"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» மிலிட்டரி சரக்க ஓசியில வாங்கஃத்தான்...!!
by அ.இராமநாதன் Today at 3:05 pm

» இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைக்கு பாரம்பரிய அந்தஸ்து
by அ.இராமநாதன் Today at 2:55 pm

» பென்குவின் பறவைகள்
by அ.இராமநாதன் Today at 2:50 pm

» ரசித்ததில் பிடித்தது - (பல்சுவை) தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 2:32 pm

» உளுந்து வடையைத் தின்னுட்டு ’அதிரசம்’ நல்லா இருக்கு’ன்னு சொல்றாரே...!!
by அ.இராமநாதன் Today at 2:23 pm

» ஒண்ணா சரக்கடிக்க வச்சுட்டார்....!!
by அ.இராமநாதன் Today at 11:51 am

» மாற்றம் என்பது...
by அ.இராமநாதன் Today at 11:35 am

» வீட்டில் கழிவறை இல்லாவிட்டால் சம்பளம் 'கட்'
by அ.இராமநாதன் Today at 8:33 am

» நாங்க இப்படிதானுங்க!: ஜாலியான அலியா!
by அ.இராமநாதன் Today at 8:28 am

» எனது அரசியல் வாரிசு யார்?: மாயாவதி பரபரப்பு பேட்டி
by அ.இராமநாதன் Today at 8:23 am

» 'வவ்வால் மூலம் 'நிபா' பரவவில்லை'
by அ.இராமநாதன் Today at 8:21 am

» பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம்
by அ.இராமநாதன் Today at 8:20 am

» காலக்கூத்து - சினிமா விமரிசனம்
by அ.இராமநாதன் Yesterday at 11:37 pm

» ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 11:17 pm

» ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன்? எப்படி? சசிகலாவின் வழக்குரைஞர் விளக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 11:04 pm

» அடடே அப்படியா...
by அ.இராமநாதன் Yesterday at 4:51 pm

» மாறுவேடப் போட்டி
by அ.இராமநாதன் Yesterday at 4:48 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Yesterday at 4:46 pm

» வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்
by அ.இராமநாதன் Yesterday at 4:38 pm

» பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
by அ.இராமநாதன் Yesterday at 4:34 pm

» போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு Added : மே 26, 2018 14:41
by அ.இராமநாதன் Yesterday at 4:33 pm

» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Yesterday at 1:38 pm

» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Yesterday at 1:30 pm

» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
by அ.இராமநாதன் Yesterday at 12:10 pm

» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா
by அ.இராமநாதன் Yesterday at 12:01 pm

» சினிமா -முதல் பார்வை: செம
by அ.இராமநாதன் Yesterday at 11:58 am

» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 8:01 am

» புறாக்களின் பாலின சமத்துவம்
by அ.இராமநாதன் Yesterday at 7:57 am

» குதிரை பேர வரலாறு
by அ.இராமநாதன் Yesterday at 7:56 am

» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
by அ.இராமநாதன் Yesterday at 7:53 am

» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
by அ.இராமநாதன் Yesterday at 7:51 am

» இந்திரா கவிதைகள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:59 pm

» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:56 pm

» பட்ட காலிலேயே படும்....
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:49 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:46 pm

» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:41 pm

» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:22 pm

» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:21 pm

» எளிய மருத்துவக் குறிப்புகள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:19 pm

» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 7:10 pm

» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது
by அ.இராமநாதன் Fri May 25, 2018 2:27 pm

» பலவித முருகன் உருவங்கள்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 2:23 pm

» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:45 am

» பி.வி. சிந்துவும் இறக்கையும்!
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:36 am

» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்
by அ.இராமநாதன் Fri May 25, 2018 10:34 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இது தான் காதலா -தொடர்கதை 2

Go down

இது தான் காதலா -தொடர்கதை 2

Post by தங்கை கலை on Mon Apr 21, 2014 3:56 am

இதுதான் காதலா -2 !

நாம் ஒரு வழியைத் தேடிப் போனால் விதி ஒரு வழியை அமைத்துக் கொடுக்கும் ..முயற்சி என்றும் கடின உழைப்பு என்றும் அதிஷ்டம் என்றும் பலரால் பல விதமாக கூறினாலும் நமக்கு என்ன எழுதி இருக்கிறதோ அது தான் வந்து அமைகிறது ...நாம் முட்டினாலும் மோதினாலும் கதறினாலும் கெஞ்சினாலும் ஒன்னும் ஆகிவிடப்  போவதில்லை ...

தேர்வுமுடிவுகள் வரும் வேளையில் எத்தனை எத்தனைப் பிள்ளைகள் இன்றும் தற்கொலை என்ற முடிவை எடுத்துக் கொள்கின்றன..தேர்வில் தோல்விக் கண்டால் தற்கொலை தான் முடிவா ?? என்ன பைத்தியக்காரத் தனம்?? இதற்கெல்லாம் காரணம் யார் ?? மாணவர்களா பெற்றோர்களா ஆசிரியர்களா ??யார் மேல் பழி சுமத்தினாலும் சென்ற உயிர் திரும்பி வருமா??

எந்தத் துறையில் வேலைவாய்ப்பு அதிகம் என்பதைக் காணும் பெற்றோர் பிள்ளைக்கு எந்தத்  துறையில் ஆசை அதிகம் என்பதைக் காண மறுக்கின்றனர் ..

பெரும்பாலான குழந்தைகள்  தனக்கு எந்தத்துறைப் பிடிக்குமென்றேத் தெரியாமல் எதோ ஒன்றோடு வாழ்க்கையை ஐக்கியமாக்கிவிடுகின்றனர்.

பெண்பிள்ளைகளுக்குஒதுக்கப் பட்டது டீச்சர் என்பதும், மெக்கானிக்கல் என்பது ஆண்பிள்ளைகளுக்காக வரையறுக்கப்பட்டதாக இருந்தது ...அப்படியே ஒருப் பெண் மெக் படிக்க ஆசைக் கொண்டாலும் குடுமபத்தை சமாளித்து அதுவும் சொந்தக் காரங்களுக்கு விளக்கம் சொல்லுவதற்குள் விளங்கிடும் வாழ்க்கை ...

கனிமொழியின் பள்ளிப்படிப்பின் இறுதியாண்டுத் தேர்வின் முடிவுகளும் வந்தது..௧௨௦௦ க்கு ௧௧௫௫ மதிப்பெண் எடுத்திருந்தாள் கனிமொழி. அவளின் எதிர்கால துறையும் அவளின் பெற்றோர் ஆசைப்படியே மருத்துவத்துறை.கனிமொழிக்கோ மியூசிக்கல் படிக்க அவ்ளோ ஆசை. தனது ஆசையை அம்மாவிடம் சொல்ல ,"மியூசிக் படிக்கப் போறியா என்னாது அது படிச்சி என்னப்பண்ணுவ ஒழுங்கா மெடிக்கல் காலேஜ் ல சேர்ந்துப் படி" என்று ஒரே பேச்சில் முடித்து விட்டார் கனியின் அப்பா வேதநாயகம் ..

மருத்துவப் படிப்பிற்கான கவுன்சலிங் கார்டும் கனியைத்தேடி வந்தது..அதே சமயத்தில் அப்பாவிற்குத் தெரியாமல் திருச்சி யில் அறிவியல் கல்லூரியில்  BA மியூசிக் கிற்கு விண்ணப்பித்து இருந்தாள்.

கவுன்சிலிங் செல்லவும் மனமில்லை அப்பாவின் சொல்லை மீறவும் முடியவில்லை தன் லட்சியம் BA மியூசிக் என வெளிக்காட்டவும் இயலவில்லை ..


தந்தையின் ஆசைப்படி வேண்டாவெறுப்பாகத்தான் மருத்துவப் படிப்பிற்க்கான கவுன்சிலிங்கிற்காக திருச்சியிலிருந்து சென்னை நோக்கிப் பயணித்தாள்.

சிங்காரச் சென்னை கனியையும் வரவேற்றது...ஒவ்வொருவருக்கும் சென்னை எதோ ஒருக் காரணத்தில் பிடித்தோ பிடிக்காமலோ இருக்கலாம் ..ஆனால் வந்தாரை வாழவைப்பது தான் சென்னையின் அழகே!! 
தமிழ்நாட்டில் எந்த ஒரு மூலையில் இருந்து யார் இங்கு வந்து சென்றாலும் அவர்களின் நினைவில் வட்டமடிக்கும் ஒரு நிகழ்வை சென்னைக்  கொடுப்பதில் தவறுவதே இல்லை..  

காலைப் பேருந்து பயணநெரிசலில் கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி அடையும் வேளை தனது மியூசிக் கனவைத் தொலைக்கும் தருணம் வருவதாய் உணர்ந்தாள் ..அலைமோதும் கூட்டம் மாணவர்களை விடப் பெற்றோரே எங்கும் தெரிந்தனர்..கூட்டத்தில் யாரேனும் தெரிந்த முகத்தை தேடும் கனிக்கு தந்தை வேதநாயகம் தவிர யாரும் பிடிபடவில்லை ..


கனிமொழிக்கானா பதினோரு  மணிக்கான  கவுன்சிலிங் நேரம் வர உள்ளே சென்றாள்.ஒவ்வொரு மாணவர்களின் முகத்திலும் எதோ கலவரம் காணப்பட்டது..அது கவுன்சிலிங்க்கான  கலவரமா இல்லை நம்மைப் போல் வேண்டா வெறுப்பாக நிர்பந்திக்கப் பட்டச் சூழ்நிலை நிலவரமோ என யோசித்தாள் .

ஒவ்வொரு முகங்களையும் நோட்டமிட்ட கனிக்கு யாரோ ஒருவர் தம்மைப் பார்ப்பது போல் பிரம்மையில் திரும்பிப் பார்க்க, கனிக்கு பின்புறம் நின்ற ஒருவன் அவளையேப் பார்த்தான் ...

கனிமொழி அவளைப் பார்த்ததும் அவன் வேறு திசையை நோக்கித் திரும்பினான்  ..கனியும் திரும்பித் திரும்பி அவனையேப் பார்க்க,

(ஸ்டாப் ஸ்டாப் எல்லாரும் காதைக் கொடுங்க ஒரு இரகசியம் சொல்லணும் கனிமொழி அந்தப் பையனை சைட் அடிச்சி இருக்கா )

பெண்கள் ஆண்களை சைட் அடிப்பாங்களா ன்னு கேட்டா இல்லை பொண்ணுங்க சைட் அடிக்கவே மாட்டோம் ன்னு தான் சொல்லுவாங்க ...உண்மையில் ஆண்கள் பார்க்காத நேரம் அவர்களைப் பார்ப்பது என்னவோ பெண்களுக்குப் பிடிக்கும்.ஆண்கள், "நீ என்ன சைட் அடிச்சதானேன்னு கேட்டா, இல்லையே சும்மா பார்த்தேன்"ன்னு  சொல்லுவாங்க ...இதே பையன் பண்ணினா சைட் அடிக்கிறதுன்னு பெயர்  ஒருப் பொண்ணுப் பார்த்தா casual லுக் ....



கனிமொழியும் அந்தப் பெயர் தெரியாத பையனை சைட் அடிச்சி கொண்டிருக்க சாரி casual லுக் ல பார்த்துக் கொண்டிருக்க அந்தப் பையனும் சட்டென்று கனிமொழியின் பக்கம் தன் பார்வையைப் பதித்தான் ..அவன் பார்வையறிந்த அவள் வேறு திசையை நோக்கி தனதுப் பார்வையைத் திருப்பினாள்.அது என்னவோ பெரும்பாலான காதல் தோன்றுவதற்குக் கண்களே அடிப்படைக் காரணமாகின்றன. இந்தக்கண்கள் செய்யும் சேட்டைக்கும்  அளவே இருக்காது.

"பொறுக்கிப் பய  எப்படிப் பார்க்குறான் பாரு கவுன்சிலிங் வந்து இருக்க மாறியா இருக்கான் ..ஆளும் சைஸ் உம் ட்ரீஸ்உம்" ன்னு முனங்கிக் கொண்டே திரும்பியவளுக்கு அதிர்ச்சி அவன் அங்கே இல்ல்லை ..

பருவவயதில் பெண்கள் பொய்யாய் திட்டினாலும் உள்ளுக்குள்  மற்றவர்கள் பார்ப்பதில் எதோ சின்ன சந்தோசம் இருக்கத்தான் செய்யும் ..

கவுன்சிலிங் உள்ளே சென்றவளுக்கு கட் ஆப் மார்க்கில் waiting list ல சென்றவள் மருத்துவப் படிப்பிற்க்கான இடம் கிடைக்கவில்லை என்ற அந்த இன்ப அதிர்ச்சியுடன்  தந்தையிடம் வராத சோகக் கீதம் ஒன்றை இசைக்க ஓடிச் சென்றாள்..  தந்தையிடம் கட் ஆப் மார்க்ப் பற்றி விளக்கிக் கொண்டிருக்க சற்றுத் தொலைவில் அந்தப் (பொறுக்கிப் )பையனும் அவனின் பெற்றோரிடம் எதோ சொல்லிக் கொண்டிருப்பதைக் கண்டாள் ..அவனின் பெற்றோரின் சந்தோஷ முகம் அவனுக்கு மெடிக்கல் சீட் கிடைத்ததை உறுதி செய்தது ..

கனிமொழிக்கோ அதைப் பார்த்ததும் கொஞ்சம் பொறாமையும் வந்தது.இருந்தாலும் தனக்குப் பிடித்த மியூசிக் படிக்க இனிமேல் தடையில்லை என்றக் கனவோடு திருச்சியை நோக்கிப் பயனித்தாள்..

கண்களின் குறும்பு இதயத்தை மட்டுமா தாக்கும் தூக்கத்தையும் அல்லவாப் பறிக்கும்...இரவின் சென்னை டு திருச்சிப் பயணம்  தூக்கத்தைப் பறித்து பெயரில்லா அவனின் நினைவுகளை இறைத்துச் சென்றது ........
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: இது தான் காதலா -தொடர்கதை 2

Post by vinitha on Tue Apr 22, 2014 1:50 pm

பொன்னு கதை எல்லாம் எழுதுதே சரிலயே ஆழவிடுங்கப்பா நானில்  ஆழவிடுங்கப்பா நானில்  ஆழவிடுங்கப்பா நானில்
avatar
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 8
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

Re: இது தான் காதலா -தொடர்கதை 2

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Apr 22, 2014 5:20 pm

மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி தொடருங்கள்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: இது தான் காதலா -தொடர்கதை 2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum