"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» * மரியாதைகளும் ஒரு சுமையே.
by அ.இராமநாதன் Yesterday at 10:02 pm

» * நிதானமாக ஆத்திரப்படு.- லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:01 pm

» அழுவதிலும் நிச்சயம் இன்பம் இருக்கிறது....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:59 pm

» # பயன்படுத்து, பழுது படுத்தாதே. - லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:57 pm

» வண்ணமோ கறுப்பு, குரலோ இனிப்பு - விடுகதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:49 pm

» விடுகதை-விடைகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:38 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Yesterday at 9:30 pm

» பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by அ.இராமநாதன் Yesterday at 6:43 pm

» மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
by அ.இராமநாதன் Yesterday at 9:48 am

» மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
by அ.இராமநாதன் Yesterday at 9:46 am

» தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:39 am

» குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
by அ.இராமநாதன் Yesterday at 9:27 am

» குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
by அ.இராமநாதன் Yesterday at 9:25 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 9:20 am

» மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
by அ.இராமநாதன் Yesterday at 9:18 am

» தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
by அ.இராமநாதன் Yesterday at 9:16 am

» சிரிங்க ப்ளீஸ் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 10:47 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 10:07 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:47 pm

» அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:43 pm

» உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
by KavithaMohan Thu Feb 22, 2018 7:42 pm

» பிராணாயாமம்
by அ.இராமநாதன் Thu Feb 22, 2018 7:28 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Thu Feb 22, 2018 11:09 am

» இறக்கை லிங்கம்!
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 5:36 pm

» அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:50 pm

» கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:47 pm

» பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:46 pm

» மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 12:45 pm

» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:29 am

» மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:25 am

» ஆதிசங்கரர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:20 am

» தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:15 am

» விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2018 11:08 am

» பாம்பு இருக்கற இடத்துல பல்லி எப்படி இருக்கும்...?
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 9:06 pm

» ‘டியர்... நான் உங்க இதயத்துல இருக்கேனா?’’
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:57 pm

» இந்த போட்டோ கி.மு.விலே எடுத்தது...!!
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:46 pm

» படி! படி! - சிறுவர் கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:38 pm

» செயல் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:30 pm

» கனவு - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:29 pm

» வெட்கம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:27 pm

» அழகிய தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:26 pm

» யாப்பு
by lakshmi.P.R Tue Feb 20, 2018 8:26 pm

» நடவு & ஆசை - கவிதைகள்
by அ.இராமநாதன் Tue Feb 20, 2018 8:23 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Mon Feb 19, 2018 8:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:29 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Go down

மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi on Sat Jul 06, 2013 2:43 pm

மறக்கமுடியாத மனித தெய்வங்கள் !
மறக்கமுடியாத வார்த்தைகள் !
நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார் . செல் 9487182245.

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

விலை ரூபாய்  60.

நூலின் அட்டைப்படங்கள்  அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன .முன் அட்டையில் ஆசையே அழிவுக்குக் காரணம் என்று சொன்ன , அமைதியே உருவான புத்தர் சிலை மிக நன்று .பின் அட்டையில் , ஒரு போதும் பயம் கூடாது என்று சொன்ன வீரத் துறவி , உண்மைத் துறவி விவேகானந்தர் போதனையும் , புகைப்படமும் மிக நன்று .நூலைப் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வண்ணம் உள்ளது .பாராட்டுக்கள் .இனிய நண்பர் மீனாட்சி மெற்றிக் பள்ளியின் இயக்குனர் திரு கே .முத்துராஜு அவர்களின் அணிந்துரை தோரண வாயிலாக உள்ளது .

நூலில் சிந்தனைக்குரிய அறிவார்ந்த கருத்துக்கள் பல உள்ளன ." அக்பர் காதில் பீர்பால் நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அது நாளை உங்களுக்கே  வரும் .என்றார் .அதை பரிசோதித்து பார்க்க விரும்பிய அக்பர் , பீர்பால் கன்னத்தில் அறை விட்டார் .பீர்பால்  உடனே அருகில் இருந்தவரை அறை விட ,தலைநகர் முழுவதும் ,இந்த விளையாட்டுத் தொடர்ந்து , அன்று இரவு அக்பர் அந்தப்புரம் வரும் போது பட்டத்து ராணி அக்பரின் கன்னத்தில் அறை விட்டார் . என்ன ? அக்பர் அதிர்ந்தார் .நகரம் முழுவதும் இந்த விளையாட்டு நடக்கின்றது .பணிப்பெண் தந்த அறையை உங்களுக்குத் தந்ததாக பட்டத்து ராணி கூறினார் ."



இக்கதை வெறும் கதையல்ல .வினை விதைத்தால் வினை அறுப்போம் என்பதை உணர்த்துவது .தன் வினை தன்னைச் சுடும் .என்று  உணர்த்துவது .விளையாட்டு வினையாகும் என்று உணர்த்துவது .

இதுபோன்ற பல நிகழ்வுகள் கதைகள் நூலில் உள்ளன .கபீர் என்ற மகான் " புனிதத்தலங்களில் நீராடினால் மோட்சம் கிடைக்கும் என்றால் ஏற்கெனவே உள்ள 
மீன்களுக்கும் தவளைகளுக்கும் மோட்சம் கிடைத்து இருக்க வேண்டுமே .என குறிப்பிடுகிறார் .புறத்தூய்மை நீரால் அமையும் !அகத்தூய்மை வாய்மையால்  அமையும்! என்று சொன்ன வள்ளுவரின் வாக்கை வழி மொழிவதாக இருந்தது .நூலில் உள்ள இந்த வைர வரிகள் நூல் படிக்கும் நம்மை நன்கு சிந்திக்க வைக்கின்றன.

  முல்லா கதை ,புத்தர் கதை ,தாகூர் பற்றிய குறிப்பு மகாபாரதக் கதை ,ஹிட்லர் உறுதி ,சர்ச்சில் பயிற்சி இப்படி சின்னச் சின்ன மின்னல்கள் மின்னி ரசிக்க வைக்கின்றன .

வாழ்வியல் கற்பித்து மனதை செம்மைப்படுத்தும் விதமாக நூல் உள்ளது .பாராட்டுக்கள் . 

" எதிர்மறையான சிந்தனை என்பது தேவை இல்லாத அருவெறுக்கும் விசயங்களை எண்ணி துன்பப்படுவது  "மெலன் கோலிக் "என்ற மன நோய்க்கு எதிமறை சிந்தனை  வழிவகுத்துவிடும் .அப்படிப்பட்ட நிலையில் , வாழ்க்கையை இளைஞர்கள் எதையும் எதிர்கொள்ளக் கூடிய வலிமையான உள்ளதைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும் .
தன்னம்பிக்கை விதைக்கும் நல்ல பல கருத்துக்கள் நூலில் உள்ளன .நூல் ஆசிரியர் எஸ் .பிரேம்குமார் அவர்களுக்குப் பாராட்டுக்கள் .


மென்மை நேசிப்பு !
மலர் மென்மை,தென்றல் மென்மை , நிலவு மென்மை நாம் மென்மையாக இருக்கும்போது , எல்லோராலும் விரும்பப்படுகிறோம் .

மென்மையின் மேன்மையை நூலை வாசிக்கும் மனங்களில் மிக மென்மையாக உணர்த்தி உள்ளார் .சினம் என்பதை பகை .வன்மை வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளார் .

உயிர்த் துடிப்பு - சிரிப்பு !
கோபப்படும்போது சக்தி விரயமாகிறது .சிரிக்கும்போது  , குழந்தையைப் போல மனிதன் ஆவதால் அழகு ஜொலிக்கிறது .

நிர்பந்தம் கூடாது !
ஒரு கோபமான நாய் அதற்கு உடல் நிலை சரியில்லை என்ற போது , அதனை வளர்த்தவர் மருத்துவரின் பரிந்துரையில் ,மருந்தை நாய் வாயில் அமுக்கி ஊற்றினார் . நாய் குடிக்காமல் தள்ளி விட்டது .பின்னர் கீழே கொட்டிக் கிடந்த இனிப்பு  மருந்தை விரும்பி சாப்பிட்டது .கருத்துக்களை திணிக்கக் கூடாது .

அதை விருப்பமானதாக ஆக்கி அவர்களை எடுத்துக் கொள்ளும் வகையில் செய்ய வேண்டும் .

நம் கருத்தை பிறரிடம் கட்டாயப்படுத்தி திணிப்பது தவறு என்பதை நாய் நிகழ்வின் மூலம் நன்கு உணர்த்தி  உள்ளார் .இந்தக் கருத்தை குழந்தைகளின் கல்வியோடு ஒப்பிட்டுப் பார்த்தேன் .குழந்தைகள் கல்வியை இஷ்டப்பட்டு கற்கும் விதமாக ஆக்க வேண்டும் .கஷ்டப் படுத்தி படிக்க வைத்தல் கூடாது .பெற்றோர்ர்கள் எப்போதும் பிள்ளைகளை படி படி என்று தொல்லைப் படுத்துவதை விட வேண்டும் .

" மனம்  மெல்லிய பலூன் போல நம்பிக்கை காற்று இறங்கி விட்டால் ,எந்த வேலையும் ஒழுங்காக செய்ய முடியாது .நம்பிக்கை இழப்பு கவனத் தடுமாற்றத்தை ஏற்படுத்தும் .உங்கள் மனதை கறை  படியாத   காகிதம் போலவே வைத்துக் கொள்ளுங்கள் .உங்களின் வெற்றிச் சாவி மனம்தான் ."



உலகில் எதை இழந்தாலும் பெற்று விடாலாம் .ஆனால் நம்பிக்கையை மட்டும் என்று இழக்கக் கூடாது என்பதை நன்கு உணர்த்தி உள்ளார் 



நூல் முழுவதும் அறநெறி கற்பிக்கும் விதமாக ,நேர்மையாகவும் நம்பிக்கையுடனும் வாழ்வதற்கு வழி .சொல்லும் விதமாக , மனிதனின்  ஆற்றலை , திறமையை உணர்த்தும் விதமாக மிகச் சிறப்பான கருத்துகளின் குவியலாக நூல் உள்ளது .
.
நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார் அவர்களுக்கும் இந்த நூலை என்னிடம் தந்து விமர்சனம் வேண்டிய இனிய நண்பர் கே .முத்துராஜூ  அவர்களுக்கும் பாராட்டுக்கள் .



.

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2172
Points : 4952
Join date : 18/06/2010

Back to top Go down

Re: மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Jul 08, 2013 3:26 pm

சியர்ஸ்

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum