"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
by KavithaMohan Yesterday at 7:54 pm

» காது கேளாதோர் இசையை ரசிக்கலாம்!
by அ.இராமநாதன் Yesterday at 6:55 pm

» கிரிக்கெட் வீரர்களுக்கு 100 சதவீத சம்பள உயர்வு
by அ.இராமநாதன் Yesterday at 6:41 pm

» அரசியலுக்கு சோனியா முழுக்கு
by அ.இராமநாதன் Yesterday at 6:39 pm

» முத்தலாக் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
by அ.இராமநாதன் Yesterday at 6:37 pm

» கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
by அ.இராமநாதன் Yesterday at 10:36 am

» 'ஹலோ' மூலம் திரையுலகில் அறிமுகமாகும் 'ப்ரியதர்ஷன் - லிசி' மகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:24 am

» திரைப்படமாகிறது பால் தாக்கரே வாழ்க்கை வரலாறு
by அ.இராமநாதன் Yesterday at 6:57 am

» யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
by அ.இராமநாதன் Yesterday at 6:55 am

» ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம்
by அ.இராமநாதன் Yesterday at 6:55 am

» அசாமில் 100 நாட்களில் 40 யானைகள் பலி
by அ.இராமநாதன் Yesterday at 6:53 am

» சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
by அ.இராமநாதன் Yesterday at 6:53 am

» கொடி வீரன் - விமர்சனம்
by அ.இராமநாதன் Yesterday at 6:45 am

» ஷார்ஜாவில் 10 ஓவர் போட்டியான டி10 கிரிக்கெட் லீக் தொடர் இன்று தொடக்கம்
by அ.இராமநாதன் Thu Dec 14, 2017 8:46 pm

» திரையுலகில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த த்ரிஷா
by அ.இராமநாதன் Thu Dec 14, 2017 8:42 pm

» விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்குமாறு உத்தரவு
by KavithaMohan Thu Dec 14, 2017 1:47 pm

» மும்பையில் கல்வாரி என்று பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
by KavithaMohan Thu Dec 14, 2017 1:42 pm

» இருமல்,சளி ஜலதோஷம் - மருத்துவம்
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 10:44 pm

» இயற்கை மருத்துவம் (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 10:33 pm

» பகைவனும் நம்மை மதிக்க தொடங்குவான்...!!
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 10:24 pm

» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 10:22 pm

» வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 9:39 pm

» விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 9:36 pm

» வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 9:05 pm

» உலகைச்சுற்றி - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 8:27 pm

» வங்கி கணக்கு – ஆதார் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 8:20 pm

» ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 8:18 pm

» ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 8:18 pm

» இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 8:17 pm

» சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 8:14 pm

» காவல் ஆய்வாளர் குடும்பத்திற்கு 1 கோடி நிவாரணம் - முதலமைச்சர் பழனிச்சாமி!
by KavithaMohan Wed Dec 13, 2017 7:04 pm

» அரசு மீது மக்கள் பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர் : மோடி
by KavithaMohan Wed Dec 13, 2017 6:59 pm

» அதிக நோய்களை பரப்பும் ஈக்கள்
by அ.இராமநாதன் Wed Dec 13, 2017 4:14 pm

» ரேக்ளா வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது... நீதிபதிகளின் தீர்ப்பில் முடிவு...
by KavithaMohan Tue Dec 12, 2017 6:34 pm

» புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் முதலமைச்சர் பழனிசாமி
by KavithaMohan Tue Dec 12, 2017 6:33 pm

» ரஜினியின் பிறந்த நாளில் வெளியாகிறது.. கஜினிகாந்த் பர்ஸ்ட்லுக்.!
by KavithaMohan Mon Dec 11, 2017 5:49 pm

» “ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
by KavithaMohan Mon Dec 11, 2017 5:34 pm

» குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
by KavithaMohan Mon Dec 11, 2017 5:29 pm

» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 12:07 pm

» சொறிந்து கொள்ள மிஷின்!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 10:04 am

» மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று...
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 10:01 am

» மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:55 am

» பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு...!!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:52 am

» மொபைல் ஸ்கேனர்
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:24 am

» குதிரையில் பர்ச்சேஸ்!
by அ.இராமநாதன் Mon Dec 11, 2017 9:20 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வெயிலுக்கு டீ சாப்பிடலாமா?

View previous topic View next topic Go down

வெயிலுக்கு டீ சாப்பிடலாமா?

Post by அ.இராமநாதன் on Thu Apr 10, 2014 6:31 am


-
எத்தகைய டீ சாப்பிடுகிறோம்? எதை எந்தளவு
சூட்டில் சாப்பிடுகிறோம்? என்பதைப் பொறுத்துத்தான்
டீ வெயிலுக்கு நல்லதா? கெட்டதா? என்ற முடிவுக்கு
வர முடியும் என்கிறார்கள் உலக உணவியல் வல்லுநர்கள்.
-
"அது எப்படிங்க, மழைக்காலத்தில் குளிருக்கு இதமாக
சாப்பிடத்தானே டி?' என்று நீங்கள் கேட்பது சரிதான்.
ஆனால், குளிர் காலமோ, வெயில் காலமோ நீங்கள்
டீயை எவ்வளவு சூடாக சாப்பிடுகிறீர்கள் என்பதைப்
பொறுத்ததுதான்... என்ற பதிலைத்தான் அவர்கள்
திரும்பத் தருகிறார்கள்.
-
ஒரு சின்ன பரிசோதனையை நீங்களே செய்து பாருங்கள்.
வெயிலில் அலைந்து திரிந்துவிட்டு, வீட்டிற்குள் வந்ததும்
ஐஸ் தண்ணீரை சாப்பிட்டுப் பாருங்கள். உடனே
உங்களுக்கு "சூடு' பிடித்துக் கொள்ளும். நிறைய சாப்பிட்டால்
தலையை வலித்துக் கொண்டு வரும். வெயிலுக்கு எதிரி
 ஐஸ் தண்ணீர்தான்! பிறகு ஏன் சூடு பிடிக்கிறது, தøயை
வலித்துக் கொண்டு வருகிறது?
-
காரணம் இருக்கிறது. நீங்கள் எவ்வளவுதான் வெயிலில்
அலைந்து வந்தாலும், உங்கள் உடல் ஓரளவுக்கு மேல்
வெப்பத்தை உள்ளுக்குள் விடாது. பிறகு வீட்டிற்கு
வந்து சிறிது நேரம் நிழலில் இருந்தால் போதும், அது
சரியாகிவிடும். இது இயற்கையான உடல் மாற்றம்.
-
இங்கே நீங்கள் வெயில்தானே என்று ஃபிரிட்ஜ்ஜிலிருந்து
தண்ணீரை எடுத்துச் சாப்பிடும்போது, அந்தக்
குளிர்ச்சியானது உடலில் இயற்கையாக உள்ள
உஷ்ணத்தை வெளியேற்றப் போராடும்.
-
அது சிறுநீராகவோ வியர்வையாகவோ இயற்கைக்கு
மாறாக தேவைக்கு அதிகமாக வெறியேறும்போதுதான்
உங்களுக்கு சூடு பிடிப்பதும். தலையை வலிப்பதும்.
-
அதற்குப் பதிலாக, வெயிலில் அலைந்துவிட்டு, வீட்டிற்கு
வந்த சிறிது நேரம் கழித்து, இதமான சூட்டில் - முடிந்தால்
ஆறிய ஒரு டீ சாப்பிட்டுப் பாருங்கள். உடல் உஷ்ணம்
சமநிலைக்கு வர அந்த டீ உதவும். உங்களுக்கு சூடும்
பிடிக்காது. தலையும் வலிக்காது.
-
டீ என்றதும் நாம் சூடாக இருந்தால்தான் அது டீ என்று
நினைத்துக் கொண்டிருக்கிறோம். சூடாக சாப்பிட்டு
சாப்பிட்டு நாம் பழகிவிட்டோம். மற்றபடி மிக, மிக
இளம் சூட்டில் அல்லது ஆறிய டீ தான் உடலுக்கு நல்லது.
-
டீயில் ஃபிளோவோநாய்டு, கேட்டீசென்ஸ் போன்ற நோய்
எதிர்ப்பு சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை வெயிலின்
தாக்கத்தால் உடலில் ஏற்படும் பாதிப்புகளை,
உடனுக்குடன் நீக்கும் சக்தி கொண்டவையாம்.
-
குளிர்ச்சியான ஜூஸ்கள் சாப்பிட்டதும், அது உடனே
உடலில் உள்ள வெப்பங்களை வெளியேற்றத்தான்
துடிக்கும். கூடவே நம் உடலில் உள்ள உஷ்ணமும்
வெளியேற வாய்ப்புகள் அதிகம்.
-
அதேசமயம் டீ சாப்பிடும்போது, அது உடல் உஷ்ணத்தை
சம நிலையில் வைத்திருக்கும் என்கிறார்கள்.
-
பிளாக் டீ:

பால் ஊற்றாத டீ சாப்பிட்டு பாருங்கள்.
உங்களுக்கு கேன்ஸர் வர வாய்ப்புக்கள் மிக மிக குறைவு
என்கிறார்கள். அதுபோல் கிரீன்-டீயில் உள்ள
பாலிஃபோனெல்ஸ் என்ற நோயெதிர்ப்பு சத்தானது,
கரியமில வாயுக்கு எதிரான ஒன்றாகும். இதுதான்
கேன்ஸரை எதிர்த்துப் போராடி, நம்மை பாதுகாக்கின்றது.
-
கலோரிகளை எரிக்கும் டீ:

வெயிலுக்கு பயந்து நாம் அருந்தும்
குளிர்பானங்களில் ஐஸ் கிரீம்களில் கலோரி அதிகம்.
அது உடல் எடையைக் கூட்டும். ஆனால் டீ என்பது
கலோரிகளை எரித்து, உடல் எடையைக் கூட விடாமல்
பருமனாக்காமல் நம்மைப் பாகுகாக்கும். வெயில் காலத்தில்
 டீ அதிகம் அருந்துபவர்களின் முகம் அழகாக பொலிவுடன்
இருக்கும். சுருக்கம் விழாது.
-
டீ சாப்பிட்டால் உடல் வறட்சி அடையும் என்கிறார்களே?

-
அது அவர்கள் எவ்வளவு உஷ்ணத்தில் டீயை
சாப்பிடுகிறார்கள் என்பதைப் பொறுத்தது. இளம்
சூட்டில் டீ பருகினால் உடல் வறட்சி அடையாது.
-
அப்படியானால், தர்பூசணி, லெமன் ஜூஸ், மோர்
வெயிலுக்கு தேவையில்லையா?
-
அதுவும் வேண்டும். டீயும் வேண்டும்.
இன்னொரு முக்கிய விஷயம், ஒரு நாளைக்கு மூன்று
நான்கு முறைக்கு மேல் டீ சாப்பிடக்கூடாது. அளவுக்கு
அதிகமானால் அது பித்தத்தை அதிகரித்துவிடும்.
-
------------------

- இரா. மணிகண்டன்
நன்றி: குமுதம்

 

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24747
Points : 53941
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum