"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» என்னவனே என் கள்வனே
by கவிப்புயல் இனியவன் Yesterday at 12:53 pm

» இனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது
by கவிப்புயல் இனியவன் Yesterday at 9:05 am

» இருவரி திருவரி கவிதை
by கவிப்புயல் இனியவன் Thu Feb 16, 2017 9:36 pm

» காலதேவன்
by viji Thu Feb 16, 2017 3:23 pm

» நானும் ஒரு துறவி
by viji Thu Feb 16, 2017 3:22 pm

» அவள்!
by viji Thu Feb 16, 2017 3:22 pm

» இலையிதிர் வாழ்க்கை!
by viji Thu Feb 16, 2017 3:20 pm

» அனாதை இல்லம்!
by viji Thu Feb 16, 2017 3:19 pm

» பெயர்கள்!
by viji Thu Feb 16, 2017 3:19 pm

» தடுமாற்றம்!
by viji Thu Feb 16, 2017 3:18 pm

» கனவு!!
by viji Thu Feb 16, 2017 3:17 pm

» பெண்ணே....!
by viji Thu Feb 16, 2017 3:16 pm

» புது விடியல்!
by viji Thu Feb 16, 2017 3:15 pm

» என் தெருவில்!!
by viji Thu Feb 16, 2017 3:14 pm

» கவிதை
by viji Thu Feb 16, 2017 3:13 pm

» நான் அம்மாவானேன்....!
by viji Thu Feb 16, 2017 3:12 pm

» ‘கவண்’ படத்தின் பாடல்கள்..!
by அ.இராமநாதன் Wed Feb 15, 2017 10:31 am

» உனக்கென்ன வேணும் சொல்லு...
by அ.இராமநாதன் Tue Feb 14, 2017 10:44 pm

» கொஞ்சி பேசிட வேணாம்...
by அ.இராமநாதன் Tue Feb 14, 2017 10:42 pm

» என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி
by அ.இராமநாதன் Tue Feb 14, 2017 10:40 pm

» எல்லாமே காதல் காதல்
by கவிப்புயல் இனியவன் Tue Feb 14, 2017 10:33 pm

» அன்புள்ள அம்மாவிற்கு!
by viji Tue Feb 14, 2017 6:06 pm

» என்னருகில் !!
by viji Tue Feb 14, 2017 5:48 pm

» எங்கே நான்?
by viji Tue Feb 14, 2017 5:39 pm

» நான் பார்த்த என் மழலைப்பருவம்
by viji Tue Feb 14, 2017 1:57 pm

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon Feb 13, 2017 10:42 pm

» இனிக்கும் ​இன்பகாதல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Sun Feb 12, 2017 6:51 pm

» கவிப்புயலின் பல இரசனை கவிதை
by கவிப்புயல் இனியவன் Sun Feb 12, 2017 11:58 am

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Fri Feb 10, 2017 12:41 pm

» இரா. இரவியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் ! நூல் மதிப்புரை கவிஞர் கே .ஜி .ராஜேந்திர பாபு !
by eraeravi Wed Feb 08, 2017 6:17 pm

» பெங்களூரு பாவாணர் பாட்டரங்கம் தந்த தலைப்பு ! எது கவிதை ? கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Feb 07, 2017 9:50 pm

» சர்வதேச திரைப்பட விழாவில், ஜோக்கர்!
by அ.இராமநாதன் Mon Feb 06, 2017 4:59 pm

» மீரா ஜாஸ்மின் வேடத்தில் கீர்த்தி சுரேஷ்!
by அ.இராமநாதன் Mon Feb 06, 2017 4:59 pm

» கதை தேடலில் அருந்ததி நாயர்!
by அ.இராமநாதன் Mon Feb 06, 2017 4:58 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Mon Feb 06, 2017 4:58 pm

» நெகடீவ் இமேஜை தவிர்க்கும் சமுத்திரகனி!
by அ.இராமநாதன் Mon Feb 06, 2017 4:57 pm

» காயத்ரி ரகுராம் படத்தில் பாடிய தனுஷ்!
by அ.இராமநாதன் Mon Feb 06, 2017 4:57 pm

» பழிவாங்கும் நயன்தாரா!
by அ.இராமநாதன் Mon Feb 06, 2017 4:56 pm

» களி விருந்து!
by அ.இராமநாதன் Sun Feb 05, 2017 11:37 pm

» வித விதமான கோணத்துல செல்ஃபி எடுத்துட்டு இருந்தேன் சார்...!
by அ.இராமநாதன் Sun Feb 05, 2017 11:31 pm

» மக்கள் பிரச்னைக்காக உள்ளே செல்லவும் தயங்க மாட்டேன்....!
by அ.இராமநாதன் Sun Feb 05, 2017 11:09 pm

» கற்பனைக்கு அப்பாற்பட்ட டைட்டில் ஒண்ணு..
by அ.இராமநாதன் Sun Feb 05, 2017 9:03 pm

» இயற்கை மருத்துவம் :-
by அ.இராமநாதன் Sun Feb 05, 2017 8:29 pm

» அழைத்தும் வரவில்லை வானத்து நிலா
by அ.இராமநாதன் Sun Feb 05, 2017 7:10 pm

» விழிப்புணர்வு கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun Feb 05, 2017 7:08 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சங்க இலக்கிய மாண்பு ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

View previous topic View next topic Go down

சங்க இலக்கிய மாண்பு ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Post by eraeravi on Sun Dec 01, 2013 3:00 pm

சங்க இலக்கிய மாண்பு ! 
நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ 
முனைவர் இரா .மோகன் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
வானதி பதிப்பகம் 23.தீனதயாளு தெரு .தியாகராயர் நகர், சென்னை .600017.விலை ரூபாய் 85. மின்னஞ்சல் vanathipathippagam@gmail.com
நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களின் 101 வது நூல் இது .இந்த நூலிற்கு இன்னும் வெளியீட்டு விழா நடத்த வில்லை . அவரது காதல் மனைவி தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் அவர்களுக்கு முதல் நூல் ,எனக்கு இரண்டாவது நூல் தந்தார்கள் ..எனக்கு குருவாகவும் ,வழிகாட்டியாகவும், நண்பராகவும் இருந்து வருபவர் .என்னை செதுக்கிய சிற்பிகளில் ஒருவர் .101 என்ற எண்ணிற்கு சில சிறப்புகள் உண்டு .தீயை அணைக்க ,நோயாளியின் உயிர் காக்க அழைக்கும் தொலைபேசி எண் 101.திருமண வீட்டில் மொய் பணம் 100 ஆகா எழுதாமல் 101 என்று எழுதுவார்கள் .101 இல் தான் அடுத்த நூற்றாண்டு தொடங்கும் .ஆம் இந்த நூல் 21 நூற்றாண்டிலும் தமிழின் செழுமையைப் பறை சாற்றும் நூல். இலக்கியம் படித்தால் வாழ்நாள் நீடிக்கும் .இந்த நூல் படித்தால் வாழ்நாள் நீடிக்கும் . நோய் நீக்கும் .தமிழ் மொழி மீதான மதிப்பை மேலும் உயர்த்தும் நூல் .நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் எழுத்து பேச்சு என்ற இரட்டை குதிரைகளில் லாவகமாக வெற்றிப் பயணம் புரிபவர் .எலோர்ருக்கும் எழுத்து பேச்சு என்ற இரண்டும் ஒருசேர வாய்ப்பதில்லை . 
சங்க இலக்கியம் இருக்கும் வரை தமிழுக்கு அழிவில்லை என்று நிருபிக்கும் நூல் இது .தமிழ்ச் செய்யுள் புரியாதவர்களுக்கு புரிய வைக்கும் கோனார் தமிழ் உரை .சங்கத் தமிழ்ச் செய்யுள் புரியாதவர்களுக்கு புரிய வைக்கும் பேராசிரியர் மோகன் அவர்களின் சங்க இலக்கிய மாண்பு .தமிழ் அறிஞர் பேராசிரியர் முனைவர் கு .வெ .பாலசுப்பிர மணியன் அவர்களின் அணிந்துரை ஆய்வுரையாக உள்ளது .அவர் முடிவுரையாக எழுதியுள்ள கருத்துக்கள் பதச்சோறாக உங்கள் பார்வைக்கு இதோ !
இந்நூலின் சிறப்புகளாகக் கீழ் வருவன சுட்டதக்கான .
1. பாட்டில் பொருளுணர்ந்த திறனாய்வு .
2. பாட்டின் திணையும் துறையும் பாட்டோடு பொருந்த நோக்கும் சிறப்பு .
3. பழைய உரையாசிரியர்களும் புதிய உரையாசிரியர்களும் கூறும் உரைகளின் நலத்தையும் இணைத்து நோக்கிய நோக்கு .
4. இச் செய்யுட்களைக் குறித்து அறிஞர் பலர் ஆங்காங்குக் கூறியுள்ள அறிய குறிப்புகளை எடுத்துக் காட்டி விளக்கல் .
5. பாத்திரக் கூற்றை அதன் உளவியலோடு ஒருங்கிணைத்து ப் பார்க்கும் பார்வை ஆகியன . 
சங்க இலக்கியத்தைக் கற்பாரும் கற்பிப்பாரும் அருகி வரும் இக்காலத்தில் பேராசிரியர் மோகன் அவ்விலக்கியத்தில் ஆழங்காற் பட்டு ,அதன் உள்ளுறு பொருளெலாம் உணர்ந்து ,தாமுற்ற அக்கல்விப் பேற்றை உலகின் புறத் தந்துள்ளார் .ஆராய்ச்சி உலகின் பார்வைக் கேற்றது இந்நூல .
முதற்பகுதி நற்றிணை நயம் 4 கட்டுரைகள். 
இரண்டாம் பகுதி நல்ல குறுந்தொகை 9 கட்டுரைகள் .
மூன்றாம் பகுதி ஐங்குருநூற்றுச் செவ்வி 1கட்டுரை.
நான்காம் பகுதி கற்றறிந்தார் ஏத்தும் கலி 2 கட்டுரைகள்.
அய்ந்தாம் பகுதி அகநாநூற்று மாண்பு 4 கட்டுரைகள் .
ஆறாம் பகுதி புற நாநூற்றுச் சிறப்பு 9 கட்டுரைகள் .
ஏழாம் பகுதி சங்கச் சான்றோர் தனித் திறன் 6 கட்டுரைகள் .
ஆக மொத்தம் 7 பகுதியாக 35 தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன .
கட்டுரை எப்படி ? எழுத வேண்டும் என்பதை நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களிடம் கற்றுக் கொள்ளலாம் .ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும் முக்கியமானவர்கள் தமிழ் இலக்கியம் தொடர்பாக சொன்ன கருத்துக்களை அவர்களின் பெயரோடு குறிப்பிட்டு கட்டுரை தொடங்குகின்றது .
' நற்றிணை முதற்பாடலின் நயமும் நுட்பமும் ' முதல் கட்டுரையில் தமிழ் அறிஞர் தெ .பொ .மீ .கருத்து . திணை என்ற பெயரோடு நல் என்ற அடையும் சேர வழங்குகிறது இந்நூல் .நல்ல குறுந்தொகை என்று பிற்காலத்தார் பாடினார்கள் .ஆனால் ,தொகுத்த காலத்தே நல் என்ற அடை இந்நூலுக்கு தான் இடப்பட்டது என்பதை நாம் மறத்தலாகாது .
தெ .பொ .மீனாட்சி சுந்தரனார் .
இதில் உள்ள கட்டுரைகளை புதுகைத் தென்றல் இதழில் தனித் தனியாக படித்த போதும் ,மொத்தமாக நூலாகப் படிக்கும் போது இலக்கிய விருந்தாக உள்ளது .பாராட்டுக்கள் .
கட்டுரையின் முடிப்பும் முத்தாய்ப்பாக உள்ளன .பதச் சோறாக ஒன்று மட்டும் .
15 வது கட்டுரை. குறிஞ்சிக் கலி காட்டும் தீராத விளையாட்டுப் பிள்ளை ! முடிப்பு பாருங்கள் . 
தலைவனின் இளமைக் குறும்பு ,தாயின் பாச உணர்வு ,தாயின் சாதுரியம் ஆகிய மூன்றையும் ஒரு முப்பரிமாண ஓவியம் போல திறம்படப் படம் பிடித்துக் காட்டுவதில் முழு வெற்றி பெற்றுள்ளது இக் கலித் தொகைப் பாடல் எனலாம் . தேவையான இடங்களில் உலகப் பொது மறையான திருக்குறளையும் நூலில் பயன்படுத்தி உள்ளார்கள்.
பலாச்சுளை பார்க்க வெளியில் கரடு முரடாகவும் உள்ள இனிப்பாகவும் இருக்கும் .அது போல படிக்க கடினமாக உள்ள சங்க இலக்கியத்தை நூல் ஆசிரியர் முனைவர் இரா .மோகன் அவர்களே உரித்து இனிக்கும் பலாச்சுளை வாங்கி உள்ளார்கள் .மகாகவி பாரதியின் கவிதை வரிகளுக்கு செயல் வடிவம் தந்து உள்ளார்கள் தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவ வழி வகுத்து உள்ளார்கள் . சங்க காலத்தில் தமிழர்கள் தமிழ் மன்னர்கள் வாழ்வாங்கு வாழ்ந்ததை உணர்த்தும் நூல் இது .
வாசிக்கும் பழக்கம் குறைந்து ,பார்க்கும் பழக்கம் வளர்த்து விட்ட இயந்திரமயமான உலகில் நீண்ட நெடிய கட்டுரைகள் வாசிக்க நேரமும் பொறுமையும் பலருக்கு கிடைப்பதில்லை .அனால் இந்த நூலில் சின்னச் சின்ன கட்டுரைகளாக இருப்பதால் வாசிக்க மிகவும் சுவையாக உள்ளன. 
மு .வ . வின் செல்லப்பிள்ளை முனைவர் இரா .மோகன் அவர்கள் இலக்கிய இமயம் மு .வ . வின் வழியிலேயே திட்டமிட்டு எழுத்துப் பணியை தேனீயை போல செய்து வருவதால் வெற்றி பெறுகிறார்கள் . 
கட்டுரைகள் எடுப்பு தொடுப்பு முடிப்பு அனைத்தும் முத்தாய்ப்பு .படிக்க தித்திப்பு .நூல் ஆசிரியர் சங்கஇலக்கிய பாடல் வரிகளை நல்ல ஓவியம் போல தீட்டி வாசகர் மனக் கண்ணில் காட்சிப் படுத்தி வெற்றி பெறுகின்றார் .சங்க இலக்கியத்தை சாமானியருக்கும் விளங்கும் வண்ணம் எளிமையாவும் இனிமையாகவும் வடித்துள்ளார்கள் .
நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களின் நூல்களை தொடர்ந்து தரமாகவும் ,மிக நேர்த்தியாகவும் அச்சிட்டு குறைந்த விலையில் பதிப்பித்து வரும் பதிப்புத் திலகம் வானதி இராமநாதன் அவர்களுக்கும் பாராட்டுக்கள் .பதிப்புச் செம்மல் மணிவாசகம் மெய்யப்பனர் வழியில் பயணித்து தமிழ்த் தொண்டு செய்து வருகிறார்கள் .பாராட்டுக்கள் .

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2057
Points : 4607
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum