"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தங்கையை சினிமாவில் இறக்கி விடும் சாய் பல்லவி!
by அ.இராமநாதன் Today at 5:30 pm

» நடிகை கேத்ரின் தெரசா.
by அ.இராமநாதன் Today at 5:13 pm

» சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
by அ.இராமநாதன் Today at 5:11 pm

» கதாநாயகியானார் எஸ்தர்!
by அ.இராமநாதன் Today at 5:07 pm

» சினேகாவின் ரீ – என்ட்ரி!
by அ.இராமநாதன் Today at 5:06 pm

» மன்மோகன்சிங் வாழ்க்கை திரைப்படமாகிறது!
by அ.இராமநாதன் Today at 5:05 pm

» “கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்காது” நடிகை திரிஷா சொல்கிறார்
by அ.இராமநாதன் Today at 1:37 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Today at 9:50 am

» சர்ச்சையில் சிக்க விரும்பாத சிவகார்த்திகேயன்!
by அ.இராமநாதன் Today at 9:49 am

» ஷீரடி பாபா - ஆன்மிக சிந்தனை
by அ.இராமநாதன் Today at 8:53 am

» பொண்டாட்டியே உதைப்பா…!
by அ.இராமநாதன் Yesterday at 10:01 pm

» என்ன..! இது கவர்ச்சிப் பிரியாணியா?
by அ.இராமநாதன் Yesterday at 10:00 pm

» தலைவர் சின்னப்பசங்க கூட கோலி விளையாடறாரே?
by அ.இராமநாதன் Yesterday at 10:00 pm

» வழக்கம் போல் பீர் பாட்டிலை தான் தொறக்கிறீங்க!
by அ.இராமநாதன் Yesterday at 9:59 pm

» தலைவா ஐ டி ஆபிசர்ஸ் வந்திருக்காங்க!
by அ.இராமநாதன் Yesterday at 9:59 pm

» ஆந்தை லேகியம் கொடுத்து விட்டாராம்!
by அ.இராமநாதன் Yesterday at 9:58 pm

» அட்சதை கூட கல்லு வந்து மண்டையில விழுதே?
by அ.இராமநாதன் Yesterday at 9:58 pm

» ஓங்கி அடிச்சா…!
by அ.இராமநாதன் Yesterday at 9:21 pm

» அன்று சொன்னவை இன்று நடக்கிறது
by கவிப்புயல் இனியவன் Yesterday at 1:56 pm

» எதை விட்டுக் கொடுப்பது? – தென்கச்சி கோ. சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Yesterday at 11:38 am

» நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
by அ.இராமநாதன் Yesterday at 11:29 am

» ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
by அ.இராமநாதன் Yesterday at 11:27 am

» லூயி பாஸ்டர்
by அ.இராமநாதன் Yesterday at 11:25 am

» அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:22 am

» புற்று நோயால் பாதித்த 5 வயது சிறுமியின் திருமண ஆசையை நிறைவேற்றிய பெற்றோர்
by அ.இராமநாதன் Yesterday at 11:20 am

» பெண்களுக்காக பொது கூட்டம் நடத்தப் போறாராம்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:55 am

» மனைவிக்கும் டாக்டர் பட்டம் வேண்டுமாம்…!!
by அ.இராமநாதன் Yesterday at 10:46 am

» பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
by அ.இராமநாதன் Fri Jun 23, 2017 8:29 pm

» நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
by அ.இராமநாதன் Fri Jun 23, 2017 8:28 pm

» ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
by அ.இராமநாதன் Fri Jun 23, 2017 8:27 pm

» ‘உள்ளுவதெல்லாம்’ நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Jun 22, 2017 9:55 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Thu Jun 22, 2017 9:50 pm

» வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் யாழ் சு. சந்திரா, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி !
by eraeravi Thu Jun 22, 2017 9:06 pm

» இரா. இரவியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் யாழ் சு. சந்திரா, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி !
by eraeravi Thu Jun 22, 2017 9:06 pm

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:50 pm

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:47 pm

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:46 pm

» கடன் பாட்டு…!!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:43 pm

» பிசுக்கு – பொசுக்கு (வீட்டுக்குறிப்புகள்)
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:33 pm

» நீட் எக்ஸாம்…
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:32 pm

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:31 pm

» நம்பிக்கை – குட்டி கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:31 pm

» பழமொழிகள்…
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:29 pm

» நண்பரால் நன்மை பலவுண்டு – கவிதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:21 pm

» சீற்றம் – கவிதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:20 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வைகை காற்று ! நூல் ஆசிரியர் கவிஞர் தமிழினியன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

View previous topic View next topic Go down

வைகை காற்று ! நூல் ஆசிரியர் கவிஞர் தமிழினியன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi on Tue Dec 31, 2013 10:17 pm

வைகை காற்று !

நூல் ஆசிரியர் கவிஞர் தமிழினியன் ! cholaitamileniyan1975@gmail.com


அலைபேசி 9840527782.

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !



சோலை பதிப்பகம் 6.பழனியாண்டவர்  கோவில் தெரு, பெரம்பூர்,சென்னை .600011 விலை ரூபாய் 30.
 
நூல் ஆசிரியர் கவிஞர் தமிழினியன் அவர்கள் இலக்கியச் சோலை மாத இதழ் ஆசிரியர் ,பல்வேறு தொகுப்பு நூல்களை திட்டமிட்டபடி குறிப்பிட்ட நாளில் வெளியிட்டு வருபவர் .தொகுப்பு நூலில் பங்குப் பெற்ற கவிஞர்கள் அனைவருக்கும் நூலும் , பாராட்டு சான்றிதழும் வழங்கி வருபவர் .நானும் பல நூலில் பங்கு பெற்றுள்ளேன். முதலில் இவர் கவிஞர் பிறகுதான் எழுத்தாளர் , பதிப்பாளர் , தொகுப்பு ஆசிரியர்,  நூல் வடிவமைப்பாளர் ,வெளியீட்டாளர்,தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர்  என்று பல முகங்கள் உண்டு .ஆற்றல் மிக்கவர். சென்னையில் இவரை  அறியாத இலக்கிய வட்டம் இல்லை என்று சொல்லும் அளவிற்கு  பிரபலமானவர் .அன்பானவர் .கவிப்பேரரசு என்ற பட்டதை வைரமுத்து அவர்களுக்கு வழங்குவதற்கு  பல வருடங்களுக்கு முன்பே பெற்றிட்ட அருமை நாதன் என்ற வேடந்தாங்கலில் வளர்ந்த கவிப்பறவை கவிஞர் தமிழினியன்.அருமையாரின் அருமையான வாழ்த்துரையும் நூலில் உள்ளது .என்னுய முதல் நூலை வெளியிட்டவரும் கவிப்பேரரசு அருமையார்தான் .

இந்த நூலில் மரபுக்கவிதை புதுக்கவிதை ,ஹைக்கூ  கவிதை என மூன்று கவிதைகளும்  உள்ளன .பல்சுவை கவி விருந்தாக நூல் உள்ளது .பாராட்டுக்கள் .இந்த நூலை காணிக்கை ஆக்கி விதத்தில்நூல் ஆசிரியர் கவிஞர் தமிழினியன்  வித்தியாசப் படுகிறார் .பெற்றோர் பாசத்தை வெளிப்படுத்தி உள்ளார் .

" இந்நூல் என்னைப் பெற்றெடுத்து வ்றுமையிலும் படிக்க வைத்து என் உயர்வுக்கு வழிகாட்டிய அப்பா அம்மாவிற்கு ... 

முதல் கவிதையிலேயே முத்திரை பதித்து உள்ளார் .

அம்மா !

அன்புத்தாயே !
மனிதப்பிறப்பில்
மறுபிறவி உண்டா ?
இருந்தால் 
அப்போதும் 
என்னையே பெற்றிடு !   

தமிழ் மொழியியன் சிறப்பை மேன்மையை உணர்த்தும் விதமாக உள்ள கவிதை மிக நன்று .தமிழ் மொழி பற்றி வித்தியாசமாக சிந்தித்து எழுதி உள்ளார் .

வல்லினத்தில் வசந்தம் உண்டு !
மெல்லினத்தில் மென்மை  உண்டு !
இடையினத்தில் இனிமை உண்டு !
தமிழினத்தில்தான் தாயுள்ளம் உண்டு !

மகாகவி பாரதியார் பற்றி , புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பற்றி ,தமிழ்த் தென்றல் திரு.வி .க .பற்றி, பாட்டுக் கோட்டை பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம்  பற்றி அன்னை தெரசா பற்றி , இப்படி பல்வேறு ஆளுமைகள் பற்றி அருமையாக கவிதைகள் வடித்துள்ளார். அருமையார் சீடர் கவிஞர் தமிழினியன்.

சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் , உருவத்தில் சிறிதாய் உணர்வில் பெரிதாய் உள்ள, இன்று பலரால் மிகவும் விரும்பப்படும் ஹைக்கூ கவிதைகள் நன்றாக உள்ளன .

எதற்கு சுயநலம் 
நாமென்ன மனிதர்களா ?
காக்கைகள் !

காகம் உணவைக் கண்டதும் உறவுகளை அழைத்து உண்ணும். ஆனால் மனிதனோ தானாக உண்ணும்  சுயநலவாதியாகி விட்டான் என்பதை காகங்கள் சொல்வதுபோல சொல்லிய ஹைக்கூ நன்று . 

வறுமைக்கு உரத்த குரல் 
குளு குளு அறையில் தஞ்சம் 
நடிகன் !

கோடிகளை ஊதியமாகப் பெறும், தொழிலாளர்களின் தோழன் , ஏழைப் பங்காளன் , கோடம்பாக்கத்து  வாய்ச் சொல் வீரன் நடிகன்  பற்றி   ஹைக்கூ நன்று .

மூட நம்பிக்கையில் ஒன்றாகி விட்ட தேர்தல் பற்றி,அரசியல்வாதிகளின் பித்தலாட்டம் பற்றி உணர்த்தும்  ஹைக்கூ  நன்று .   


கையில் மை 
காதில் பூ 
தேர்தல் !
 
காதலைப் பாடாத கவிஞர் இல்லை .காதலைப் பாடாதவர்  கவிஞரே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பெரும்பாலான கவிஞர்கள் காதலைப் பாடி உள்ளனர் .இவரும் காதலைப் பாடி  உள்ளார் .

நீ எனக்கு ..
பூமியில் 
நடத்து வரும் நிலவே !
செவ்வாய் கிரகத்தின்  வரவே  !
செந்தமிழ் நாட்டின் உறவே !

காதலைப்  பரிந்துரை செய்து எழுதியுள்ள கவிதை நன்று .

காதலிக்கக் கற்றுக் கொள் !

காதலிக்கக் கற்றுக் கொள் !
பூக்களைப் போல விழிப்பாய் !
பூமியில் பறப்பாய் !
புத்தம் புதிதாய் சிரிப்பாய் !
புன்னகையில் பூரிப்பாய் ! 

காதலித்த அனைவரும்  உணரும்  அற்புத உணர்வை கவிதையில் வடித்து ,சொற்களால் சொக்க வைத்து படிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் அவரவர் காதல் நினைவுகளை மலர்வித்து உள்ளார். காதலுக்கு உரம் சேர்த்துள்ளார் .

மரம் வெட்டுவது குற்றம் என்று சொன்னாலும் பலரும் அது பற்றி பொருட்படுத்தாமல் மரங்களை வெட்டி வீழ்த்தி மழையை  பொய்க்க காரணமாகி வருகின்றனர்.மரத்தின் மாண்பை விளக்கும் மரநேயம்
மிக்க கவிதை நன்று .

உலகின் 8 வது அதிசயம் !

செழிப்பை வெட்டுகிறாய் !
ஆரோக்கியத்தை வெட்டுகிறாய் !
மரம் என்ன செய்தது  உன்னை !
என்ன கேட்டது உன்னிடம் !
ஓட்டுக் கேட்டதா ?  
சீட்டுக் கேட்டதா ?  
உடை கேட்டதா ?  
காசு கேட்டதா ?  
என்ன செய்தது  உன்னை !

தலைக்கவசம் அணிய வேண்டியது அவசியம் என்பதை நன்கு உணர்த்தி உள்ளார் .அனைவரும் அணிவது நலம் .நீண்ட தூரம் பயணிப்பவர்கள் தலைக்கவசம் அணிவது அவசர  அவசியம் .

உயிரின் குடை !
தலைக்கனம் 
ஆளைக் கவிழ்க்கும் !
தலைக்கவசம்
ஆயுளைக் காக்கும் !

தமிழன் நிலையை  ,தமிழரின் நிலையை  கவிதையில் படம் பிடித்துக்காட்டி விழிப்புணர்வை விதைத்து உள்ளார் .புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடலை நினைவூட்டும் விதமான கவிதை இதோ !

பள்ளியிலே தமிழில்லை !
பணியினிலே தமிழில்லை !
பாட்டினிலே தமிழில்லை !
பிள்ளைப் பேரினிலே  தமிழில்லை !
வீட்டினிலே  தமிழில்லை !
நாட்டினிலே தமிழில்லை !
திருமண அழைப்பினிலே தமிழில்லை !
தொலைக்காட்சினிலே தமிழில்லை !  

நூலின்  இறுதியில் உள்ள அப்பாவிற்கான இரங்கல் கவிதை சிறப்பாக உள்ளது .மொத்தத்தில் கவிதை விருந்து .நோய் தீர்க்கும் மருந்து. அவர்களுக்கு பாராட்டுக்கள் . 

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2097
Points : 4727
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum