"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கற்றாழை சாறு பருக வைத்தாய்....!!
by அ.இராமநாதன் Yesterday at 8:39 pm

» பழைய காதலி இன்னும் மாறவேயில்லை...!!
by அ.இராமநாதன் Yesterday at 8:31 pm

» சரியான வாழ்க்கை முறை...(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Yesterday at 8:26 pm

» காகிதம் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 12:58 pm

» அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
by அ.இராமநாதன் Yesterday at 12:56 pm

» வனநாயகம் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 12:56 pm

» மதுக்கடை ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 12:55 pm

» மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
by அ.இராமநாதன் Yesterday at 12:54 pm

» ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
by அ.இராமநாதன் Yesterday at 12:49 pm

» ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
by அ.இராமநாதன் Yesterday at 12:48 pm

» அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
by அ.இராமநாதன் Yesterday at 12:48 pm

» அரசு பெட்ரோல் பங்க்குகளில் மலிவு விலை மருந்தகம்
by அ.இராமநாதன் Yesterday at 12:46 pm

» ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு
by அ.இராமநாதன் Yesterday at 12:45 pm

» வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
by அ.இராமநாதன் Yesterday at 11:53 am

» இன்று முதல் மழை குறையும்: வானிலை மையம்
by அ.இராமநாதன் Yesterday at 11:49 am

» வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. -தீபா
by அ.இராமநாதன் Yesterday at 11:48 am

» முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்
by அ.இராமநாதன் Yesterday at 11:47 am

» இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு: சீனா பாய்ச்சல்
by அ.இராமநாதன் Yesterday at 11:46 am

» வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
by அ.இராமநாதன் Yesterday at 11:45 am

» மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
by அ.இராமநாதன் Yesterday at 11:45 am

» இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை
by அ.இராமநாதன் Yesterday at 11:44 am

» அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
by அ.இராமநாதன் Yesterday at 11:43 am

» கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 11:41 am

» மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 11:40 am

» ‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 11:39 am

» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by அ.இராமநாதன் Yesterday at 11:38 am

» ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
by அ.இராமநாதன் Yesterday at 11:37 am

» காலை 8 மணிக்கு தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தும் கிராம மக்கள்
by அ.இராமநாதன் Yesterday at 11:35 am

» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:39 pm

» நிஜம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:32 pm

» லவ் டெஸ்ட் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:31 pm

» ஏக்கம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:29 pm

» நாயகன், கையெழுத்து – கவிதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:23 pm

» முடிவு எடுத்தல் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Aug 17, 2017 8:46 pm

» அவசரப்படாதே மச்சி!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:32 pm

» பாப்பி – நகைச்சுவை
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:27 pm

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்…?
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:26 pm

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:22 pm

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:21 pm

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:20 pm

» கடல் போல் இருக்கும் மனைவி!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:19 pm

» நமக்கு வாய்த்த தலைவர்
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:18 pm

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:02 pm

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 8:50 pm

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 8:48 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines உன்னால் முடியும் பெண்ணே!

View previous topic View next topic Go down

உன்னால் முடியும் பெண்ணே!

Post by கவிப்புயல் இனியவன் on Tue Nov 26, 2013 8:46 pm

உன்னால் முடியும் பெண்ணே!
ச.பா.முத்துகுமார், படம்: பா.காளிமுத்து.
***********************************
பிஸினஸ் வெற்றிக் கதைகள்
''பொறந்தப்பவேவா பானை செய்யக் கத்துக்கிட்டோம்? எல்லாம்... சூழலும் தேவையும்தான். புகுந்த வீட்டுல கஷ்டம். அதைக் குறைக்கறதுக்கு நாமளும் ஏதாவது உதவியா இருக்கலாமேனு, வாசம் புடிச்சு... மண் தொட ஆரம்பிச்சேன். இன்னிக்கு இந்த மண்ணுதான் எங்களுக்குப் பொன்னு!''

- களிமண் பிசைந்த கைகளுடன் சிரிக்கிறார் பிச்சையம்மாள்.
மானாமதுரையில், கணவர் ஆறுமுகத்துடன் சேர்ந்து மண்பாண்டம் தொழில் செய்து கொண்டிருக்கிறார் பிச்சையம்மாள். மானாமதுரையில் இருந்து சிவகங்கை முழுவதும் விற்கப்படும் மண் பானைகளுள் பாதி, பிச்சையம்மாளின் கை பட்டதாகத்தான் இருக்கும்!

''பொறந்து வளர்ந்தது எல்லாம் மதுரைப் பக்கம்தான். மானாமதுரைக்கு வாக்கப்பட்டு வந்தேன். என் வீட்டுக்காரர் மண் பானை செய்றவர். எனக்கு ஆரம்பத்துல இதுல எந்த விஷயமும் தெரியாது. அதுக்காக எட்ட நிண்டே வேடிக்கை பார்க்காம, அவரோட கஷ்டத்துல நாமளும் கொஞ்சம் பங்கெடுக்கலாம்னு முடிவெடுத்தேன். மண் பானை செய்யக் கத்துக்கிட்டு, இப்போ நானும் இந்தத் தொழிலை முழு நேரமும் செய்ய ஆரம்பிச்சுட்டேன்!'' - கண்கள் மிளிர ஆரம்பித்தது பிச்சையம்மாளுக்கு.

''ஆரம்பத்துல, எனக்கும் பானை செய்யக் கத்துக் கொடுங்கனு அவர்கிட்ட கேட்க தயக்கமா இருந்துச்சு. அதனால அவர் வேலை செய்றதைப் பார்த்துப் பார்த்தே நானும் கத்துக்க ஆரம்பிச்சேன். அதைப் புரிஞ்சுகிட்டவர், 'அதுக்கென்ன கத்துக்கிட்டா போச்சு!’னு என் கை பிடிச்சு பானை வடிக்க வெச்சார். ஒரு பையன், ஒரு பொண்ணுனு ரெண்டு பிள்ளைங்களோட எதிர்காலம் பத்தின யோசனை... இந்த தொழிலை இன்னும் நேர்த்தியா எடுத்துச் செய்றதுக்கு என்னை செலுத்துச்சு'' என்றவர்,

''எங்க ஊர்ல அரசாங்கமே 'மண் பாண்டம் சொசைட்டி’ ஆரம்பிச்சு கொடுத்திருக்காங்க. அதுல 250 ரூபாய் கொடுத்து உறுப்பினர் ஆனேன். சொசைட்டியில இருந்து பானை செய்றதுக்கு பொருள் வாங்க முன் பணம் கொடுத்தாங்க. பொருள் எல்லாம் தயார் ஆனதும் சொசைட்டியில இருந்தே விற்பனைக்கும் உதவி செய்றாங்க. சொசைட்டி மூலமா நிறைய வியாபாரிகளோட அறிமுகம் கிடைச்சுருக்கு. கொஞ்சம் கொஞ்சமா எனக்கும் தொழில் தெரிய ஆரம்பிச்சு... இப்போ எங்ககிட்ட 50 பேர் வேலை செய்றாங்க. 

பானை செய்யும் நேரத்துல இவ்வளவு ஆட்கள் தேவைப்படாது. சூளையில் வேக வைக்கும் நேரத்துலதான் இத்தனை பேர் தேவைப்படுவாங்க. அவங்களுக்கு ஒரு நாளைக்கு 120 முதல் 200 வரை சம்பளம் கொடுப்போம்'' என்று பெருமிதம் பொங்கப் பேசிய பிச்சையம்மாள்,
''மண் பானை செய்ய 20 ஆயிரமாவது முதல் போடணும். இந்தத் தொழிலுக்கு முக்கியமான முதலீடு மண்தான். பானை செய்ய நத்தவெரக்கி, செய்களத்தூர், சுந்தரகடப்புனு மொத்தம் மூணு இடத்துல இருந்து மண் எடுக்குறோம். ஒரு வருஷத்துக்கு தேவையானதை 10, 15 பேர் சேர்ந்து வண்டி புடுச்சு எடுத்துட்டு வந்திருவோம். ஒரு வண்டிக்கு 700 ரூபாய் வாடகை. மண்ணைக் காயவெச்சு, தண்ணி ஊத்தி, ஊற வெச்சுருவோம். தெனமும் காலையில யாராவது மிதிச்சி பக்குவப்படுத்தணும்.

மண்பாண்டம் எல்லாம் செஞ்சு முடிச்சதும், அதை வேக வைக்க சூளைக்கு தனியா வாடகை தரணும். அதுக்கு ஒரு 3,000 ரூபாய் தேவைப்படும். எங்ககிட்ட சூளை சொந்தமா இருந்துச்சு. மழையினால சேதமாயிடுச்சு. இப்ப அரசாங்கமே பொதுவா ஒரு சூளை வெச்சு கொடுத்துருக்காங்க'' என்று வெற்றி ரகசியம் சொன்னவரிடம்,
''பொங்கல் வியாபாரம் எப்படி?'' என்றோம்.
''சின்னது, பெருசுனு மொத்தம் ஆறு வகை பானை 20 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விலை போகுது. பொங்கலுக்கு மட்டுமே 500, 600 பானைங்க தீர்ந்துடுச்சு. பானை மட்டும் இல்லாம அடுப்பு, குவளை இதையெல்லாமும் செய்றோம். எல்லாமே நல்ல விற்பனைதான். 

வீட்டோட பொருளாதாரத்துலேயும், வீட்டுக்காரரோட தொழில்லயும் பாதியா நான் இருக்கேன். எங்களை நம்பி நாலு பேர் வேலை பார்க்குறாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு!'
- பானைகளை பத்திரமாக அடுக்க ஆரம்பித்தவரிடம் விடைபெற்றோம்!

நன்றி'விகடன்' 


Enlarge this image
[You must be registered and logged in to see this image.]
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14297
Points : 17103
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: உன்னால் முடியும் பெண்ணே!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Nov 27, 2013 3:28 pm

அருமை

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: உன்னால் முடியும் பெண்ணே!

Post by கவிப்புயல் இனியவன் on Wed Nov 27, 2013 5:51 pm

நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14297
Points : 17103
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum