"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அன்று சொன்னவை இன்று நடக்கிறது
by கவிப்புயல் இனியவன் Today at 1:56 pm

» எதை விட்டுக் கொடுப்பது? – தென்கச்சி கோ. சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Today at 11:38 am

» நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
by அ.இராமநாதன் Today at 11:29 am

» ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
by அ.இராமநாதன் Today at 11:27 am

» லூயி பாஸ்டர்
by அ.இராமநாதன் Today at 11:25 am

» அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்
by அ.இராமநாதன் Today at 11:22 am

» புற்று நோயால் பாதித்த 5 வயது சிறுமியின் திருமண ஆசையை நிறைவேற்றிய பெற்றோர்
by அ.இராமநாதன் Today at 11:20 am

» பெண்களுக்காக பொது கூட்டம் நடத்தப் போறாராம்...!!
by அ.இராமநாதன் Today at 10:55 am

» மனைவிக்கும் டாக்டர் பட்டம் வேண்டுமாம்…!!
by அ.இராமநாதன் Today at 10:46 am

» பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 8:29 pm

» நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
by அ.இராமநாதன் Yesterday at 8:28 pm

» ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
by அ.இராமநாதன் Yesterday at 8:27 pm

» ‘உள்ளுவதெல்லாம்’ நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Jun 22, 2017 9:55 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Thu Jun 22, 2017 9:50 pm

» வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் யாழ் சு. சந்திரா, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி !
by eraeravi Thu Jun 22, 2017 9:06 pm

» இரா. இரவியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் யாழ் சு. சந்திரா, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி !
by eraeravi Thu Jun 22, 2017 9:06 pm

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:50 pm

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:47 pm

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:46 pm

» கடன் பாட்டு…!!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:43 pm

» பிசுக்கு – பொசுக்கு (வீட்டுக்குறிப்புகள்)
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:33 pm

» நீட் எக்ஸாம்…
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:32 pm

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:31 pm

» நம்பிக்கை – குட்டி கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:31 pm

» பழமொழிகள்…
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:29 pm

» நண்பரால் நன்மை பலவுண்டு – கவிதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:21 pm

» சீற்றம் – கவிதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:20 pm

» படிக்கணும் நாமும் படிக்கணும்
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:20 pm

» அன்பு போர்வை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:19 pm

» சாதனைக்கு மட்டும் அல்ல
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:19 pm

» வாசகர் கவிதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:17 pm

» எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:51 pm

» நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:50 pm

» புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:50 pm

» டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:49 pm

» ரேஷன் கார்டு கதைகள்…!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:49 pm

» ஓங்கி அடிச்சா…!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:48 pm

» ஆறு வித்தியாசம்…
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:48 pm

» சிரிக்கலாம்வாங்க..
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:47 pm

» உன் லவ்வர் கிரிக்கெட் பிளேயரா…?
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:46 pm

» உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:46 pm

» நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:46 pm

» இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:45 pm

» தங்கரதம் ! திரைப்பட விமர்சனம்; கவிஞர் இரா .இரவி ! இயக்கம்; பாலமுருகன் ! நடிப்பு ;வெற்றி !
by eraeravi Tue Jun 20, 2017 8:07 pm

» தத்துவம் மச்சி தத்துவம்
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 2:40 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines மைக்ரோ கதைகள்

View previous topic View next topic Go down

மைக்ரோ கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Dec 04, 2013 10:04 am

ஒரு பணக்காரரும் ஏழையும் சந்தித்துக் கொண்டார்கள்.​ பணக்காரரிடம் நூறு தங்கக் காசுகள் இருந்தன.​ ""நான் இதில் உனக்கு இருபது காசுகள் கொடுத்தால் நீ என்னைப் புகழ்வாயா?'' என்று கேட்டார் பணக்காரர்.

""அது எப்படி?​ எனக்கு நூற்றில் இருபதுதானே கொடுக்கிறீர்கள்?​ சமமாகப் பகிர்ந்து ​ கொள்ளவில்லையே?'' என்றான் ஏழை.

""சரி!​ ஆளுக்கு ஐம்பது என்று வைத்துக் கொள்ளுவோம்.''

""சமநிலையில் உள்ளவர்கள் ஒருவரை ஒருவர் புகழுவதில்லை!''

""அப்படியானால் நூறு காசுகளையும் உமக்கே கொடுத்து விட்டால்?''

""அப்புறம் நான் உங்களைப் புகழ வேண்டிய அவசியமே இல்லை'' என்றான் ஏழை.

- அ.அப்துல்காதர்

நன்றி தினமணி!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14284
Points : 17088
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: மைக்ரோ கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Dec 04, 2013 10:06 am

கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்துகொண்டிருந்தது.

""குற்றம் சாட்டப்பட்டவர் உங்களிடம் என்ன சொன்னார்'' என்று வாதியைப் பார்த்துக் கேட்டார் வக்கீல்.

""ஐயையோ!​ நான் அதைச் சொல்லமாட்டேன்.​ நல்ல மனிதர்களிடம் சொல்லக்கூடிய வார்த்தைகள் அல்ல அவை'' என்றான் வாதி.

வக்கீல் சொன்னார்:

""அப்படியானால் அதை நீதிபதியிடம் மட்டும் ரகசியமாகச் சொல்லுங்கள்.''

- எஸ்.சுவாமிநாதன்

நன்றி தினமணி!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14284
Points : 17088
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: மைக்ரோ கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Dec 04, 2013 10:07 am

சமையலறையிலிருந்த ஃபிரிட்ஜிலிருந்து ஐஸ்-க்ரீமை எடுப்பதற்கு முயன்று கொண்டிருந்த தன் மகனை கண்டித்தாள் அவனுடைய அம்மா.

"இன்னும் கொஞ்ச நேரத்தில டின்னர் ரெடியாகிடும் கண்ணா,​​ ஐஸ் க்ரீமை எடுக்காதே,​​ வெளியே போய் விளையாடு..'' என்றாள்.

"யாரோடம்மா நான் விளையாடறது..?'' என்றான் மகன்.

"சரி,​​ நான் விளையாட வர்றேன்...'' என்றாள்.

சிறிது நேரத்தில் அவளின் மகன் தலையில் அவனுடைய அப்பாவைப் போன்றே தொப்பியை அணிந்துகொண்டு சமையலறையில் நுழைந்தபடி,​​ அவன் அம்மாவைப் பார்த்து,​​ "ஏய் பெண்ணே...​ பையனுக்கு உடனே எழுந்து போய் ஐஸ்-க்ரீம் கொடு...'' என்றான்.

- அபி ​ ​

நன்றி தினமணி!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14284
Points : 17088
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: மைக்ரோ கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Dec 04, 2013 10:09 am

ஆஸ்திரேலியா நாட்டு பஞ்சவர்ணக் கிளியொன்றை வளர்த்தவன் திடீரென கம்பெனி வேலையாக ஆஸ்திரேலியா கிளம்பினான்.​ தான் வளர்த்துக் கொண்டிருந்த கிளியைப் பார்த்து,​​ "உன்னுடைய சொந்த நாட்டுக்குப் போறேன்.​ உன் ஜோடிக் கிளிக்கு ஏதாவது தகவல் சொல்லணுமா?'' என்றான்.

"நான் அழகான கூண்டில் அடைப்பட்டிருப்பதாகச் சொன்னால் போதும்..''என்றது கிளி.

ஆஸ்திரேலியா சென்றவன் வேலை முடிந்ததும் காட்டில் தேடி அலைந்து ஜோடிக் கிளியை கண்டுபிடித்து,​​ சேதியைச் சொன்னான்.​ அதைக் கேட்டதும் ஜோடிக்கிளி மயங்கி கீழே விழுந்தது.

திடுக்கிட்டவன் திரும்ப ஊருக்கு வந்து நடந்ததைச் சொன்னான்.​ அதைக் கேட்டு கூண்டுக் கிளியும் மயங்கி கீழே விழுந்தது.​ அவன் வருத்தத்துடன் கிளியை வெளியே வீசி எறிந்தான்.

சட்டெனக் கிளி எழுந்து பறந்தபடி சொன்னது,​​ "என் ஜோடி கிளியும் சாகவில்லை.​ நான் தப்பிக்க உன் மூலமாக வழிமுறையைச் சொல்லி அனுப்பியது.​ அவ்வளவுதான் நண்பா,​​ வரட்டுமா!'' என்று கூறிச் சென்றது.


- அ. யாழினி பர்வதம்

நன்றி தினமணி!  
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14284
Points : 17088
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: மைக்ரோ கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Dec 04, 2013 10:12 am

ஒரு சிறுவன் ஆசை ஆசையாக மைனா ஒன்று வளர்த்தான். உண்பதும் அதனோடுதான், உறங்குவதும் அதனோடுதான். படிக்கும்போதும் அதனோடுதான், விளையாடும்போதும் அதனோடுதான். அத்தனை ஆசையாக அன்பாக அதனோடு இருந்தான். பள்ளிக்குச் செல்லும்போது மட்டும் மைனா வீட்டில் இருக்கும் போலும்.

ஒருநாள் அவன் பள்ளி சென்றிருக்கும்பொழுது மைனா இறந்து விட்டது. அச்சிறுவனின் அம்மாவிற்கோ ஒரே கவலை, இந்த அதிர்ச்சியை மகன் எப்படித் தாங்கிக் கொள்ளப்போகிறான் என்று. மாலையில் பள்ளிவிட்டு வந்தவுடனேயே வாசலில் நிற்கவைத்து, "கண்ணா, உன் மைனா செத்துப் போயிடுச்சுடா" என்று சொன்னாள். சிறுவனும், "சரிம்மா நான் போய் விளையாடிட்டு வரேன்" என்று கிளம்பிவிட்டான். தாய்க்கோ ஒரே ஆச்சர்யம் மற்றும் சந்தோஷம். மகன் இதனை இவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்வான் என்று நினைக்கவேயில்லை.

விளையாடிவிட்டு வந்த சிறுவன் அம்மாவிடம் கேட்டான், "அம்மா, என் மைனா எங்கேம்மா?"

அம்மா, "என்னடா கண்ணா, சாயங்காலமே சொன்னேனே, மைனா செத்துப்போச்சுன்னு...?"

மகன், "அய்யோ அது நைனா-ன்னு நெனச்சேன்மா...." என்று ஒரே அழுகை.

(நைனா என்பது தமிழகத்தில் ஒரு வகுப்பினர் தந்தையை அழைக்கும் முறை) 

நன்றி; பாபு
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14284
Points : 17088
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: மைக்ரோ கதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Dec 04, 2013 1:59 pm

அருமை

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: மைக்ரோ கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Dec 04, 2013 6:47 pm

I love you நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14284
Points : 17088
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: மைக்ரோ கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Dec 07, 2013 2:19 pm

கோயில் கருவறையில் உள்ள கடவுளுக்கு அர்ச்சகர் ரோஜா மாலையைக் கழுத்தில் சார்த்தி தாமரை மலரைத் தலையிலும் வைத்து பூசை செய்தார். ரோஜாவுக்கும் தாமரைக்கும் கர்வம் ஏற்பட்டது. ரோஜாவைப் பார்த்து தாமரை சொன்னது.

""சேற்றில் முளைத்தாலும் இறைவன் தலை மீது அமர்ந்திருக்கிறேனே, நான்தான் பெரியவன்!'' என்றது.

பதிலுக்கு ரோஜா சொன்னது, ""முள்ளில் மலர்ந்தாலும் ஆண்டவன் கழுத்தில் மாலையாகத் தொங்குகிறேன். நான்தான் பெரியவன்!'' என்றது.

மறுநாள் பூசை செய்ய வந்த அர்ச்சகர் எல்லா பூக்களையும் எடுத்து குப்பையில் போட்டார். "வீண் பெருமையால் பயனில்லை' என்பதை மலர்கள் புரிந்து கொண்டன.


நன்றி தினமணி! 
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14284
Points : 17088
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: மைக்ரோ கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Dec 07, 2013 2:22 pm

டெலிபோன் பூத்திற்கு வந்த சிறுவன் ஒருவன் யாரோ ஒருவருக்குப் போன் செய்து, ""மேடம் உங்கள் வீட்டுத் தோட்டத்தில் புல் வெட்டும் வேலை எனக்குக் கிடைக்குமா?'' என்றான்.

""ஏற்கனவே ஒருவன் வேலையில் இருக்கிறான்'' என்று பதில் வந்தது.

""அவனுக்குத் தருவதில் எனக்குப் பாதி ஊதியம் தந்தால் போதும்'' என்றான் சிறுவன். ""நான் தரும் ஊதியத்திற்கு அவன் சரி வர உழைக்கிறான். எனவே புதிய ஆள் தேவையில்லை.''

சிறுவனும் விடாமல் பல கேள்விகளைக் கேட்க, அதற்கு எதிர்மறையான பதில்களே கிடைத்தன. சிறுவன் போனைக் கீழே வைத்தான்.

சிறுவன் பேசியதைக் கவனித்துக் கொண்டிருந்த பூத்தின் சொந்தக்காரர், ""தம்பி, உன் உழைக்கும்  ஆர்வத்தைத் தெரிந்து கொண்டேன். உனக்கு நான் ஏதாவது வேலை தரட்டுமா?'' என்று கேட்டார்.

அதற்கு அவன், ""நான் இப்போது வேலை செய்து கொண்டிருக்கும் எஜமானியம்மாளிடம்தான் பேசினேன். என் வேலையைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளவே அப்படிப் பேசினேன்'' என்றான்.


நன்றி: தினமணி 
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14284
Points : 17088
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: மைக்ரோ கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Dec 07, 2013 2:24 pm

பள்ளிக்கு இரு மாணவர்கள் தாமதமாக வந்தனர். ""ஏன் இவ்வளவு தாமதம்?'' என்று ஆசிரியைக் கேட்டார்.

""கஷ்டப்படறவங்களுக்கு உதவணும்னு நேற்று நீங்க சொன்னீங்களே டீச்சர்... அதுக்கு ஒரு உதாரணம் கூடச் சொன்னீங்க... அதேமாதிரி ஒரு வயசான பாட்டி சாலையைக் கடக்கறதுக்கு உதவுனோம்..''

""நல்ல விஷயம்தான் செஞ்சிருக்கீங்க... ஆனா அதுக்கு ஏன் இவ்வளவு லேட் டு?''

""நீங்க வேற டீச்சர், நாங்க எவ்வளவு சொன்னாலும் அந்தப் பாட்டி, ரோட்டை தாண்டறதுக்கே சம்மதிக்கல. நாங்கதான் எங்க டீச்சரே சொல்லியிருக்காங்கன்னு வலுக்கட்டாயமா கிராஸ் பண்ண வெச்சோம்...!''

எஸ்.ஆறுமுகம், கழுகுமலை.
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14284
Points : 17088
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: மைக்ரோ கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Dec 07, 2013 2:26 pm

வழக்கறிஞர் ஒருவரின் வீட்டுக்குப் பக்கத்தில் ஓட்டல் இருந்தது. வழக்கறிஞரின் செல்லப் பிராணியான நாய், ஓட்டலிலிருந்து வறுத்த கறியைக் கவ்விச் சாப்பிட்டுவிட்டது. மறுநாள் ஓட்டல் முதலாளி, வழக்கறிஞரிடம், ""ஒருவரின் செல்லப் பிராணிகள் மற்றவர்களுக்கு அளிக்கும் நஷ்டத்திற்கு அதன் வளர்ப்பாளர்தானே பொறுப்பு வகிக்கவேண்டும். நஷ்ட ஈடு தரவேண்டும்? உங்களிடம் ஆலோசனை கேட்கவே வந்தேன்..'' என்றார்.

வழக்கறிஞரும் அதை ஆமோதிக்கவே, ""உங்களின் வீட்டு நாய் என் ஹோட்டலில் நேற்று வறுத்த கறியைத் தின்றுவிட்டது. அதற்கான 50 டாலர் தொகையை நீங்கள் தரவேண்டும்'' என்றார். வழக்கறிஞரும் மறுபேச்சு பேசாமல் 50 டாலர் பணத்தைக் கொடுத்தார். ஓட்டல் முதலாளி சந்தோஷத்துடன் பணத்தைப் பெற்றுக்கொண்டார்.

மறுநாள் ஓட்டல் முதலாளிக்கு வழக்கறிஞரிடமிருந்து ""நீங்கள் என்னிடம் கேட்ட ஆலோசனைக்கான சேவைக் கட்டணம் 100 டாலரைக் கொடுக்கவும்..'' என்று ஒரு நோட்டீஸ் வந்தது.
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14284
Points : 17088
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: மைக்ரோ கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Dec 14, 2013 12:57 pm

கணவனை மனோதத்துவ டாக்டரிடம் அழைத்து வந்த மனைவி, ""டாக்டர் என் ஹஸ்பென்ட் அடிக்கடி நாற்காலியில் உட்கார்ந்து தன் காலை உடைத்துக் கொள்கிறார். எப்படியாவது நீங்கள்தான் சரி செய்ய வேண்டும்'' என்றாள்.

""நாற்காலியில் அமரும்போது காலை உடைத்துக் கொள்கிறாரென்றால், நாற்காலியில்தான் கோளாறாக இருக்கும். ஒரு தச்சரிடம் காட்டி சரி பண்ணிக் கொள்ளுங்கள்'' என்றார் டாக்டர்.
""நாற்காலி கோளாறாக இருக்க வாய்ப்பில்லை டாக்டர்?''

""எப்படி இவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள்?''
""எங்கள் வீட்டில் நாற்காலியே இல்லை டாக்டர். ஆனால் அவர் நாற்காலி இருப்பதாக நினைத்துக்கொண்டு உட்காருகிறார். காலை உடைத்துக் கொள்கிறார்'' என்றாள்.

 தினமணி
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14284
Points : 17088
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: மைக்ரோ கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Dec 14, 2013 12:59 pm

வாயில்லாப் பிராணிகள் சங்கத்தின் தலைவராக இருக்கும்படி கேட்பதற்காக கிரேஸி வீட்டிற்கு ஸ்டீபனும் அவன் நண்பன் ஜானும் சென்றிருந்தார்கள். இருவரும் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பே வெளியில் கிரேஸியின் சத்தம் கேட்டது.

""சொல்ற வேலை எதையும் ஒழுங்கா செய்கிறதே இல்லை. எதுக்கு வேஸ்டா இருக்கே? தொலைச்சுடுவேன் தொலைச்சு'' என்று கணவனைக் கண்டபடி திட்டிக் கொண்டிருந்தாள்.
""இப்போது நேரம் சரியில்லை. அப்புறமாய் வரலாம்'' என்று ஜான் திரும்பினான்.

""வரலாம். ஆனால் தலைவரா கிரேஸி கணவனைப் போட்டுவிடலாம்'' என்றான் ஸ்டீபன்.


தினமணி
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14284
Points : 17088
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: மைக்ரோ கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Dec 14, 2013 1:01 pm

நீயா?​ நானா?​ மீனா?​​

இரண்டு மேதைகள் ஆற்றோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.

முதலாமவர்,​​ "" ஆற்றில் மீன்கள் எவ்வளவு ஆனந்தமாக நீந்துகின்றன?'' என்றார்.

உடனே அடுத்தவர் குறுக்கிட்டு,""அது எப்படி உங்களுக்குத் தெரியும்?​ நீங்கள் என்ன மீனா...​ மீனுக்கு ஆனந்தம் இருப்பதைச் சொல்ல?'' என்றார் கிண்டலாக.

அதற்கு முதலாமவர்,​​ "" நீங்கள் என்ன நானா?​ எனக்கு எது தெரியும்?​ எது தெரியாது?​ என்று சொல்ல'' என்று திருப்பிக் கேட்டார்.
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14284
Points : 17088
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum