"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சின்ன வீடு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:48 am

» வண்ணக் கனவுகள்!
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:26 am

» வாசகர் கவிதை
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:19 am

» கைப்பேசி யாருக்கு - காத்துவாயன் கவிதை
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:18 am

» இக்கரை அக்கரை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:09 am

» நியாயமா- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 3:54 pm

» காலண்டர் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 3:54 pm

» வேதம் நிறைந்த தமிழ்நாடு
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:50 am

» 4 கூடுதல் குடும்ப நல நீதிமன்றங்கள் இன்று திறப்பு
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:34 am

» ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:32 am

» ரூபாய் – திரைப்பட விமரிசனம்
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:31 am

» வேட்டிக்கு அவமரியாதை!
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:30 am

» பயண இலக்குகள் – கவிதை
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:29 am

» கவித்துளிகள்
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:27 am

» யானை பூஜித்த இறைவன்!
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:26 am

» ‘பண்டிகை’- விமரிசனம்
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:16 am

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:14 am

» பளீர் சிரிப்பு
by அ.இராமநாதன் Fri Jul 21, 2017 2:22 pm

» துளிப்பாக்கள்
by அ.இராமநாதன் Fri Jul 21, 2017 2:20 pm

» பத்தே விநாடியில் பளிச் முகம்…!
by அ.இராமநாதன் Fri Jul 21, 2017 2:18 pm

» மிஸ்…மிஸ் இண்டியா…!
by அ.இராமநாதன் Fri Jul 21, 2017 2:17 pm

» லிஸ்பனில் காந்திஜி சிலை...
by அ.இராமநாதன் Thu Jul 20, 2017 6:07 pm

» கேட்கக் கூடாத கேள்விகள்
by அ.இராமநாதன் Thu Jul 20, 2017 6:00 pm

» கருணை புரிவாய் கார்த்திகேயா…!
by அ.இராமநாதன் Wed Jul 19, 2017 8:55 am

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Tue Jul 18, 2017 10:10 pm

» காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம்
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 8:58 pm

» நீயெல்லாம் அம்மாவா? – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 2:49 pm

» மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 2:47 pm

» தனி பெட்ரூம் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:53 pm

» என்ன சாப்பிடறீங்க - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:52 pm

» தட்சிணை வை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:51 pm

» நூலைப் போல - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:50 pm

» உடலில் வளமை உடையில் வறுமை
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 11:08 am

» திருப்தி – கவிதை
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:29 am

» காலத்தை வளைத்தல் – கவிதை
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:28 am

» பொண்ணு கிளி மாதிரி இருப்பா…!
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:26 am

» பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்! –
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:25 am

» எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்?
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:22 am

» மகளே..!மகளே..!!
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:18 am

» கிசு கிசு பாணியல் ஓலை வந்ததுள்ளது, மன்னா..!
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:56 pm

» எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:53 pm

» வண்டுகளின் அரட்டை
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:51 pm

» கல்யாணம் வேண்டாம்…
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:51 pm

» மனிதனின் சிறந்த செல்வம் –
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:48 pm

» பேசா மடந்தையே விழி பேசும் சித்திரமே…
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கே ஜி மாஸ்டர் கட்டுரைகள்

View previous topic View next topic Go down

கே ஜி மாஸ்டர் கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Sep 15, 2013 7:00 pm

மனக்குழப்பம்

சாதாரணமாக நாம் எல்லோரும் 'மனக்குழப்பம்' என்றால் மனம் குழம்பிப்போய் இருப்பது எனக் கருதுகிறோம். எதனால் குழப்பம் ஏற்படுகிறது? மனத்தைக் குழப்புவது எது? மனம் குழம்புகிறதா அல்லது குழப்புகிறதா? என்னென்ன சம்பவங்கள் அல்லது சந்தர்ப்பங்களில் மனம் குழம்புகிறது அல்லது குழப்பத்தை உண்டாக்குகிறது? 

ஒவ்வொரு முறையும் குழம்புவதற்கு அல்லது குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு அந்தச் சம்பவம் அல்லது சந்தர்ப்பம் காரணமா அல்லது எல்லாவகையான குழப்பத்துக்கும் ஒரே காரணமா? கேள்வி மேல் கேள்வி கேட்டு உங்களைக் குழப்புவதிலும் ஒரு காரணம் உண்டு. 


'மனக்குழப்பம்' என்பது பல வடிவங்களில் வெளிப்படுத்தப்படுகிறது. தடுமாற்றம், திகைப்பு, வெட்கம், கலக்கம், அச்சம், ஆர்வமின்மை, பலவீனம், தெளிவின்மை, அமைதியின்மை எனப் பல வடிவங்களில் அடையாளப்படுத்தப்படுகின்றது.
மனக்குழப்பம் என்பது வெவ்வேறான 

வடிவங்களைப் பெற்றிருந்தாலும் நாம் கவனத்திலும் கருத்திலும் வைத்திருக்க வேண்டிய விடயம் மனம் குழம்புகிறதா அல்லது குழப்புகிறதா? என்பதுதான். இதை நாம் தெளிவாகப புரிந்து கொள்வதற்கு முதலில் 'மனம்' என்றால் என்ன என்பதை அறிந்துகொள்வோம்.

மனம் என்பது நினைவுகளின் பண்டகசாலை. நமது நாளாந்த நகர்வில் உள்வாங்கிக் கொண்ட அனைத்தையும் சேகரித்து வைத்துக்கொண்டிருக்கும் பண்டகசாலை. உதாரணமாகக் கூறுவதாயின் இது ஒரு கணணி (computer)போன்றது. 

ஒரு கணனியில் நாம் சேகரித்து வைக்கும் தரவுகள் போன்று எமது மனமும் தரவுகளைச் சேகரித்து வைக்கும். மனக்குழப்பத்தை மிகவும் இலகுவாகப் புரிந்துகொள்வதற்கு எமது மனத்திற்கும் ஒரு கணனிக்கும் இடையிலான அடிப்படை வேறுபாட்டைக் கவனத்தில் கொள்வது அவசியம். அதாவது நாம் ஒரு தரவை அல்லது பதிலை கணனியிடம் கேட்டால் அதற்குப் பொருத்தமான தரவு அல்லது பதில் ஏற்கனவே இருக்குமாயின் சரியான விடையைத் தரும்.

மாறாக பொருத்தமான பதில் இல்லாவிடில் 'பதில் இல்லை' என்று கூறும் அல்லது ‘கேள்வியைச் சரிபார்க்கவும்’ என்று எங்களைக் கேட்கும். உதாரணமாக, ஒரு கணனியில் ஐந்தும் எட்டும் சேர்ந்தால் பதின்மூன்று என்று பதிவு செய்திருப்போமாயின் ஏழும் ஆறும் எத்தனை என்று கேட்டால் பதில் கிடைக்காது. 

ஆனால் மனமானது தான் ஏற்கனவே பதிவு செய்துள்ள விடயங்களில் இருந்து பல்வேறு தெரிவுகளைத் தந்து குழப்பிக்கொண்டிருக்கும். இதுவே மனக் குழப்பத்திற்கான அடிப்படையாகும். எப்படி?

மனக்குழப்பம் ஏற்படுவதற்கான காரணமாக அமைவது எமது மனம் எமது கேள்விக்கு இது தான் விடை என்பதைத் திட்டவட்டமாகத் தராதது தான். திட்டவட்டமான பதிலை மனத்தால் தரமுடியாமல் போவதற்கான காரணம் எமது கேள்விகள் ஏற்கனவே மனம் சேகரித்து வைத்திருக்கும் தகவலுடன் நேரடியான தொடர்பைப் பெறாதிருப்பது தான். 

வேறொருவகையில் கூறுவதாயின், கேள்விகள் புதிதாக இருக்கும் ஆனால் மனமோ பழைய தகவல்களிலிருந்து விடையைத் தேடும். இந்த நடவடிக்கையே மனக்குழப்பத்திற்குக் காரணமாக அமைகின்றது. அதாவது நமது வாழ்க்கை புதிய கேள்விகளை முன்வைத்துக் கொண்டிருக்கும். ஆனால் மனமோ பழைய தகவல்களில் விடையைத் தேடிக்கொண்டிருக்கும்.

இந்த முரண்பட்ட செயற்பாடே மனக் குழப்பத்தை ஏற்படுத்துகின்றது. இந்தக் குழப்பத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்கு நாம் கருத்தி கொள்ள வேண்டிய விடயம் என்னவெனில், நமது வாழ்க்கை முன்வைக்கும் ஒவ்வொரு கேள்வியும் புதிய கேள்வி என்பதுதான். 

அதாவது வாழ்க்கை ஒரு பொழுதும் ஒரு கேள்வியை ஒரு முறைக்கு மேல் முன்வைப்பதில்லை என்பது தான். கேள்விகள் புதிதாக இருப்பதால் பதில்களும் புதிதாக இருத்தல் வேண்டும். வாழ்க்கையின் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் கிடைக்கும். அதுவரை பொறுமையாக இருப்பது தான் மனக் குழப்பத்தை தவிர்ப்பதற்கான ஒரே வழியாகும். 


நன்றியுடன் KG Master
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14289
Points : 17093
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே ஜி மாஸ்டர் கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Sep 15, 2013 7:03 pm

ஆரோக்கியமான மனிதன் என்றவுடன் பெரும்பாலான சந்தர்ப்பங்களில்  சிறந்த உடல் நலம் கொண்ட ஒருவர் என்பதுதான் முதலில் எமது தெரிவாக இருக்கும். சில சந்தர்ப்பங்களில் உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல உடலுடன் சேர்ந்து மனமும் ஆரோக்கியமாக இருப்பது எனக் கருதுகிறோம்.  உண்மையான ஆரோக்கியம் என்பது என்ன என்பதை பகிர்ந்து கொள்வதே இக் கட்டுரையின் அடிப்படை நோக்கமாகும். 

முதலில், உடல் ஆரோக்கியம் பற்றிய பார்வையைச் செலுத்துவோம்.   உணவு, உடல் சார்ந்த ஒழுக்கம்,  உடற்பயிற்சி என்பனவற்றின் கூட்டு விளைவே உடல் ஆரோக்கியத்தின் அடிப்படையாகும்.  ஆரோக்கியமான உடலுக்கு உணவின் தன்மை, அதன் ஊட்டச்சத்தின் பங்கு, உணவின் அளவு, உடலின் ஒப்புதல் என்பன மிகவும் முக்கிய விடயங்களாக அமைகின்றன.  உணவின் மிக முக்கியமான வெளிப்பாடு என்னவெனில் உண்ணும் வரை தாமாக  இருந்தவை உண்டவுடன் அவை நாமாக மாற்றப்பட்டு விடுவதுதான். அதாவது தாமாக இருந்தவற்றை உண்பதன் மூலம் நாமாக மாற்றிவிடுகிறோம்.  எனவே எந்த வகையான உணவுகள் எம்மில் ஒரு பகுதியாக  வேண்டும் என்பது எமது தெரிவுகளால் தீர்மானிக்கப்படுகின்றன.   உணவைப்போன்றே உடல் சார்ந்த ஒழுக்கங்களும் உடல் நலத்தின் பிரதான தேவைகளாகும்.  சூழல் சுத்தம், உடல் சுத்தம், ஓய்வு, உறக்கம், உடல் உழைப்பின் அளவு போன்றனவும் ஒழுங்கான தொடர்ச்சியான உடற்பயிற்சியும் அவசியமாகின்றன.

ஆரோக்கியத்தின் அடுத்த பகுதியாக மன நலம் அவசியமாகின்றது.  மன நலம் என்பது மிகவும் ஆழமான பார்வைக்கு உட்படுத்தவேண்டியது.  இருப்பினும் ஒருசில விடயங்களைப் பகிர்ந்து கொள்வோம். மனம் என்பது எண்ணங்களின் பண்டகசாலை.  எமது எண்ணங்களே எமது தெரிவுகளையும் அதன் மூலம் வாழ்க்கையின் நிலையையும் தீர்மானிக்கின்றன.  மனத்தின் பாவம் அல்லது மனத்தின் வெளிப்பாடு அல்லது மனோபாவம் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கை நிலையைத் தீர்மானிக்கும் அளவுகோலாக அமைகின்றது.  மனோபாவம் என்பது பல்வேறு அடையாளங்களாக இனங்காணப்படுகின்றன. இதை அடிப்படையாக வைத்தே ஒருவர் பற்றிய மற்றவர்களது பார்வை அல்லது மதிப்பீடு வெளிப்படுத்தப்படுகின்றது.  இந்த வகையான மதிப்பீடுகளோ எண்ணற்றவை.  எண்ணற்றவை மட்டுமல்ல மிகப் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அர்த்தமற்றவையுமாகும்.

 ஒருவர் பற்றிய இன்னொருவரது மதிப்பீடானது ஒப்பீட்டின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படவேண்டியுள்ளது.  ஒருவரை நாம் அவரது கல்வி, பொருளாதாரம், சமூக நிலை என்பவற்றில் ஒப்பீடு செய்யலாம்.  இவை ஒப்பீட்டுக்கான அளவுகோல்களே.  இந்த அளவீடுகள்  பலருக்கிடையில் பொருத்தமானதாக இருக்கும்.   ஆனால் ஒருவரது மனோபாவம் சார்ந்த அளவீடுகள் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக, ஒரே அளவானதாக அமைவதில்லை.  அமையவும் முடியாது. ஏனெனில், ஒவ்வொரு மனிதனும் தனித்துவமானவனாக இருப்பதும் தனித்துவம் என்பது ஒப்பீட்டுக்கு இடமளிப்பதில்லை என்பதுமாகும்.

அடுத்து நாம் கவனத்திற்கொள்ள வேண்டிய விடயம் ஒருவரது உண்மையான ஆரோக்கியத்தைத்  தீர்மானிப்பது எது? என்பதுதான்.  முன்னர் குறிப்பிட்டதைப் போன்று உடல் நலம் சம்பந்தமாக எம்மால் மேற்கொள்ளக்கூடிய அத்தனை வழிமுறைகளையும் நாம்  கடைப்பிடித்தாலும் எமது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பல காரணிகள் எமது உடல் நலத்தில் செல்வாக்கைச் செலுத்துகின்றன என்பதை நாம் கருத்தில் கொள்ளல் வேண்டும்.  சில சந்தர்ப்பங்களில் சில நோய்கள் எம்மை அறியாமலேயே எம்மைக் கைப்பற்றி விடுகின்றன.  'இந்த நோய் எனக்கு எப்படி வந்தது?' என்று நாமே அதிர்ச்சியடைந்து விடுகிறோம்.  அதுமட்டுமன்றி, உடலானது முதிர்ச்சியை நோக்கிய நகர்வதால் அதன் செயற் திறனும் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவையாக அமைகின்றது.

அடுத்து நாம் கருத்தில் கொள்ள வேண்டிய விடயம் மனம் சார்ந்த்தது.  மனம் ஆரோக்கியமாக இருந்தால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும் என்பது  நாம் எல்லோரும் அறிந்துள்ள விடயம்.  எவ்வளவு தான் செல்வங்களும், வசதி வாய்ப்புக்களும் இருந்தாலும் மனம் சந்தோசமாக இல்லாவிட்டால் எல்லாமே பயனற்றுப் போய்விடும் என்பதும் நாம் அறிந்ததே.  நலமான உடலைக்கூட நலமற்ற மனம் மோசமாகத் தாக்கிவிடுகிறது. எனவே ஆரோக்கியமான மனம் கொண்டவனே ஆரோக்கியமான மனிதன் என்பது உறுதியாகிவிடுகின்றது.   

ஆரோக்கியமான மனிதன் என்பவன் ஆரோக்கியமான மனத்தைக் கொண்டவன் என்பதைப் பார்த்தோம்.  ஆரோக்கியமான மனம் கொண்டவன் யார்?  திடமான, உறுதியான மனம் கொண்டவன் தான் ஆரோக்கியமானவன்.  இந்தத் திடமும் உறுதியும் உள்ள மனத்தைக் கொண்டவன்  யார்?  தாழ்வு மனப்பான்மை இல்லாத மனிதன் தான் அவன். அதாவது, தனக்குள்ளே தாழ்வு மனப்பான்மையைக் கொண்டிராதவன் தான் ஆரோக்கியமான மனிதன்.  தாழ்வு மனப்பான்மை என்பது மிகக் கொடிய நோய்.  ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகப் பெரிய தடை, மிக மோசமான எதிரி.  தாழ்வு மனப்பான்மை வேண்டவே வேண்டாம்.  ஆரோக்கியமான மனிதனாக வாழ்வதற்குத் தப்பித் தவறிக்கூட தாழ்வு மனப்பான்மை உங்களைத் தொட்டுவிட அனுமதிக்கக் கூடாது. ஏனெனில் தனக்குள்ளே தாழ்வு மனப்பான்மையைக் கொண்டிராத மனிதன் மட்டுமே ஆரோக்கியமான மனிதனாவான். 
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14289
Points : 17093
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே ஜி மாஸ்டர் கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Sep 19, 2013 9:45 pm

இருவகை மாணவர்கள் 


கற்றல்  எல்லையற்றது.  கற்பதற்கான   விடயங்களும் எல்லையற்றன. எமது கற்றலானது பிறப்பில்  இருந்தே ஆரம்பமாகிறது. ஐம்புலன்களின்  ஊடாக நாம் தகவல்களைப்  பெற்றுக்கொள்கிறோம்.  ஆரம்பத்தில் எமது கற்றலானது  தொடுஉணர்வு, கேட்டல் அவதானித்தல் என்பவற்றின் மூலம் ஆரம்பித்து படிப்படியாக வார்த்தைகளைக் கையாளும் திறனுக்கு வளர்ச்சியடைந்து செல்கின்றது.  எமது ஆரம்பகாலக் கற்றலின் அடிப்படையாக   எமது பெற்றோர்களும்,  நெருக்கமானவர்களும்  சூழல்  சார்ந்த ஏனையவைகளும் அமைகின்றன.  மிகவும் சிறப்பு வாய்ந்த, மிகவும் சக்தி வாய்ந்த கற்றலுக்கான காலப்பகுதி   முதல்  ஐந்து வருடங்கள் ஆகும்.  ஆனால், இக் காலப் பகுதி, அதி பெரும்பாலான பெற்றோர்களாலும் நெருக்கமான வர்களாலும் தவறான முறையில் மதிப்பீடு செய்யப்பட்டு வீணடிக்கப்படுகின்றது. ஒரு குழந்தையின் கற்றலானது பாடசாலையிலிருந்து தான்  ஆரம்பிக்கின்றது என்ற மனநிலை இதற்கான காரணம் என்றால் மிகையாகாது. 

ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஒரு மாணவரின் கற்கும்  தன்மையைத்  தீர்மானிப்பவர்கள் அந்த மாணவருக்கு கற்பிப்பவர்களே.  அதாவது, எது கற்பிக்கப்படுகிறதோ, எவ்வாறு கற்பிக்கப்படுகிறதோ அதுவே ஒரு மாணவரின் கற்கும் தன்மையைத் தீர்மானிக்கின்றது.   இங்கு மிகவும் முக்கியமாக நாம் கருத்தில் கொள்ள வேண்டிய விடயம் என்னவெனில் ஒரு குழந்தையின் முதலாவது ஆசிரியர் அக்குழந்தையின் பெற்றோர்கள் என்பது தான். பெற்றோர்களின் இந்தக் கற்பித்தல் முறையானது ஒரு குழந்தை எந்தவகையான மாணவர்  ஆவார்  என்பதைத்  தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

ஒரு குழந்தையின் ஆரம்பத் தேவையானது  உணவும் அரவணைப்புமாகும். இந்த அரவணைப்பைக் கருவியாகப் பயன்படுத்தி   குழந்தைகளின் கற்றல் முறையை நாம் கையாளல்  வேண்டும்.  குழந்தைகளுக்கு எவற்றை நாம் கற்பிக்கவேண்டும் என்பதை மிகவும் சுருக்கமாகக் கூறுவதாயின்,  ஒரு விடயத்தில் குழந்தை தனது அச்சத்தை வெளிப்படுத்தும் போது  இந்த அரவணைப்பை ஆர்வம் ஊட்டும் கருவியாக மாற்றி அந்த அச்சம் முற்றாக அகலும் வரை ஆர்வத்துடன் ஈடுபடுவதற்கு துணையாக இருத்தல் வேண்டும். அச்சத்தில் இருந்து தாமாக வெளிவரும் குழந்தைகள் அனுபவக் கல்வியைப் பெற்றுக்கொள்கிறார்கள். இதுவே அவர்களது புரிந்துணர்வை  அதிகரிப்பதோடு தன்னம்பிக்கையையும் வளர்க்கிறது.

துரதிஷ்டவசமாக, பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளைப் புத்தகப் பூச்சிகளாக உருவாக்குகிறார்கள். ஒருவரது  வாழ்க்கையில்  மிக ஆர்வமாக தகவல்களை உள்வாங்குவதில் பொன்னான காலமாகக் கருதப்படும்  முதல் ஐந்து வருடங்கள் பெற்றோர்களின் தவறான கணிப்பீட்டினால் நினைவாற்றலை மட்டும் அதிகரிக்கும் ஒரு இயந்திரமாக மாற்றப்படுவது மிகவும் துரதிஷ்டவசமானதாகும். பாடாசாலைக்குச் செல்வதற்கு முன்னரே வீடு பாடாசாலையாக மாறிவிடுகிறது. குழந்தைகள் இரண்டு வயதை அடைவதற்கு முன்னர் மனப்பாடம் செய்வதற்கு தூண்டப்படுகிறார்கள்.  இக் குழந்தைகள் தாமாக ஒன்றை உருவாக்குவதற்கு துணிவு அற்றவர்களாகவும் எப்போதுமே மற்றவர்களில் தங்கியிருப்பவர்களாகவும் உருவாக்கப்பட்டு விடுகிறார்கள்.

குழந்தைகள் மட்டுமல்ல, நாமும் வார்த்தைகளாகவும் வடிவங்களாகவும் தகவல்களைச் சேகரித்துக் கொண்டிருக்கும்   மாணவர்களே.  தகவல் சேகரிப்பில் வார்த்தைகள் மிக முக்கிய பங்கை வகிக்கின்றன.  மாணவர்களாகிய நாம் சேகரித்துக்கொண்ட வார்த்தைகளை எவ்வாறு கையாள்கிறோம் என்பதையே எமது வாழ்க்கை பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றது. அதாவது  நாம் கற்றுக்கொண்ட வார்த்தைகளுக்கு அர்த்தம் தேடும் மாணவர்களா அல்லது கற்றுக்கொண்ட வார்த்தைகள் மூலம் வாழ்க்கைக்கு அர்த்தம் தேடும் மாணவர்களா என்பதையே எமது வாழ்க்கை பிரதிபலிக்கின்றது.  உங்களின் வாழ்க்கை எந்த வகையான மாணவரைப் பிரதிபலிக்கின்றது?

 நன்றியுடன்  KG Master (website: http://www.kgmaster.com)
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14289
Points : 17093
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: கே ஜி மாஸ்டர் கட்டுரைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Sep 21, 2013 11:46 am

பகிர்வுக்கு நன்றி

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: கே ஜி மாஸ்டர் கட்டுரைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Sep 21, 2013 12:46 pm

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14289
Points : 17093
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum