"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 3:53 pm

» தொடர்பு - கஙிதை
by அ.இராமநாதன் Today at 3:48 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 1:02 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 1:00 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 12:58 pm

» பல்சுவை - டிப்ஸ்
by அ.இராமநாதன் Today at 12:56 pm

» பொன்மொழிகள் - ரசித்தவை
by அ.இராமநாதன் Today at 12:53 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 12:45 pm

» வித்தியாச கொழுக்கட்டை & புதினா சட்னி
by அ.இராமநாதன் Today at 7:37 am

» நூல்கோல் பகோடா & மொறு மொறு தோசை
by அ.இராமநாதன் Today at 7:37 am

» இனிதானே எல்லாம் – கவிதை
by அ.இராமநாதன் Today at 7:36 am

» நண்பேண்டா – நெகிழ வைத்த சந்திப்பு
by அ.இராமநாதன் Today at 7:35 am

» ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாத 28 பழங்கள், காய்கறிகள், உணவுகள்!
by அ.இராமநாதன் Today at 7:35 am

» மாற்றுச் சிந்தனை: பால்பாயிண்ட் பேனாவுக்கு விடை கொடுப்போம்!
by அ.இராமநாதன் Today at 7:31 am

» பூச்சிகளின் தேசம்
by அ.இராமநாதன் Today at 7:29 am

» பரவச ஈக்கள்
by அ.இராமநாதன் Today at 7:22 am

» விடுவித்தல்
by அ.இராமநாதன் Today at 7:21 am

» இங்கிலாந்து ராணி எலிசபெத், நேரில் ஆறுதல் ...
by அ.இராமநாதன் Today at 7:20 am

» இந்தியாவிலேயே மீக நீளமான பாலம்; மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்..!
by அ.இராமநாதன் Today at 7:20 am

» குடியரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை!
by அ.இராமநாதன் Today at 7:19 am

» வங்கக் கடலில் காற்று சுழற்சி தமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு
by அ.இராமநாதன் Today at 7:18 am

» ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது உயிர் தப்பினார் மகாராஷ்டிரா முதல்வர்
by அ.இராமநாதன் Today at 7:18 am

» ரொட்டியை எப்படி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்..?
by அ.இராமநாதன் Yesterday at 9:31 pm

» கூடவே வெளியேறுபவன் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm

» ரயிலோட்டும் கட்டெறும்புகள் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 9:26 pm

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Yesterday at 9:23 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 9:06 pm

» மற்றுமோர் ..(கவிதை)
by அ.இராமநாதன் Yesterday at 2:47 pm

» எல்லாம் தெரிந்த முட்டாள் மனிதன் நான்.
by அ.இராமநாதன் Yesterday at 2:46 pm

» தலைப்பு "தமிழ் இலக்கியத்தில் பொதுமை " உரை; கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 2:18 pm

» தலைவர் வீட்டுல பிரச்னையாம்…!
by அ.இராமநாதன் Wed May 24, 2017 1:00 pm

» பிஞ்சும் இருக்கு…!
by அ.இராமநாதன் Wed May 24, 2017 12:59 pm

» புலவரே, தன்மானம் பெரிதா? சன்மானம் பெரிதா?
by அ.இராமநாதன் Wed May 24, 2017 12:59 pm

» கடற்கரைல மணல் எடுக்க டென்டர் விடுறாங்களாம்…!!!
by அ.இராமநாதன் Wed May 24, 2017 12:58 pm

» அந்தமான் தீவு எங்கே இருக்கு சொல்லு...! -(மொக்க ஜோக்ஸ்)
by அ.இராமநாதன் Wed May 24, 2017 12:56 pm

» தலைவர் என்னமோ புலம்பறாரே, என்னது?
by அ.இராமநாதன் Wed May 24, 2017 12:55 pm

» மான்கறி சாப்பிட்டு சாப்பிட்டு பாரடிக்குதும்மா...(ச்சும்மா ஜாலிக்கு...)
by அ.இராமநாதன் Wed May 24, 2017 12:54 pm

» சுற்றுலாவுக்கு வரேன், ஆனா ஒரு கண்டிஷன்..!!
by அ.இராமநாதன் Wed May 24, 2017 12:53 pm

» ஜப்பான் செல்லும் சுடரொளி!
by அ.இராமநாதன் Wed May 24, 2017 10:04 am

» பாம்பு, முயல், மந்திரி..! – சைதன்யன் கதை!
by அ.இராமநாதன் Wed May 24, 2017 9:57 am

» தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் கதை
by அ.இராமநாதன் Wed May 24, 2017 9:54 am

» எவரெஸ்ட்டில் இந்தியர் மரணம்
by அ.இராமநாதன் Wed May 24, 2017 9:05 am

» இந்தியாவின் கவலைகளை மீறி பாகிஸ்தான் கடல் உணவு சீனா சென்றடைந்தது
by அ.இராமநாதன் Wed May 24, 2017 9:05 am

» மான்செஸ்டரில் மனித வெடிகுண்டு தாக்குதல்
by அ.இராமநாதன் Wed May 24, 2017 9:04 am

» நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ் உட்பட எட்டு பேருக்கு பிடிவாரன்ட்!
by அ.இராமநாதன் Wed May 24, 2017 9:03 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உன் முகமாய் .இரு. நூலாசிரியர் : புலவர் பாவலர் கருமலைத்தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

View previous topic View next topic Go down

உன் முகமாய் .இரு. நூலாசிரியர் : புலவர் பாவலர் கருமலைத்தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Post by eraeravi on Sat Jun 21, 2014 3:36 pm

உன் முகமாய் .இரு.
நூலாசிரியர் :  புலவர் பாவலர் கருமலைத்தமிழாழன்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
வசந்தா பதிப்பகம், 2/16-6, ஆர்.கே. இல்லம், வசந்த நகர் முதல் தெரு,
ஓசூர்-635109.  கிருட்டினகிரி மாவட்டம்.  04343-245350 – விலை : ரூ. 80
*****
மரபு மாறாமல் தொடர்ந்து மரபுக் கவிதை எழுதி வரும் வெகு சிலரில் சிகரமானவர் நூலாசிரியர் புலவர் பாவலர் கருமலைத் தமிழாழன் அவர்கள்.  பல்வேறு இதழ்களில் இவரது மரபுக் கவிதைகள் படித்து வியந்தது உண்டு.  மதுரை வந்திருந்த போது நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு வாய்த்தது.  பேசி மகிழ்ந்தோம். பெயரிலேயே தமிழ் இருப்பதால் தமிழ் உணர்வோடு இருக்கிறார்.  கொண்ட கொள்கையில் மரபு மட்டும் எழுதுவது என்பதில் மிகவும் உறுதியாக உள்ள நல்ல மனிதர்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பொறுப்பு அலுவலர் பேராசிரியர் க. இராமசாமி அவர்களின் அணிந்துரை நன்று.  உன்முகமாய் இரு.  நூலின் தலைப்பே சிந்திக்க வைக்கின்றது. முகமூடி அணியாமல் இயல்பாக இரு என்பதை உணர்த்தும் விதமாக உள்ளது.  மரபுக்கவிதை என்பது நிலவு போன்றது.  புதுக்கவிதை என்பது நட்சத்திரங்கள் போன்றது.  என்றுமே நட்சத்திரங்கள் நிலவாக முடியாது.  நிலவொளியாக கவிதைகள் தமிழ் ஒளி வீசுகின்றன.  பாராட்டுக்கள்.  எல்லாக் கவிதைகளும் எனக்குப் பிடித்து இருந்தாலும் பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு.  இதோ.
தமிழ்நாடு அன்று எப்படி இருந்தது என்பதை படம் பிடித்துக் காட்டும் விதமாக முதல் கவிதை வடித்துள்ளார்.  நீண்ட நெடிய கவிதைகளாக இருப்பதால் முதல் பத்திகள் மட்டும் குறிப்பிட்டுள்ளேன்.  நூல் வாங்கிப் படித்து முழுவதும் அறிந்து கொள்ளுங்கள்.
அருள்க தமிழன்னையே
      காவிரி பொங்கிப் பாயக்
            கதிர்நிறை வயல்கள் கொஞ்ச
            பூவிரிந் தாற்போல் வீதி
            புரிந்திடும் வணிகம் மிஞ்ச
            நாவிரி புலவர் மன்றம்
            நவின்றிடும் கருத்து விஞ்ச
            மாவிரி வேந்தர் மூவர்
            மறத்தினில் திகழ்ந்த நாடு!

எதுகை, மோனை, இயைபு நூல் முழுவதும் சொல் விளையாட்டுப் போன்று வித்தகக் கவிதை வடித்துள்ளார்.  ஊடகங்களில் நடக்கும் தமிழ்க்கொலை கண்டு தமிழறிஞர்கள் அனைவருக்கும் ரத்தம் கொதிக்கின்றது.  அதனை மரபில் வார்த்துள்ளார்.
திரைப்படங்கள் தொலைக்காட்சி தமிழைப் பண்பைத்
      தினம்கொன்றே அழிக்கிறது என்ன செய்தோம்
      அரைகுறையாய் இருந்ததமிழ் இசைய ரங்கில்
      அடியோடு அழித்திட்டார் என்ன செய்தோம்
      இரையாகிச் செய்தித்தாள் விளம்ப ரத்தில்
      இறக்கின்ற தமிழ்காக்க என்ன செய்தோம்
      இறைவன்முன் பாடுதற்கும் தடைவி தித்த
      இழிநிலையை நீக்குதற்கே என்ன செய்தோம்.

என்ன செய்தோம் என்ற கேள்விகளின் மூலம் சிந்திக்க வைத்து ஏதாவது செய்யுங்கள் என்று வலியுறுத்தி உள்ளார்.  நாம் ஏதாவது செய்தாக வேண்டும்.  இந்நிலை இப்படியே தொடர்ந்தால் தமிழ் அழியும் என்ற முன்அறிவிப்பு உண்மையாகி விடும்.  விழித்தெழுவோம், தமிழ்மொழி காப்போம்.  கட்சியின் பெயரால் சாதியின் பெயரால் தமிழன் பிரிந்து இருப்பது நன்றன்று என்று உணர்த்தும் கவிதை மிக நன்று.
தமிழனாக நிமிர்ந்து நிற்பாய்
      தமிழாநீ முதலில்நீ கட்சி யென்னும்
      தளையுடைத்துத் தமிழனாக நிமிர்ந்து நிற்பாய்
      தமிழாநீ முதலில்நீ சாதி யென்னும்
      தடையுடைத்துத் தமிழனென்னும் பெயரில் நிற்பாய்
      தமிழாநீ முதலில்நீ தொண்டன் என்னும்
      தாழ்வகற்றித் தமிழ்வீர்த் தமிழன் ஆவாய்
      தமிழாநீ முதலில்நீ அடிமை விட்டுத்
      தன்மான உணர்வுடைய தமிழன் ஆவாய்!

தமிழ்மொழி உணர்வு, தமிழின் உணர்வு ஊட்டும் விதமாக மரபுக்கவிதைகளால் கவிமாலை தொடுத்து உள்ளார்கள்.
தாக்கித் தகர்ப்பாய் தடை
ஏதிலியாய் வந்தமொழி ஏற்றம் பெறத்தமிழா
      ஆதிக்கம் செய்ய அனுமதித்தே – வீதி நின்றாய்
      சாதித்த நற்றமிழை சாவதற்கு விட்டுவிட்டாய்
      நாதியற்றுப் போவாய் நலிந்து!
      உயர்நீதி மன்றத்தில் வழக்காடும் மொழியாக
      தமிழ் வேண்டும் என்று நீண்ட நெடிய
      போராட்டம் வழக்கறிஞர்கள் நடத்தி விட்டார்கள்.

ஆனால் இன்னும் நடைமுறையில் உயர்நீதிமன்றத்தில் முழுமையாக தமிழ்மொழி     இடம் பெறவில்லை என்ற கோபத்தில் வடித்த கவிதை. 
நெஞ்சில் நெருப்பாய் நிறுத்து
      வழக்கு நமது வழக்கறிஞர் நம்மோர்
      வழக்காடல் ஆங்கிலத்தில் வாய்த்தல் – இருக்கன்றோ
      சொந்தமொழி செந்தமிழில் சொல்லாத நீதிமன்றம்
      இந்நிலத்தில் எற்றுக்கு நீக்கு!

மகாகவி பாரதியார் பற்றி மிக நீண்ட கவிதை 8 பக்கங்களில் மிக அருமையாகவும், பெருமையாக வடித்துள்ளார்கள்.  அதிலிருந்து சில துளிகள் இதோ!
பாரதியார் யார்?
சாதிகளின் வேரறுக்கத் தன்னு டம்பின்
      சதிநூலை அறுத்தெறிந்தே பூணூல் தன்னை
      ஆதிதிரள விடனென்னும் கனக லிங்க
      அருந்தோழன் மார்பினிலே அணியச் செய்து
      வேதியர்கள் பறையரென்னும் வேறு பாட்டை
      வெறிதன்னைப் போக்குகின்ற செயலைச் செய்து
      சாதித்த புரட்சியாளன் இவனைப் போல
      சரித்திரத்தில் பெயர்சொல்ல யாரே உள்ளார்!

      தன்னுடைய எழுத்தால் பேச்சால் தமிழகத்தில் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட பேரறிஞர் அண்ணா பற்றிய கவிதை மிக நன்று.    
      பேரறிஞர் அண்ணாவின் எழுத்து
      பொடி போடும் அண்ணா எந்த
      பொடி போட்டு எழுதினாரோ புரிய வில்லை
      படித்துக்கொண் டேயிருந்தால் நாள்கள் போகும்
      படித்தேனைக் குடித்ததுபோல் நாவி னிக்கும்
      வெடியெழுத்தில் பொடிவைத்த கருத்துக் கோவை
      வெற்றுச்சொல் ஏதுமில்லா வியக்கும் சிந்தை
      அடித்தெழுத முடியாத அவரெ ழுத்தால்
      அடிப்படையே மாறயது தமிழ கத்தில்!

      இந்த நூலின் தலைப்பில் கவிதை நூலாசிரியரின் இயல்பை உணர்த்தும் விதமாக ஒப்புதல் வாக்குமூலமாக உள்ளது.
      உன் முகமாய் இரு!
      என் முகத்தை நானேயேன் மாற்ற வேண்டும்
      எல்லோர்க்கும் ஏற்றபடி மாறு என்றே
      என்னிடத்தில் ஏன் இவர்கள் சொல்ல வேண்டும்
      எதற்காக சமரசம் நான் செய்ய வேண்டும்

      முகமூடி அணியாது அவர் முகமாகவே வாழ்ந்துவரும் நூலாசிரியருக்கு பாராட்டுக்கள்.

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2091
Points : 4709
Join date : 18/06/2010

Back to top Go down

Re: உன் முகமாய் .இரு. நூலாசிரியர் : புலவர் பாவலர் கருமலைத்தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Jun 27, 2014 2:04 am

மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 33
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: உன் முகமாய் .இரு. நூலாசிரியர் : புலவர் பாவலர் கருமலைத்தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Post by eraeravi on Fri Jun 27, 2014 10:28 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2091
Points : 4709
Join date : 18/06/2010

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum