"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அறி
by Ramalingam Yesterday at 9:22 am

» அனுமனுக்கு மறுக்கப்பட்ட அலவன்சு...!
by அ.இராமநாதன் Mon Jan 23, 2017 9:00 pm

» கல்யாணிக்கு கல்யாணம்
by அ.இராமநாதன் Mon Jan 23, 2017 9:00 pm

» ஐயோ....கம்ப்யூட்டர் இப்போ மெஸ்ஸடு அப் ஆயிடுச்சு...!!
by அ.இராமநாதன் Mon Jan 23, 2017 8:59 pm

» நமக்கு எதுக்கு ஊர் வம்பு...!!
by அ.இராமநாதன் Mon Jan 23, 2017 8:58 pm

» வேண்டாம் மாட்டிக்குவோம்னு சொன்னா ஏட்டய்யா!’’
by அ.இராமநாதன் Mon Jan 23, 2017 8:57 pm

» ஓட்டல் சாப்பாடு ஜெயில் சாப்பாடு மாதிரி டேஸ்டா இருக்காமா..?
by அ.இராமநாதன் Mon Jan 23, 2017 8:56 pm

» வாய்க்குள்ள கொசு போயிடுச்சு!
by அ.இராமநாதன் Mon Jan 23, 2017 8:55 pm

» அடேங்ங்ங்ங்ங்ங்ங்கப்பா! எவ்வளவு அதிகாரங்கள்…..?
by அ.இராமநாதன் Mon Jan 23, 2017 8:54 pm

» நில் ,கவனி, வண்டியை எடுத்துச் செல்...!!
by அ.இராமநாதன் Mon Jan 23, 2017 8:53 pm

» சிங்கம் 3-க்கு விளம்பரம் தேடியதாக விமரிசனம் செய்த பீட்டாவுக்கு சூர்யா நோட்டீஸ்!
by அ.இராமநாதன் Mon Jan 23, 2017 8:33 pm

» ஆந்திரம்: விரைவு ரயில் தடம் புரண்டு 39 பேர் பலி
by அ.இராமநாதன் Mon Jan 23, 2017 8:31 pm

» குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ நெய் ரூ.25-க்கும், கிலோ சர்க்கரை ரூ.10-க்கும் வழங்கப்படும்
by அ.இராமநாதன் Mon Jan 23, 2017 8:30 pm

» தபால் வாக்குகளை மின்னணு முறையில் அனுப்பும் திட்டம் கோவாவில் அறிமுகம்
by அ.இராமநாதன் Mon Jan 23, 2017 8:30 pm

» சர்வம் ஜல்லிக்கட்டு மயம்...
by அ.இராமநாதன் Mon Jan 23, 2017 8:29 pm

» "போராட்டத்தை கைவிடுகிறோம்'
by அ.இராமநாதன் Mon Jan 23, 2017 8:28 pm

» ஜல்லிக்கட்டு தடைக்காக மேனகா காந்தி உச்ச நீதிமன்றத்தை நாடவில்லை: நிர்மலா சீதாராமன்
by அ.இராமநாதன் Mon Jan 23, 2017 8:27 pm

» பிஹாரில் 34 பேரை கொலை செய்த 4 பேருக்கு மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு: குடியரசுத் தலைவர் பிரணாப் உத்தரவு
by அ.இராமநாதன் Mon Jan 23, 2017 8:26 pm

» ’கோக், பெப்சிகளை விற்க மாட்டோம்’ - ஜல்லிக்கட்டு போராட்டத்தின் அடுத்த அதிரடி
by அ.இராமநாதன் Mon Jan 23, 2017 8:26 pm

» போராட்டத்தால் ஜல்லிக்கட்டு தடை நீங்குமென்றால் கம்பாலா தடையையும் நீக்க முடியும்: கர்நாடகா!
by அ.இராமநாதன் Mon Jan 23, 2017 8:23 pm

» தடியடி: ஐகோர்ட் விசாரணை
by அ.இராமநாதன் Mon Jan 23, 2017 8:22 pm

» உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு "கேவியட்' மனு
by அ.இராமநாதன் Mon Jan 23, 2017 8:21 pm

» பள்ளி, கல்லூரிகள் இன்றுமுதல் வழக்கம்போல் இயங்கும்
by அ.இராமநாதன் Mon Jan 23, 2017 8:21 pm

» தமிழக சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டுக்கான சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றம்
by அ.இராமநாதன் Mon Jan 23, 2017 8:19 pm

» ஜல்லிக்கட்டுக்கு பேரவையில் சட்டம்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி
by அ.இராமநாதன் Mon Jan 23, 2017 8:19 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sat Jan 21, 2017 9:19 pm

» பீட்டாவுக்கு தெரியுமா ...?
by கவிப்புயல் இனியவன் Sat Jan 21, 2017 2:25 pm

» ஆத்தாடி – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Jan 21, 2017 12:25 pm

» அடடே – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Jan 21, 2017 12:25 pm

» அடடடா – ஒரு கதை
by அ.இராமநாதன் Sat Jan 21, 2017 12:24 pm

» அப்படியா – ஒரு பக்கதை
by அ.இராமநாதன் Sat Jan 21, 2017 12:23 pm

» படித்ததில் பிடித்த பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Jan 21, 2017 12:21 pm

» குரங்கு – சிறுகதை
by அ.இராமநாதன் Sat Jan 21, 2017 12:19 pm

» எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், - விடுகதைகள்
by அ.இராமநாதன் Fri Jan 20, 2017 10:09 pm

» பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன? - விடுகதைகள்
by அ.இராமநாதன் Fri Jan 20, 2017 10:08 pm

» தொட்டுப் பார்க்கலாம் எட்டிப் பார்க்கமுடியாது - விடுகதைகள்
by அ.இராமநாதன் Fri Jan 20, 2017 10:07 pm

» விடுகதைகள்...
by அ.இராமநாதன் Fri Jan 20, 2017 10:06 pm

» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிதாயினி கஸ்தூரி ராமராஜ் !
by eraeravi Fri Jan 20, 2017 9:17 pm

» இனிக்கும் ​இன்பகாதல் கவிதை
by arony Fri Jan 20, 2017 12:50 am

» பாட்டு என்னை படைப்பாளியா மாத்திச்சி! ‘465’ டைரக்டர் பரவசம்
by arony Fri Jan 20, 2017 12:48 am

» புல் தானாகவே வளர்கிறது - ஓஷோ.
by அ.இராமநாதன் Thu Jan 19, 2017 11:48 pm

» பாம்பனில் 2ம் எண் கூண்டு
by அ.இராமநாதன் Thu Jan 19, 2017 8:48 pm

» போதும் உங்கள் அடக்குமுறை ......
by கவிப்புயல் இனியவன் Wed Jan 18, 2017 10:13 pm

» உத்திர பிரதேச தேர்தல் -
by அ.இராமநாதன் Tue Jan 17, 2017 10:11 pm

» தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை: பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை
by அ.இராமநாதன் Tue Jan 17, 2017 10:09 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள் ! நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

View previous topic View next topic Go down

கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள் ! நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi on Wed Oct 30, 2013 10:24 pm

கல்விப் பூங்காவில் 
சிந்தனைப் பூக்கள்  !

நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

குமரன் பதிப்பகம் ,19 கண்ணதாசன் சாலை ,தியாகராயர் நகர் ,சென்னை .600017. விலை ரூபாய் 100.

 நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .அவர்கள் 
அரசுப்பணியில் செயலராக  இருந்து கொண்டே இலக்கியப்பணியும் செய்து வருபவர் .முகத்தில் புன்னகையை எப்போதும் அணிந்திருக்கும் பண்பாளர் .அன்பாகப் பேசிடும் நல்லவர் .வல்லவர்.

 இவரது முந்தைய  நூல் உலகப்பொதுமறையான திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து விளக்கமும் ஆங்கிலத்தில் எழுதி . ( முன்னாள் ) இந்தியாவின் முதற் குடிமகன் மாமனிதர் அப்துல் கலாம் அவர்களின் பாராட்டைப்   பெற்றது .

நூல் ஆசிரியர்  சுற்றுலாத்துறையின் ஆணையாளராக இருந்தபோது, மிகச் சிறந்த சிந்தனையாளர் வெ .இறையன்பு  இ.ஆ .ப .அவர்கள் சுற்றுலாத்துறையின் செயலராக இருந்தார்கள் .இந்த இருவரின் காலம் சுற்றுலாத்துறையின் பொற்க்காலம் என்று சொல்லும்அளவிற்கு வரலாற்று சிறப்பு மிக்க பணிகள் செய்தார்கள் .தற்போது தமிழ் வளர்ச்சித் துறையின்  செயலராக இருந்து தனி முத்திரை பதித்து வருகிறார்கள் .

இந்த நூலை ஆசிரியர் இனத்திற்கு காணிக்கை ஆக்கி இருப்பது நல்ல பொருத்தம் .காரணம் இது கல்வி தொடர்பான விளக்க நூல் .
காணிக்கை !

 "தியாக உணர்வுடன் உன்னதமான உலகை நிர்மாணிக்கும் சமுதாய சிற்பிகள் ஆசிரிய பெருமக்களுக்கு எனது ' சிந்தனைப் பூக்கள்  ' காணிக்கை ."

இதனைப் படித்ததும் எனக்கு ஆசிரியர் இனத்திற்கு பெருமை சேர்த்து அவரது பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் டாக்டர் இராதா கிருஷ்ணனும் ,எனது ஆசிரியர்களும் நினைவிற்கு வந்தார்கள் .
.
மதுரை காமராஜ் - அண்ணாமலை பல்கலைக் கழகங்களின் முன்னாள் துணை வேந்தர் முனைவர் எஸ் .வி .சிட்டிபாபு அவர்களின் அணிந்துரை கல்விப் பூங்காவின் வரவேற்பு  தோரண வாயிலாக உள்ளது .

" கல்வியாளர்களுக்கும் மாணவச் செல்வங்களும் இந்நூலின் வழியாக நடந்தால் வெற்றி நிச்சயம் ."

இந்த நூலின் பயனைப்   பறை   சாற்றுவதாக உள்ளது .

நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .அவர்கள் என்னுரையில் மிகவும் தன்னடக்கமாக குறிப்பிட்டுள்ள  வரிகள் மிக நன்று .

" இப்போதும் ஒரு மாணவன் நிலையிலிருந்துதான் இந்நூலை எழுதி   யிருக்கிறேன்   .'கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள்  ' உங்கள் மீது வீசப்படும் அறிவுரைகள் அல்ல .. உங்களோடு  பகிர்ந்து கொள்ளும் யதார்த்தமான ஆலோசனைகள் உங்கள்  கருத்துகளையும் நான் வரவேற்கிறேன் ."

திருடர்களால் திருட முடியாதது .கொடுத்தாலும் குறையாதது என்ற சிறப்பை உடைய கல்வியின் மேன்மையை , நன்மையை விளக்கிடும் அற்புத நூல் . உலகப்பொதுமறையான திருக்குறள் , அவ்வையின் வரிகள் , மகாகவி  பாரதியின் கவிதை வரிகள் ,புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கவிதை வரிகள் ,ஜி .டி .நாயுடு சொன்னது வரை  மேற்கோள் காட்டி  மிக நன்றாக எழுதி உள்ளார்கள் .

5 தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன .முதல் கட்டுரையை திருக்குறளுடன் தொடங்கி மாற்றுத் திறனாளிகளின் திறமையை எழுதி முடித்துள்ளார் . கல்வியின்  சிறப்பை மிகச் சிறப்பாக உணர்த்தி உள்ளார் . பெரிய  கட்டுரையில் பொருத்தமான மேற்கோள்கள் காட்டி எல்லோருக்கும் எளிதில்  புரியும்  வண்ணம் மிக எளிமையாகவும் இனிமையாகவும்  எழுதி உள்ளார் .

" கல்வி என்பது அறிவை வளர்த்துக் கொள்வது மட்டுமல்ல  மக்களின் 
விழிப்புணர்வைத் தூண்டி  அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியடையச்  செய்து நற்பண்புகளை ஊட்டுவதாக அமைய வேண்டும் ."

உண்மைதான் .இன்றைய கல்வி மருத்துவர்களையும், பொறியாளர்களையும் தருகின்றது .ஆனால் நல்ல  மனிதர்களைத் தரவில்லை .நற்பண்பு மிக்கவர்களாக கல்வியாளர்கள் திகழ வேண்டும். அதுதான் கல்வியின் பயன் .

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொன்ன கணியன் பூங்குன்றனாரின்  கருத்தை வழி  மொழிந்து எழுதியுள்ள கருத்துக்கள் மிக நன்று .

" சாதிப் பாகுபாடுகளால் சரிந்து விடாமல் 
இன வேறுபாடுகளால் சிதறி விடாமல் 
மத   வேறுபாடுகளால் சிதைந்து விடாமல் 
மொழிகளுக்கு அப்பாற்ப்பட்டு -எல்லைகளுக்கு அப்பாற்ப்பட்டு 'ஒரே மைந்த இனம் '- ' உலகம்  '  ஒரு வீடு ' என்கிற உணர்வுகளால் ."

கல்விக்கூடத்தில் எந்தவித  வேறுபாடும்  காட்டாமல்  மாணவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை நன்கு உணர்த்தி உள்ளார்.
 
இன்றைக்கு ஆசிரியர் மாணவர் உறவு சரியில்லை .தினந்தோறும் 
செய்தித்தாளில் விரும்பத்தகாத செய்திகள்  வந்த வண்ணமுள்ளன .
பள்ளி மாணவன் ஆசிரியைக் கொன்ற செய்தி . பொறியியல்  கல்லூரி   மாணவர்கள்   கல்லூரி  முதல்வரைக் கொன்ற செய்தி ,ஆசிரியர் திட்டியதால் மனம் உடைந்து மாணவ மாணவியர் தற்கொலை .இந்த நூல் படித்தால் இது பொன்ற செயல்கள்  நடைபெறாது .ஆசிரியர்கள் மாணவர்கள் இருவரும் படிக்க வேண்டிய நூல் இது .ஆற்றுப்படுத்தும் நூல் .

கல்வி கற்றல்  என்பது பதவி  கிடைத்ததும் நேர்மையான வழியில் ஊதியமாக மாதாமாதம் வரும் .வருமானம் வரும் .வருமான தரும் அட்சயப் பாத்திரம்தான் கல்வி என்பதை, நூல் ஆசிரியர் முனைவர் 
மூ .இராசாராம் இ .ஆ .ப அவர்களுக்கு ஆங்கிலப் புலமையும் இருப்பதால் சொல் விளையாட்டில் விளக்கி உள்ளார் .  

" LEARNING  - என்ற கற்றல் எனும் பொருள்படும் சொல்லில் உள்ள 
 ' L'  என்ற   எழுத்தை நீக்கி விட்டால் ,  EARNING என்ற சொல் கிடைக்கும் .ஆம் ! ஒன்றைப் பற்றி நன்றாகக் கற்று விட்டால் , ஏற்ற ஊதியம் கிடைக்கும் அல்லவா ! "

குடியால் இன்றைக்கு சமுதாயம் சீரழிந்து வருவதை மனித நேய ஆர்வலர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை .குடியால் வன்முறை நிகழ்கின்றது .ஒழுக்கம் சிதைகின்றது .அதனைக் கண்டித்து குடி குடி கெடுக்கும் என்பதையும் நன்கு உணர்த்தி உள்ளார் .

போதை பழக்கம் !

போதை பழக்கம் சமுதாயத்தை சீரழிக்கும் தொற்று  நோயாகப் பற்றிப் படர்ந்து வருகிறது .ஒழுக்கமும் பண்பாடும் உருக்குலையச் செய்கிறது. வயோதிகர்களை - வாலிபர்களை  மட்டுமல்ல  குமரப் பருவத்தையும் இந்தக் கொள்ளை  நோய் தாக்கத் தொடங்கி  விட்டது .மது அரக்கன் மாணவர்களையும் விட்டு வைக்கவில்லை .

போதைப் பழக்கத்தின் தீங்கை எழுதி மாணவர்களை நல்  வழிப்படுத்தும் அறநெறிக் கருத்துக்களை எழுதி உள்ளார் . 

'கல்வித் தத்துவங்கள் ' என்ற கட்டுரையில் பல்வேறு மலர்களில் தேன் சேகரிக்கும் தேனீயைப் போல பல்வேறு நூல்களில் இருந்து கல்வி தொடர்பான கருத்துக்களை சேகரித்து தொகுத்து வழங்கி உள்ளார். காந்தியடிகள் ,அறிஞர் அண்ணா ,கவியரசு கண்ணதாசன் ஆகியோர் கல்வி பற்றி சொன்ன கருத்துக்கள் .தமிழ் இலக்கியத்தில் கல்வி பற்றி சொன்ன கருத்துக்கள்.மேல் நாட்டு அறிஞர்கள் கல்வி பற்றி சொன்ன கருத்துக்கள் யாவும் நூலில் உள்ளது .

கல்வியால் சிறப்படைந்த  நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் 
இ .ஆ .ப அவர்கள் கல்விக்கு சிறப்பு செய்துள்ள நூல் .கல்வியாளர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் .

மிகச் சிறப்பாக, நேர்த்தியாக அச்சிட்ட குமரன் பதிப்பகத்தாருக்கும்  பாராட்டுக்கள் .


eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2049
Points : 4583
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum