"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» நடிகை கேத்ரின் தெரசா.
by அ.இராமநாதன் Today at 5:13 pm

» சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
by அ.இராமநாதன் Today at 5:11 pm

» கதாநாயகியானார் எஸ்தர்!
by அ.இராமநாதன் Today at 5:07 pm

» சினேகாவின் ரீ – என்ட்ரி!
by அ.இராமநாதன் Today at 5:06 pm

» மன்மோகன்சிங் வாழ்க்கை திரைப்படமாகிறது!
by அ.இராமநாதன் Today at 5:05 pm

» “கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்காது” நடிகை திரிஷா சொல்கிறார்
by அ.இராமநாதன் Today at 1:37 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Today at 9:50 am

» சர்ச்சையில் சிக்க விரும்பாத சிவகார்த்திகேயன்!
by அ.இராமநாதன் Today at 9:49 am

» ஷீரடி பாபா - ஆன்மிக சிந்தனை
by அ.இராமநாதன் Today at 8:53 am

» பொண்டாட்டியே உதைப்பா…!
by அ.இராமநாதன் Yesterday at 10:01 pm

» என்ன..! இது கவர்ச்சிப் பிரியாணியா?
by அ.இராமநாதன் Yesterday at 10:00 pm

» தலைவர் சின்னப்பசங்க கூட கோலி விளையாடறாரே?
by அ.இராமநாதன் Yesterday at 10:00 pm

» வழக்கம் போல் பீர் பாட்டிலை தான் தொறக்கிறீங்க!
by அ.இராமநாதன் Yesterday at 9:59 pm

» தலைவா ஐ டி ஆபிசர்ஸ் வந்திருக்காங்க!
by அ.இராமநாதன் Yesterday at 9:59 pm

» ஆந்தை லேகியம் கொடுத்து விட்டாராம்!
by அ.இராமநாதன் Yesterday at 9:58 pm

» அட்சதை கூட கல்லு வந்து மண்டையில விழுதே?
by அ.இராமநாதன் Yesterday at 9:58 pm

» ஓங்கி அடிச்சா…!
by அ.இராமநாதன் Yesterday at 9:21 pm

» அன்று சொன்னவை இன்று நடக்கிறது
by கவிப்புயல் இனியவன் Yesterday at 1:56 pm

» எதை விட்டுக் கொடுப்பது? – தென்கச்சி கோ. சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Yesterday at 11:38 am

» நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
by அ.இராமநாதன் Yesterday at 11:29 am

» ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
by அ.இராமநாதன் Yesterday at 11:27 am

» லூயி பாஸ்டர்
by அ.இராமநாதன் Yesterday at 11:25 am

» அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:22 am

» புற்று நோயால் பாதித்த 5 வயது சிறுமியின் திருமண ஆசையை நிறைவேற்றிய பெற்றோர்
by அ.இராமநாதன் Yesterday at 11:20 am

» பெண்களுக்காக பொது கூட்டம் நடத்தப் போறாராம்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:55 am

» மனைவிக்கும் டாக்டர் பட்டம் வேண்டுமாம்…!!
by அ.இராமநாதன் Yesterday at 10:46 am

» பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
by அ.இராமநாதன் Fri Jun 23, 2017 8:29 pm

» நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
by அ.இராமநாதன் Fri Jun 23, 2017 8:28 pm

» ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
by அ.இராமநாதன் Fri Jun 23, 2017 8:27 pm

» ‘உள்ளுவதெல்லாம்’ நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Jun 22, 2017 9:55 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Thu Jun 22, 2017 9:50 pm

» வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் யாழ் சு. சந்திரா, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி !
by eraeravi Thu Jun 22, 2017 9:06 pm

» இரா. இரவியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் யாழ் சு. சந்திரா, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி !
by eraeravi Thu Jun 22, 2017 9:06 pm

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:50 pm

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:47 pm

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:46 pm

» கடன் பாட்டு…!!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:43 pm

» பிசுக்கு – பொசுக்கு (வீட்டுக்குறிப்புகள்)
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:33 pm

» நீட் எக்ஸாம்…
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:32 pm

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:31 pm

» நம்பிக்கை – குட்டி கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:31 pm

» பழமொழிகள்…
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:29 pm

» நண்பரால் நன்மை பலவுண்டு – கவிதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:21 pm

» சீற்றம் – கவிதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:20 pm

» படிக்கணும் நாமும் படிக்கணும்
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:20 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நீதிக் கதைகள்

View previous topic View next topic Go down

நீதிக் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Oct 24, 2013 7:44 pm

கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது. ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது.

யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது.

அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், "பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!" என்று சொல்லிச் சிரித்தது.

அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, "அப்படியா, நீ பயந்து விட்டாயா?" என்று கேட்டது.

அதற்குக் கோவில் யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னது:

"நான் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும். மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்து நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்."


நீதி : தன் பலம், பலவீனம் தெரிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

நன்றி: தமிழ் மொழி.
நிலாமுற்றம்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14284
Points : 17088
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: நீதிக் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Oct 24, 2013 7:46 pm

சிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன. ஒரு நாள் சிங்கம் பசுவைக் கொன்றது. கழுதைப்புலி தன்  

குட்டியை சிங்கத்திடம் அனுப்பி தன் பங்கைக் கேட்டது. கழுதைப்புலியின் பங்காக பசுவின் குடலை மட்டும் கொடுத்து 

அனுப்பியது சிங்கம்.

கழுதைப்புலியோ "நீ ஏன் குடலைக் கொண்டு வந்தாய்? அரைவாசிப் பங்குதானே நமக்கு உரியது?" என்று கேட்டது.  குட்டி 

கழுதைப்புலி சொல்லியது: "நான் சின்னப்பயல். பெரியவர்கள் கொடுப்பதைத்தான் கொண்டு வரமுடியும். நான் எப்படி 

சிங்ஙத்தோடு விவாதிக்க முடியும்" அதைக்கேட்ட  கோபமான கழுதைப்புலி அந்தக் குடலோடு சிங்கத்தைப் பார்க்கப் 

போனது.


சிங்கம் உணவை உண்டு குகைக்குள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.

கழுதைப்புலி வந்ததைக் கண்டு கண்களை அச்சமூட்டும் வகையில் வைத்திருந்தது.  "ஏன் இங்கே வந்தாய்?" கர்ஜித்தபடி 

சிங்கம் கேட்டது. பசுவில் பாதி கேட்க வந்த கழுதைப்புலி தற்போது தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு பேசியது: "ராஜ 

சிங்கமே !  நீங்கள் குடல் அனுப்பியதற்கு மிக்க நன்றி, ஆனால் அதனை உங்களிடமே சேர்க்க முடிவு செய்து விட்டோம்."

குடலை சிங்கத்திடம் கொடுத்து விட்டு திரும்பிய கழுதைப்புலியிடம் குட்டி கேட்டது: :பசுவில் பாதி கேட்கப்போன நீங்கள் 

குடலையும்  கொடுத்து விட்டு வருகிறீர்களே? "மகனே... சிங்கம் மிகக்  கொடூரமாக இருந்தது. அதைக்கண்டு நடுங்கி 

விட்டேன்.

எனவே எனது பங்கையும் கொடுத்துவிட்டுப் பாராட்டி விட்டு வந்தேன். எல்லாம் நன்மைக்காக" என்றது தாய் கழுதைப்புலி.

நீதி :நம்மை விட வலிமையானவர்களைக் கோபப்படுத்துவதை விட அவர்களை சாந்தப்படுத்துவதே பாதுகாப்பானது.

நன்றி : தமிழ்மொழி.
நிலாமுற்றம்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14284
Points : 17088
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: நீதிக் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Oct 24, 2013 7:48 pm

பசி தாங்க முடியாத எலிகள் இரண்டு தாங்கள் ஒளிந்திருந்த வீட்டின் சமயல் அறைக்குள் புகுந்தன. 

அங்கே ஒரு    பெரிய பானை நிறைய பால் இருப்பதைக் கண்டன. ஆனால் அது உயரமான பானை. இதனால் 

பாலைக் குடிக்க     முடியாமல் எலிகள் திண்டாடின.
                            
இதையடுத்து இரு எலிகளும் ஒரு முடிவுக்கு வந்தன. ஓர் எலியின் மீது இன்னோர் எலி ஏறி பாலைக் குடிப்பது. 

அதன் பிறகு கீழே உள்ள எலி மேல் ஏறி பாலைக் குடிக்கலாம் என திட்டமிட்டு, அதை செயல்படுத்தின. 

அதன்படி மேலே உள்ள எலி பாலைக் குடித்த போது, கீழே இருந்த எலி கத்தியது: 

"போதும்! நான் பால் குடிக்க வேண்டும்..."

கீழே இருந்த எலி போட்ட சத்தத்தை கேட்டு மிரண்டு மேலே இருந்த எலி, பால் பானைக்குள் விழுந்துவிட்டது.

இதைக் கண்ட கீழே இருந்த எலி, "நல்லது, இனி எனக்குத்தான் எல்லா பாலும்" என்று நினைத்தது. 

பிறகு அந்தப்    பானையைச் சுற்றி சுற்றி வந்தது. ஆனால் மேலே ஏற முடியவில்லை. கடைசியில் பசியால் அது

செத்துப் போய்விட்டது.


நீதி : துன்பத்தில் இருந்து விடுதலை அடைய மற்றவர்களின் ஒத்துழைப்புத் தேவை. 

நன்றி ;நிலாமுற்றம்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14284
Points : 17088
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: நீதிக் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Oct 24, 2013 7:50 pm

நாய்க்குட்டி சென்ன நீதி 
**********************************
ஒரு வீட்டில் நாய்க்குட்டியொன்றை எடுத்து வளர்த்து வந்தார்கள்.அந்த நாய்க் குட்டி காகத்துடன் நட்பாக இருந்தது.

ஒரு நாள் காகம் மிகவும் கவலையுடன் அமர்ந்திருந்தது.

இதைக் கண்ட நாய்க் குட்டி காகத்திடம் சென்று.

என்ன காக்கையாரே!ஏன் ஒன்றும் பேசாமல் வருத்தமாக இருக்கிறீர்? என்று கேட்டது.

அதற்கு காகம், மனிதர்கள் மற்றப் பறவைகளை அன்புடன் வளர்க்கின்றார்கள். அவைகளின் செயல்களைப் பாராட்டுகின்றார்கள் ஆனால் என்னை வெறுத்து. கல்லால் எறிந்து துரத்துகிறார்களே ஏன்? என்று கேட்டது காகம்.

இதற்குக் காரணம் உங்கள் தீய குணங்கள்தான். இதை இல்லாதொலித்தால் உங்களையும் அன்பாக நடத்துவார்கள், என்றது நாய்க் குட்டி

எங்களிடம் அப்படியென்ன தீய குணங்கள் உள்ளன? கடைமை,சுத்தம், இப்படிப் பல நல்ல குணங்களில் நாங்கள்தான் சிறந்தவர்கள்!என்று சொன்னது காகம்.

உண்மைதான்! என்றது நாய்க் குட்டி

பகிர்ந்துண்ணும் பண்பைக் கற்றுத்தந்ததும் நாங்கள்தான்! என்று பெருமையோடு சொன்னது காகம்.

ஆமாம் அதுவும் உண்மைதான்! என்று மறுபடியும் சொன்னது நாய்க்குட்டி.

இப்படி நல்ல குணங்கள் எம்மிடம் இருந்தும், மற்றப் பறவைகளுக்கு உள்ள மதிப்பு எங்களுக்கு இல்லையே ஏன்?

குயில் கூவும்போது அதன் இனிமையை இரசிக்கிறார்கள். மயிலாடும் போது அதை இரசித்துப் பாராட்டுகிறார்கள். கிளியை வீட்டில் வளர்த்து பேசக் கற்றுக் கொடுக்கிறார்கள்.அனால் எவ்வளவோ நல்ல குணங்கள் இருந்தும் எம்மினத்தைக் கண்டாலே துரத்துகிறார்களே ஏன்? என்று மீண்டும் கேட்டது காகம். 

ஏன் என்று நான் சொல்லுகிறேன். உங்களிடம் எவ்வளவு நல்ல குணங்கள் இருந்தாலும். உங்களிடம் இருக்கும் சில தீய குணங்களால் தான் மனிதர்கள் உங்களை வெறுக்கிறார்கள், என்று கூறியது நாய்க்குட்டி

அப்படி என்ன தீய குணங்கள்? என்று கேட்டது காகம்.

திருடுதல்,ஏமாற்றுதல், என்று சொன்னது நாய்க்குட்டி. காகம் தலை குனிந்தது.

ஒருவரிடம் எவ்வளவு நல்ல பண்புகள் இருந்தாலும்.

அவரின் ஒரு சிறு தீயசெயல் அவரை,அவரின் அத்தனை நல்ல 

பண்புகளில் இருந்தும் மறைத்து.அந்த தீய செயலே முன்னிற்கும்.


நன்றி "மகேஸ்பதி இணையம்"
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14284
Points : 17088
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: நீதிக் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Oct 24, 2013 7:53 pm

கெடுவார், கேடு நினைப்பார்! 
*******************************************
ஓர் காட்டில் கெட்ட சுபாவமுள்ள தேள் ஒன்று வசித்து வந்தது. அந்தக் காட்டின் நடுவில் ஒரு நீரோடை இருந்தது.அந்தத் தேளுக்கு இக்கரையில் இருந்து அக்கரைக்கு போக வேண்டி இருந்தது.

அக்கரைக்குப் போவதற்காக அந்த நீரோடையில் இருக்கும் பெரிய மீன்கள், நண்டு, தவளை போன்றவைகளிடம் தேள் உதவி கேட்டது, ஆனால் அந்த பொல்லாத தேள் தமக்குக் கொட்டிவிடும் என்று அவை மறுத்து விட்டன.

எப்படி நீரோடையைக் கடப்பது என்று தேள்யோசித்துக்கொண்டு இருந்தபோது அந்த நீரோடையில் ஆமை ஒன்று வந்து கொண்டிருந்தது. ஆமையைக் கண்ட தேள்.

ஆமையாரே! நான் அக்கரைக்குச் செல்லவேண்டும் என்னை அங்கு கொண்டு போய் விட்டு விடுவீரா? என்று கேட்டது. 

நானும் அக்கரைக்குத்தான் போகிறேன், என் முதுகில் ஏறிக்கொள்ளும் உம்மை நான் அக்கரையில் விட்டுவிடுகிறேன்! என்றது ஆமை,தேளும் ஆமையின் முதுகில் ஏறிக்கொண்டது

ஆமை நீரில் நீந்திச்செல்ல அரம்பித்தது

சிறிது தூரம் தான் ஆமை சென்றிருக்கும் தேளுக்கு ஒரு யோசனை வந்தது ,நான் பல பேரைக் கொட்டியிருக்கிறேன்.அவர்கள் வலியால் துடித்ததையும் பார்த்திருக்கின்றேன்.ஆனல் நான் ஒரு நாளும், ஆமைக்கு கொட்டவில்லை ,இந்த ஆமையைக் கொட்டினால் எப்படித் துடிக்கும்? இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடையாது .என்று ஆமைக்கு கொட்டிப் பார்க்க நினைத்தது 

தேள் ஆமையின் முதுகில் கொட்டியது .அனால் ஆமை பேசாமல் போய்க்கொண்டிருந்த்து. உடனே தேள் ஆமையைப் பார்த்து

ஆமையாரே! உமது முதுகு கடினமாக இருக்கிறதே. உமது உடம்பில் வலியே வருவதில்லையா? என்று கேட்டது.

தேளின் கெட்ட எண்ணத்தைப் புரிந்துகொள்ளாத ஆமை , எனது முதுகு கடினமான ஓட்டினால் மூடப்பட்டுள்ளது அதனால் எனக்கு அந்த இடத்தில் வலியே வருவதில்லை, அனால் எனது கழுத்துப்பக்கம் மென்மையாக இருக்கும் . இதில் தான் எனக்கு வலிகள் காயங்கள் ஏற்படும் என்று சொன்னது ஆமை.

ஓகோ ;அப்படியா?என்று கேட்ட தேள் ,மெதுவாக ஆமையின் கழுத்துப் பகுதியை நோக்கிச் சென்றது . கழுத்தில் இருந்து தலைப்பகுதிக்குச் சென்ற தேள் ஆமைக்கு கொட்ட ஆரம்பித்த்து .

தலையில் ஏதோ குத்தியதால் விடுக்கென்று தலையை உள்ளே இழுத்துக் கொண்டது ஆமை . தேள் நீரோடையில் விழுந்து விட்டது.

தனக்கு உதவி செய்த ஆமைக்கு கேடுவிளைவிக்க நினைத்த தேள் .தண்ணீரில் மூழ்கி இறந்தது .ஆமை கரையை நோக்கி நீந்திச் சென்றது.

ஒருவர் எவ்வித பலனையும் எதிர்பாராமல் எமக்கு உதவி 

செய்தாராயின்,அவரின் உதவியை நாம், எம் வாழ் நாளில் என்றுமே 

மறந்துவிடலாகாது. அவருக்கு நன்றியுடையவனாக இருத்தல் 

வேண்டும்.மாறாக அவருக்கு கெடு செய்ய நினைப்போமாயின், அது 

எம்மையே வந்து சேரும்

நன்றி"மகேஸ்பதி இணையம்"
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14284
Points : 17088
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: நீதிக் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Oct 24, 2013 7:55 pm

ஒரு யோசனை சொல்ல வேண்டும். காரியங்களை வேகமாகச் செய்வது எப்படி?”

“என்ன பிரச்னை? எதற்குக் கேட்கிறாய்?”

“எல்லா காரியங்களையும் வேகமாக செய்து முடிக்க நினைக்கிறேன். ஆனால் அப்படி முயலும்போது ஏதாவது தடங்கல் வந்துவிடுகிறது. என்ன செய்ய?”

அவன் சொன்ன பதிலிலிருந்து பிரச்னை என்னவென்று குருவுக்குப் புரிந்தது. அவனுக்கு ஒரு கதையை சொல்லத் துவங்கினார்.

’ஒரு காக்காவுக்கு தண்ணீர் தாகம் அதிகமாயிருந்தது. அங்கேயும் இங்கேயும் அலைந்து பார்த்தது. எங்கேயும் கண்களில் தண்ணீர் தட்டுப்படவில்லை. அப்போது ஒரு வீட்டு  மொட்டை மாடியில் ஒரு கண்ணாடி குடுவையில் தண்ணீர் இருப்பதைப் பார்த்தது. உடனே அங்கே பறந்து சென்று தண்ணீர் குடிக்க முயன்றது. ஆனால் பாவம், அந்தக்  குடுவையின் அடியில் தண்ணீர் இருந்ததால் காக்காவுக்கு எட்டவில்லை. என்ன செய்வதென்று காக்கா யோசித்தது.

அப்போது பழைய சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது. இதே போன்ற சூழலில் ஒரு புத்திசாலி காக்கா சிறு கற்களைக் கொண்டு வந்து குடுவையில் போட்டு நிரப்பி த ண்ணீரை மேலே கொண்டு வந்து குடித்தது காக்காவின் ஞாபகத்தில் இருந்தது. தானும் அதே போல் செய்ய நினைத்தது. பக்கத்தில் பார்த்தது. சிறு சிறு கற்கள் இருந்தன.  அவற்றை கவ்வி எடுத்து வந்து குடுவைக்குள் போட்டது. நான்கைந்து கற்களைப் போட்டிருக்கும். தண்ணீர் அவ்வளவாக மேலே ஏறவில்லை. அதற்கு மேல் கற்களைப்  போட காக்காவுக்கும் பொறுமை இல்லை.

இப்படி ஒவ்வொரு கல்லாக போட்டு எப்போது தண்ணீரை உயர்த்தி எப்போது குடிப்பது என்று கவலைப்பட்டது. வேகமாய் நீரை உயர்த்த அதற்கு ஒரு யோசனை  தோன்றியது. சிறு சிறு கற்களாய் போட்டு நீரை உயர்த்துவதைவிட ஒரு பெரிய கல்லை கொண்டுவந்து போட்டால் சட்டென்று நீர் உயர்ந்துவிடுமே என்று நினைத்தது.

அருகிலிருந்த ஒரு பெரிய கல்லை கஷ்டப்பட்டு எடுத்து வந்து மேலிருந்து கண்ணாடிக் குடுவைக்குள் போட்டது. அந்தக் கல் பட்டதும் குடுவை உடைந்தது. தண்ணீர்  சிதறி யாருக்கும் பயன்படாமல் ஓடியது’

இந்தக் கதையைச் சொல்லி முடித்ததும் அவசரப்பட்டால் என்னவாகும் என்பது வந்தவனுக்குப் புரிந்தது. அப்போது குரு அவனுக்குச் சொன்ன

WIN மொழி:

பொறுமையில்லாமல் செய்யும் காரியங்கள் வெறுமையில் முடியும்.

நன்றி"குமுதம்"
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14284
Points : 17088
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum