ஸ்கும் ஸ்கோப் குடுத்து என எல்லா விதங்களிலும் கவனமாய் கையாண்டிருக்கிறார்.


காட்சிக்கு காட்சி எதாவது விதத்தில் சிரிப்பை வரவழைக்கும் வசனங்கள் டாப் க்ளாஸ். கடைசி காட்சியில் அந்த அடி உதையின் உச்சகட்ட வேதனையில் இதுதான் இருட்டறையில் முரட்டுக்குத்தா என கேட்டு சிரிக்கும் காட்சி இருக்கிறதே.. தியேட்டரே அதிர்கிறது.


விஜய் சேதுபதி.. இந்த வருடத்தில் அதிகம்பேர் பொறாமைப்படக்கூடிய நடிகர். எப்படித்தான் இந்தாளுக்கு மட்டும் இப்படி மாட்டுதோ என பலர் வியத்தாலும், இனி மேல் இந்த குறும்பட இயக்குநர்கள் தான் இன்டஸ்ட்ரியை ஆட்டிவைக்கப்போகிறார்கள் என ஏதோ ஒரு விதத்தில் யூகித்து அவர்களை மதித்து, நட்பாகி, நெருக்கமாகி தன்னை உருவாக்கிகொண்ட அவரது புத்திசாலித்தனம் கலந்த எளிமைத்தனத்திற்கு கிடைத்த பரிசு தான் இந்த தொடர் வெற்றிகள்.


இந்தப் படத்தில் தாஸ் என்ற ஒரு அட்டகாசமான கதாபாத்திரத்தில் விளையாடுகிறார். ஹீரோயிசம் என்றால் கிலோ எவ்வளவு என கேக்கும் அளவுக்கு கொஞ்சம் அசட்டுத்தனமும், நேர்மையும் கலந்த ஒரு ப்ராடாய் வருகிறார். கூடவே ஒரு காதலியையும் கூட்டிக்கொண்டு அலைகிறார் பாருங்கள்… சிரிப்பு மூட்டும் வசனங்களோ அல்லது பாடி லாங்வேஜோ இல்லாமல் எல்லோரையும் சிரிக்க வைப்பது சாதாரண விசயமில்லை. சிறப்பாக எழுதப்பட்ட காட்சியும், அதை உணர்ந்து வெளிப்படுத்தும் நடிப்பும் மட்டுமே அத்தகைய ரிசல்டை கொடுக்கும்.


இவருக்கு சற்றும் குறைவில்லாத கதாபாத்திரங்களில் சிம்ஹா, ரமேஷ்,அசோக் மற்றும் கருணா. சிம்ஹாவின் இயல்பான வெகுளித்தனமான முகம் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படும் காட்சிகளில் வெகுவாய் கைகொடுக்கிறது. இவர்கள் அணைவருக்கும் இந்தப் படம் ஒரு பெரிய நட்சத்திர அந்தஸ்தை பெற்றுக்கொடுக்கும்.


அதே போல முரட்டுத்தனமா போலிஸ் அதிகாரி பிரம்மா, படம் எடுக்கும் டாக்டர் ரவுடியாய் தாஸ் என எவருமே சளைக்காமல் கலக்கியிருக்கிறார்கள்.


இவர்களுக்கிடையே முரட்டுக்காட்டில் ஒரு பூங்கொத்தாய் சஞ்சிதா ஷெட்டி.. தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத கதாநாயகி ரோல். களையாய் கலகலப்பாய் இருக்கிறார்.


சென்னை 600028 பார்த்தபோது ஒரு ஃப்ரெஷ்ஸா இருந்த்தல்லவா.. அதே போல இந்தப் படமும் ரொம்ப ஃப்ரெஷ்ஸாக இருக்கிறது.


ஒரு நல்ல படம்னா அது இப்படித்தான் இருக்கும் என நாம் வைத்திருக்கும் ஒரு கணக்கையெல்லாம் உடைக்கிறது இந்தப் படம். பெரிய கருத்தோ, மனதை தொடும் சம்பவங்களோ இல்லை. கதையையோ, கதாபாத்திரங்களின் போக்கையோ எந்த இடத்திலும் யூகிக்க முடியாது. ஆனாலும் எல்லா இடத்தில் என்ஜாய் பண்ண முடியும் என மிகததிறமையாய் எழுதப்பட்ட திரைக்கதைதான் இந்தப் படத்தின் நிஜ ஹீரோ.


அதே போல இன்னொரு முக்கியமாய் குறிப்பிட வேண்டிய நபர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இயக்குநர் எந்த அளவுக்கு காட்சிகளில் புதுமையை கொண்டுவருகிறாரோ அதே அளவுக்கு இசையிலும் இவர் ஜமாய்க்கிறார். இவரது இசை படத்தை இன்னொரு தளத்திற்கு எடுத்துச்செல்கிறது என சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு கலகலப்பூட்டும் இசை.


ஒளிப்பதிவாளர் தினேஷும் நிறைவாய் செய்திருக்கிறார் தன் பணியை.


அட்டகாசமான திரைக்கதை, அதற்கேற்ற நடிகர்களின் தேர்வு, அவர்களின் கச்சிதமான நடிப்பு.. ஒரு தேர்ந்த இயக்குநருக்கான லாவகத்துடன் இயக்கம் என படம் நம்மை அசரடிக்கிறது. இது முழுக்க முழுக்க நலன் குமரசாமியின் ஷோ. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்கள் வரிசையில் உடனடியாய் சேர்ந்துவிடும் அத்தனை தகுதிகளும் இவருக்கிருக்கிறது. அவருக்கும், அவரைக் கண்டெடுத்து இயக்குநராக்கிய தயாரிப்பாளர் சி.வி.குமாருக்கும் நமது மனமார்ந்த பாராட்டுக்கள்.
avatar
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 35
Location : bombay

Back to top Go down

Re: சூது கவ்வும் விமர்சனம் Soodhu Kavvum Review

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Jul 01, 2013 12:00 pm

சியர்ஸ்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: சூது கவ்வும் விமர்சனம் Soodhu Kavvum Review

Post by Muthumohamed on Mon Jul 08, 2013 10:06 pm

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 
avatar
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 29
Location : Palakkad

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum