"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» நம்பிக்கையே துக்கத்தால் ஏற்பட்ட கறையைப் போக்கும்
by அ.இராமநாதன் Today at 3:57 pm

» புயல்-மழை எச்சரிக்கை தகவல்: பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் கைகோக்கிறது வானிலை ஆய்வு மையம்'
by அ.இராமநாதன் Today at 9:14 am

» இன்று விடைபெறுகிறது கத்திரி வெயில்
by அ.இராமநாதன் Today at 9:10 am

» அயர்லாந்தில் நடத்தப்பட்டபொது வாக்கெடுப்பில் கருக்கலைப்புக்கு ஆதரவு 66 சதவீதம்
by அ.இராமநாதன் Today at 8:56 am

» இந்தியாவின் முதல் 14 வழி விரைவுச் சாலை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
by அ.இராமநாதன் Today at 8:53 am

» ஆந்திர காங்., பொறுப்பாளராக உம்மன்சாண்டி
by அ.இராமநாதன் Today at 8:49 am

» தூத்துக்குடியில் மீண்டும் இணைய சேவை
by அ.இராமநாதன் Today at 8:47 am

» தென்மேற்கு பருவ மழை படிப்படியாக தீவிரம்
by அ.இராமநாதன் Today at 8:45 am

» மாநில கட்சிகள் தான் கிங் மேக்கர்: சந்திரபாபு சொல்கிறார்
by அ.இராமநாதன் Today at 8:42 am

» சென்னை அணி சாம்பியன்: ஐ.பி.எல்., தொடரில் அசத்தல்
by அ.இராமநாதன் Today at 8:39 am

» வெற்றிப் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:46 pm

» ரசித்ததில் பிடித்தது - (பல்சுவை) தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 11:27 pm

» சிரிப்போ சிரிப்பு...!!
by அ.இராமநாதன் Yesterday at 11:23 pm

» ஒன் மேன் ஷோ
by அ.இராமநாதன் Yesterday at 11:22 pm

» உழைப்பவர்களின் கையில்தான் உலகம் ...
by அ.இராமநாதன் Yesterday at 11:06 pm

» மிலிட்டரி சரக்க ஓசியில வாங்கஃத்தான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:05 pm

» இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைக்கு பாரம்பரிய அந்தஸ்து
by அ.இராமநாதன் Yesterday at 2:55 pm

» பென்குவின் பறவைகள்
by அ.இராமநாதன் Yesterday at 2:50 pm

» உளுந்து வடையைத் தின்னுட்டு ’அதிரசம்’ நல்லா இருக்கு’ன்னு சொல்றாரே...!!
by அ.இராமநாதன் Yesterday at 2:23 pm

» ஒண்ணா சரக்கடிக்க வச்சுட்டார்....!!
by அ.இராமநாதன் Yesterday at 11:51 am

» மாற்றம் என்பது...
by அ.இராமநாதன் Yesterday at 11:35 am

» வீட்டில் கழிவறை இல்லாவிட்டால் சம்பளம் 'கட்'
by அ.இராமநாதன் Yesterday at 8:33 am

» நாங்க இப்படிதானுங்க!: ஜாலியான அலியா!
by அ.இராமநாதன் Yesterday at 8:28 am

» எனது அரசியல் வாரிசு யார்?: மாயாவதி பரபரப்பு பேட்டி
by அ.இராமநாதன் Yesterday at 8:23 am

» 'வவ்வால் மூலம் 'நிபா' பரவவில்லை'
by அ.இராமநாதன் Yesterday at 8:21 am

» பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 8:20 am

» காலக்கூத்து - சினிமா விமரிசனம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:37 pm

» ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:17 pm

» ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன்? எப்படி? சசிகலாவின் வழக்குரைஞர் விளக்கம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:04 pm

» அடடே அப்படியா...
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:51 pm

» மாறுவேடப் போட்டி
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:48 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:46 pm

» வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:38 pm

» பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:34 pm

» போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு Added : மே 26, 2018 14:41
by அ.இராமநாதன் Sat May 26, 2018 4:33 pm

» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Sat May 26, 2018 1:38 pm

» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Sat May 26, 2018 1:30 pm

» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
by அ.இராமநாதன் Sat May 26, 2018 12:10 pm

» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா
by அ.இராமநாதன் Sat May 26, 2018 12:01 pm

» சினிமா -முதல் பார்வை: செம
by அ.இராமநாதன் Sat May 26, 2018 11:58 am

» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 8:01 am

» புறாக்களின் பாலின சமத்துவம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:57 am

» குதிரை பேர வரலாறு
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:56 am

» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:53 am

» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
by அ.இராமநாதன் Sat May 26, 2018 7:51 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



விடாமல் முயலுங்கள். விரும்பியதை அடையுங்கள். -

Go down

விடாமல் முயலுங்கள். விரும்பியதை அடையுங்கள். -

Post by அ.இராமநாதன் on Wed Nov 27, 2013 8:58 pm

அமெரிக்காவில் சிக்காகோவில் கன்சாலஸ் என்றொரு பாதிரியார் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஒருநாள் ஏழை எளிய மக்களுக்காக ஒரு சிறந்த தொழிற்கல்வி நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்ற ஆசை பிறந்தது.
-

நல்லவற்றை போதிக்கும் அந்த கல்வி நிறுவனத்தைத் தொடங்க அவர் எவ்வளவு பணம் தேவை என்று கணக்குப்போட்டுப் பார்த்தார். அவர் விரும்பும் அந்த சிறந்த கல்விக் கூடத்தைத் தொடங்க சுமார் ஒரு மில்லியன் டாலர் தேவைப்பட்டது.

-
அவரிடம் அவ்வளவு பணம் இல்லை. தம்மால் இது முடியாது என்று அவர் விட்டுவிடவில்லை. தினந்தோறும் இதே எண்ண மாகவே இருந்தார். எப்பொழுதும் இதைப்பற்றியே சிந்தித்து வந்தார். இரவு படுக்கைக்கு செல்லும் முன்னர் தன் எண்ணத்தை நினைத்துப் பார்ப்பார். காலையில் கண் விழித்ததும் தனது கனவு கல்விக்கூடத்தை மனதில் காண்பார். இப்படியே சுமார் இரண்டு வருடங்கள் சென்றன.

-
ஒருநாள் தான் விரும்பும் கல்வி நிறு வனத்தை விரைவில் எப்படியாவது நிறுவி விட வேண்டும் என்று முடிவு செய்தார். இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்துப் பார்த்தபோது தேவாலயத்தில் பிரார்த்தனை முடிந்த பின்னர் தனது எண்ணத்தை வந்திருப்போரிடம் சொல்லலாம் என்று முடிவு செய்தார். அதன்படி 1890ம் ஆண்டில் ஒரு நாள் பிரார்த்தனை முடிந்ததும் தான் நிறுவ விரும்பிய கல்விக் கூடத்தைப் பற்றி மிகச்சிறப்பாக விரிவான முறையில் எடுத்துரைத்தார
-

அந்தக்கூட்டத்தில் ஒரு பெரிய பணக்காரர் இருந்தார். அவர் பெயர் ஆர்மர். கன்சாலஸின் பேச்சும் எண்ணமும் அவரை மிகவும் கவர்ந்துவிட்டது. உடனே பாதிரியாரை அணுகி தான் பத்து மில்லியன் டாலர் நன்கொடை தருவதாய்க் கூறினார். மேலும் கன்சாலஸ் தொடர்ந்து ஐந்து வருடங்கள் அந்த கல்வி நிறுவனத்தை தலைமையேற்று நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பின்னர் ஆர்மர் தான் தருவதாய் கூறிய தொகையின் ஒரு பகுதியாக ஒரு மில்லியன் டாலர் பணத்தையும் கொடுத்தார்.
-

கன்சாலஸ் ஒரு மில்லியன் டாலரைக் கொண்டு 1893ல் ஆர்மர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி என்றொரு கல்வி நிறுவனத்தைத் தொடங்கினார். அவரே அக்கல்லூரியின் தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் 1940ஆம் ஆண்டில் ஆர்மர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி என்ற பெயரில் புதிய கல்வி நிறுவனம் செயல்படத் தொடங்கியது. இன்று உலகத்தின் சிறந்த கல்வி நிறுவனங்களில் இதுவும் ஒன்றாக திகழ்கிறது. கன்சாலஸின் விடாமுயற்சி பலித்துவிட்டது.
-
விடாமுயற்சி, வலிமையான எண்ணம் இவை இரண்டையும் மனதில் நிறுத்தி முயற்சி செய்தால் யார் வேண்டுமானாலும் எதையும் சாதிக்க முடியும். வெற்றியும் தோல்வியும் நம் மனதில்தான் இருக்கிறது. உங்களுக்கு வேண்டியது வெற்றியா தோல்வியா என்பதை முதலில் தீர்மானியுங்கள். எல்லோரும் விரும்புவது வெற்றியைத்தானே. விடாமல் முயலுங்கள். விரும்பியதை அடையுங்கள்.

———–
பதி ஆர்.வி

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28099
Points : 61797
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: விடாமல் முயலுங்கள். விரும்பியதை அடையுங்கள். -

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Nov 28, 2013 11:08 am

சிறப்பான பகிர்வு பகிர்வுக்கு நன்றி ஐயா

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum