"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Today at 3:57 am

» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by அ.இராமநாதன் Today at 3:54 am

» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by அ.இராமநாதன் Today at 3:52 am

» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by அ.இராமநாதன் Today at 3:50 am

» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by அ.இராமநாதன் Today at 3:47 am

» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by அ.இராமநாதன் Today at 3:45 am

» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 8:10 pm

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by அ.இராமநாதன் Yesterday at 7:57 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 7:56 pm

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 7:55 pm

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by அ.இராமநாதன் Yesterday at 7:54 pm

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by அ.இராமநாதன் Yesterday at 7:53 pm

» கோடை டிப்ஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 7:48 pm

» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
by அ.இராமநாதன் Yesterday at 7:45 pm

» ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:37 pm

» இல்லையென ஆகிவிடுமா?
by அ.இராமநாதன் Yesterday at 7:30 pm

» சமூகக் குற்றம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:53 pm

» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:45 am

» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:38 am

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:32 am

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:30 am

» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:08 pm

» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:46 pm

» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:33 pm

» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:31 pm

» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:27 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:23 pm

» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:15 pm

» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:11 pm

» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:09 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:02 pm

» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:57 pm

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:16 pm

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 6:02 pm

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 5:25 pm

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:58 pm

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:57 pm

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:53 pm

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:50 pm

» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:30 pm

» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:27 pm

» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:23 pm

» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:16 pm

» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 12:07 pm

» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:59 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ந.க.துறைவன் புதுக்கவிதைகள்.

Go down

ந.க.துறைவன் புதுக்கவிதைகள்.

Post by ந.க.துறைவன் on Mon Apr 07, 2014 10:05 am

அமர்க்களம் {புதுக்கவிதை}
*
ஊரிலிருந்துக் குழந்தைகள்
வந்துவிட்டார்கள்
வீட்டுவாசலில் இருந்த
வேப்ப மரம்
குழந்தைகளைப் பார்த்ததும்
வேகமாக வீசி இலைகளை
அசைத்து அசைத்து வரவேற்றன.
*
அட்டைப் பெட்டியில்
போட்டு வைத்திருந்தப்
பொம்மைகள் விடுதலையாகி
வெளியில் வந்துச் சிரித்தன.
குழந்தைகள் அவரவர்களின்
விருப்பமானப் பொம்மைகளோடு
விளையாடுகிறார்கள்.                   
*
ஓரே கூச்சல், பேச்சு, அரட்டை
வெளியில் ஓடுவதும்
உள்ளே வருவதுமான
ஓடிபிடித்து விளையாட்டு வேறு
வாசல் கேட்டில் வந்து உட்காரும்
சிட்டுக்குருவிகளை விரட்டுவது,
தொட்டியிலிருக்கும் கற்பூரவள்ளி
துளசி இலைகளைக் கிள்ளிச்
சாப்பிடுவதுமான அமர்க்களம்.
*
அதட்டினால் யாரும் காதில்
வாங்குவதேயில்லை.
பசிக்குச் சாப்பிடுவதில்லை
தூங்குவதில்லை வீடே போர்க்களம்.
*
குழந்தைகளுக் கெல்லாம்
பள்ளி விடுமுறை
தாத்தா பாட்டிக் கெல்லாம்
மகிழ்ச்சிக்கு ஏது குறை…!!
*.
 
 
 
 
 

 
avatar
ந.க.துறைவன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 67
Location : வேலூர்

Back to top Go down

Re: ந.க.துறைவன் புதுக்கவிதைகள்.

Post by ந.க.துறைவன் on Tue Apr 08, 2014 11:08 am

*
காந்தி சிலையின் கீழ்
தனிமையில் ரொம்ப
நேரமாய் காத்திருக்கிறாள்
யாரையோ எதிர்ப்பார்த்து
அந்தப் பெண்.
*
அரட்டை அடித்துக்
கொண்டிருந்த வாலிபர்கள்
அமைதியானார்கள்
வழியில்
வந்துக் கொண்டிருந்த
தேவதையைப்
பார்த்து விட்டு….!!
 
*
சவ ஊர் வலத்தை
வேடிக்கைப் பார்க்கிறார்கள்
சாகப்
போகிறவர்கள்.

*
avatar
ந.க.துறைவன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 67
Location : வேலூர்

Back to top Go down

Re: ந.க.துறைவன் புதுக்கவிதைகள்.

Post by ந.க.துறைவன் on Fri Apr 11, 2014 11:10 am

வரவேற்கிறாள் பொம்மைப் பெண்….!! {புதுக்கவிதை}
*
.கல்யாண மண்டபம்
களைக்கட்டியது
வண்ண வண்ண விளக்குகள்
ஜொலித்தன.
*
கைக்கூப்பி வரவேற்கிறாள்
பொம்மைப் பெண்.
ஐஸ் கிரீம்
வாங்கிச் சாப்பிட்டு
ஒழுக ஒழுக நிற்கிறார்கள்
சிறுவர்கள்.
*
முதல் பந்திக்கு
முந்திக் கொள்ள
கேட்டின் அருகில்
ஒரே ஆண்கள் கூட்டம்.
*
பெண்கள் குழு குழுவாக
அமர்ந்துக் கொண்டு
குடும்பப் பிர்சனைகளைக்
கடுகடுத்த முகத்தோடு
பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
*
உறவினர்கள் அருகில்
வரும்போதே போலியாய்ச்
சிரிக்கிறார்கள்.
வரிசையில் நின்று
மாப்பிள்ளை—பெண்ணுக்கு
பரிசுப் பொருள்கள் வழங்கி
விடியோவுக்குப் போஸ்
கொடுக்கிறார்கள்.
*
அன்பான உபசரிப்பு
பந்தியில் விசாரிப்பு
தாம்பூலப் பை அன்பளிப்பு.
*
விருந்துண்டு முடித்தவர்கள் சிலர்
வேகமாக வெளியேறுகிறார்கள்
ஊர் போய் சேர,
*
மண்டபம் கலகலப்பாகத்
தானிருக்குமோ?
முகூர்த்தம் நேரம் வரை…!!.
*
 

*
avatar
ந.க.துறைவன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 67
Location : வேலூர்

Back to top Go down

Re: ந.க.துறைவன் புதுக்கவிதைகள்.

Post by ந.க.துறைவன் on Sat Apr 12, 2014 10:19 am

வேலூர் {வெயிலூர்} கோட்டை
*
மன்னர் காலத்து
நினைவுச் சின்னமாய்
உயிர்ப்போடு வாழ்கிறது
வேலூர் கோட்டை.
பார்வையாளர்களைக்
கவர்ந்தச் சுற்றுச் சுவர்கள்
கற்கோட்டை மதில்கள்
கம்பீரமாய் பொலியுடன்
காட்சியளிக்கிறது.
*
பழமை வாய்ந்த
இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ
ஆலயங்கள் உள்ளே
மதநல்லிணக்கச் சின்னமாய்
சுற்றுலா பயணிகளுக்கு
சரித்திரங்களைச் சொல்லி
மௌனிக்க வைக்கிறது.
*
வடக்குப்புறம்
முதலைகளில்லாத
குறைந்த நீர் சூழ்ந்த
அகழியில்
கூட்டமாய் மீன்கள்.
கரையோரம் யாருக்காகவோ
காத்திருக்கிறது
சவாரி செல்லாதப்
படகுகள்..
*
தெற்குப் புறம்
அடர்ந்த புதராய் வளர்ந்து
அழகிழந்து நிற்கும்
கோரைப் புற்கள்
பார்வையாளர்களைச்
‘ ச்சூ ‘ கொட்ட வைக்கிறது.
*
காலை நேரங்களில்
கோட்டைவெளியைச் சுற்றி
எல்லா வயதினரும்
நடைப் பயிற்சியில்
உடல் ஆரோக்கியம்
தேடுகிறார்கள்.
*
சிப்பாய் புரட்சியில்
உயிரிழந்தச் சிப்பாய்களின்
எலும்புக்கூடுகள்
புதைந்துள்ள பாதையில்
வானோக்கி நிற்கிறது
வீரத்தியாகிகளின்
நினைவுத் தூண்கள்.
*
ஆண்டுக்கொரு நாள்
சிப்பாய் புரட்சி
வீர வணக்க நாள்
கொண்டாடப்படுகிறது
சம்பிரதாயமாக அரசு…!!
*
 

*
avatar
ந.க.துறைவன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 421
Points : 777
Join date : 14/10/2013
Age : 67
Location : வேலூர்

Back to top Go down

Re: ந.க.துறைவன் புதுக்கவிதைகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum