"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தகவல் களஞ்சியம்
by அ.இராமநாதன் Yesterday at 11:42 pm

» நீல பெங்குவின்
by அ.இராமநாதன் Yesterday at 11:37 pm

» கருமை தேவாலயம்
by அ.இராமநாதன் Yesterday at 11:35 pm

» நம்புங்கண்ணே....நம்புங்க..!
by அ.இராமநாதன் Yesterday at 11:32 pm

» தலைவர் ஏன் போலீஸ் பாதுகாப்பு வேண்டாம்னு சொல்லிட்டார்?
by அ.இராமநாதன் Yesterday at 11:24 pm

» ஆர்கானிக் கிளாஸ் ரூம்ல பாடம் நடத்துவாங்க....!!
by அ.இராமநாதன் Yesterday at 11:20 pm

» சாத்தானின் குரல் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 11:17 pm

» வேப்பமர சாமி - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:42 pm

» அப்பா - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 7:06 pm

» மளிகை கடையில் இருப்பாள் இந்த ராணி...? -விடுகதை -
by அ.இராமநாதன் Yesterday at 6:56 pm

» ஆசைகளை அடக்குபவனே மாவீரன்
by அ.இராமநாதன் Yesterday at 6:49 pm

» ‘முதலையும் மூர்க்கனும் பிடித்தால் விடா’
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 10:35 pm

» தாடியால் தடைபட்ட கல்யாணம்!
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 10:31 pm

» பாரபட்ச சம்பளம்!
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 10:12 pm

» சாய்த்துவிட்ட போதை!
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 10:11 pm

» ஹீல்ஸ் மனிதன்!
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 10:11 pm

» உதவிக்கு பரிசு கல்வி!
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 10:10 pm

» நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 4:19 pm

» காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 4:13 pm

» வித்தியாசமான அழகுப்போட்டி.....!!
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 2:51 pm

» படப்பிடிப்பில் இந்தி நடிகை அலியாபட் காயம்
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 2:34 pm

» கத்ரீனா கைப் அம்மா திண்டுக்கல் ஆசிரியை
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 2:32 pm

» இதற்குத்தான் நடிக்க வந்தேன்- ரகுல் பிரீத் சிங்
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 2:28 pm

» தாய்லாந்தில் படப்பிடிப்பை நிறைவு செய்த மிஸ்டர்.சந்திரமௌலி படக்குழு
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 2:22 pm

» புதுக்கவிதைகள்
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 10:06 am

» கொசுக்களின் தாலாட்டில் ...
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 9:55 am

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Mar 23, 2018 8:12 am

» பெருமழையும் சிறுதூறலும் - கவிதை
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 11:28 pm

» டெஸ்ட் எடுக்காமலேயே எனக்கு கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 11:22 pm

» எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 10:29 pm

» கருகிய ரோஜாவும் கடைசிக் கேள்விகளும் - கவிதை
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 10:14 pm

» எளிய பயிற்சி முறை என்பது முத்ரா பயிற்சிதாங்க....
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 9:53 pm

» உடல் நலம் தரும் விரல் முத்திரைகள்
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 9:50 pm

» உளியின் யுத்தம்! நூல் ஆசிரியர் : கவிஞர் பல்லவி குமார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Mar 22, 2018 8:50 pm

» உலக தண்ணீர் தினம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Mar 22, 2018 8:48 pm

» விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 5:39 pm

» டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 12:49 pm

» மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 11:14 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Mar 22, 2018 7:59 am

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Mar 21, 2018 10:59 pm

» நெருப்பின் தாகம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 20, 2018 9:06 pm

» நம் சமையல் அறையில்...
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 5:42 pm

» இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:51 am

» ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:38 am

» பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
by அ.இராமநாதன் Tue Mar 20, 2018 8:35 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines தொகுத்த கடுகு கதைகள்

Go down

தொகுத்த கடுகு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Nov 19, 2013 9:28 pm

மல்லிகை 
********************
பிரசவத்திற்கு வீட்டுக்கு வந்திருக்கும் நம் மகள்,
என் தலை முடியைப் பார்த்து,

''என்னம்மா எல்லா முடியும் நரைச்சிடுச்சு,''என்றதும்
குறுக்கே புகுந்த நீங்கள்
''இது நரையா?முப்பது வருடம் மல்லிகைப் பூவை
சூடிச்சூடி இவள் கூந்தலும்

மல்லிகைப் பூவாகவே மாறிவிட்டது,''என்றீர்கள். 
 ''அப்பா உன்னை விட்டுக் கொடுக்க மாட்டாரே?''என்றாள் மகள்.
கட்டிக் கொண்டவளை விட்டுக் கொடுக்க
அவருக்குத் தெரியாது,மகளே.

நன்றி ;இருவர் உள்ளம் தளம்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14397
Points : 17231
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: தொகுத்த கடுகு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Nov 19, 2013 9:31 pm

தியாகி
************
ஆற்றங்கரை ஓரத்தில் ஒரு கல்லின் மேல் அழுக்குத் துணிகளை அடித்துத் துவைத்துக் கொண்டிருந்தான் ஒரு சலவைத் தொழிலாளி.''அழுக்கடைவது துணி;அதை வெளுக்கும் போது அடிபடுவது நீ.ஆஹா,உன் தியாகமே தியாகம்.,''என்று கல்லைப் புகழ்ந்தது கழுதை.''மன்னியுங்கள்.

துணி வெளுக்கப்படும் போது நானும் வெளுக்கப்படுகிறேன் என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள்.,''என்றது கல்.அசடு வழிந்தகழுதை முணுமுணுத்தது,''பிழைக்கத்தெரியாத தியாகி.''

நன்றி ;இருவர் உள்ளம் தளம்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14397
Points : 17231
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: தொகுத்த கடுகு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Nov 19, 2013 9:34 pm

ஆடிப்பெருக்கு
*******************
ஆடி பதினெட்டு அன்று அதிகாலை.காவிரியின் கரையிலிருந்த ஒரு மரம்,காவிரியைப் பார்த்து,''நீ ஏன்இன்று இப்படிப் பெருக்கெடுத்து ஓடுகிறாய்?'' என்று கேட்டது.காவிரி சொன்னது,''பொழுது விடிந்ததும் பாவங்களைப் போக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு பயங்கரமான பாவிகள் எல்லாம் என்னிடம் ஓடி வரப் போகிறார்கள்.அவர்கள்வருவதற்கு முன் தப்பித்து விட வேண்டும் என்று தான் நான் பயந்து ஓடுகிறேன்.

''நன்றி ;இருவர் உள்ளம் தளம்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14397
Points : 17231
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: தொகுத்த கடுகு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Nov 19, 2013 9:36 pm

விழும் போது
********************
விடிகாலை சேவல் கூவியது.
'நான் எழும் போது இந்த சேவல் தான் எத்தனை அன்போடும் நட்போடும் என்னை வாழ்த்துகிறது?'_சூரியன் பூரித்துப் போனது.
மாலை நேரம்.சூரியன் மேற்கே அஸ்தமிக்கத் தொடங்கியது.

''நான் விழுந்து கொண்டிருக்கிறேனே!என்னைத் தாங்க யாரும் வரமாட்டார்களா?எழும் போது வாழ்த்துக் கூறிய சேவல் நண்பன்  கூட வரவில்லையே!''_ஏங்கியது சூரியன்.

''எழும் போது தாங்க வருபவன் எல்லாம்
விழும் போது தாங்க வருவதில்லை.''
சூரியன் உணர்ந்து சொல்லியது..

நன்றி ;இருவர் உள்ளம் தளம்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14397
Points : 17231
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: தொகுத்த கடுகு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Nov 19, 2013 9:39 pm

தண்ணீர்
*************
தண்ணீரைக் காட்டி ஞானி கேட்டார்,
''இதுவே மேலும் குளிர்ந்தால்...?''
'பனிக்கட்டி'என்றான் சீடன்.
''கொதித்தால்...?''
'நீராவி'
ஞானி சொன்னார்,
''மனிதனும் குளிரும் போது திடமாகிறான்.
கொதிக்கும் போது ஆவியாகிறான்.''

நன்றி ;இருவர் உள்ளம் தளம் 
உருவகம்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14397
Points : 17231
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: தொகுத்த கடுகு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Nov 20, 2013 6:23 pm

அழகும் பலனும்
**********************
புல் வெளி.
அண்ணாந்து ஆகாயம் நோக்கிய சின்னப்புல் சொன்னது,
''இந்த அந்தி நேர மேகம் தான் எத்தனை அழகு!தகதகவென தங்க நிறத்தோடு.அந்த அழுக்கு மேகத்தைத்தான் பிடிக்கவில்ல.கன்னங்க ரேல்என்று.''

அம்மாப்புல் அமைதி காத்தது.
தகித்தது புல்வெளி.
சின்னஞ்சிறு புல் ஒரு துளி நீருக்காக ஏங்கியது.நா உலர்ந்தது.
உயிர் மெல்ல மெல்ல வறண்டது.

அதே நேரத்தில்,
அழுக்கு மேகம் இடியோசையோடு மழையாய்ப் பொழியத் துவங்கியது.
புல்வெளி எங்கும் பூரிப்பு.

அருகில் இருந்த அம்மாப்புல் சொன்னது:
''அழுக்கு மேகம் தன்னையே அழித்துக் கொண்டது,பார்த்தாயா?
அழகாய் இருப்பவை எல்லாமே பயனுள்ளவையாக இருக்க வேண்டிய அவசியமில்லை.பயனுள்ளவை எல்லாம் அழகாக இருக்க வேண்டும் என்பதில்லை.'

நன்றி ; இருவர் உள்ளம் தளம் '
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14397
Points : 17231
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: தொகுத்த கடுகு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Nov 20, 2013 6:28 pm

விடாமுயற்சி
*********************
கடலோரம்.
அலைகள் கரையில் மோதிச்சிதறும் காட்சி.
குருவும் அவரது சீடர்களும் காண்கிறார்கள்.
முதலாவது சீடனைப் பார்த்து குரு கேட்டார்,
''உனக்கு என்ன தெரிகிறது?''
'திரும்பத்திரும்ப வந்து மோதும் அலைகளில் விடாமுயற்சி தெரிகிறது.'

அடுத்த சீடனைக் கேட்ட போது அவன் சொன்னான்,
'துன்பங்கள் தொடர்ந்து வந்தாலும் கரையைப் போல் உறுதியாக நின்றால் சிதறிப் போகும்.'
குரு சொன்னார்,
''சில நேரங்களில் அலைகளாய் இரு;
சில நேரங்களில் கரையாய் இரு.''

நனறி ;இருவர் உள்ளம் தளம்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14397
Points : 17231
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: தொகுத்த கடுகு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Nov 20, 2013 6:34 pm

மாற்றம்
*************
ஆந்தையைப் பார்த்து காடை கேட்டது,''எங்கு செல்கிறாய்?''
ஆந்தை: கீழ் திசை நோக்கி .
காடை: ஏன்?
ஆந்தை: எனது அலறல் சப்தத்தைக் கேட்டு மக்கள் வெறுப்படைகிறார்கள்.
காடை: நீ செய்ய வேண்டியது அலறல் சப்தத்தை மாற்றிக் கொள்வதே.அது உன்னால் முடியாத பட்சத்தில் நீ எங்கு சென்றாலும் வெறுக்கப் படுவாய்.

_சீனக் குட்டிக் கதை
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14397
Points : 17231
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: தொகுத்த கடுகு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Nov 20, 2013 6:39 pm

வித்தியாசம்
*******************
பொதுநலம் என்பது புல்லாங்குழல் போன்றது.சுயநலம் என்பது கால்பந்து போன்றது. இவை இரண்டுமே காற்றால்இயங்குகின்றன.
ஆனால் ஒன்று முத்தமிடப்படுகின்றது.

மற்றொன்று உதைக்கப் படுகின்றது.தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால்பந்து உதை படுகிறது.

ஆனால் தான் வாங்கிய காற்றை இசையாக புல்லாங்குழல் தருவதால் அது முத்தமிடப் படுகிறது.சுயநலம் உள்ள மனிதன் புறக்கனிக்கப்படுவான்பொதுநலம் உள்ளவன் போற்றப்படுவான்.

நன்றி இருவர் உள்ளம் தளம்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14397
Points : 17231
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: தொகுத்த கடுகு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Nov 20, 2013 6:44 pm

பசுவின் புகழ்
******************
பன்றி,பசுவிடம் தன ஏக்கத்தைக் கூறியது,''நான் எவ்வளவு தான் செய்தாலும் மக்கள் உன்னைத்தான் புகழ்கிறார்கள்.நீ பால் தந்தாலும்,நான் அதை விட அதிகமாக என் மாமிசத்தையும் கொழுப்பையும் தருகிறேன்.இருந்தும் என்னை யாரும் விரும்ப மாட்டேன் என்கிறார்கள் .''

பசு கூறியது,''நீ கூறுவது உண்மையே.அதன் காரணம் நான் கொடுப்பவற்றை உயிருடன் இருக்கும் போதே கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.''

நன்றி;  இருவர் உள்ளம் தளம்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14397
Points : 17231
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: தொகுத்த கடுகு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Nov 20, 2013 6:48 pm

சுமை
**************
குடையும் ஒரு சுமை தான் 
மழை இல்லாத போது.
படிப்பும் ஒரு சுமை தான் 
வேலையில்லாதபோது.

மதிப்பு
**************
ஒரு சோற்றுப் பருக்கையின் மதிப்பு 
சிதற விட்ட நமக்குத் தெரியாது.
அதை எடுத்துச் செல்லும் 
எறும்புக்குத் தான் தெரியும்.

மலரின் அழகு
*********************
தெய்வத்தின் காலடியில் சமர்ப்பிக்கப் படுவதை விட,ஒரு பெண்ணின் கூந்தலில் இடம் பெறுவதை விட ,மேசையின் மீது பூக்கிண்ணத்தில் செருகப் படுவதை விட செடியிலே இருக்கும் போது தான் மலர் அழகாக இருக்கும்.

நன்றி ; இருவர் உள்ளம் தளம்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14397
Points : 17231
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: தொகுத்த கடுகு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Nov 26, 2013 8:53 pm

தையல் !
********

''டாக்டர்! தையல் திரும்பப் பிரிஞ்சுடுச்சு டாக்டர்!'' என்று ஓடி வந்தார் ஹெட் நர்ஸ். ''எப்படிப் பிரிஞ்சது? நான்தான் கவனமா இருக்கச் சொன்னேனே'' என்று பதறினார் பயிற்சி டாக்டர்

''கொஞ்ச முன்னேகூட நான் செக் பண்ணேன் டாக்டர். சரியாத்தான் இருந்தது. இப்ப பார்த்தா... தையல் பிரிஞ்சு உள்ளே இருந்து எல்லாம் வெளியே வந்திருச்சு'' என்றார் பதற்றமாக.
''அய்யோ கடவுளே! சரிசரி, லேட் பண்ணாம சீக்கிரம் போய் திரும்பத் தையல் போடப் பாருங்க. நைட் டியூட்டிக்கு சீஃப் டாக்டர் வர்ற நேரமாச்சு'' என்றார் பயிற்சி டாக்டர்.
சற்றும் தாமதிக்காமல் ஓடிய ஹெட் நர்ஸ், கீழே சிந்திக்கிடந்த பஞ்சை எல்லாம் அள்ளி, தலையணைக்குள் திணித்துத் தைக்க ஆரம்பித்தார்.
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14397
Points : 17231
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: தொகுத்த கடுகு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Nov 26, 2013 8:58 pm

வீடு
***
கண்ணெதிரே அந்த வீடு சரிந்து விழுந்து தரைமட்டம் ஆனதைப் பார்த்து மனமுடைந்து போனாள் ஸ்வேதா. அப்பா ஆசை ஆசையாக கட்டிய வீடு... இப்படி ஆகிவிட்டதே எனக் கவலைப்பட்டாள். ''இதே இடத்தில் நாம திரும்ப ஒரு வீடு கட்டுவோம் அப்பா!'' என்றாள் வைராக்யமாக. அதற்கு அம்மா சொன்னாள், ''இங்கே கட்டாதீங்க, கொஞ்சம் தள்ளிக் கட்டுங்க. அப்பதான் அலை வந்து உங்க மணல் வீட்டை எதுவும் செய்யாது!''
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14397
Points : 17231
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: தொகுத்த கடுகு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Nov 26, 2013 9:02 pm

கார் 
**************
அம்மா நான் ரெடி! கார் வந்துடுச்சா''? என பலமுறை தாயிடம் கேட்டுக் கொண்டே இருந்தான் அருண்.  ''இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்திடும்டா'' என்றாள் அம்மா. சரி, என்று காருக்காகக் காத்திருந்தான். கார் வருவதாகத் தெரியவில்லை. ஸ்கூலுக்கு லேட்டானது. ''அம்மா உடனே டிரைவருக்கு ஃபோன் பண்ணிக் கேளுங்கம்மா'' என்று பரபரத்தான்.  

டிரைவருக்கு ஃபோன் பண்ண மொபைல் ஃபோனை எடுத்தாள் அம்மா. அதற்குள், ''ஹைய்யா! டிரைவர் மாமா வந்துட்டாங்க'' என்று கத்தினான் அருண். ''இந்தாப்பா! நீ கேட்ட 'ரிமோட் கார், சரி, கிளம்பு. ஸ்கூல் வேன் வர்ற டயமாச்சு!'' என்றார் லோக்கல் பஸ்ஸில் வேலை செய்யும் டிரைவர் மாமா.
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14397
Points : 17231
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: தொகுத்த கடுகு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Nov 26, 2013 9:04 pm

மாஞ்சா 
***********

பட்டம் விட்டுக்கொண்டு இருந்தான் பிரபு. மாஞ்சா நூல் கண்டபடி சிக்காகிவிட, அதில் வால் மாட்டிக்கொண்டது. பிரபு எவ்வளவோ பொறுமையாக நூலை எடுக்கப் பார்த்தான். அப்படியும் வாலை அறுத்துவிட்டது மாஞ்சா நூல். வலியில் வீல் வீலெனக் கத்திய செல்ல நாய்க் குட்டியை அள்ளி எடுத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினான் பிரபு.


நன்றி நிலாமுற்றம்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14397
Points : 17231
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: தொகுத்த கடுகு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Nov 26, 2013 9:06 pm

அப்பா !
***********

கண் வழியாகத் தண்ணீர் வந்தபடி இருந்தது. ''என்னடா கோபி... ஆரம்பத்துலேயே பாக்கறது கிடையாதா?'' என்று கடிந்துகொண்டார் அப்பா.
''உள்ளே என்ன ஆகியிருக்கும்னு தெரியலையே'' என்ற சந்தேகத்தை எழுப்பினாள் அம்மா.
''ஆமா! கெட்டுப்போய் இருந்தா பிரச்னை ஆயிடும். பேசாம திரும்பப் போயி வேற ஒரு நல்ல தேங்காயா பார்த்து வாங்கிட்டு வந்திடு. பூஜைக்கு நேரமாச்சு!'' என்று  கோபியைத் துரத்தினார் அப்பா.

நன்றி விகடன்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14397
Points : 17231
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: தொகுத்த கடுகு கதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Nov 27, 2013 12:13 pm

எல்லாம் நல்லா இருக்கு...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: தொகுத்த கடுகு கதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Nov 27, 2013 3:29 pm

அருமை

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: தொகுத்த கடுகு கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Nov 27, 2013 5:49 pm

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14397
Points : 17231
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: தொகுத்த கடுகு கதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum