"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கற்றாழை சாறு பருக வைத்தாய்....!!
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 8:39 pm

» பழைய காதலி இன்னும் மாறவேயில்லை...!!
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 8:31 pm

» சரியான வாழ்க்கை முறை...(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 8:26 pm

» காகிதம் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sun Aug 20, 2017 12:58 pm

» அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:56 pm

» வனநாயகம் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sun Aug 20, 2017 12:56 pm

» மதுக்கடை ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sun Aug 20, 2017 12:55 pm

» மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:54 pm

» ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:49 pm

» ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:48 pm

» அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:48 pm

» அரசு பெட்ரோல் பங்க்குகளில் மலிவு விலை மருந்தகம்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:46 pm

» ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:45 pm

» வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:53 am

» இன்று முதல் மழை குறையும்: வானிலை மையம்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:49 am

» வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. -தீபா
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:48 am

» முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:47 am

» இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு: சீனா பாய்ச்சல்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:46 am

» வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:45 am

» மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:45 am

» இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:44 am

» அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:43 am

» கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:41 am

» மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:40 am

» ‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:39 am

» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:38 am

» ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:37 am

» காலை 8 மணிக்கு தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தும் கிராம மக்கள்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:35 am

» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:39 pm

» நிஜம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:32 pm

» லவ் டெஸ்ட் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:31 pm

» ஏக்கம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:29 pm

» நாயகன், கையெழுத்து – கவிதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:23 pm

» முடிவு எடுத்தல் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Aug 17, 2017 8:46 pm

» அவசரப்படாதே மச்சி!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:32 pm

» பாப்பி – நகைச்சுவை
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:27 pm

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்…?
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:26 pm

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:22 pm

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:21 pm

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:20 pm

» கடல் போல் இருக்கும் மனைவி!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:19 pm

» நமக்கு வாய்த்த தலைவர்
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:18 pm

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:02 pm

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 8:50 pm

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 8:48 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சின்ன - அறிவுக்கதைகள்

View previous topic View next topic Go down

சின்ன - அறிவுக்கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Oct 12, 2013 1:19 pm

துஷ்டரைக் கண்டால் தூர விலகு.(அறிவுக்கதை)
ஒரு காட்டில் பல விலங்குகள் வாழ்ந்து வந்தன.அந்த விலங்குகளைப் பிடிக்க பலரும் அந்தக் காட்டுக்கு வேட்டைக்கு வருவது வழக்கம். ஒருமுறை வேட்டைக்காரன் ஒருவன் அந்தக் காட்டில் ஒரு கூண்டை வைத்துவிட்டுப் போய் விட்டான். அந்தக் கூண்டில் ஒரு புலி மாட்டிக் கொண்டது.

--                 அந்தக் கூண்டில் அகப்பட்ட புலி உறுமிக் கொண்டே நடை பயின்று கொண்டிருந்தது.அப்போது அந்தக் காட்டுவழியே ஒரு வழிப்போக்கன் சென்று கொண்டிருந்தான்.அவனைப் பார்த்து அந்தப் புலி
"ஐயா, தயவு செய்து என் அருகே வாரும் "என்று அழைத்தது. புலியைக் கண்டு பயந்து தூர விலகிச் சென்றவன் அதன் அழைப்பைக் கேட்டு கூண்டின் அருகே வந்தான். அவனைப் பார்த்து,அந்தப் புலி பரிதாபமாகக் கூறியது.
"ஐயா, எனக்கு மிகவும் வயதாகிவிட்டது.கண்ணும் தெரியவில்லை. இந்த வேட்டைக்காரன்  என்னைப் பிடித்துப் போய் துன்புறுத்துவான். தயவு செய்து என்னை விடுவித்து விட்டுப் பிறகு உங்கள் வழியே போகலாம் ஐயா."
அதன் முகத்தையும் கூர்மையான  அதன் பற்களையும் பார்த்துப்  பயந்த அந்த வழிப்போக்கன்,"ஹூ...ஹூம் நான் மாட்டேன்.நீ துஷ்ட மிருகம். உன்னை வெளியே விட்டால் என்னைக் கொன்று தின்று விடுவாய்."என்று மறுத்தான். தன வழியே போகத் தொடங்கினான்.

அப்போது அந்தப் புலி," ஐயா, நான் சைவமாக மாறி ரொம்ப காலமாயிற்று. இப்போதெல்லாம் நான் மனிதர்களையே தின்பதில்லை. என்னை வெளியே விட்டுப் பாருங்கள் ஐயா.அப்போதுதான் தெரியும் நான் எவ்வளவு நல்லவன் என்று." எனக் கெஞ்சியது.
தயங்கி நன்ற வழிப்போக்கனிடம் அது கெஞ்சியது.மன்றாடியது. "உன்னைத் தின்னமாட்டேன்" என்று சத்தியம் செய்தது. அதன் தவிப்பைப் பார்த்த அந்த வழிப்போக்கன் பாவமாயிருக்கிறதே இந்தப் புலியைப் பார்க்க என எண்ணி அந்தக் கூண்டின் அருகே சென்று அதைத் திறந்து விட்டான்.

என்ன நடக்கும்?வெளியே வந்த புலி "என்ன நண்பரே, நலமா?" என்றா விசாரிக்கும்?

ஒரே பாய்ச்சலில் பாய்ந்து அந்த வழிப்போக்கனைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டது. அந்த மனிதன் பயந்து அலறினான்.

"ஏ புலியே, என்னைத் தின்னமாட்டேன் என்று சத்தியம் செய்தாயே,இப்போது கொல்ல  வருகிறாயே,"

"அட அப்பாவி மனிதா,பட்டினியாய் இருப்பவர் முன் உணவு கிடைத்தால் உண்ணாமல் இருப்பது முட்டாள்தனம் அல்லவா? இது தெரியாதா உனக்கு?"

"இதோ பார், நீ செய்வது நியாயம் என்று யாராவது சொன்னால் நான் உனக்கு உணவாகிறேன்."
என்றான் நடுங்கியவாறே.
அந்த சமயம் பார்த்து ஒரு நரி அந்த இடத்துக்கு வந்தது.நரியைப் பார்த்த வழிப்போக்கன்
"இந்த நரியிடம் நியாயம் கேட்போம்" என்றான்.
 புலி "இதுவும் நம் இனத்தைச் சேர்ந்தது. எனக்கு சாதகமாகத்தான் சொல்லும் என எண்ணிக் கொண்டு     
நரியிடம் நியாயம் கேட்க சம்மதித்தது.

அருகே வந்த நரியைப் பார்த்து புலி அதிகாரத்துடன் பேசியது.
"நரியாரே, நீரே நியாயம் சொல்லும்.நான் கூண்டுக்குள் இருந்தேனா, இந்த மனிதன் வெளியே போய்க்கொண்டு இருந்தாரா,"என்று சொல்லும்போது நரி குறுக்கிட்டு, "என்ன என்ன, யார் உள்ளே இருந்தது, யார் வெளியே இருந்தது?" என்று ஒன்றுமே புரியாதது  போல் கேட்டது.

புலி பொறுமையாக மீண்டும் கூறத் தொடங்க, நரி "ஒ..ஹோ.. இந்த மனிதன் கூண்டுக்குள்ளும் நீங்கள் வெளியிலும் இருந்தீர்களா?" என்று வேண்டுமென்றே கூறியது.
புலி பொறுமையிழந்து,உறுமியது.அதைக்கண்டு அஞ்சியது போலப் பாசாங்கு செய்த நரி,
"புலியாரே, மன்னியுங்கள் எனக்கும் வயதாகிவிட்டதால் மறதி அதிகம். சரி தாங்கள் எங்கு இருந்தீர்களோ அங்கு சென்று நின்று சொல்லுங்கள் என்றதும் புலி கூண்டுக்குள் சென்று நின்றது." இதோ பார், நான் இங்குதான் இருந்தேன். இந்த மனிதன்..."என்று நரிக்கு விளக்கமாக சொல்வதில் கவனமாக இருக்கும்போது, நரி மெதுவாக அந்த வழிப்போக்கனிடம்,"ஓய், சீக்கிரம் கூண்டுக் கதவைச் சாத்துமஅய்யா, நிற்கிறீரே"என்று கூறவும் பாய்ந்து சென்று கூண்டுக் கதவைச் சாத்தி விட்டு அப்பாடா என்று பெருமூச்சு விட்டான் அந்த மனிதன்.

அந்தநரி, "துஷ்டரைக் கண்டால் தூர விலகு "என்ற பழமொழியை அறியமாட்டீரா,உங்கள் வழியைப் பார்த்துக் கொண்டு போங்கள்  ஐயா"என்று சொல்லிவிட்டுக் காட்டுக்குள் ஓடிவிட்டது.

உண்மைதான் அனுபவபூர்வமாக அறிந்து கொண்டேன் என்று சொல்லியவாறே வேகமாக அங்கிருந்து நடந்தான் அந்த மனிதன்.
அறியாமையாலும் அவசரத்தாலும் ஆணவத்தாலும் மீண்டும் கூண்டுக்குள் அகப்பட்டுக் கொண்டதைஎண்ணி உறுமியவாறு நின்றிருந்தது அந்தப் புலி.

நம்  வாழ்க்கையிலும் நாம் இந்தப் பழமொழியை மறவாமல் இருந்தால் பல துன்பங்கள் நம்மை அணுகாது நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

நன்றி ;கதை தளம்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14297
Points : 17103
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சின்ன - அறிவுக்கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Oct 12, 2013 1:22 pm

வீண் பழியும் இலவம் பஞ்சும்

ஒரு ஊரில் வெட்டுபுலி என்ற ஒருவன் இருந்தான். அவன் ஒரு முறை தேவையில்லாமல் ஒரு கிராமவாசி மீது பழி சொல்லி பஞ்சாயத்தைக் கூட்டினான்.பஞ்சாயத்திலும் கிராமவாசிக்குத் தண்டனை கிடைத்தது.

பின், வீட்டிற்கு வந்த வெட்டுபுலியின்யின் மனசாட்சி அவனை உறுத்தியது. கிராமவாசி மீது தான் பழி சொன்னதை எண்ணி வருந்தினான். எனவே, தன் பாவத்திற்கு ஏதாவது பிராயச்சித்தம் உண்டா என்று தேடினான்.

என்ன பிராயச்சித்தம் செய்வதென்று அவனுக்குப் புரியவில்லை. எனவே, அந்த ஊரிலிருந்த ஒரு துறவியிடம் சென்றான். “துறவியாரே! நான் இந்தக் கிராமத்தில் வசிக்கும் ஒருவர் மீது வீண் பழி சொல்லிவிட்டேன். அது என் மனத்தை உறுத்துகிறது. அந்தப் பழி சொன்ன பாவத்தில் இருந்து தப்பிக்க எனக்கு வழி கூறுங்கள்!” என்று கேட்டான்.
...
துறவி சிறிது யோசித்துவிட்டு, “இன்று இரவு மூன்று கிலோ இலவம் பஞ்சை எடுத்துப் போய் அந்த கிராமவாசியின் வீட்டுக்கு முன்பு பரப்பிப் போட்டுவிட்டு வந்து விடு. நாளை வந்து என்னைப் பார்,” என்று கூறினார்.

வெட்டுபுலியிடம் பஞ்சைக் கொண்டு சென்று கிராமவாசியின் வீட்டின் முன் பரப்பி விட்டான். பின் மறுநாள் சென்று துறவியைப் பார்த்தான். “துறவியாரே! என் பாவம் போய் இருக்குமா இந்நேரம்?” என்று கேட்டான்.

உடனே துறவி, “வெட்டுபுலி! நீ இப்போது அந்த கிராமவாசியின் வீட்டிற்குச் செல். அவன் வீட்டு முன் நீ நேற்றிரவு பரப்பி வைத்த பஞ்சை மீண்டும் பொறுக்கிக்கொண்டு வா,” என்று கூறினார்.

வெட்டுபுலி மிகுந்த ஆவலுடன் ஓடினான். ஆனால், ஒரு விரல் அளவு பஞ்சு கூட அங்கு இல்லை. எல்லாம் காற்றில் பறந்துபோய் விட்டிருந்தது. அதனைக் கண்ட வெட்டுபுலி திடுக்கிட்டான். மீண்டும் துறவியிடம் ஓடி வந்தான்.

“துறவியாரே! நேற்றிரவு நான் கிராமவாசி வீட்டின் முன்னால் போட்டுவிட்டு வந்த பஞ்சில் ஒரு துளிப் பஞ்சாவது இப்போது அங்கு இல்லை. என்ன செய்வது?” என்று கேட்டான்.

துறவி சிரித்துவிட்டு, “வெட்டுபுலி! நீ விரித்துப் போட்டுவிட்டு வந்த பஞ்சை இப்போது மீண்டும் எப்படி அள்ள முடியாதோ, அதே போல, நீ ஒருவர் மீது கூறிய பழியையும் அதனால் உனக்கு ஏற்பட்ட பாவத்தையும் மாற்ற முடியாது. திருப்பி வார முடியாத பஞ்சைப் போன்றது தான் உன் பழிச் சொற்களும். அவற்றையும் இனித் திருப்பி வார முடியாது. இறைவனிடும் உன் தவறுக்காக மன்னிப்பு கேள்,” என்று கூறினார்.

வெட்டுபுலிக்கு உண்மை புரிந்தது. அன்று முதல் மற்றவர்கள் மீது பழி சொல்லும் குணத்தையே விட்டுவிட்டான். பிறர் மீது வீண் பழி சுமத்துவதால் பலன் ஏதும் கிடைக்கப்போவதில்லை என்பதை உணர்ந்தான் வெட்டுபுலி.

நன்றி ;கதை தளம்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14297
Points : 17103
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: சின்ன - அறிவுக்கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Oct 12, 2013 1:26 pm

மந்திர குவளை
******************
முன்னொரு காலத்தில் ஓர் அரசன் இருந்தான். அவன் மிகவும் முன் கோபக்காரன். தன் கெட்ட குணம் தெரிந்தும் அவனால் அதை மாற்றிக் கொள்ள முடியவில்லை.

ஒரு நாள் தேவதை ஒன்று அவன் முன் தோன்றியது. பொன்னால் செய்த ஒரு குவலையை அவனிடம் கொடுத்தது. "உனக்குச் சினம் வரும்போதெல்லாம் இதில் மூன்று முறை தண்ணீர்

நிரப்பிக்குடி; பிறகு சினமே வராது" என்று கூறி மறைந்தது தேவதை. அப்போதிருந்தே அரசன் அப்படிச் செய்யத் தொடங்கினான். சில நாட்களில் அவன் சினம் அவனை விட்டு விலகியது.

பல நாட்கள் சென்றன.

மீண்டும் ஒரு நாள் தேவதை அவன்முன் தோன்றியது. மந்திரக் குவலை கொடுத்ததற்காக பலமுறை அதற்கு நன்றி கூறித் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தான் மன்னன். "மன்னனே உன்னை ஏமாற்ற நான் விரும்பவில்லை. அது மந்திரக்குவலை அல்ல. சாதாரணமானதுதான். சினம் வரும்போது சிந்திக்க நேரம் இருக்காது. சிந்தனை வந்தால் சினம் தானே குறையும்.

தண்ணீரை மூன்று முறை ஊற்றிக் குடிக்கும் போது நேரம் கிடைக்கிறது. அப்போது சிந்திக்க முடிவதால் புலன்கள் அமைதி பெறுகின்றன. ஆத்திரம் நியாயத்திற்குத் தன் இடத்தைக் கொடுக்கிறது" என்று கூறி மறைந்தது தேவதை.

நன்றி ;கதை தளம்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14297
Points : 17103
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum