"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Today at 1:11 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Today at 12:47 pm

» இனிய காலை வணக்கங்கள் :
by அ.இராமநாதன் Fri Mar 24, 2017 10:07 pm

» மெழுகுவர்த்தி - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Mar 24, 2017 9:50 pm

» திருட்டுப் பார்வை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Mar 24, 2017 9:48 pm

» மருமகள் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Mar 24, 2017 9:44 pm

» சாணக்கியன் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Mar 24, 2017 9:41 pm

» பணம் மட்டுமே ஒரு மனுசனுக்கு சந்தோசத்தைக் கொடுக்காது
by அ.இராமநாதன் Fri Mar 24, 2017 9:35 pm

» மனைவி ஒரு கன்னத்தில் அறைஞ்சா ...!!
by அ.இராமநாதன் Fri Mar 24, 2017 9:28 pm

» திசைகளாகும் திருப்பங்கள் ! (தன்னம்பிக்கை & விழிப்புணர்வு கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : அருட் தந்தை ஆ. லொயோலா ! அணிந்துரை கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Mar 22, 2017 9:58 am

» மன மகிழ்ச்சி தரும் மணத்தக்காளி கீரை
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 5:36 pm

» ஆரோக்கிய வாழ்வுக்கு சிறந்த உணவுகள்!
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 5:34 pm

» பொடுகை போக்கும் சின்ன வெங்காயம்
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 5:31 pm

» கண்ணுக்கு எது அழகு?
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 5:29 pm

» இணையத்தில் இரவி ! கட்டுரையாளர்:முனைவர் பேராசிரியர் ச.சந்திரா ! சாதனமா?சீதனமா?
by eraeravi Tue Mar 21, 2017 4:47 pm

» மது கடைகள் மூடலால் ரூ.2,100 கோடி இழப்பு
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 9:42 am

» வெள்ளை மாளிகை காரில் வெடிகுண்டா? அதிர்ச்சியில் அமெரிக்க அதிபர்
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 9:41 am

» தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி ஸ்மார்ட் ரேஷன் கார்டு
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 9:39 am

» விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 9:36 am

» மெல்போர்னில் இந்திய பாதிரியாருக்கு கத்திக்குத்து
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 9:35 am

» ஓபிஎஸ் அணிக்கு தாவும் ஆறு எம்.எல்.ஏக்கள்! எடப்பாடி ஆட்சி கவிழ்கிறதா?
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 9:30 am

» லண்டன்: ஐபோனுடன் பாத்ரூம் சென்றவர் பிணமாக திரும்பி வந்த பரிதாபம்
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 9:29 am

» சீனி சர்க்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா: அமைச்சரை விளாசிய ஸ்டாலின்!
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 9:28 am

» வெற்றி மொழி: சைமன் சினக்
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 9:15 am

» தாய்லாந்தில் நடைப்பெற்ற போட்டியில் சர்வதேச அழகியாக முடிசூடிய திருநங்கை!
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 9:00 am

» கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட ஆயுள் கால தடை: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனு
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 8:59 am

» பள்ளிகளுக்கு அருகிலிருந்த 375 டாஸ்மாக் கடைகள் அகற்றம்: அமைச்சர் தங்கமணி பதில்
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 8:58 am

» ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக 6 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 8:58 am

» போலிகள் புழக்கம் எதிரொலி மருந்து விற்பனையை கண்காணிக்க இணையதளம்: மத்திய அரசு திட்டம்
by அ.இராமநாதன் Tue Mar 21, 2017 8:55 am

» பஞ்ச வர்ணக்காதல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon Mar 20, 2017 10:17 pm

» நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.... ரான்ஹாசன்
by ranhasan Mon Mar 20, 2017 8:40 pm

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Sat Mar 18, 2017 6:53 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Mar 17, 2017 8:39 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Mar 17, 2017 8:07 pm

» வீட்டுக்குறிப்புகள்!!!
by nivetha Wed Mar 15, 2017 6:14 pm

» கணவன் உண்டபின் அதே இலையிலோ அல்லது தட்டிலோ மனைவியயை உண்ணச் சொல்லுவார்கள் ஏன் தெரியுமா?
by nivetha Wed Mar 15, 2017 6:11 pm

» அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல்
by அ.இராமநாதன் Wed Mar 15, 2017 1:10 pm

» சமூக வலைதளங்களில் மதங்களை இழிவு படுத்தினால் கடும் நடவடிக்கை : பிரதமர் நவாஸ் ஷெரீப் எச்சரிக்கை
by அ.இராமநாதன் Wed Mar 15, 2017 1:02 pm

» அவள் மனித தேவதை
by கவிப்புயல் இனியவன் Wed Mar 15, 2017 12:36 pm

» பதன்கோட் விமான தள பகுதியில் மர்ம மனிதர்கள் நடமாட்டமா?
by அ.இராமநாதன் Wed Mar 15, 2017 7:47 am

» மும்பையில் இருந்து சென்னை வந்த 750 டன் ராட்சத எந்திரம்
by அ.இராமநாதன் Wed Mar 15, 2017 7:47 am

» கனவும் வெற்றியும் பேசிக்கொண்டவை ! நூல்ஆசிரியர் கவிஞர் புதுயுகன் , இலண்டன் ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி !
by eraeravi Mon Mar 13, 2017 11:31 pm

» தலைவர் தூங்கி ரொம்ப வருஷமாச்சு...!
by அ.இராமநாதன் Mon Mar 13, 2017 6:13 pm

» பொன்மொழிகள் - ரசித்தவை
by அ.இராமநாதன் Mon Mar 13, 2017 3:59 pm

» எனக்கு வாய்த்த அடிமைகள்....!
by அ.இராமநாதன் Mon Mar 13, 2017 11:50 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



திறந்தே கிடக்கும் வீடு ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .பன்னீர் செல்வம் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

View previous topic View next topic Go down

திறந்தே கிடக்கும் வீடு ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .பன்னீர் செல்வம் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi on Thu Apr 03, 2014 9:51 pm

திறந்தே கிடக்கும் வீடு !

நூல் ஆசிரியர் கவிஞர் சி .பன்னீர் செல்வம் !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

மக்கள் கண்காணிப்பகம் ,6. வல்லபாய் சாலை ,சொக்கிகுளம் ,மதுரை 625002. விலை ரூபாய் 50.மின் அஞ்சல்info@pwtn.org 
தொலைபேசி 0452- 2539520.

நூல் ஆசிரியர் கவிஞர் சி .பன்னீர் செல்வம் அவர்கள்  இலண்டன் சுடரொளி வெளியீட்டுக் கழகம் உலக அளவில் நடத்திய கவிதைப் போட்டியில் வென்றவர் . முனைவர் இ .தேவசகாயம் அவர்களின் பதிப்புரை நன்று .

மனதில் பட்டதை கவிதையாக வடிக்கும் ஆற்றலும் , துணிவும் பெற்றவர் .சமரசத்திற்கு இடமின்றி ரௌத்திரம் பழகி கவிதை வடிப்பவர் .உலகமயம் ,தாராளமயம் ,புதிய பொருளாதாரம் என்ற பெயரில் நாட்டை சீர்குலைத்து ,நதிகளை மாசு படுத்திய அவலத்தை பல்வேறு கவிதைகளில் சுட்டி உள்ளார் .

நதிகளைக் கழுவுதல் !

துர்நாற்றம்  வீசும் கூவமா ! 
கூவத்துடன் போட்டியிடும் வைகையா 
வணிகத்துக்குப் பலியான நொய்யலா
கங்கை காவிரி யமுனையா 
மனிதக் கழிவுகள் சுமக்கும் 
பிற நதிகளா ? 

படைப்பாளிக்கு சமுகத்தின் மீது அக்கறை வேண்டும் என்பார் மாமனிதர் தி .க .சி . அவர்கள் .நூல் ஆசிரியர் கவிஞர் சி .பன்னீர் செல்வம்அவர்கள் சமுகத்தின் மீது அக்கறை உள்ளவர் .ஆனால் சில எழுத்து வியாபாரிகள் பச்சையும் கொச்சையும்  எழுதி பணம் சேர்த்து வருகின்றனர் .அவர்களைச் சாடும் விதமாக உள்ள கவிதை நன்று .
.
விடுதலை !

விரசங்களையே விதம் விதமாக 
வாந்திஎடுத்துப் பணம் பண்ணும் 
காகித விபச்சாரம் இன்னும் 
கொடி கட்டித்தான் பறக்கிறது ...

நீதிமன்றங்களில் நீதி ஏழைகளுக்கு தாமதமாகவே கிடைக்கின்றது.தாமதமான நீதியும் அநீதிதான் .அதனை உணர்த்தும் கவிதை ஒன்று .

அகலிகை - கண்ணகி -பாவ விமோசனம் !

காலம் காலமாக நீதி தேவதைகள் 
கண்களைக் கட்டியபடி நிற்கிறார்கள்
ஒற்றை மார்பரிந்த கண்ணகி 
ஒற்றைக்கால் சிலம்புடன் 
சிலையாக ! 

பெற்றோர்களிடம் ,துணையிடம் பகிர்ந்து கொள்ள முடியாததையும் தோழமையிடம் நட்பிடம்  பகிர்ந்து கொள்ள முடியும் .நட்பின் மேன்மை விளக்கும் கவிதை நன்று .

நல்ல நண்பன் !

நல்ல நண்பன் 
ஒவ்வொருவரும் 
ஆயிரம் கரங்களுக்குச் சமம் 
வறுமை வளமை 
இன்பம் துன்பம் யாவினும் 
இளமை முதல் முதுமை முடிய 
அவர்களே வழிகாட்டி !

மனசாட்சி உள்ள ,மனிதாபிமானமுள்ள படைப்பாளிகள்  யாவருமே ஈழத்தில் நடந்த தமிழ் இனப்படுகொலைகளைப் பற்றி எழுதாமல் இருக்க முடியாது .நூல் ஆசிரியர் கவிஞர் சி .பன்னீர் செல்வம்
அவர்களும் ஈழக் கொடுமைகள் பற்றி எழுதி உள்ளார் பாருங்கள். ஒவ்வொரு கவிதையும் பெரிய கவிதைகள்தான் .நான் சுருக்கி முக்கிய வரிகள் மட்டும் எழுதி உள்ளேன் .

இன்றோ !

ஒரு குட்டித் தீவே வதைமுகாமாகி
ஓர் இனத்தையே நிர்முலமாக்க 
தனது போதி சத்துவத்தையே 
கழுவேற்றிக் கொண்டிருக்கிறது !

இட்லரையே சாப்பிட்டு ஏப்பம் விட்ட 
இந்நூற்றாண்டின்    மாபெரும் கொலையாளி 
கொன்று குவிக்கத் தமிழன் தீர்ந்து போனதால் 
போர் முடிந்து விட்டதென அறிவிக்கின்றான் !

முட்டையில் மயிர் பிடுங்கிக் கொண்டிருக்கிறது
சர்வதேசச் சமூகம் !

கோபம் தீங்கு என்பார்கள் .ஆனால் நூல் ஆசிரியர் கவிஞர் சி .பன்னீர் செல்வம் அவர்கள் நீதி வேண்டி நியாயம் வேண்டி கோபம் கொள்வது நியாயம் என்கிறார் .

சினம் கொளாமை !

கொலை கொள்ளை கற்பழிப்பும் 
சாதிமத இன ஒடுக்கல்களும் 
பசி வறுமைக் கண்ணீரும் 
பெருக்கெடுத்தோடும் பூமியில் 
சினம் கொளாமை
பேரவலம் அன்றோ !

ஆற்றின் கரையோரம் நாகரிகம் தோன்றியது என்பார்கள் .ஆனால் இன்று நாகரிகத்தின் காரணமாக மூட நம்பிக்கை  காரணமாக ஆறுகள் மாசாகி விட்டன .அந்த அவலம் சுட்டும் கவிதை .

பாழ் ! 

ஆறில்லா ஊர் பாழென
என்றோ சொன்னால் அவ்வை !

ஆறிருந்தும் ஊர்  பாழென
இன்றைய 
இந்திய வாழ்வு கூறுகிறது !

வடபுலத்து நதிகளில் 
பிணங்களும் மனிதக் கழிவுகளும் 
மிதந்து செல்கையில் 
புனித நீராடுகிறார்கள் !

தென்புலத்தின் 
நதிகளுக்கான யுத்தம் 
தொடர்கதையானது !

பெரியாறும் காவிரியும் 
கனவு நதியாகிக் 
காத்திருக்கின்றன ! 

.மனித நேயத்தோடு கொடுமைகள் கண்டு கொதிக்கும் மனிதராக .மனசாட்சி உள்ள அற்புத மனிதராக உண்மையான நேர்மையான படைப்பாளியாக இருக்கும் நூல் ஆசிரியர் கவிஞர்

சி .பன்னீர் செல்வம் அவர்களுக்கு பாராட்டுக்கள் .இந்த நூலை வெளியிட்ட மக்கள் கண்காணிப்பகத்திற்கும்  
பாராட்டுக்கள்.
 

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2070
Points : 4646
Join date : 18/06/2010

Back to top Go down

Re: திறந்தே கிடக்கும் வீடு ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .பன்னீர் செல்வம் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by Ponmudi Manohar on Sun Apr 06, 2014 6:45 pm

இயற்கையின்  இயல்புகளை  இழந்து ​நிற்கும் ​இந்த சூழலில் நம் இதயமும்
 திறந்திடுமோ ? .நூல் விமரிசனம் தந்தமைக்கு ​நன்றி !​
​​
avatar
Ponmudi Manohar
ரோஜா
ரோஜா

Posts : 176
Points : 224
Join date : 30/03/2013
Age : 59
Location : Jeddah

Back to top Go down

Re: திறந்தே கிடக்கும் வீடு ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .பன்னீர் செல்வம் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi on Sat Aug 16, 2014 10:17 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2070
Points : 4646
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum