"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 8:10 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 7:38 pm

» எஸ்.ஜே.சூர்யாவின் வில்லன் அவதாரம்!
by அ.இராமநாதன் Yesterday at 7:37 pm

» கதையின் நாயகியான தன்ஷிகா!
by அ.இராமநாதன் Yesterday at 7:36 pm

» தமிழில் ஹீரோவாகும் மலையாள நடிகர்!
by அ.இராமநாதன் Yesterday at 7:36 pm

» நேரடி தமிழ் படத்தில் மஞ்சுவாரியர்
by அ.இராமநாதன் Yesterday at 7:34 pm

» 'இமேஜ்' வட்டத்திற்குள் ஓவியா!
by அ.இராமநாதன் Yesterday at 7:33 pm

» ஜி.வி.பிரகாஷின் சமூக சேவை!
by அ.இராமநாதன் Yesterday at 7:33 pm

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:25 am

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by அ.இராமநாதன் Yesterday at 8:55 am

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by அ.இராமநாதன் Yesterday at 8:52 am

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by அ.இராமநாதன் Yesterday at 8:50 am

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by அ.இராமநாதன் Yesterday at 8:49 am

» எல்லாம் பிறர்க்காகவே!
by அ.இராமநாதன் Yesterday at 8:46 am

» புதிரான போர் - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:42 pm

» காதல் என்பது...
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:40 pm

» காதல் - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:34 pm

» கறுப்பு - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:33 pm

» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு ! தமிழ்காக்கக் கொட்டு முரசே கொட்டு ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sat Sep 23, 2017 5:01 pm

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Sat Sep 23, 2017 2:58 pm

» இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:23 pm

» முதல் பெண் போலீசார் 40 ஆண்டுக்கு பின் சந்திப்பு
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:21 pm

» 7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:19 pm

» பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:17 pm

» 2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:16 pm

» நவீன தொழில்நுட்பத்துடன் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:11 pm

» அந்த நாள் -செப் 22 --2016
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 12:57 pm

» நதிக்கரை - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:39 pm

» நாட்டு நடப்பு - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:38 pm

» நீ என்ன தேவதை - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:31 pm

» புகைப்படம் - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:28 pm

» பெயருக்குத்தான் - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:18 pm

» அழகு - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:16 pm

» விநோதமான வேலை!
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:05 pm

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:04 pm

» விஷ சேவல் கோழி மீன்
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 2:19 pm

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 2:09 pm

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:57 am

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:55 am

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:53 am

» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Thu Sep 21, 2017 9:15 pm

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:04 pm

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:04 pm

» முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி உடல்நல குறைவு
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:03 pm

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:02 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



“மகிழ்ச்சி மந்திரம்” நூலாசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

View previous topic View next topic Go down

“மகிழ்ச்சி மந்திரம்” நூலாசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Post by eraeravi on Mon Jun 09, 2014 10:13 pm

 “மகிழ்ச்சி மந்திரம்”
நூலாசிரியர் :  தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
வானதி பதிப்பகம்23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17.
பக்கங்கள் : 248, விலை : ரூ. 150.
*****
நூலாசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன், வானதி பதிப்பகம் பதிப்புச்செம்மல் திருநாவுக்கரசு வெற்றி கூட்டணியின் தரமான படைப்பாக நூல் உள்ளது.  40 சிறிய கட்டுரைகளின் தொகுப்பு நூல்.  இனிய நண்பர் கவிஞர் கே.ஜி. ராஜேந்திரபாபு, தினமலர் வாரமலரில் தன்னம்பிக்கை விதைக்கும் கவிதை எழுதி இருந்தார்.  படித்துவிட்டு அலைபேசியில் அழைத்து அவரைப் பாராட்டினேன்.  அதில் வரும் ஒரு வரி, “என்றும் மகிழ்ச்சி இதுவே மந்திரம்” என்று பெயர் சூட்டிய காரண காரியத்தை நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஒரே ஒரு நூலில் அவ்வை, பரமஹம்சர், பாரதிதாசன், ரசிகமணி, பாரதியார், கல்கி, வாரியார், கி.வா. ஜகன்னாதன், புதுமைப்பித்தன், என்.எஸ். கிருஷ்ணன், வீ. முனுசாமி, கண்ணதாசன், மீரா உள்ளிட்ட எல்லோரும் வருகிறார்கள்.  நம்முடன் பேசுகிறார்கள்.  நாம் நேரில் கண்டிராத பல ஆளுமைகளின் நகைச்சுவை உணர்வை காட்சிப்படுத்தும் விதமாக நூல் உள்ளது.  தகவல் களஞ்சியமாக உள்ளது.  வாழ்வை ரசித்து ருசித்து வாழ பயிற்றுவிக்கும் நூலாக உள்ளது.  எழுத்து, பேச்சு என்ற இரு வேறு துறையிலும் 
தனி முத்திரைப் பதித்து வரும் தகைசால் மாமனிதர் நூலாசிரியர்.
பதச்சோறாக சில மட்டும் உங்கள் ரசனைக்கு!
‘நகைச்சுவைத் தென்றல்’ ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார்.  முதல் கட்டுரையிலிருந்து சிறு துளிகள்.  “ஒருமுறை புது தில்லிக்கு டி.கே.சி. சென்றிருந்த போது பிரதமர் நேரு தம்முடைய வீட்டிற்கு விருந்தினராக வரும்படி அழைத்தார்.  டி.கே.சி. நேருவின் வீட்டிற்கு ஓட்ஸ் சாதம் பொங்கிக் கொண்டு போனார். அதைப் பார்த்த நேரு, ‘ஓ! நீங்கள் ஆசாரம் போலிருக்கிறதே!’ என்று வியந்து கேட்டார். 
“இல்லை நான் ஆசாரமே இல்லை. எனக்கு எல்லா வகையான ஆகாரங்களும் சாப்பிட வேண்டும் என்று தான் ஆசை.  ஆனால் என் வயிறு இருக்கிறதே.  அது தான் ஆசாரம்   என்றாராம்.  டி.கே.சி. தம்முடைய சர்க்கரை நோயைப் பற்றி இங்ஙனம் வெளியிட்டார். 
பட்டிமன்ற பேச்சாளர்களில் சிலர் சொன்ன நகைச்சுவைகளையே மேடை தோறும் சொல்லி பார்வையாளர்களை சிரமப்படுத்தி வருகின்றனர்.  அவர்கள் இந்த நூல் வாங்கிப் படித்தால் மேடை தோறும் புதுப்புது நகைச்சுவைகளை பயன்படுத்த உதவும்.
மனிதர்களின் ஆசைக்கு அளவே இல்லை.  பேராசையின் காரணமாகவே பலர் குற்றம் செய்து வாழ்க்கையை சிறையில் கழித்து வருகின்றனர்.  அவர்களுக்காக கவியரசு கண்ணதாசன் எழுதிய வரிகள் நூலில் உள்ளது.  சிந்திக்க வைத்தது.  கவியரசு கண்ணதாசன் ஊதியம் பற்றியது.
மனது ஐநூறுக்குத் தாவிற்று
      அது ஆயிரமாக வளர்ந்தது
      ஈராயிரமாக பெருகிற்று
      யாவும் கிடைத்தன.
இப்பொழுது நோட்டடிக்கும் உரிமையையே மனது கேட்கும் போலிருக்கிறது.  எந்த கட்டத்திலும் ஆசை பூர்த்தியடையவில்லை.  (அர்த்தமுள்ள இந்து மதம் முதல் பகுதி பக். 21-22)
      நூலாசிரியர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள், வாசித்த நூலின் பெயர், பக்க எண்கள் வரை மிகத் துல்லியமாக குறிப்பிட்டு கட்டுரை எழுதுவார்கள்.  இதை அறிவு நாணயம் என்பார்கள்.  இது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.  வெகுசிலருக்கே வாய்ந்திட்ட பெருமை.அருமை 
      இந்த நூலின் தலைப்பில் உள்ள கட்டுரையில் மகிழ்ச்சி மந்திரம் என்று வழங்கி உள்ளார்கள்.  இதனை கடைபிடித்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சி வசப்படும் என்பது உண்மை.

  1. உங்களிடம் இல்லாததை எண்ணி ஏங்கித் தவிப்பதை விட உங்களுக்கு எது கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதற்கு முதலில் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். வாழ்க்கை நீங்கள் அழுவதற்கு 100 காரணங்கள் கொடுத்தால் என்னிடம் சிரிப்பதற்கு 1000 காரணங்கள் இருக்கின்றன என்று காட்டுங்கள்.  இதுவே மகிழ்ச்சி மந்திரம்.
  2. எதைச் சொன்னாலும் மற்றவர் மனம் மகிழும்படி, புண்படும்படி அல்ல-இதமாக-நாகரிகமாக சொல்லுங்கள்.
  3. எதையும் எதிர்மறையாகக் காணாமல், நேர்முகமாக எதிர்கொள்ளப் பழகுங்கள்.
  4. பழைய போக்கிலேயே செல்லாமல், புதிய கோணத்தில் மாற்றிச் சிந்தியுங்கள்.

வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய வாழ்வியல் நெறியை வெற்றிக்கான சூத்திரத்தை மிக இயல்பாகவும், எளிமையாகவும், எல்லோருக்கும் புரியும் வண்ணம் எழுதியுள்ள நூலாசிரியருக்கு பாராட்டுக்கள்.
ஒவ்வொரு கட்டுரை தொடங்கும் போது சிலர் எழுதியவற்றை அவர்கள் பெயருடன் மேற்கோளாகக் காட்டி தொடங்குவது நூலாசிரியர் வழக்கம்.  இதை மற்றவர்களும் கடைபிடிக்கத் தொடங்கி விட்டனர்.
‘இராமகிருஷ்ண பரமஹம்சர்’ கட்டுரையில் வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம் என்ற வரிகளின் மூலம் உலகப்புகழ் அடைந்த கவிஞர் தாராபாரதியின் வைர வரிகளோடு தொடங்கி உள்ளார்கள்.
“நான்மறையைக் கற்றவனா ஞானி?’ 
      தன்னுள்
      நான் மறையக் கற்றவனே ஞானியாவான்.--
கவிஞர் தாராபாரதி !
நான் என்ற அகந்தையை அழிக்காமல் கர்வத்துடன் வாழ்ந்து கொண்டு தன்னை ஞானி என்று சொல்லிக் கொள்ளும் போலிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய வைர வரிகள்.
இலண்டன் கல்லூரியில் துணைமுதல்வராகப் பணியாற்றும் இனிய நண்பர் கவிஞர் புதுயுகன் பற்றி கவிதை உறவு இதழில் எழுதிய கவிதை அலைவரிசை கட்டுரையும் நூலில் உள்ளது. 
அவரது கவிதைகளில் பதச்சோறாக ஒன்று.  
காந்தியடிகள் பற்றிய கவிதை.
அரிச்சந்திரன், பிரகலாதன், சிரவணன்,
      எல்லாம் கலந்த நிஜம் நீ
      மண்டேலா சூகி, லூதர்கிங், ஒபாமா என
      உலகில் தொடரும் இந்திய புஜம் நீ
      அகிம்சையால் ஐன்ஸ்டைனையும்
      அசரவைத்த இந்திய கஜம் நீ.
பேச்சு எழுத்து  இரண்டு துறையிலும் பிரமிக்க வைக்கும் ஆளுமையாளர் 

நூலாசிரியர்  தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள் .நேரம் வைக்கும் போதெல்லாம் வாசிக்கிறார் .வாசித்தவற்றில் நேசித்ததை இலக்கியத் தேனாக வழங்குகின்றார் .தமிழ்த் தேனீ என்ற பட்டத்திற்கு  முற்றிலும் பொருத்தமானவர் .இவரது ஒரு நூல படித்தால் போதும் ஒரு  நூறு நூல்கள்  படித்த தகவல்கள் அறிந்து கொள்ள முடியும் .
நூலின் சிறப்பை எழுதிக் கொண்டே போகலாம்.  நூலை வாங்கிப் படித்து பார்த்து பயன் பெறுங்கள்.


.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2111
Points : 4769
Join date : 18/06/2010

Back to top Go down

Re: “மகிழ்ச்சி மந்திரம்” நூலாசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Jun 16, 2014 5:14 pm

மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: “மகிழ்ச்சி மந்திரம்” நூலாசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Post by eraeravi on Mon Jun 16, 2014 10:52 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2111
Points : 4769
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum