"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» 'மதுவை விட மனித உயிர் பெரியது': சுப்ரீம் கோர்ட் கருத்து
by அ.இராமநாதன் Today at 12:38 pm

» நிருபரை தேசத் துரோகி என்று சாடும் எச்.ராஜா
by அ.இராமநாதன் Today at 12:37 pm

» ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் சின்னங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது.
by அ.இராமநாதன் Today at 12:29 pm

» ஜி.எஸ்.டி மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!
by அ.இராமநாதன் Today at 12:26 pm

» ஏர்போர்ட்டுக்கு ரொனால்டோ பெயர்!
by அ.இராமநாதன் Today at 12:26 pm

» மதுக்கடைகளில் அலைமோதும் கூட்டம்
by அ.இராமநாதன் Today at 12:25 pm

» சென்னை அமைந்தகரையில் ரூ.1 கோடி செல்லாத நோட்டுகள் சிக்கின:2 பேர் கைது
by அ.இராமநாதன் Today at 12:24 pm

» செம்மரக்கடத்தலில் ராணியாக திகழ்ந்த விமான பணிப்பெண் கொல்கத்தாவில் சிக்கினார் ஆந்திர போலீசார் அதிரடி நடவடிக்கை
by அ.இராமநாதன் Today at 12:23 pm

» மாமன் மகளுடன் சென்ற வாலிபரிடம் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உ.பி ஆன்டி-ரோமியோ படை!
by அ.இராமநாதன் Today at 12:22 pm

» தமிழ்ப் பெண்ணாகிறேன் – ரித்திகா சிங்
by அ.இராமநாதன் Today at 11:59 am

» ‘சரவணன் இருக்க பயமேன்’
by அ.இராமநாதன் Today at 11:58 am

» பெண்கள் தற்காப்பு கலையை கற்க வேண்டும் -நடிகை டாப்சி பேட்டி
by அ.இராமநாதன் Today at 11:56 am

» மெல்ல விரியும் சிறகுகள் ! நூல் ஆசிரியர் : வ. பரிமளா தேவி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:33 pm

» இனிய காலை வணக்கங்கள் :
by அ.இராமநாதன் Yesterday at 7:52 pm

» இனிய யுகாதித்திருநாள் வாழ்த்துக்கள்
by அ.இராமநாதன் Yesterday at 7:48 pm

» ரிசார்ட் போதும் சாமி...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:42 pm

» கொள்ளைகாரனா ஏன் மாறினான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 6:55 pm

» முட்டையிலிருந்து வெளியேறும் புலி!
by அ.இராமநாதன் Yesterday at 6:48 pm

» வெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..!
by அ.இராமநாதன் Yesterday at 6:41 pm

» மூடியே இருக்கும் மனம்..!
by அ.இராமநாதன் Yesterday at 6:31 pm

» பெர்லின் மியூசியத்திலிருந்து களவாடப்பட்ட 100 கிலோ எடையுள்ள அரிய தங்க நாணயம்
by அ.இராமநாதன் Yesterday at 6:21 pm

» எடுத்துக்காட்டு உவமை அணி
by வண்ணம் Yesterday at 5:30 pm

» கவி இன்பம்
by வண்ணம் Yesterday at 5:29 pm

» இறைவன் யேசு கிறிஸ்து
by வண்ணம் Yesterday at 5:27 pm

» குழந்தையுடன் குழந்தையாய் ! (சிறுகதைகள்) நூல் ஆசிரியர் : நெருப்பாலைப் பாவலர் இராம. இளங்கோவன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரவி !
by eraeravi Mon Mar 27, 2017 10:48 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Mon Mar 27, 2017 5:49 am

» மக்களுக்காக குரல் கொடுக்கும் கமல்!
by அ.இராமநாதன் Mon Mar 27, 2017 5:47 am

» தாய்மொழியில் பின்னணி பாடும் அமலாபால்!
by அ.இராமநாதன் Mon Mar 27, 2017 5:46 am

» ராஜமவுலியின் அடுத்த பிரமாண்ட படம்!
by அ.இராமநாதன் Mon Mar 27, 2017 5:45 am

» நார்வே' திரைப்பட விருது!
by அ.இராமநாதன் Mon Mar 27, 2017 5:44 am

» அன்பே பிரதானம், – சகோதர அன்பே பிரதானம்
by ராஜேந்திரன் Sun Mar 26, 2017 3:32 pm

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 26, 2017 1:11 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 26, 2017 12:47 pm

» மெழுகுவர்த்தி - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Mar 24, 2017 9:50 pm

» திருட்டுப் பார்வை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Mar 24, 2017 9:48 pm

» மருமகள் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Mar 24, 2017 9:44 pm

» சாணக்கியன் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Mar 24, 2017 9:41 pm

» பணம் மட்டுமே ஒரு மனுசனுக்கு சந்தோசத்தைக் கொடுக்காது
by அ.இராமநாதன் Fri Mar 24, 2017 9:35 pm

» மனைவி ஒரு கன்னத்தில் அறைஞ்சா ...!!
by அ.இராமநாதன் Fri Mar 24, 2017 9:28 pm

» திசைகளாகும் திருப்பங்கள் ! (தன்னம்பிக்கை & விழிப்புணர்வு கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : அருட் தந்தை ஆ. லொயோலா ! அணிந்துரை கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Mar 22, 2017 9:58 am

» மன மகிழ்ச்சி தரும் மணத்தக்காளி கீரை
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 5:36 pm

» ஆரோக்கிய வாழ்வுக்கு சிறந்த உணவுகள்!
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 5:34 pm

» பொடுகை போக்கும் சின்ன வெங்காயம்
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 5:31 pm

» கண்ணுக்கு எது அழகு?
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 5:29 pm

» இணையத்தில் இரவி ! கட்டுரையாளர்:முனைவர் பேராசிரியர் ச.சந்திரா ! சாதனமா?சீதனமா?
by eraeravi Tue Mar 21, 2017 4:47 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கைக்குள் கவிதை ! நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் ! விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

View previous topic View next topic Go down

கைக்குள் கவிதை ! நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் ! விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi on Thu Aug 15, 2013 9:56 am

கைக்குள் கவிதை !

நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !

விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

வனிதா பதிப்பகம் ,11.நானா தெரு ,பாண்டி பஜார் தி நகர் ,சென்னை 17. விலை ரூபாய் 70.

நூலின் அட்டைப்பட ஓவியம் நன்று. நூல் ஆசிரியர் மத போதகராக .அருட்தந்தையாக இருந்துக் கொண்டு மிக துணிவான கவிதைகளை எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .தமிழ்ப்பணியும் செய்து வருபவர் .பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் நிறுவனர் பெருகவிக்கோ வா .மு .சேதுராமன் அவர்களின் அன்பைப் பெற்றவர் .அவரால் காவியக் கவிஞர் வாலியை சந்தித்து தன நூல் வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்தியவர் .வாலி இறந்ததும் மதுரையில் கவிதாஞ்சலி நடத்தியவர் .அட்டைப்பட வடிமைப்பு ,உள்   ஒவியம் ,அச்சு அனைத்தும் நன்று .வனிதா பதிப்பகதாருக்குப் .பாராட்டுக்கள்.

.பட்டிமன்றப் பேச்சாளர் திரு .இராஜா அவர்களின் அணிந்துரை மிக நன்று .ஓவ்வொரு கவிதையின் சாரத்தையும் பிழிந்து சாறாக புதிய நடையில் எழுதி உள்ளார் .பேச்சாளர் மட்டுமல்ல எழுத்தாளரும்தான் என்று பறை சாற்றும் விதமாக எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .காவியக் கவிஞர் வாலி ,பெருக்கவிகோ வா .மு .சேதுராமன் ,கவிவேந்தன் மு .மேத்தா ,முனைவர் அவ்வை நடராஜன் ,தமிழ்த் தேனீ முனைவர்  இரா   .மோகன் , கலைமாமணி முனைவர் கு .ஞானசம்பந்தன்  ,முனைவர் கோ .பெரியண்ணன் ,முனைவர் மு .சாதிக் பாட்சா ,பேராசிரியர் இரா .செ .டென்சன் எக்டர் உளளிட்ட பலரின் சுருக்கமான மதிப்புரைகள்     நூலில்  உள்ளன . நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக உள்ளன 

இந்த நூலை பாசமிகு  அன்னைக்கு காணிக்கை ஆக்கி அன்னை மீதான் பாசத்தை பறை சாற்றி உள்ளார் .

கவிஞனுக்கு நிறம் !

தத்துவத்தைச் சொல்லும்போது 
சாக்ரடீசு  நிறம் !

அகிம்சைக்காக ஆற்றுபடுத்தும் போது 
அண்ணல் காந்தியின் நிறம் !

இம்சையை எழுதும்போது 
ஈடரற்ற மண்டேலா  நிறம் !

அரவணைப்புக்கு 
அடியெடுத்து எழுதும்போது 
அன்னை தெரசாவின்  நிறம் !

சுயமரியாதைத் தேடலின்போது 
 தந்தை  பெரியாரின் நிறம் !

இப்படி நிறங்களைப் பட்டியலிட்டு ஒப்பற்ற மானிட ஆளுமைகளின் ஆற்றலை மனக்கண் முன் கொண்டு வந்து வெற்றி பெறுகின்றார் 
நாம் சுதந்திர நாடு என்கிறோம் .ஆனால்    சுதந்திரமாக  கருத்துச்   சொல்ல முடியவில்லை என்பதை உணர்த்தும் விதமாக உள்ள கவிதை நன்று .

.வாய்ப்பூட்டுச்   சட்டம் !

எப்போது போட்டார்கள் !
உழைப்போரே 
ஒருங்கிணையுங்கள் !

ஆதிக்க சக்தி 
அடக்கப் பார்க்கிறது !

எதையாவது செய்து 
மடக்கப் பார்க்கிறது !

உணர்ந்து செயல்பட்டால் 

ஆதிக்க சக்தியே 
பாதித்து நிற்கும் !

மதபோதகர்    மதம் பரப்பாமல் மனித நேயம் பரப்பும் விதமாக கவிதை வடித்துள்ளார் .
 
பணநாயகம் ஆகிவிட்ட ஜனநாயகம் பற்றி கேலிக்  கூத்தாகி   விட்ட தேர்தல் பற்றி உணர்த்தும் கவிதை நனி நன்று .

இய்சுவின் முடிவு !

ஜாதி மாநாட்டில் முடிவெடுத்தார்கள் !
அரசியல் கட்சிக்கு ஆதரவளிக்கக் கூடாதென்று !

அரசியல் மாநாட்டில் முடிவெடுத்தார்கள் !
ஜாதிக்கட்சியை ஆதரிக்கக் கூடாதென்று !

ஆன்மிக மாநாட்டில் முடிவெடுத்தார்கள் 
வேறுமாத வேட்பாளரை ஆதரிக்கக் கூடாதென்று !

மக்கள் கூடி  முடிவெடுத்தார்கள் 
கூடுதலாய்க்  கொடுப்போருக்கு 
வாக்களிக்கப்போமென்று !

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த 
இயேசு ஒரு  முடிவெடுத்தார் 1

எனது நாமத்தில் 
இருவரோ - மூவரோ கூடுமிடத்தில்   
இனி இருக்க மாட்டேன் !
.
தொலைக்காட்சியில்  சமையல் நகழ்ச்சியை சுவைபட வழங்கி இளமையிலேயே   இறந்து விட்ட  ஜேக்கப் அருணி பற்றி ஒரு கவிதை .
 தொலைக்காட்சிப் பெட்டிக்குள்  தோன்றி 
நேயர்களுக்கு விருந்து வைத்தாய் !

இறுதியாக பெட்டிக்குள் படுத்துக் கொண்டு 
நேயர்களை வருந்த வைத்தாய் !

திருச்சபைகளிலும்    இன்று அரசியல் நடக்கின்றது .போட்டிகள் உள்ளது .அதனை மத போதகராக இருந்துகொண்டே சாடியது நன்று .
 
இயேசு சொல்கிறார் ...

அன்றைக்கு என்னை 
கொல்கதாவில் சிலுவையில் 
அடித்தார்கள் 
உயிர்த்தெழுந்தேன் !

இன்றைக்கு என்னை 
திருச்சபையில் 
தேர்தல்களால் அடிக்கிறார்கள் 
உயிர்தெழ மாட்டேன் !

மதவாதிகள் மக்களை வெறிப்படுத்தும் வேலை செய்து வரும் காலத்தில் மக்களை நெறிப்படுத்தும் விதமாக கவிதைகள் உள்ளன .பாராட்டுக்கள் .திருவள்ளுவரின் திருக்குறளை வழிமொழியும் விதமாக உள்ளது .

துன்பம் யாரும் செய்தாலே 
இன்பம் என்று எண்ணிடுக !

தீமைக்குத் தீமை செய்யாதே !
தீர்வு அதுவும் ஆகாதே !

பட்டிமன்ற நடுவர் பாப்பையா அவர்களை பற்றி பெரிய கவிதை உள்ளது .சில வரிகள் மட்டும் உங்கள் பார்வைக்கு 

பட்டிமன்றப் பாப்பையா 
தமிழன்னையின் கரத்தை அலங்கரிக்கும் 
தங்கக் காப்பையா ! 
.
இப்படி நூல் முழுவதும் சிந்திக்க வைக்கும் விதமாக நல்ல பல் கவிதைகளின் தொகுப்பாக உள்ளது .எல்லோருடனும் இனிமையாகப் பழகும் இனியவர் நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் அவர்களுக்கு  .பாராட்டுக்கள்

.

.

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2072
Points : 4652
Join date : 18/06/2010

Back to top Go down

Re: கைக்குள் கவிதை ! நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் ! விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Aug 16, 2013 11:45 am

பகிர்வுக்கு நன்றி ஐயா

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56776
Points : 69516
Join date : 15/10/2009
Age : 33
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: கைக்குள் கவிதை ! நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் ! விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi on Thu Aug 29, 2013 7:50 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2072
Points : 4652
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum